சில நேரங்கள்ல, நமக்கு இருக்குற பெரிய பெரிய ஆசைகள் விடுத்து, குட்டி குட்டியா நமக்கு பிடிச்ச விசயங்கள பத்தி யோசிச்சு பாத்தோம்னா மனசு அவ்வளவு சந்தோசமா இருக்கும்.
எப்பவாவது நீங்க உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள்ன்னு பட்டியல் போட்டு பாத்துருக்கீங்களா?
நான் கூட பட்டியல் போட்டு பாத்ததில்ல, இத எழுத ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி வரைக்கும்....
பேஸ் புக்ல ஒருநாளு என்னோட ப்ரென்ட் கார்த்திக், உங்களோட சின்ன சின்ன பிடித்தங்கள பட்டியலிடுங்களேன் கேட்டுருந்தார். அப்போ தான் கட கடன்னு பட்டியல் போட ஆரம்பிச்சேன்....
அப்படி என்ன பட்டியல் போட்டன்னு நீங்க கேட்டீங்கனா, அதுக்கு தான் நான் அத இங்க குடுத்துருக்கேன்....
எனக்கு பிடிச்ச பத்து விஷயம்னா...
1. ஏதோ ஒரு வகையில நான் சுதந்திரமா இருக்கணும், கட்டுப்படுத்த யாருமே இல்லாம, ஆனா அதே நேரம் கண்டிக்கவும் ஒரு ஆள் வேணும்... அனாவசியமா என்னை யார் ப்ளேம் பண்ணினாலும் பிடிக்காது, ஆனாலும் தப்புன்னு ஒண்ணு நான் பண்ணினா உரிமையோட அவங்க திட்டினா ரொம்ப பிடிக்கும். நாள் முழுக்க அந்த திட்டை வாங்கிட்டு ரசிச்சு ரசிச்சு சிரிச்சுட்டு இருக்க பிடிக்கும்.
2. தன்மானம் ரொம்ப ஜாஸ்தி எனக்கு. எனக்கு குடுக்க வேண்டிய மரியாதை அவங்க யாரா இருந்தாலும் தந்து தான் ஆகணும். என் சுயமரியாதையை எந்த இடத்திலும் என்னால விட்டு குடுக்க முடியாது. யார் எப்படிப்பட்டவராக இருந்தாலும் தன்மானத்தை தீண்டினா அத என்னால பொறுத்துக்க முடியாது. ஸோ என்னை அப்படியே ஏத்துக்குரவங்கள ரொம்ப பிடிக்கும்.
3. மழைல நனையுறதுனா அவ்வளவு இஷ்டம் எனக்கு. அதே மாதிரி ஐஸ்கிரீம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். மழையை பாத்தாலே ஏங்கி போய் இருந்த காலம் உண்டு. ஆனா இப்போ மனசு பக்குவப்பட்டாச்சு, மழையோ ஐஸ்கிரீமோ தூரமா நின்னு ரசிக்குரதோட சரி
4. இயற்கை, என்னை மறந்து பாத்துட்டு இருக்குற விஷயம். காலேஜ் டைம்ல கிளாஸ் கட் அடிச்சுட்டு காக்கா குருவி கூட பேச போயிருக்கேன்னா பாத்துக்கோங்க. அதே மாதிரி காரை எங்கயாவது கொண்டு போய் நிறுத்திட்டு தனியா எதையோ வெறிச்சு பாத்துட்டு இருக்குறதும் ரொம்ப பிடிக்கும். மதியம் சாப்பாடு கூட மறந்து போயிருக்கேன்.
5. ஆசை ஆசையா வளர்க்குற புறா, முயல், ஆடு, மாடு எல்லாமே ரொம்ப பிடிக்கும். அதுவும் அவங்க கூடவே விளையாடுறது, பேசுறது, அவங்க உணர்வுகளை புரிஞ்சுக்குறது... அட அட அட, செல்லமா நாம மட்டும் தான் கோவிச்சுப்போமா, நாம மட்டும் தான் சிரிப்போமா, நாம மட்டும் தான் கோபப்படுவோமா? அவங்க உலகத்துக்கு போய் பாருங்க, அழகான உலகம் அது, ரொம்ப பிடிக்கும்.
6. படிப்புனா ரொம்ப பிடிக்கும். இப்படி சொல்றத விட, யாராவது படிக்குறேன்னு சொன்னா அவங்களை ரொம்ப பிடிக்கும். ஏன்னே தெரியாம அவங்க மேல அப்படி ஒரு தனி பாசம் வரும் எனக்கு. இது எந்த மாதிரி உணர்ச்சினு என்னால வரையறுக்கவே முடியாது. எந்த குழந்தையா இருந்தாலும் படிக்குற குழந்தைகளை தனியா ஸ்பெசலா கொஞ்சுவேன்.
7. எனக்கு ரொம்ப பிடிச்சது அம்மா. ஆனா இப்போ யோசிச்சு பாத்தா அப்பா அந்த இடத்துல அசைக்க முடியாம உக்காந்து இருக்கார் அப்படிங்குறது தான் நிஜம். அம்மா எனக்கு ஒரு நல்ல தோழி, ஆனா அப்பா கொஞ்சம் மரியாதையோட பாக்குற ஒரு மனுஷன். எவ்வளவோ அப்பா கிட்ட சண்டை போட்டுருக்கேன், ஆனா அவர் பேச்சை நான் மீற நினைச்சது இல்ல, அவரும் எனக்கு பிடிக்காத விஷயங்கள வற்புறுத்த மாட்டார்னு ஆழ்ந்த நம்பிக்கை இதுவரை. அப்பா, ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
8. தம்பி – எனக்கு நல்ல தோழன், என்னோட மறுபாதி, தெரியல, அவன் என்கிட்ட பேச மாட்டான், ரொம்ப ஏக்கம் இருக்கு மனசுக்குள்ள. எப்பவாவது அவன் என்கிட்ட ஒரு குழந்தையா ஓடி வருவான்னு. அதே நேரம் அவனோட உணர்வுகளை மதிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். நீயா போய் பேசுனு சொல்றவங்க கிட்ட நான் சொல்றது ஒண்ணே ஒண்ணு தான், அவனை பற்றி எனக்கு தெரியும், அவனை வற்புறுத்தி கூட அவன் மனசு கஷ்டபட்டுற கூடாதுனு தான். அவன் ஒரு சென்டிமென்ட் இடியட்.. அப்படியே இருக்கட்டும் அவனாக...
9. லட்சியம்னு பெரிய வைராக்கியம் ஒண்ணு மனசுக்குள்ள இருக்கு. எவ்வளவோ போராட்டம் அதை அடையுரதுக்கு. ஆனாலும் இஞ்ச் பை இஞ்ச் அதை நோக்கிய என் பயணத்தை கைவிடாம தொடர்ந்துட்டே தான் இருக்கேன், அது எனக்கு ரொம்ப பிடிக்கும். வாழ்க்கைல போறாடுறதுனா ரொம்ப பிடிக்கும்.
10. அப்புறம், எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம், இனியும் பிடிக்க போற விஷயம், வாழ்நாள் முழுக்க பிடிக்க போற ஒரு விஷயம், தப்பு தப்பு, அது விஷயம் இல்ல... ஹஹா இத எழுத பத்து நிமிஷம் என்னையே மறந்து ரசிச்சுட்டு இருந்தேன், அதனால எழுதாமலே விடுறேன்... அதே மாதிரி பெண் குழந்தைனா ரொம்ப பிடிக்கும். யாருக்காவது பெண் குழந்தை பிறந்திருக்குனு நியூஸ் கேட்டாலே என்னமோ எனக்கே பிறந்த மாதிரி அவ்வளவு சந்தோசப்படுவேன்.
எல்லாத்துக்கும் மேல, என்னுடைய தேடல் என்னனு இன்னும் என்னால புரிஞ்சுக்க முடியலங்குறது தான் நிஜம்.

எனக்கு பிடிச்ச விசயம்னு இன்னும் நிறைய இருக்கு. அதெல்லாம் அப்புறம் இன்னொரு நாள்ல சொல்றேன்...
இப்போ நீங்க என்ன பண்ண போறீங்கனா, உங்களுக்கு பிடிச்ச விசயங்கள இங்க பட்டியல் போட்டுட்டு போங்க....
அப்புறம் பாருங்களேன், மனசு எவ்வளவு ரிலாக்ஸ் ஆக இருக்குன்னு...
காலைவணக்கம்
ReplyDeleteஉங்களுக்கு பிடித்த 10 குறிப்பும் அருமை அருமை தொடருகிறேன்
வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேங்க்ஸ் உங்க வாழ்த்துக்கு.... மறுபடியும் தேங்க்ஸ் உங்க தொடர்தலுக்கு
Deleteவணக்கம்
ReplyDeleteஉங்களுக்கு பிடித்த 10 குறிப்பில் எனக்கு பிடித்தவை.6உம் 9உம் எனக்குப் பிடித்த விடயங்ளை குறிப்பதில்லை... இனியாவது குறித்துக் கொள்கிறேன்..உங்கள் பதிவுக்கு அப்புறம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
-நன்றி
ஹஹா குறிக்க ஆரம்பிங்க, அப்புறமா மனசு எப்பவாவது பாரமா போச்சுனா அத படிச்சா... சும்மா பிரெஷ் ஆகிடலாம்
Deleteஉங்கள் பதிவைப் படித்ததும்
ReplyDeleteநானும் யோசிக்கத் துவங்கிவிட்டேன்
நிறைய வந்தது
10 க்குள் அடக்க முயற்சிக்கணும்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
:) யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்கல, அப்போ கண்டிப்பா எழுதிடுவீங்க, வாழ்த்துகள்
Deletetha,ma 1
ReplyDeleteதேங்க்ஸ் ஓட்டு போட்டதுக்கு
Deleteரசிக்க வைக்கும் பட்டியல்... பத்தாவது மிகவும் ரசித்தேன்... மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதேங்க்ஸ் அண்ணா, நான் கூட தான் ரொம்ப ரசிச்சேன் :)
Delete8 :(
ReplyDeleteஎங்க வீட்டிலும் இருந்துச்சு.சின்ன அக்காவும் அண்ணனும் பேசமாட்டாங்க:(
ம்ம்ம்ம் ஆனா மனசுக்குள்ள ரொம்ப பாசம் இருக்க தான் செய்யும், வெளிக்காட்டிக்க தெரியாம இருக்கும்
Delete5ம் 7ம் என் உணர்வுகளை படம் பிடித்து காட்டிய மாதிரி இருக்கு.
ReplyDelete:) நீங்களும் பட்டியல் போடுங்க சிஸ்டர்... மனசு ரொம்பவே லேசாகிடும்
Deleteungala mthiri udana ellam soli ennala eztha mudiyala !!! list potu apram post pannarean !! ungal 10 peditha vizhyam super ra eruku !! nan epo than konzham tamil ella type kathukerran
ReplyDeleteதமிழ் டைப்பிங் எல்லாம் கத்துக்கணும் னு அவசியம் இல்ல, இப்போ தான் ட்ரான்ஸ்லேட்டர் இருக்கே, அப்புறம் என்ன?
DeleteEllorumE Yosiththu paarkkavEndiyavai thaan. YOsiththu ezhudhuvom. nandri
ReplyDeleteஎழுதுங்க எழுதுங்க....
Deleteஉங்களுக்கு பிடித்த பத்து விஷயங்களை நல்லா சொல்லி இருக்கீங்க. மழையில நனையற விஷயம் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனமா இருக்கு.
ReplyDeleteமுதல்ல நல்லா சொல்லியிருக்கீங்கன்னு சொன்னதுக்கு தாங்க்ஸ்... அப்புறம், இப்பவும் நீங்க சின்ன பசங்கள பாத்தீங்கனா மழைல நனைய ரொம்ப ஆசப் படுவாங்க.... சினிமா நிஜ வாழ்க்கைல இருந்து தானே எடுக்குறாங்க... இப்போ தான் நான் விலகியே இருக்கேன்னும் சொல்லியிருக்கேனே கவனிக்கலையா?
Deleteபிடித்த பத்துக்கள் அருமை! இப்படி நம்மை நாமே ரீபிரஷ் செய்து கொள்வதால் உற்சாகம் அடைவது உண்மைதான்! நன்றி!
ReplyDeleteஆமா, நீங்களும் ரீபிரஷ் பண்ணிக்கோங்க... மனசுக்கு ரொம்ப நல்லது
Deletepaththum padichen ellam arumai akka. 1 amd 6 pidichu irukku...
ReplyDeleteதேங்க்ஸ் மகேஷ்
Deleteபட்டியல் போடலாங்கறீங்க..
ReplyDeleteஅட, இன்னும் போடலையா? உடனே போட்டுருங்க
Deleteமழையில நனையுறது பிடிக்காதவங்க யார் இருக்காங்க ? மும்பையில் மழை பெய்ய துவங்கியதும், பக்கத்து வீட்டுப் பாட்டி என் வீட்டம்மாவிடம் சத்தமாக கேட்ப்பாள் "உன் பெரிய குழந்தை எங்கே" என்று...
ReplyDeleteஅருமையான பட்டியல்....!
தேங்க்ஸ் :) கண்டிப்பா எல்லோருக்கும் மழைனா ரொம்ப பிடிக்கும்
Deleteபேஸ் புக்ல ஒருநாளு என்னோட ப்ரென்ட் கார்த்திக், உங்களோட சின்ன சின்ன பிடித்தங்கள பட்டியலிடுங்களேன் கேட்டுருந்தார். // யம்மாடி பத்து விசயமும் பின்னுதே...!
ReplyDeleteஎல்லாம் நீங்கேட்டதால தான் கார்த்திக்
Deleteஅழகா இருக்கு பதிவும் பகிர்தலும் தேடலும்
ReplyDeleteGREAT...VERY CREATIVE..THANKS..PLEASE CONTINUE TO WRITE ON TAMILNAADU..TAMILS..CULTURE,LIFESTYLE,,TEMPLES..POLITICS..HISTORICAL VALUES ETC! WAITING FOR YOUR BOOK SOON!
ReplyDelete1. aka kooda china vayasala veliyandathu thayam, achagalu, manil kuchu vaikarathu, katam potu nondi vilyatarathu. 2. appa koda paduthu thugarathu. 3. kooliku era poduthal, maatku thani kaatuthal, aatuku kuche thala kodukarathu. 4. china vayasala thathakita kelvi ketkarathu, china china vela seiyarathu. 5. atha samayal. 6. ierakai rasithal. 7. photo eduthal 8. chess 9. padikerathu 10. kolanthaigal. mm zx rza
ReplyDeleteUNGALA MAARI THAAN SISTER VAALANUM.
ReplyDelete