Tuesday, 8 October 2013

என் நீண்டதொரு பயணம் உன்னோடு.....

என்னை சுற்றி ஒரு வட்டமிட்டு
அதற்குள் சந்தோஷ செடிகளை
மட்டுமே நட்டு வைத்து
முட்கள் இருந்தும் அதை அலட்சியமாய்
தாண்டி குதித்து... ஒற்றைக்கால்
நடனமிட்டு கொண்டிருந்தவள் நான்...


நமக்குள்ளான அறிமுகம்
நடந்தே ஆகவேண்டுமென
விதியும் நினைத்து விட்டதால்
எதிரும் புதிருமான ஒரு சந்திப்பில்
வார்த்தைகளால் உரசிக் கொண்டோம்...

உரசிய வேளையிலே
உள்ளம் ஒட்டிக்கொண்டதை அறியாமலே
ஒருவருக்கொருவர் முறைத்தும் கொண்டோம்...

மீண்டும் மீண்டும் நமக்குள்ளான
சதுரங்க விளையாட்டுகளிலே
காதல் துளிர்த்துக்கொண்டு
நம் சீண்டல்களை சிறு குழந்தை போல்
கன்னம் தாங்கி ரசித்துக் கொண்டிருந்தது...

நாமும் ஆழ்மனதுள் நம்மை
நேசித்துக் கொண்டும்,
விளையாட்டாய் வெளியிலே
மோதிக்கொண்டும்,
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்
ஆடிக் கொண்டிருந்தோம்...

எத்தனை நாட்களுக்கு தான்
முகமூடி கழராமல்
அட்டை கத்திக்கொண்டு
நம் வாள் வீச்சுக்களை
அலுக்காமல் வீசிக் கொண்டிருப்பது?

வேடம் கலைந்து நம்
நேசத்துள் நம்மை
புதைத்துக் கொண்ட தருணம்
வானில் வால் நட்சத்திரம் பூத்து
புன்னகையுடன் வாழ்த்திவிட்டு சென்றது...

உன்னால் நான் தாயாய் மாறுகிறேன்,
சேயாய் சிணுங்குகிறேன்,
தோழியாய் ஒரு அக்கறை,
காதலியாய் செல்ல கோபமென
எனக்குள்ளே என்னை
பல முகங்கள் பூட்டி உலவ விட்டு
வேடிக்கை பார்க்கும் உன்னை
ஆன்மாவின் ஆழத்துள் நட்டு வைத்தேன்...

எனக்கான வட்டப்பாதை விலக்கி
உனக்காக நீ அமைத்த பயணத்தில்
உயிரோடு உயிர் கட்டி
என்னையும் உன்னோடு
இணைத்துக்கொண்டாய்...

நானும் பிணைத்துக் கொண்ட
விரல்களை துடுப்பாக்கி,
கட்டுமர பயணம் போலே உன்னை
கட்டிக்கொண்டு, வேகமாய்
தாலாட்டும் அலைகளுக்கிடையே
பயமறியாத ஒரு மிரட்சி கலவையோடு
பயணித்துக் கொண்டே இருக்கிறேன்...

கரையொன்றை கண்டுகொள்ள விரும்பாத
நீண்ட பயணமாய் அது-
தொடர்ந்து கொண்டே இருக்கும்
நம் ஆயுளையும் தாண்டி.....

25 comments:

  1. // ஆன்மாவின் ஆழத்துள் நட்டு வைத்தேன்... //

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா.... ஆமா, சில விசயங்களை நட்டு வச்சா அத மறக்கவே முடியாது

      Delete
  2. நல்ல பயணம் தான் ... அதுவும் காதல்னா பின்னிடுற

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் அப்படியா சொல்றீங்க, அப்போ அடுத்த கவிதைல கண்டிப்பா காதல் இருக்காது

      Delete
  3. தங்கள் வலையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும் தோழி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர், என்னை இங்க அறிமுக படுத்தி வச்சதுக்கு... இப்போ பி.ஹச்.டி பண்ணிட்டு இருக்கேன், அது தான் அதிகமா ஆன்லைன் வர முடியல, இந்த blog கூட எனக்கு எதுவுமே தெரியாது, என்ன பண்ணனும்னு தெரியாம தான் எதோ எழுதிட்டு இருக்கேன். நிறைய கவிதைகள் படிக்க யாருமே இல்லாம அப்படியே இருக்கு, பாக்கலாம், நீங்க எல்லாம் எனக்கு ஊக்கம் குடுத்தா கண்டிப்பா நல்லா எழுதுவேன். உங்க எல்லோரோட பதிவுகள நான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் படிச்சு கமன்ட் போடுறேன். தேங்க்ஸ்

      Delete
  4. http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_8.html

    ReplyDelete
    Replies
    1. பாத்துட்டேன் சிஸ்டர், ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்

      Delete
  5. "கரையொன்றை கண்டுகொள்ள விரும்பாத
    நீண்ட பயணமாய் அது-
    தொடர்ந்து கொண்டே இருக்கும் "
    தொடரட்டும் உங்கள் அன்பின் பயணம்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ்... எப்பவுமே தொடரும்

      Delete
  6. mmm nice akka... mam sonnathu pola kadhalna super eluthuringa... thodarungal..

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மகேஷ்... உனக்கே புரியுதுனா அப்போ நான் ஓகே தான் இல்லையா

      Delete
  7. வணக்கம்
    வலைச்சர அறிமுகத்துக்கு வாழத்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் எ லாட் :)

      Delete
  8. எழுத்துக்களில் தனி முத்திரை பதிக்கிறாய் காயத்ரி ...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தேங்க்ஸ்... உங்கள மாதிரி எல்லார் ஆசிர்வாதமும் தான் இதுக்கெல்லாம் காரணம்

      Delete
  9. எனக்குள்ளே என்னை
    பல முகங்கள் பூட்டி உலவ விட்டு
    வேடிக்கை பார்க்கும் உன்னை
    ஆன்மாவின் ஆழத்துள் நட்டு வைத்தேன்...// நட்டு வைத்த காதல் செடி வேருன்றி விருக்ஷமாய் வளரவேண்டும் டா ....

    ReplyDelete
    Replies
    1. அம்மா, கண்டிப்பாமா... தேங்க்ஸ் மா

      Delete
  10. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்! ஆழமான காதல் வரிகள்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு தேங்க்ஸ் :)

      Delete
  11. அன்பின் காயத்ரி - கவிதை அருமை - இக்கவைதை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது - பாராட்டுகள் - மேன்மேலும் ஒளிர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க... தொடர்ந்து ஆதரவு குடுங்க

      Delete
  12. கவிதை அருமை காயத்ரி ...நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்...
    வலைச்சர அறிமுகத்துக்கு வாழத்துக்கள்....

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
    www.99likes.blogspot.com

    ReplyDelete
  13. ரொம்ப தேங்க்ஸ்... தொடர்ந்து படிச்சுட்டு வாங்கன்னு அன்போட கேட்டுக்குறேன்

    நீங்க இதுல குடுத்துருக்குற லிங்க் ஏனோ ஓப்பன் ஆகல

    ReplyDelete
    Replies
    1. நன்றி..
      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
      www.99likes.blogspot.com

      Delete