Saturday, 2 November 2013

எங்கடா போய்ட்ட, நீ எங்க தான் போய்ட்ட?

எங்கடா போய்ட்ட, நீ எங்க தான் போய்ட்ட?
பக்கத்து வீட்ல பாரு
அக்கம் பக்கம் எட்டிப் பாரு
அரை கிலோமீட்டர் தூரம் பாரு
அண்ணாந்து வானம் பாரு

நண்டு சிண்டு வானரம்னு
கூட்டம் கூட்டமா போறாங்க
ஜோடி ஜோடியா போறாங்க
கையில காசு இல்லாட்டியும்
மனசுல மத்தாப்பு சிதறுது

தூரத்துல நீ இருந்தாலும்
நொடி பொழுதும் விலக மாட்டேன்
அங்கன இருந்துகிட்டே
நீ என்னை சுத்தி வர மறக்க மாட்ட

வானவேடிக்க காட்டுறாங்க
அத நான் உன்கிட்ட கேக்கலையே
பக்கம் வந்து நின்னா என்ன?
பக்குவமா ஒரு பார்வ பாத்தா என்ன?

பச்ச புள்ள என்னைய நீ
கண்கலங்க விட்டுடாத
ஓடி ஓடி உழைக்குற...
இங்க நான்
ஓடா தேயுறேன்...

நரகாசுரன் செத்துட்டானாம்
எப்போ தான் நமக்கு விடுதல?
ஒரே ஒரு குரல் குடுத்தா
உள்ளமெல்லாம் குளிர்ந்து போகும்

நாளைக்கு வந்துடுவ
அதுவரைக்கும் நான் இப்படியே புலம்புறேன்
சீக்கிரமா ஓடி வா...
ரா பகலா காத்திருக்கேன்...

17 comments:

  1. true paining lines. great try sister.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் பிரதர்

      Delete
  2. ம்ம் கவிதை அருமை.ஆனாலும் பொருளாதார தேடலும் முக்கியம் தானே?

    ReplyDelete
    Replies
    1. பொருளாதார தேடல் முக்கியம் இல்லன்னு நான் சொல்லலயே, இருந்தாலும் மனசுல ஏக்கம் இருக்கத் தானே செய்யும், அத தான் சொல்ல வந்தேன்

      Delete
  3. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ், உங்க வாழ்த்துக்கு

      Delete
  4. வணக்கம்

    கவிதை அருமை பல நினைவுகள் சுமந்தது... அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ் உங்களோட வாழ்த்துக்கு

      Delete
  5. ஏக்கம் புரிகிறது...

    குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா புரிஞ்சதுக்கு :)

      Delete
  6. //நரகாசுரன் செத்துட்டானாம் //

    யாரு சொன்னாங்க ?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஊருல அப்படி தான் பேசிக்குறாங்க தாத்தா....

      Delete
  7. எதோ போகுற போக்குல விளையாட்டா சொல்லிட்டு போற மாதிரி இருக்கு, ஆனாலும் அதுல உள்ள ஒரு ஏக்கம் படிக்குற எல்லோர் மனசையும் தச்சுடுது. இது உனக்கு கைவந்த கலை, வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மேடம்... :)

      Delete
  8. தூர தேசத்தில் துணை இருக்க, பல வீடுகளில் இப்படி காத்திருக்கும் பெண்களின் சோகம் உங்கள் கவிதையில் தெரிகிறது.....

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தேங்க்ஸ் :)

      Delete
  9. அது வானவேடிக்கையா, இல்ல வாணவேடிக்கையா? ரொம்ப குழப்பமா இருக்கு.. ஆனா அருமை

    ReplyDelete