கண்ணாடி முன் நான் நின்றாலும் கூட,
உன்பிம்பம் தானே காண்கின்றேன்...!
புலராத வேளை என் மஞ்சம் எங்கும்
உன்வாசம் தானே நுகர்கின்றேன்...!
யாதொன்றும் அறியாது தவிக்கிறேன்
உன் வரவுக்காய் தினம் தினம் துடிக்கிறேன்...!
நீ தானே என் உறவாகினாய்...
என் உயிருக்குள் ஒன்றாக உறவாடினாய்...!
என் நாசி வழியே நுழைகின்ற காற்றும்
உன் உயிரோடு தானே கலக்கின்றது...!
உன் இதழ் தீண்டும் தருணம் உயிர்மூச்சு ஒன்று
சட்டென்று தானே வெடிக்கின்றது...!
உன் விரலாலே நீ போடும் கோலங்கள்
என் விரகத்தில் விளைந்ததன் மாயமே...!
உன்னோடொரு கதை பேசினேன்
என் நரம்புக்குள் நீதானே திரியேற்றினாய்....!
அருகம்புல் ஒன்று அரிதாரம் பூசி
நீயாக கண்முன் சிரிக்கின்றது...!
பிரியாத பந்தம் நீதானே என்று
கைகோர்த்துக்கொண்டு லயிக்கின்றது...!
கட்டொன்று குலையாத மேகமாய்
நீ என்றென்றும் எனக்கான மழையாகிறாய்...!
உன்னாலே நான் தாயாகிறேன்
என் காதல் கதையில் நீ கருவாகிறாய்...!
உன்பிம்பம் தானே காண்கின்றேன்...!
புலராத வேளை என் மஞ்சம் எங்கும்
உன்வாசம் தானே நுகர்கின்றேன்...!
யாதொன்றும் அறியாது தவிக்கிறேன்
உன் வரவுக்காய் தினம் தினம் துடிக்கிறேன்...!
நீ தானே என் உறவாகினாய்...
என் உயிருக்குள் ஒன்றாக உறவாடினாய்...!
என் நாசி வழியே நுழைகின்ற காற்றும்
உன் உயிரோடு தானே கலக்கின்றது...!
உன் இதழ் தீண்டும் தருணம் உயிர்மூச்சு ஒன்று
சட்டென்று தானே வெடிக்கின்றது...!
உன் விரலாலே நீ போடும் கோலங்கள்
என் விரகத்தில் விளைந்ததன் மாயமே...!
உன்னோடொரு கதை பேசினேன்
என் நரம்புக்குள் நீதானே திரியேற்றினாய்....!
அருகம்புல் ஒன்று அரிதாரம் பூசி
நீயாக கண்முன் சிரிக்கின்றது...!
பிரியாத பந்தம் நீதானே என்று
கைகோர்த்துக்கொண்டு லயிக்கின்றது...!
கட்டொன்று குலையாத மேகமாய்
நீ என்றென்றும் எனக்கான மழையாகிறாய்...!
உன்னாலே நான் தாயாகிறேன்
என் காதல் கதையில் நீ கருவாகிறாய்...!
அருமையான வரிகள்... தாய் மட்டுமே உணர முடியும் அற்புதம்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதேங்க்ஸ் அண்ணா :)
Delete//உன்னாலே நான் தாயாகிறேன்
ReplyDeleteஎன் காதல் கதையில் நீ கருவாகிறாய்...!//
அருமையான வார்த்தைத் தேர்வு.. நல்லா இருக்கு.. மூன்று முறை படிச்சுட்டேன்!! :)
ஹைய்யோ.... ஜாலி ஜாலி... தேங்க்ஸ்
Deleteஅருமை... அருமை... அழகான லயத்தோடு கூடிய கவிதை... அழகு
ReplyDeleteதேங்க்ஸ் மேடம்
Deleteதாய்மையின் அழகு ...
ReplyDeleteஅம்மா, ஆமா :)
Deleteநான் கண்டிப்பா பாக்குறேன் அண்ணா
ReplyDeleteஉறவுக்காய் தவிக்கிறேன் நீ உணரும் வரை உறக்க கத்துகிறேன்...
ReplyDeleteகனவிலாவது என் காதல் கைகூடும் என்ற நம்பிக்கையில்
இதுல கனவு எங்க இருந்து வந்துச்சு? கவிதை சரியா உங்களுக்கு புரியலனு நினைக்குறேன் ... இது தாய்க்கும் மகளுக்கும் உள்ள பந்தம், காதலர்களுக்கு உரியது இல்ல
Deletethe kavidhai very good. just by reading amma i strated to cry
ReplyDeleteம்ம்ம்ம் தேங்க்ஸ்
Delete