Friday, 18 October 2013

நீ என் அம்மா தானா?

அம்மா,

நீ இப்போ எங்க இருக்கனு தெரியல

எப்படி இருக்கனும் தெரியல

நீ எனக்கு அம்மா தானானும் தெரியல

ஏன்னு கேக்குறியா?


எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து
நீ பொட்ட புள்ள,
வீட்டுக்குள்ள முடங்கி கிடக்கனும்னு
கண்டிச்சு வளக்கல...

பத்து பாத்திரம் தேய்,
வீட்ட பெருக்குன்னு ஒருநாளும்
தொடப்பத்த கைல கொடுத்ததில்ல...

ரெத்த தான முகாம்,
எயிட்ஸ் அவேர்னஸ் ப்ரோக்ராம்னு சுத்துறியே,
அதெல்லாம் விட்டுட்டு
பொறுப்பா கோயிலுக்கு போ,
டைப்ரைட்டிங், தையல் கிளாஸ்னு போன்னு
அறிவுர சொன்னதில்ல...

ஆம்பள பசங்க கிட்ட
பாத்து பழகுடினு கூட சொன்னதில்ல...

உன்கிட்ட வெளக்கம்
கேக்குறவங்க கிட்டல்லாம்
நீ சொல்றதெல்லாம்
எம்பொன்னுக்கு எல்லாம் தெரியும்,
அவ பாத்துப்பானு தான்...

பாத்துப்பா பாத்துப்பானு
சொன்னதோட இல்லாம,
படக்குன்னு விட்டுட்டும் போயிட்ட...

இல்ல, நான் தெரியாம தான் கேக்குறேன்,
அப்படி எனக்கு என்ன தெரிஞ்சி போச்சின்னு
என்ன விட்டுட்டு போன?

ஒரு நாளாவது பல்லு தேய்க்க விட்டுருப்பியா?
ஒரு கையில ப்ரெசும்
இன்னொரு கைல ஜூஸுமால
எழுப்பி விடுவ...

அட, எதுக்கு தான் எனக்கு கையில
அஞ்சு விரலு இருக்கோ,
ஒரு நாளாவது நீயே சாப்டுடினு
சொல்லியிருப்பியா?

அதெல்லாம் விடு,
ரோட்டுல போறப்பலாம்
ஏதாவது பையன கண்டா மக்கா
இவன் எப்படிடி இருக்கானு
எதோ விளம்பர கம்பனிக்கு
ஆள் தேடுற மாதிரியே
தொனதொனப்பியே
உனக்கே இதெல்லாம் நியாயமா தெரியுதா?

வா போன்னு உன்ன
மரியாத இல்லாம கூப்புடுராளே,
இவ தான் ஒம்பொன்னான்னு கேக்குரவங்ககிட்ட
இல்லல, இவ என் ப்ரெண்ட்னு
தோள கட்டிக்கிட்டு
நிமிர்ந்து பார்த்து பெரும வேற...

ஆங்... ஒண்ணு நியாபகம் வந்துடிச்சி...
உனக்கும் அப்பாவுக்கும் இடையில
ஓடி நான் வந்து உக்காந்தா,
என் புருசன் கிட்ட நான்தான் இருப்பேன்னு
தள்ளி விட்டுட்டு அப்புறமா அணைச்சுப்ப...
பொறாம புடிச்சவளே...

ராத்திரி நேரத்துல நான் தூங்கிட்டேன்னு
நினச்சி கைவிரல பிடிச்சிகிட்டே
நெத்தில முத்தம் குடுப்ப,
இப்ப யாரு குடுப்பானு
நெனச்சு பாத்தியா?

ம்க்கும்... நீயில்லன்னு நான் ஒண்ணும்
பொலம்பல என்ன...
இப்போ நான் தான் இங்க
எல்லோருக்கும் எல்லாமே...

நீ இல்லாம எனக்கு எல்லாமே இருக்கு,
ஆனா எதுவுமே இல்ல...

36 comments:

  1. வணக்கம்
    கவிதை வரிகள் மனதை தொட்ட வரிகள் அருமை வாழ்த்துக்கள்
    என்தளத்தில்
    http://2008rupan.wordpress.com/2013/10/18/%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81/
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். உங்க வலைத்தளம் பார்த்தேன். என்னால முடிஞ்சா கலந்துக்குறேன். என் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி கலந்துக்கவும் சொல்றேன்

      Delete
  2. மனதில் உள்ள வலி புரிகிறது... எனது அன்னையை நினைத்து கலங்கவும் வைத்தது...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் அண்ணா.... எப்பவுமே அவ நியாபகம் வந்துடுச்சுனா கொஞ்ச நேரம் மனசு பேதலிச்சு தான் போகுது

      Delete
  3. அம்மாவின் நினைவு எப்பவுமே மறையாது. எப்பவும் ஆசிர்வதிக்கப்பட்டு கொண்டே இருப்பாய் உன் அம்மாவினால்

    ReplyDelete
    Replies
    1. அது தான் எனக்கே தெரியுமே மேடம்... தேங்க்ஸ்

      Delete
  4. அம்மா .... நடமாடும் தெய்வம் அவள் .... இழப்பின் வலி ...... வேண்டாம் டா ...... அதில் இருந்து மீண்டு வருவோம் இருவரும் .....

    ReplyDelete
  5. //ராத்திரி நேரத்துல நான் தூங்கிட்டேன்னு
    நினச்சி கைவிரல பிடிச்சிகிட்டே
    நெத்தில முத்தம் குடுப்ப,
    இப்ப யாரு குடுப்பானு
    நெனச்சு பாத்தியா?// மனதை கனக்க வைத்தது..

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம் சில நேரம் மனசு அதுக்கெல்லாம் ஏங்க தான் செய்யுது

      Delete
  6. Replies
    1. இது என்னன்னு எனக்கு புரியலயே

      Delete
    2. தமிழ் மண ஒட்டு..

      Delete
    3. ஹஹா அப்போ இதெல்லாம் என்னன்னு கூட எனக்கு தெரியாது, ஆனா இப்போ தெரியும்ல

      Delete
  7. என்ன ஒரு பாஸிட்டிவ்வான அம்மா....அம்மா எப்போதும் உங்கள் உணர்வுகளுடன்.....

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் ஆமா, எப்பவும் அம்மா என்கூட இருக்குறதா தான் நினைக்குறேன்

      Delete
  8. kavithai ippothan padichen akka, ovvoru variyum unga 2 perukkum idaiyelana uravu purinjukka mudikirathu.

    ella ammakkalum makalidam ippadi irunthal nattula pala pirachanaikal makalkal santhikkama irukkalamonu thonuthu.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மகேஷ்....

      Delete
  9. மன உணர்வுகளை அசைத்துப்போகும்
    அற்புதமான படைப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ்... சில நேரம் சில விஷயங்கள் ஆழ்மனசுல இருந்து வரும் போது தானே அழகாகிடுது

      Delete
  10. "நீ இல்லாம எனக்கு எல்லாமே இருக்கு,
    ஆனா எதுவுமே இல்ல..."
    சுருக்கமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டன இந்த இரு வரிகள். அற்புதமான படைப்பு. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தானே.... நமக்கு எவ்வளவு இருந்தாலும் அம்மா இல்லனா எதுவுமே இல்லாத மாதிரி தானே

      Delete
  11. ஹை.... ஓட்டுப் போட்டதுக்கு தாங்க்ஸ்

    ReplyDelete
  12. அருமையான கவிதை
    அம்மா நினைவுகளுடன்
    எங்களையும் அணைத்துச் செல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு தேங்க்ஸ்

      Delete
  13. அன்பின் காயத்ரி - கவைதை அருமை - அன்பின் அம்மாவின் நினைவுகளை உள்ளடக்கிய கவிதை நன்று - த.ம 7 - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. அம்மாவின் நினைவுகள் - என்றைக்கும் ஆனந்தம் தான்!..

    படிக்கும் போது மனம் நிறைகின்றது. மகிழ்ச்சி!..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்... கருத்து சொன்னதுக்கு தேங்க்ஸ்

      Delete
  15. அம்மா அம்மா என ஆரம்பித்தீர்கள்.
    ஆனாலும் என்னை
    அழ வைப்பீர்கள் என்று
    எதிர்பார்க்கவில்லை.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஹஹா... அது அழுகை இல்ல, நிதர்சனம்

      Delete
  16. வணக்கம் காயத்திரி தேவி!...

    வலைச்சர ஆசிரியப் பணியில் அறிமுகம் கண்டு வந்தேன்!
    பணிசிறக்க நல் வாழ்த்துக்கள்!

    இங்கு அம்மா என்று... எம்மையும் சேர்த்து அழ வைச்சிட்டீங்களே..
    மனசுக்குள் பாறையாய் இறங்கும் வலி உணர்ந்தேன்..

    பேச வார்த்தையில்லை! அருமை! நெகிழ்வு உங்கள் கவிதை!
    வாழ்த்துக்கள்!

    த ம.8

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் இந்த போஸ்ட் பக்கம் வந்தேன், உங்க வாழ்த்துக்கு காலம் கடந்த நன்றி.

      Delete
  17. அம்மாவைப் பற்றிய கவிதை
    கண்கலங்க வைத்து விட்டது.
    அம்மாவின் நினைவுகள் என்றும் நம்முடன் இருக்கும்.
    வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு என் நன்றி. கண்டிப்பா அம்மாவோட நினைவு நம்ம கூடவே இருக்கும்

      Delete
  18. romba casual ah ezhuthi kannla thanni kondu vanthutama.. ithula sila vishayangal enga aama va feel panen...sema wordframing da...superb

    ReplyDelete