Friday 4 October 2013

ஓட்டபந்தயத்துல கலந்துகிட்ட முயல் செத்து போச்சாமே... யாராவது கேளுங்களேன்..



என்ன சொல்லணும், ஏன் சொல்லணும், எதுக்கு சொல்லணும், எப்படி சொல்லணும் அப்படின்னு சொல்றதுலயே பல மாதிரி இருந்தாலும் இந்த காலை வணக்கம் மட்டும் ஒரே மாதிரி சொல்லணுங்க.. எப்படி தெரியுமா, சும்மா மனச ப்ரெஷா வச்சுக்கிட்டு, சிரிச்சுகிட்டே, குழந்தை மனசோட சொல்லணும். அதனால நான் இப்போ உங்களுக்கெல்லாம் சிரிச்சுட்டே குட் மார்னிங் சொல்ல போறேன், எங்க நீங்களும் அதே குழந்தை மனசோட ஒரு குட் மார்னிங் சொல்லுங்க பாக்கலாம்....


சரி, குட் மார்னிங் சொல்லியாச்சு, அடுத்து என்ன? நான் ஒரு பெரிய ஆராய்ச்சி பண்ணியிருக்கேங்க... என்னது ஆராய்ச்சியா? நீயா? நீ சுடு தண்ணிக்கு உப்பு போடணுமான்னு கேக்குற புள்ளயாச்சேன்னு நீங்க பதறுறது தெரியுது, ஆனாலும் நான் முன்ன வச்ச கால பின்ன வைக்க மாட்டேன்ங்க...
உனக்கேன் இந்த தேவையில்லாத வேலை? எதுக்காக இந்த வேலை, எதுனால இந்த வேலைன்னு என்கிட்ட கேள்வியா கேட்டு கொன்னுராதீங்க, சின்ன புள்ள பயந்துருவேன் (நான் பயப்படுவேன்னு நீங்க நம்பணும், இல்லனா அவ்ளோதான், உங்க கனவுல ட்ராகுலாவா வந்து பயமுறுத்துவேன்).

ஆத்தா.......... நீ உன் ஆராய்ச்சிய சொல்லு தாயின்னு நீங்க கதறுறது கேக்குது (கேக்கலைனாலும் கேட்டதா தான் நாங்க சொல்லுவோம்....) வாங்க, வாங்க, ஓடி வந்து இப்படி உக்காருங்க, நாம விசயத்துக்கு வருவோம்.

நீங்க எல்லாம் பாட்டி கதை கேட்டு இருப்பீங்க, அதுல ஆ
மை முயலை தோற்கடிச்சுதுன்னு நல்லா கதை கேட்டுருப்பீங்க. கதைய நல்லா கேட்டுட்டு, நல்லா தூங்கி, அப்புறம் வேற வேலைய பாக்க போயிருப்பீங்க. ஆனா அந்த முயலும் ஆமையும் யாரு, இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்கனு யாராவது யோசிச்சு பாத்தீங்களா? எனக்கும் என் பாட்டி இந்த கதைய சொன்னாங்கங்க... அப்ப இருந்தே ஒரே யோசனை தான். அந்த முயலும் ஆமையும் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கும்னு.

அதனால தான் நான் தீவிரமா ஆராய்ச்சி பண்ணி அவங்க ரெண்டு பேரையும் ட்ரேஸ் பண்ணினேன். இதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும். முயலுக்கு கேரட் லஞ்சமா குடுத்து, ஆமைக்கு அதோட ஓடு எல்லாம் க்ளீன் பண்ணிக்குடுத்து..... அப்பப்பா....... சரி சரி, என்னோட கஷ்டம் என்னோட போகட்டும், நாம இப்போ விசயத்துக்கு வருவோம்.

முதல்ல நான் போய் பாத்தது முயலை. முயல் பாக்க ஆள் சூப்பரா இருந்துச்சு, எனக்கே தூக்கி வச்சு கொஞ்சனும் போல இருந்துச்சு, இருந்தாலும் நமக்கு கடமை தானே முக்கியம், அதான் பேட்டி மட்டும் எடுத்துகிட்டேன். பேட்டிய ஆரம்பிக்குரதுக்கு முன்னாடி மிஸ்டர் முயல் என்ன பாத்து ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாருங்க... "ஆமா, நீங்க யாரு"ன்னு..... இதுல இருந்தே உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும் அது எவ்வளவு திமிர் பிடிச்சதுன்னு, இந்த காயுவ தெரியாத முயல் கிட்ட நாம அடுத்த வார்த்தை பேசலாமா? ஸோ மீ அப்படியே ரிடர்ன் ஆகிடலாமானு யோசிச்சேன், அப்படி ரிட்டர்ன் ஆகிட்டா உங்கள எல்லாம் எப்படி நான் இந்த விசயத்த சொல்லி அழ வைக்குறது? அதனால மனசு தளராம பேட்டிய தொடர்ந்தேன்.

அந்த ஓட்டபந்தயத்துல கலந்துகிட்ட முயல் செத்து போச்சாம்ங்க.... ஸோ சோகம். இது அதோட ஆறுலட்சத்தி அறுநூறாவது வாரிசாம். கேட்டுகிட்டு இருந்த எனக்கு மூச்சு முட்டிடுச்சு. உங்களுக்கு எல்லாம் முன்னாடி உயிர விட்ட உங்க மூதாதையருக்கு என்னோட ஆழ்ந்த நன்றிகள்... ச்சே ச்சே அனுதாபங்கள்னு சொல்லிட்டு ஒரு நிமிஷம் கண்ண மூடிட்டு நின்னேன். படார்ன்னு என் கன்னத்துல யாரோ தடவுன மாதிரி (ஹிஹி... முயல் காலு ஸோ பஞ்சுங்க.. அது அடிச்சாலும் தடவுன மாதிரியே தான் இருக்கும். ஆனாலும் இது தடவ தான் செய்துச்சு, அடிக்கல) இருந்துச்சு.. முழிச்சு பாத்தேன், முயலார் என் நாடிய தாங்கிட்டே முழு ஜெனெரேசனையும் முழுசா தின்னு ஏப்பம் விட்டுட்டு இரங்கல் வேற சொல்லுவீங்களோன்னு கேட்டுச்சு. அட, நான் முயல் கறி எல்லாம் சாப்பிட மாட்டேங்கன்னு ஒரு வழியா அசடு வழிஞ்சு சமாளிக்க வேண்டியதா போச்சு.

அப்புறமா தொண்டைய செருமிக்கிட்டே நான் கேக்க வேண்டிய கேள்விய கேட்டேன். “பந்தயம் நடுவுல ஏங்க தூங்குனீங்க”ன்னு. அதுக்கு சிம்பிளா ஒரு பதில் சொல்லிச்சு. “தூங்கினது நான் இல்ல, என்னோட தாத்தாக்கு தாத்தாக்கு தாத்தாக்கு தாத்தாக்கு............ (அப்படியே ஒரு அரைமணி நேரம் படிங்க) தாத்தா தான் தூங்கினார், அதுவும், தூக்கம் வந்துச்சு தூங்கினார். இதெல்லாம் ஒரு கேள்வியா”னு.... நியாயம் தானுங்களே... நானே தூக்கம் வந்தா உடனே தூங்கிடுறேனே, கிளாஸ்ல இந்த லெக்சரர்கெல்லாம் என் குறட்டை சத்தம் கேக்குமேங்குற பயம் கூட இல்லாம. அதோட நியாயமான பதில் என்னை அப்படியே திருத்திடுச்சு.

சரி, வந்தது தான் வந்தோம், கடைசியா ஒரே ஒரு கேள்வி கேட்டுருவோம்னு “நீங்கெல்லாம் ஏங்க இவ்வளவு வேகமா ஓடுறீங்க”னு கேட்டேன். என்ன பாத்து ஒரு முறை முறைச்சுது பாருங்க, நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். நீங்க தானே வேட்டை நாயெல்லாம் விட்டு துரத்தி எங்களுக்கு ட்ரைனிங் குடுக்குறீங்கனு திருப்பி கேட்டுச்சு. வேட்டை நாய் என்னங்க, தெருவுல நிக்குற சொறி நாய் பாத்தாலே எனக்கு மூச்சு நின்னுடும்ங்குறது வேற விஷயம்... அது என்னை கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுறதுக்கு முன்னாடி ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்...

அப்புறமா அந்த ஆமைய தேடி தேடி அலையோ அலைன்னு அலஞ்சது தனிக் கதை.... அந்த கதைய இன்னொரு நாள் சொல்றேங்க... கேக்க ரெடியா இருங்க......

அதுக்குள்ளே எங்க போறீங்க, என்னோட புத்திசாலித்தனத்த கொஞ்சம் மெச்சுட்டு போங்க.. அப்படி என்னதான் நீ பண்ணிட்ட உன்ன மெக்சிக்கன்னு நீங்க கேக்குறது புரியுது, உங்களுக்கு ஒரு சாம்பிள் காட்டுறேன் பாருங்க...

இந்த ப்ரைமரி ஸ்கூல்ல எல்லாம் A - for Apple, B - for Ball, C - for Cat னு சொல்லிக் குடுத்து சின்ன புள்ளைங்கள எல்லாம் ஏமாத்துறாங்கனு என்னோட பிரெண்ட்ஸ் சொன்னாங்க, அவங்களுக்கு நான் என்ன சொன்னேனா, Apple உடம்புக்கு சத்து குடுக்கும், அது மட்டும் போதுமா, Ball வச்சு விளையாடுறது ஆரோக்கியத்துக்கு நல்லது, அப்புறம் பிற உயிர்களை நேசிக்கவும் தெரியணும், அதான் Cat அ நேசிங்க அப்படின்னு சொல்லாம சொல்றாங்கன்னு சொன்னேன், நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கா?

நான் சொன்னது தப்பே இல்லைதானே.... அப்படினா நான் புத்திசாலி அப்படின்னு ஒத்துகிட்டு அடுத்தது ஆமையோட கதையை கேக்க ரெடியா இருங்க, எனக்கு தூக்கம் வந்துடுச்சு... தூங்க போறேன், நீங்க வேலையை பாக்கலாம்.



8 comments:

  1. ரசித்தேன்... ABC நல்ல விளக்கம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா, அப்போ என்னோட ஆராய்ச்சி நல்லா இல்லையா?

      Delete
  2. மொக்கை மொக்கை மொக்கை... இப்படியா மொக்கை போடுவ? சிரிச்சேன், ஆனா தல சுத்திடுச்சு

    ReplyDelete
    Replies
    1. அவ்வவ்வ்வ்வ் சிரிச்சீங்கல, அப்புறம் என்ன தல சுத்து?

      Delete
  3. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அக்க்க்க்காஆஆ... a b c விலக்கம் super...

    ReplyDelete
    Replies
    1. அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் மகேஷ்

      Delete
  4. அடுத்த பதிவர் திருவிழாவில் மொக்கை பதிவர் முதல் பரிசு உங்களுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உடனே போய் என்னோட கவிதைகள படிங்க, அப்புறம் இப்படி சொல்ல மாட்டீங்க

      Delete