Monday, 21 October 2013

டாங்கில்ட் (tangled) - வாங்களேன், நாமளும் அவங்க கூட பயணிச்சுட்டு வருவோம்


ஒருநாள் ப்ராஜெக்ட் சம்மந்தமா நிறைய வொர்க்ஸ் இருந்ததால நைட் புல்லா முழிச்சு இருக்க வேண்டி இருந்தது. அப்போ ரிலாக்ஸ் பண்றதுக்காக, பிரேக்ல புல்லா டாங்கில்ட் (tangled) படம் தான் பாத்துட்டு இருந்தேன்...
ஹைய்யோ அந்த பொண்ணோட குறுகுறுப்பு, துறுதுறுப்பு, அவ கண்ணு, அவ தைரியம்.... அவளோட இன்னசன்ட்... சான்சே இல்ல.... அந்த பொண்ண நான் அவ்வளவு ரசிச்சு ரசிச்சு பாத்துட்டே இருந்தேன்... இதுல இந்த ஹீரோவுக்கு அவ்வளவு வெய்ட்டான கேரக்டர் இல்ல, ஆனாலும் அவனோட காதல அவன் அவ கிட்ட சொல்ல தவிக்குறது, அதுக்காக அவன் செலக்ட் பண்ணின இடம், அவள அப்படியே பாத்துட்டே இருக்குறது.... எல்லாமே சூப்பர்......

Tangled – 2010-ல வால்ட் டிஸ்னி எடுத்த ஒரு அனிமேட்டட் படம்.

“This is the story of how I died” ன்னு ஹீரோவோட படத்த காட்டி சோகமா ஒரு பேக்ரவுண்டுல ஆரம்பிச்சு அடுத்த செகண்டே, “but don’t worry, this is actually very fun story and the truth is, it isn’t mine. This is the story of a girl named Rupenzel” அப்படின்னு உற்சாகமா நம்மள நிமிர்ந்து உக்கார வைக்குறாங்க. அப்பவே அது ஹீரோயின் சப்ஜக்ட்னு தெரிஞ்சுடும்.

இனி கதைக்குள்ள போவோம்:
...............................................................................

ஒன்ஸ் அப் ஆன் எ டைம்...... சூரியன்ல இருந்து ஒரே ஒரு துளி மண்ணுல விழுந்து, அது ஒரு மந்திர பூவா வளருது. நோய் வாய்ப்பட்ட, காயப்பட்ட ஆட்கள குணப்படுத்துற சக்தி வாய்ந்தது அது. அத ஒரு வயசான சூனியக்காரி பாத்துடுறா. ஒரு ஸ்பெசல் பாட்டு பாடி, அந்த பூவ ஒளிர வச்சு இளமையா மாறிடுறா. நூறு வருசமா அப்படியே அவ இளமையா இருக்குறா. இன்னொரு பக்கம், அந்த நாட்டோட மகாராணிக்கு குழந்தை பிறக்க போகுது. ஆனா அவங்க ரொம்ப உடம்பு முடியாம இருக்காங்க. நேரம் போய்டே இருக்கு. அந்த மேஜிக் பூ பத்தி கேள்விபட்டுருந்த மக்கள் இப்போ ஆள் ஆளுக்கு அத தேட ஆரம்பிக்குறாங்க. ஒருவழியா அத கண்டுபிடிச்சு அரண்மனைக்கு கொண்டு வந்துடுறாங்க. அந்த பூவுல இருக்குற மேஜிக்னால ராணி குணமாகிடுராங்க. ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையையும் அவங்க பெத்தெடுக்குறாங்க.

அந்த இளவரசி தங்க நிற முடியோட ரொம்ப அழகா இருக்கா. அவ தான் நம்மோட ஹீரோயின் ரூபன்சல். அவளோட பிறப்ப கொண்டாடுறதுக்காக ராஜாவும் ராணியும் ஒரு பறக்கும் விளக்கை வானத்துல பறக்க விடுறாங்க.

எல்லாமே நல்ல படியா போயிட்டு இருக்குன்னு நினச்சுட்டு இருக்குறப்போ தான் அந்த வில்லி மறுபடியும் வர்றா.. வழக்கமான பாட்டு பாட அந்த குழந்தையோட முடி ஒளிர தொடங்கி வில்லி மறுபடியும் இளமையாகிடுறா. அந்த குழந்தையோட முடிய வெட்ட நினைக்குறப்போ வெட்டப் பட்ட பகுதி மந்திர சக்திய இழந்துடுது. அதனால மொத்தமா குழந்தையவே திருடிட்டு நொடி பொழுதுல மறஞ்சுடுறா...

அரசாங்கத்து ஆட்கள் எல்லா இடத்துல தேடிப்பாத்தாலும் அவங்களால இளவரசிய கண்டுப்பிடிக்க முடியல.

ஆனா இளவரசியோ, ஒரு அடர்ந்த காட்டோட மையப் பகுதியில ஒரு மறைக்கப்பட்ட டவர்ல மறைச்சு வைக்கப்படுறா. வழக்கமான பாட்டு பாடி அந்த கூந்தல ஒளிர வச்சு கிளவி தன்னோட இளமைய தக்கவச்சுடுறா....

அங்க ராஜாவும் ராணியும் எப்படியும் அவங்க பொண்ணு கிடைச்சுடுவாங்குற நம்பிக்கைல இளவரசியோட ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஆயிரக்கணக்குல பறக்கும் விளக்குகள பறக்க விட்டுட்டே இருக்காங்க.

சின்ன வயசுல இருந்தே தன்னோட பிறந்தநாள்ல ஒவ்வொரு வருசமும் ராஜா ராணி பறக்க விடுற அந்த விளக்குகள மட்டுமே பாத்து பாத்து வளர்ந்த ரூபன்சல் பதினெட்டு வயசு ஆனதும் அத நேர்ல போய் பாக்கணும்னு தன்னோட தணியாத ஆசைய தன்னோட அம்மாகிட்ட சொல்றா. வெளி உலகம் சூழ்ச்சியும், தன்னலமும் உள்ள ஆபத்தான உலகம், அவங்க கிட்ட இருந்து நீ எப்பவும் தள்ளியே இருக்கணும், அதனால எப்பவும் இங்க இருந்து வெளில போகவே கூடாதுன்னு சொல்லிடுறா.

இப்படி கதையோட ஆரம்பிக்குற படம், இளவரசிக்குள்ள வர்ற ஆசையால அதை நிறைவேத்த, அங்க எதிர்பாராம வந்த ஹீரோவ எப்படி பயன்படுத்துறான்னு ஆரம்பிச்சு, டவர்ல இருந்து தப்பிச்சு போறது, அவளுக்குள்ள வர்ற காதல்னு விறுவிறுப்பா நகர ஆரம்பிச்சுடுது.

மனுஷ நடமாட்டமே இல்லாத தனிமைல அடைஞ்சு வாழ்ந்த போதும் இளவரசி சந்தோசமாவே இருக்குறா. ஒரு குழந்தைக்கு இருக்குற ஏக்கமும், ஆசையும் இயல்பாவே அவளுக்கு இருக்கு. எப்பவும் துரு துருன்னு ஒரு பட்டாம்பூச்சி மாதிரி படம் முழுக்க வளைய வரா. அவளோட கூந்தல் தான் வெட்டவே முடியாதே, அது பாட்டுக்கு வளந்துகிட்டே போகுது. அவளோட கூந்தல புடிச்சுட்டு தான் வில்லி அந்த டவருக்குள்ளயே ஏறி வரா. அங்க ரூபன்சலுக்கு தெரிஞ்ச ஒரே ஆள், அவளோட அம்மா தான். அதுக்கப்புறம் அவளோட ப்ரென்ட்ன்னு பாத்தா ஒரு பச்சோந்தி. அதுவும் கூடவே சேர்ந்து இந்த படம் முழுக்க நடிச்சிருக்கு. ரூபன்சலுக்கு லீகல் அட்வைசர் இந்த பச்சோந்தி தான். சைகைலயே படம் முழுக்க பேசுது.

இந்த ஹீரோ யாருன்னு நான் சொல்லவே இல்லையே. அவன் ஒரு திருடன். அரண்மனைக்குள்ள இருக்குற இளவரசியோட கிரீடத்த திருட்டிட்டு வரப்போ அரசாங்க வீரர்கள்கிட்ட மாட்டிக்காம இருக்குறதுக்கு தப்பிச்சு வந்து இளவரசிகிட்ட மாட்டிக்குறான்.

இங்க நான் இன்னும் மூணு கேரக்டர் பத்தி சொல்லணும். அதுல ரெண்டுபேர் நம்ம ஹீரோவோட கூட்டாளிங்க, இல்லல முதலாளிங்க. அவங்க கிட்ட இருந்தும் அந்த கிரீடத்த தூக்கிட்டு வந்துடுவான் ஹீரோ. அதனால அவன எப்படியாவது புடிச்சு பழி வாங்கணும்ன்னு துடிக்குறாங்க அவங்க.

இன்னொரு முக்கியமான ஆள் யாருனா, அது தான் மேக்சிமஸ். அது ஆள் இல்ல, குதிரை. அரசாங்க விசுவாசி. எப்படியாவது அந்த திருடன பிடிச்சே தீருவேன்னு படம் முழுக்க மோப்பம் பிடிச்சுட்டே இருக்கு. அப்புறம், ஹீரோவோட காதல புரிஞ்சுகிட்டு அவனுக்கு உதவி பண்ணுது. மாக்ஸிமசுக்கும் ஹீரோவுக்கும் இடைல நடக்குற சண்டை நம்மள கலகலன்னு சிரிக்க வைக்கும்.

நான் தான் இது ஹீரோயின் சப்ஜெக்ட்ன்னு ஏற்கனவே சொல்லிட்டேனே, படம் முழுக்க முழுக்க ரூபன்சல்லோட அட்டகாசம் தான்.

ஹீரோவ அடிச்சு அடைச்சு வச்சுட்டு, தான் இன்னும் சின்ன பொண்ணு இல்லன்னு நிரூபிக்க தன்னோட அம்மாகிட்ட துடிக்குறதாகட்டும், ஓங்குன அவ அம்மா குரலுக்கு ஒரு நொடி யோசிச்சு, அப்படியே ஹீரோவ அவ கிட்ட இருந்து மறைக்க முடிவெடுக்குறதாகட்டும், அவளோட முகத்துல அவ காட்டுற அந்த பாவனைகள்.... சான்சே இல்ல.... அவ்வளவு அசத்தல்.

முதல் முதலா புல்வெளில அவ கால வைக்குறப்போ விரல்கள மட்டும் தரைல ஊன்றி வைப்பா... அடடா அந்த காட்சி கவித, கவித. பூமிக்கு இறங்கி வந்த தேவதை தலை கால் புரியாம ஆடுறத போல, தலைகீழ எல்லாம் நிக்குறா. புல்வெளில படுத்து உருளுறா, ஓடுறா, தண்ணி கண்டு மயங்குறா, ராத்திரியில குளுருல நடுங்குறா...

தன்னோட முடிய திருட வந்த திருடன்னே நினச்சுகிட்டு அவனோட போற ரூபன்சல் அவன மிரட்ட கைல ஆயுதமா கொண்டு போறது ஒரு கடாய். அத வச்சே அவன அடிச்சு துவைக்குறா. அப்புறமா, திருடர்கள்கிட்ட இருந்தும் அரசாங்க வீரர்கள்கிட்ட இருந்தும் தப்பிச்சு ஒரு குகைல, தண்ணிக்குள்ள மாட்டிகிட்டு, தப்பிக்க வழியே இல்ல, செத்து தான் போவோம்னு இருக்குற சூழ்நிலைல தான் திருடன் தன்னை யூஜின்னு அறிமுகப்படுத்திக்குறான். அவளும் அவளை பத்தி யூஜின்கிட்ட அறிமுகப்படுத்திக்குறா. அங்கயே காதல் அவளுக்குள்ள வந்து உக்காந்துக்குது.

அப்புறமா எப்படியோ தப்பிச்சு வந்த பிறகு ஹீரோவ அவ பாக்குற பார்வை எல்லாமே காதல் காதல் காதல்... காதல் தவிர வேறதுவும் இல்லை. தப்பிச்சு வந்த ராத்திரி அவன் அவ கிட்ட அவன பத்தி அளந்து விடுவான். இவ அவன குறுகுறுன்னு பாத்துகிட்டே அவன்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து நெருங்கி உக்காருவா... அந்த சீன பாருங்க... அவ கண்ணுல காதல் பெருக்கெடுத்து ஓடும்.

அப்புறமா, ஹீரோ அவளை ஒரு பெரிய ஏரிக்கு கூட்டிட்டு போய் அவளுக்கு அந்த விளக்குகள காட்டுவான். அப்படியே தன்னோட காதலையும் கவிதையா சொல்லுவான். அந்த இடத்துல அவங்க ரெண்டுபேர் மட்டும் மெய் மறந்து போக மாட்டாங்க, பாத்துட்டு இருக்குற நாமளும் தான் அவங்களாவே மாறி போவோம்.

அடுத்து கதை சிலபல ட்விஸ்ட்களோட நகர்ந்து, ஒரு சந்தர்ப்பத்துல அவ தான் காணாம போன இளவரசிங்குறத தெரிஞ்சி கோபப்படுற கட்டத்துல அப்படியே ரூபன்சா முகத்துல கோபம் தாண்டவமாடும். இனி எக்காரணம் கொண்டும் தன்னோட முடிய கிழவியோட சுயலாபத்துக்காக பயன்படுத்த விட மாட்டேன்னு ஆவேசமா முடிவெடுப்பா.

ஆனா தன்னை தேடி காப்பாத்த வந்த யூஜின் சாக கிடக்குறப்போ எப்படியாவது அவன காப்பாத்த விடு, வாழ்நாள் முழுக்க உனக்கு அடிமையா இருக்கேன்னு அவ கெஞ்சுற நேரம் நமக்கும் அழுக வந்துடும். அவன் பிழைச்சா மட்டும் போதுங்குற பதைபதைப்பு நம்மளையும் அடுத்து என்ன நடக்க போகுதோன்னு படபடக்க வச்சுடும்.

ஹீரோ மட்டும் குறஞ்சவனா என்ன? அந்த கிழவிகிட்ட இருந்து ரூபன்சாவ காப்பாத்த, தன் பக்கத்துல வர அவளோட தலைமுடிய புடிச்சு அறுத்து எறிஞ்சுடுறான். அவன காப்பாத்த மேஜிக் முடி இல்லாம செத்தும் போயிடுறான்....

வெயிட் வெயிட் வெயிட்... சோகமா எல்லோரும் கிளம்பிடாதீங்க, படம் இன்னும் முடியல, அப்புறம் என்னாச்சுன்னு படம் பாத்து நீங்களே தெரிஞ்சுக்கோங்க...

ஜாலியான படம், சந்தோசமான எண்டிங்ன்னு படம் முழுக்க என்ட்டர்டெயின்மென்ட். எத்தன தடவ பாத்தாலும் அலுக்கவே அலுக்காத ஒரு படம் இது.

நீங்க போய் tangled பாருங்க... நான் இன்னொரு நாள் இன்னொரு படத்தோட கதையோட வரேன்....


16 comments:

  1. படம் பார்க்கும் போது உங்களின் விமர்சனம் ஞாபகம் வரும் படி - ரசிக்கும் படியாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா.....

      Delete
  2. நல்ல ரசிச்சு எழுதியிருக்கீங்க.. நான் அந்த படம் பார்த்திருக்கேன்.. அருமையா விமர்சனம் எழுத வருது உங்களுக்கு.. இன்னும் சில நல்ல படங்கள் பார்த்து எழுதுங்க..

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ்.... அந்த படம் ரொம்ப பிடிச்சதால தான் இவ்வளவு ரசிச்சு எழுதி இருக்கேன். நீங்க சொன்ன மாதிரி இன்னும் ரசிச்ச படங்கள் பத்தி அப்பப்போ எழுதுறேன்

      Delete
  3. எழுத்து நடை சுவாரஸ்யம், ஆனா அதுக்காக முழுக் கதையும் சொன்னா எப்படி? படம் பார்க்கும்போது சஸ்பென்ஸ் குறைஞ்சிடுமே... ஹிஹி என்னை மாதிரி ஆட்களுக்கு இந்தப் பதிவு படம் புரிய உதவியா இருக்கும்கிறது வேற விஷயம்...

    ReplyDelete
    Replies
    1. சஸ்பென்ஸ் குறைஞ்சாலும் கண்டிப்பா சுவாரஸ்யம் குறையாது. நான் கதை சொல்லலனாலும் மோஸ்ட்லி இது நிறைய பேருக்கு தெரிஞ்ச கதை தான், ஆனா அத சுவாரசியமா கொண்டு போனதுல தான் அவங்க வெற்றி இருக்கு

      Delete
  4. நல்ல வேளை, கிளைமாக்ஸ் பத்தி ஒண்ணும் சொல்லலை..

    ReplyDelete
    Replies
    1. ஆமா, படம் ஆரம்பிக்கும் போதே இது நான் எப்படி இறந்தேன் அப்படிங்குற கதைன்னு தான் ஆரம்பிப்பாங்க.... அப்போ ஹீரோ இறந்துடுவார்ன்னு ஆரம்பத்துலயே நமக்கு தெரிஞ்சுடும். ஆனாலும் இதுல ஹாப்பி எண்டிங்.... அது தான் சஸ்பென்ஸ்சே

      Delete
  5. aaha akka, ninga adutha kattathuku poyittinga.. ethirparkala rompa alaka eluthi irukkuringa... ithu pola ninga rasicha padangalukku vimarsanam eluthavum.. engalukkum oru nalla padam parka vayppu kidaikkum.. thodarungal..

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மகேஷ்.... கண்டிப்பா நேரம் இருக்குறப்போ எழுதுறேன்

      Delete
  6. வணக்கம்

    முழுமையாக படம் பார்தால் போல உள்ளது அருமை வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு தேங்க்ஸ் :)

      Delete
  7. அட... அட... என்ன ஒரு அழகான திரைப் பார்வை!!! அழகு. படத்தைப் போலவே உங்கள் பதிவும் அழகு. அசத்தல். நிச்சயம் பார்க்கிறேன். நம்ம தளத்துக்கும் முடிஞ்சா வாங்களேன்?

    http://newsigaram.blogspot.com/2013/09/kandasaamiyum-sundaramum-01.html#.UmV4uxDTRP0

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். கண்டிப்பா வரேன், உங்க தளத்துக்கு

      Delete
  8. படம் பார்த்த திருப்தி உன் எழுத்தில் இருக்கு டா காயு மா.... காட்சிகள் கண் முன் தோன்றும் அளவு விமர்சனம் .... லவ்லி டா ....

    ReplyDelete