Saturday, 12 October 2013

என்ன மாதிரி சமூகத்துல வாழ்றோம் நாம???? கடுப்பேத்துறாங்க மை லார்ட்.....


வழக்கமா ரிலாக்ஸ் பண்ண ஜாலியா எப்.பி பக்கம் எட்டி பாத்துட்டு போறது வழக்கம். நான் எப்பவுமே வந்தா ஒரு ஸ்டேடஸ் போடுவேன், யாராவது வந்து கமண்ட் போட்டா ஜாலியா கொஞ்சம் அரட்டை அடிப்பேன், அப்புறம் வேலைய பாக்க போயிடுவேன்...


எப்பவாவது திடீர்னு தோணும், கவிதை எழுதணும்னு... அப்போ பத்து நிமிஷம், இல்லனா ஒரு அரை மணி நேரத்துல கடகடன்னு எழுதி அத என்னோட உணர்வுகள்  பேஜ்ல போஸ்ட் பண்ணி விட்டுடுவேன்.

அப்படிதான் இன்னிக்கும் எப்.பி வந்தேன். அங்க சிங்கிள் பிரேம்னு ஒரு குரூப் இருக்கு. அதுல ஒருத்தங்க ஒரு போஸ்ட்  போட்டுருந்தாங்க... அதுல அவங்க யூஸ் பண்ணியிருந்த போட்டோ என்னோட கவனத்த ஈர்த்துது. சரி, அப்படி என்ன போட்டுருக்காங்கன்னு பாத்தேன். அப்படியே ஷாக் ஆகிட்டேன்..

அவங்க ஒரு கவிதை போட்டுருந்தாங்க. மூணு வருஷம் முன்னாடி எப்.பில நான் எழுதின கவிதை  அது. என்னோட blog-ல கூட அத போட்டுருக்கேன். அதுல ஒரு வரி கூட மாத்தாம, அப்படியே அவங்க எழுதின மாதிரியே போஸ்ட் பண்ணியிருந்தாங்க....

நான் அங்கயே போய் அவங்களுக்கு மறுப்பு சொன்னேன். அது நான் தான் எழுதினேன்னு சாட்சியோட சொன்னேன். நீங்க வேணா கூகிள்ல சர்ச் பண்ணி பாருங்க, என்னோட கவிதை தான் முதல் முதல்ல போஸ்ட் ஆகி இருக்கும்.

அப்படி நான் ஆர்கியூ பண்ணிட்டு இருக்கும் போது ஒருத்தர் வந்து நாம போடுறதே சமூக ஊடகத்துல, இங்க யார் வேணும்னாலும் எத வேணும்னாலும் எடுத்துக்கலாம், திருக்குரள நாம போடும்போது அத எழுதினது திருவள்ளுவர்னு நாம போடவா போறோம், யார் எழுதினா என்ன, கவிதை நல்லா இருக்குன்னு சொல்றார்.

திருவள்ளுவர தெரியாதவங்க தமிழர்களே கிடையாது. அவரோட வரிகள எடுத்து போட்டா அது திருக்குறள் தான்னு சின்ன குழந்தைகள் கூட சொல்லும். ஆனா நாம இங்க அப்படி இல்ல. ஒவ்வொருத்தரும் அவங்களோட உணர்வுகள கொட்டி தான் எழுதுறாங்க, ஆனா அத எவ்வளவு ஈசியா பொறுக்கி எடுத்துட்டு, பாராட்டுக்கள காப்பி அடிக்குறவங்க வாங்கிட்டு போய்டுறாங்க...

இதெல்லாம் சகஜம், விடுன்னு நீங்க சொன்னா, நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லிக்குறேன்... நான் எழுத ஆரம்பிச்சு கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆச்சு, நானும் இதே சமூக ஊடகத்துல தான் இருக்கேன். நான் யார் எழுதுனதையும் காப்பி அடிச்சு போட்டதில்ல... யாராவது என்னை பாராட்டினா கூட ரொம்ப சங்கோஜமா இருக்கும், அதுக்கு நாம தகுதியா தான் எழுதி இருக்கோமான்னு... ஆனா மனபூர்வமா வர கமண்ட்ஸ்கள நான் எப்பவுமே வரவேற்பேன்...

ஆனா, இவங்களுக்கு எல்லாம் மனசாட்சி உறுத்தவே உறுத்தாதா? இவங்க வீட்ல வந்து ஒருத்தர் உக்காந்துட்டு அந்த வீடு என்னோடது, அந்த வீட்ல இருக்குறவங்க எல்லாம் எனக்கு சொந்தம்னு சொன்னா சும்மா விடுவாங்களா?

நானும் தெரியாம தான் கேக்குறேன், சமூக ஊடகங்கள்னா அதுல மத்தவங்க போட்டுருக்குரத பாத்து உங்களுக்கு பிடிச்சு இருந்தா share பண்ண வேண்டியது தானே... அது எழுதினவங்களுக்கும் ஒரு ஊக்கமா இருக்கும். அத விட்டுட்டு இப்படி பண்றது அசிங்கமா இல்லையா?

நான் இத குறிப்பிட்ட ஆளுக்காக எழுதல, அடுத்தவங்க எழுத்த மனசாட்சியே இல்லாம சுட்டு தன்னோடது தான்னு சொல்ற எல்லாருக்காகவும் தான் சொல்றேன்.... கொஞ்சமாவது மத்தவங்களோட உணர்வுகள மதிக்க கத்துக்கோங்களேன்...... 

29 comments:

  1. அட..அப்போ நீங்க பிரபலம் ஆகிட்டீங்கன்னு அர்த்தம்...

    ReplyDelete
    Replies
    1. அய்யோ, அப்படி எல்லாம் இல்லீங்க

      Delete
  2. http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speed-Wisdom-2.html - இந்தப் பதிவு உங்களுக்கு ஆறுதல் தரலாம்...

    பகிர்ந்து கொள்ளும் முன் என்ன செய்யலாம்...? - என்றும் அறியலாம்...

    கருத்தை அந்தப் பதிவிலேயே சொல்லவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, கண்டிப்பா படிக்குறேன். படிச்சுட்டு கருத்து சொல்றேன்

      Delete
  3. அந்த காலத்திலே g t நாயுடு கண்டுபிடிப்புக்கு சோதனை வந்ததுன்னா .இந்த காலத்திலே g t க்கு இப்படி ஒரு சோதனையா ?
    இணைய வெளியில் திருடர்கள் பெருகி விட்டார்கள் !
    கடமையை தொடருங்கள் ...சாதனை படைப்பீர்கள் !

    ReplyDelete
    Replies
    1. உண்மைய சொல்ல போனா, இது என்னோட ஹாபி தான், ஆனாலும் கேக்கணும்னு தோணிச்சு, அதான் கேட்டேன்

      Delete
  4. இதெல்லாம் சகஜமுங்கோ! கவலைப் ப‌டாமல் உங்கள் எழுத்தை தொடருங்கோ! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ் ...

      Delete
  5. வணக்கம்
    யார் எதைப்பற்றி பேசினாலும் நாம நாமாக இருந்தால் சரி தொடருங்கள் உங்கள் பணியை. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சரி தான்... ஆனாலும் கொஞ்சமாவது உணர வேணாமா அவங்க

      Delete
  6. எண்ணத் திருட்டு எப்பொழுதும் தவறு தான். ஆனாலும் அது ரொம்ப நாள் நீடிக்காது

    ReplyDelete
    Replies
    1. அது புரியுது மேடம். கருத்து சொன்னதுக்கு தேங்க்ஸ்

      Delete
  7. பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்னும் பழமொழிக்கு ஏற்ப உன்னிடமே அகப்பட்டு கொண்டது டா அந்த ஐடி ....

    ReplyDelete
    Replies
    1. அம்மா, எனக்கு வேற எதுவும் வருத்தம் இல்ல, இது உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கவிதை... அது தான் கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன்... இனி அவங்க இப்படி செய்ய மாட்டாங்கன்னு நம்புவோம்

      Delete
  8. ஒருத்தர் தானே காப்பி அடிச்சிருக்கார். இன்னும் நிறைய பேர் காப்பி அடிக்கணும். அப்படி இன்னும் சிறப்பாய் எழுதிக்கொண்டே இரு. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா... அதுக்காக அடுத்தவங்க காப்பி எல்லாம் அடிக்க வேணாம், எனக்கு கஷ்டமா இருக்கும்ல

      Delete
  9. காப்பி அடிக்கிறதை விட கொடுமை அவங்க அதை நியாயப்படுத்துகிற வார்த்தைகள்..

    ReplyDelete
    Replies
    1. சில பேர் அப்படியே வாழ்ந்து பழகிட்டாங்க போல :(

      Delete
  10. இணையத்திருட்டு தடுக்க முடியாதது.... இருந்தாலும் அங்கே தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தது வரவேற்கத்தக்கது.... பிரபலமாயிட்டு வர்றீங்க... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. தவிர்க்க முடியாது தான். ஆனாலும் கொஞ்சமாவது அவங்களுக்கு உறுத்தனும்னு தான் சொல்லிட்டு வந்தேன். எல்லோரும் நமக்கென்னன்னு இருந்தா எப்படி? அப்புறம் நான் பிரபலம் எல்லாம் இல்லீங்க, அப்படி வார்த்தைய கேட்டாலே மனசாட்சி உறுத்துது. எதோ மனசுக்கு தோணுறத இங்க கொட்டிகிட்டு இருக்கேன் அவ்வளவு தான்

      Delete
  11. ஆனா, இவங்களுக்கு எல்லாம் மனசாட்சி உறுத்தவே உறுத்தாதா? இவங்க வீட்ல வந்து ஒருத்தர் உக்காந்துட்டு அந்த வீடு என்னோடது, அந்த வீட்ல இருக்குறவங்க எல்லாம் எனக்கு சொந்தம்னு சொன்னா சும்மா விடுவாங்களா?

    அருமையா சொன்னீங்க அடுத்தவர் திறமையை காப்பி அடித்து தன்னை உயர்த்தி கொள்வது சரியான செயலல்ல

    ReplyDelete
    Replies
    1. ஆமா, சரியில்ல தான், ஆனாலும் எத்தன பேருக்கு புரியும்னு தான் தெரியல

      Delete
  12. oru masam kuda mudiyala. athukkula prapalam adaiyuringa akka... wow super thodarnthu eluthunga.. already ellarum inga sonnathala na onnum puthusa solla illa.. sila blogs la copy rights pottu irukkum parthu irukken analum avunga pathivkal copy paist nadakkuthu. so ninga ethukkum kandukkama ezuthalum.. dd sir oda pathiva padichu parunga..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா மகேஷ்... என்னோட writings வெளில தெரியுறதுக்கு நீ தான் காரணம். இதுக்கு முன்னாடி எவ்வளவோ போட்டேன், ஆனா யாருக்கும் தெரியலயே

      Delete
  13. தன் எழுத்தின் மேல், தன் திறமையின் மேல் நம்பிக்கை உள்ள எவனும் மற்றவரிடமிருந்து திருட மாட்டாங்க காயத்ரி! அப்படி செஞ்சாங்கன்னா அவங்க இயலாதவங்க... ஒரு வகையில ஹாண்டிகேப்ட் அப்டின்னு எடுத்துக்கிட்டு ஒதுக்கிடுங்க. ரைட்டா? நீங்க தளர்வடையாம தொடர்ந்து எழுதுங்க! அப்புறம்... முகநூல்ல உங்களை நட்பாக்கிணும்னு விருப்பம். என்ன பேர்ல அங்க இயங்கறீங்க?

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது உண்மை தான் அண்ணா.... ஒதுக்கிட்டு தான் போறேன்... ஆனா கண்ணுல பட்டா கேக்காமலும் இருக்க முடியாதுல.....

      பேஸ் புக்லயும் இதே பெயர்ல தான் இருக்கேன்
      https://www.facebook.com/gayathri.devi.52
      இது என்னோட லிங்க்

      Delete
    2. ஹை! எ­னக்­கு ­இன்­னொ­ரு ­தங்­கை ­கி­டைச்ச்­சாச்­சே... ஜா­லி!

      Delete
    3. எனக்கும் சந்தோசம் அண்ணா

      Delete
  14. எனக்கு ஒரே ஒரு டவுட்டுதான்.. ஏன் அந்த "காப்பி பேஸ்ட் கவிதாயிணி" எதுக்கும் வாயே தொறக்க மாட்டறாங்க..?

    ReplyDelete