Thursday, 28 November 2013

நியாபக மறதி...



வாழ்க்கைங்குறது எப்பவுமே நாம நினைக்குற மாதிரி போறதில்ல. நாம ஒரு ப்ளான் போட்டு வச்சிருப்போம், ஆனா நடக்குறது வேறொண்ணா இருக்கும். இந்த மாதிரி எல்லாரோட வாழ்க்கையிலயுமே நடந்திருக்கும்.

என் அம்மா அடிக்கடி நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க, அதுல ஒண்ணு, எந்த விசயமா இருந்தாலும் அது நடக்கலையேன்னு வருத்தப்படக் கூடாது, கண்டிப்பா அதுக்கு ஒரு ஆல்ட்டர்நேட் இருக்கும், அப்படியும் இல்லையா, அந்த விஷயம் நமக்கு தேவையில்லாததா இருக்கும், அதான் நடக்கலன்னு நினைச்சுக்கணும்ன்னு சொல்லுவாங்க.

அதே மாதிரி தான் நியாபக மறதி இல்லாதவங்க ரொம்பவே குறைவா தான் இருப்பாங்க. எதையாவது எங்கையாவது வச்சுக்கிட்டு அத தேடி தேடி அலுத்து போன சம்பவம் எல்லோரோட வாழ்க்கைலயும் ஒரு தடவையாவது நடந்துருக்கும்.

எனக்கு நிறைய நியாபக மறதி உண்டு. சில சம்பவங்கள் நடந்ததா இல்லையான்னு கூட நியாபகம் இருக்காது. ஆனா யாராவது ஒருத்தங்க அதை பத்தி நினைவு படுத்த விரும்பி, எடுத்து சொல்ல ஆரம்பிச்சாங்கன்னா அடுக்கடுக்கா அந்த நினைவுகள் எல்லாம் அப்படி அப்படியே நியாபகத்துக்கு வர ஆரம்பிச்சுடும்.

எனக்கு அதிகமா படிக்குற பழக்கமும் கிடையாது. எதையுமே ஆழ்ந்து, அப்படியே மனப்பாடமா எதையும் படிச்சுக்கிடவும் மாட்டேன். ஆனா படிச்ச அந்த விசயத்தோட சாராம்சம் மட்டும் மனசுல தங்கிடும். யாராவது அத பத்தி பேசினா கேட்டுட்டே இருப்பேன். ஒரு பக்கம் அவங்க சரியா தான் சொல்றாங்களான்னு கூர்ந்து கவனிச்சுகிட்டே வருவேன், அவங்க தப்பா சொல்லும்போது, பளிச்சுன்னு அத மறுத்து, அப்படி இல்ல, இப்படின்னு சொல்லுவேன்.

ஆக, எனக்கு எல்லாம் நியாபகம் இருக்குதா இல்லையான்னு எனக்கே தெரியாது, ஆனா அப்படி நியாபகம் வர ஆரம்பிச்சுடுச்சுன்னா கடகடன்னு ஒரு கோர்வையா, அச்சு பிசகாம நியாபகம் வந்துகிட்டே இருக்கும்.

சரி, இதுக்கு இப்போ என்ன? ஏன்? எதுக்கு இத சொல்ல வர்றன்னு கண்டிப்பா நீங்க கேக்கணும்.

ஆரம்ப காலங்கள்ல இந்த நியாபக மறதி வந்தப்போ நான் ரொம்ப குழம்பி போயிட்டேன். பக்கத்துல ஏதாவது ஒரு பொருள் இருக்கும். அம்மா வந்து அத என் கண்முன்னாடியே எடுத்துட்டு போயிருப்பாங்க, ஆனா நான் கொஞ்ச நேரம் கழிச்சு அத மறந்துட்டு அந்த பொருள காணோம்னு கத்த ஆரம்பிச்சுடுவேன். இதனால எனக்குள்ள நிறைய மனக்குழப்பங்கள். ஏன் இப்படி நடக்குது, எனக்கு என்ன ஆச்சுன்னு ரொம்ப தவிச்சு, அதனால தலைவலி வந்து அப்புறம் அதுக்கும் சேர்த்து கஷ்ட்டப்படுவேன்.

நான் பேச ஆரம்பிச்சப்பவே பொய் சொல்லக்கூடாதுன்னு அம்மா சொல்லி சொல்லி வளர்த்ததால பொய் சொல்றவங்கள கண்டாலே எனக்கு பிடிக்காது. அதே மாதிரி நானும் பொய் சொல்ல மாட்டேன். ஆனா இந்த நியாபக மறதி வந்ததுக்கப்புறம், அம்மா உண்மை தான் சொல்லியிருப்பாங்க, ஆனாலும் ஏம்மா பொய் சொல்றன்னு கத்துவேன். நானும் எதையாவது சொல்லிட்டு, நான் அப்படி சொல்லலன்னு சாதிப்பேன். இது எனக்கு பெரிய சவாலாவே இருந்துச்சு.

இந்த பிரச்சனைல இருந்து என்னை மீண்டு வர செய்தது அம்மாவும் அப்பாவும் தான். ஒரு வார்த்தை நான் தப்பா எதுவா சொன்னாலோ, இல்லை காணோம்னு தவிச்சாலோ பொறுமையா அந்த சம்பவத்த நியாபகத்துக்கு கொண்டு வருவாங்க. நானும் டென்சன் ஆகாம யோசிச்சா எல்லாமே நியாபகத்துக்கு வரும்.

ஒருத்தங்களுக்கு கோபம் வரலாம், நியாயமான விஷயங்கள் மீறி அநியாயம் நடக்கும் போது கண்டிப்பா கோபம் வரணும், ஆனா எப்பவும் நம்மோட நிதானத்த விட்டுற கூடாது, அப்பவும் பொறுமையா இருக்கணும்னு அம்மா சொல்லுவாங்க. இதுதான் பல இடங்கள்ல தடுமாறாம நின்னு போராட எனக்கு உதவியா இருந்துருக்கு.

இப்போ எனக்கு இந்த நியாபக மறதி ஒரு பெரிய விசயமாவே இல்ல, ஒரு நிமிஷம் தடுமாறினாலும், கொஞ்சம் பொறுமையா ஆழமா சிந்திச்சு ஒரு மூச்சு விட்டேனா கண்டிப்பா எல்லா விசயமும் எனக்கு நியாபகம் வந்துடும். ஆனா முக்கியமான விஷயம், கொஞ்சமும் தடுமாறிட கூடாது. அப்படியே நியாபகத்துக்கு வரலன்னா என்னாச்சு என்னாச்சுன்னு ரொம்பவே யோசிச்சுட்டு இருக்க கூடாது. அந்த விசயத்த அப்படியே விட்டுட்டு வேற விஷயங்கள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சுடணும். அப்புறம், மறந்து போன விசயம் எதோ ஒரு சமயத்துல பளிச்சுன்னு நியாபகத்துக்கு வந்துடும்.

இந்த நியாபக மறதி ஏன் வருது, எதனால வருதுன்னா அதுக்கு பல காரணங்கள் இருக்கு. ஆனா இப்போ நான் அத பத்தி சொல்ல வரல, எனக்கு வர காரணம், நான் எடுத்துகிட்ட சில மருந்துகள். இதனால எனக்கு பார்வை தடுமாற்றம், நியாபக மறதி, மனநிலை மாற்றம்னு ஏகப்பட்ட பிரச்சனைகள். ஆனா இப்போ அத எல்லாம் தாண்டிட்டேன். எவ்வளவோ பேர், இந்த மாதிரி பாதிக்கபட்டுருக்கலாம், ஆனா நாம நினச்சா அத ஜெய்க்கலாம். அய்யோ நமக்கு ஏன் இப்படின்னு பதறுரதுக்கு பதிலா, என்னால இதுல இருந்து வெளிவர முடியும்னு நினச்சு பாருங்க, கண்டிப்பா சாதிக்கலாம்.


நான் இன்னொரு நாள் வரேன், இப்போதைக்கு பை பை...

20 comments:

  1. சில நேரம் ஞாபகமறதி நல்லது...

    (தொடர்புடைய பதிவுகளையும் Linked within இணைத்து விட்டேன்)

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா... பார்த்தேன்

      Delete
  2. ஞாபகம் வரது, வராம இருக்கறது எல்லாமே இந்த மூளைலே இருக்கிற சினாப்சிஸ் நடுவிலே இடைவிடாமே காரியம் செஞ்சுட்டே இருக்கிற செரோடொனின் என்ற கெமிகல் தான்.

    ஒரு எக்ஸ் விஷயம் மனசிலே தோணும்போது அது சம்பந்தப்பட்ட என்பது மட்டுமல்ல, அந்த வார்த்தையுடன் தொடர்பு கொண்ட எல்லாமே நினைவுக்கு வருவது எல்லாமே மூளையின் அபார திறன் . அதற்கெல்லாம் காரணம் அந்த செரோடொனின்.

    இந்த திரவம் ஹார்மோன் போதிய அளவு சுரக்காதபோது அல்லது மற்ற ஹார்மோன் களுடன் சரியான அளவில் கலக்காதபோது வரும் மன நிலைகள் ஒ.சி.டி. போன்றவை. ஒரே விஷயம் மனசுலே இருந்து வெளிலே போகாம அவஸ்தை படுவதெல்லாம் இந்த ஓ.சி.டி. தான்.
    obsessive compulsive disorder.

    ஒரு குறிப்பிட்ட பெயர், அல்லது பாடல் கேட்டாலும் அந்த பாடல் வெளியான காலம், அந்த பாடல் வந்த படத்தை பார்த்த தியேட்டர், யாருடன் பார்த்தோம் என்றெல்லாம் நினைவு வரும்.

    உதாரணமாக, உங்கள் பெயர் காயத்ரி என்று பார்த்தால், என் தங்கை பெண் காயத்ரி நினைவு வரும். காயத்ரி ஜெபம் செய்கிறோம் அதுவும் நினைவுக்கு வரும். அந்த என் தங்கை பெண் சிறு ஐந்து வயது சிறுமி யாக இருந்தபோது , gaay என்றால் ஹிந்தியில் பசு மாடு என்று அர்த்தம். த்ரீ என்றால் ஆங்கிலத்தில் மூன்று. அப்ப நீ மூணு பசு மாடா என்று கேட்டேன்.

    என் தங்கைக்கு மகா கோபம். இது என் நினைவுக்கு அதாவது ஒரு நாற்பது வயதுக்குப்பின் ஞாபகம் வருகிறது.

    ஆனால்,அதுவே தொடர்ந்து இருந்து, மற்ற நினைவுகள் வராமல் தடுப்பது என்றால் அந்த ஞாபகம் ஒரு டிசார்டர் என்ற ஸ்டேஜுக்கு போய்விடுகிறது.

    ரொம்ப போர் அடிக்கிறதா ??

    பை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் தாத்தா... ஆனா ஒரு சாதாரண நிலைல இருந்துட்டு திடீர்னு ஒரு அசாதாரண நிலைக்கு போகும் போது ஏற்படுற தடுமாற்றம் நம்மையே மாத்திடும். நல்ல வேளை, நான் அதுல இருந்து மீண்டுட்டேன் இல்லல, மீள கத்துகிட்டேன்

      Delete
    2. கலக்கல் தாத்தா!

      Delete
    3. ஹஹா ஆமா.... தாத்தாவாச்சே... தகவல் பொக்கிஷம்

      Delete
  3. வணக்கம்

    பதிவை அனுபவித்து அருமையாக எழுதியுள்ளிர்கள் ...வாழ்த்துக்கள்..பதிவுக்காக த.ம..வாக்கு..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா, வாழ்த்தியதுக்கும் ஓட்டு போட்டதுக்கும்

      Delete
  4. Replies
    1. சுருக்கமா ஓட்டு போட்டத விளக்கினதுக்கு தாங்க்ஸ்... :)

      Delete
  5. ஞாபக மறதி... எனக்குள்ள பெரும் பிரச்சனை. ஆனால் நீ சொல்வது போல ஒரு விஷயம் மறந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிட்டு அப்புறம் எப்போதோ தோணும் போது அதைப்பற்றி சிந்திப்பதில்லை நான். மண்டையை உடைத்துக்கொண்டு மறந்ததை எப்படியேனும் கொண்டுவந்துவிடுவேன். உன்னுடைய formula வும் சரியானதே. சில நேரங்களில் நானும் அப்படி விட்டு விடுவதுண்டு. இப்படியாக எழுதிக்கொண்டே இருந்தால் மறதிக்கு ஒரு புள்ளி வைத்து விடலாம். நிறைய எழுதுற... அதுவே சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. மண்டைய உடைச்சுகிட்டு யோசிச்சு என்ன பிரயோஜனம், வீணா டென்சன் தான் ஆகும், அதுவே அத விட்டுட்டு ரிலாக்ஸ் ஆகிட்டு மறுபடி யோசிச்சு பாருங்க, அப்போ டக்குன்னு நியாபகம் வந்துடும்

      Delete
  6. எதார்த்தத்தின் எண்ணக் கலவையாய் வரைந்த ஓவியம்... இயல்பின் நிலையில் இதன் உள்ளார்ந்த உண்மைகள் நிறைய உள்ளது காயு, முயன்று பாருங்கள், காரண காரியங்கள் புரிய ஆரம்பிக்கும்... தொடரும் நிகழ்வுகளின் தொடர்ச்சியும் புலர அராம்பிக்கும்...

    எதார்த்தத்தின் வெளிப்பாடு ஏணியாய் உயர்ந்து செல்லுகிறது...
    வாழ்த்துக்கள்.. வளரட்டும் வான்வரை

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் அண்ணா, முயன்றதால தானே இதயே எழுதிட்டு இருக்கேன்.

      Delete
  7. இந்த நியாபக மறதியால் நான் படுகிற அவஸ்த்தை இருக்கே, ஹப்பப்பா

    ReplyDelete
    Replies
    1. ஹஹா மேடம், வாழ்த்துகள்

      Delete
  8. சில சமயங்களில் ஞாபக மறதி ஒரு வரம்....

    நல்ல கட்டுரை..... பதறாது சிந்திக்க நினைவு வரும். உண்மை தான். பலமுறை நான் உணர்ந்தது!

    த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தேங்க்ஸ் அண்ணா கருத்துக்கும், ஓட்டு போட்டதுக்கும்

      Delete
  9. நல்ல கட்டுரை.
    வாழ்த்துக்கள் காயத்ரி.

    ReplyDelete
  10. ஞாபக மறதியைப் பற்றிய ஆராய்ச்சி நல்லா இருந்து.
    "நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
    மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை"
    அப்படின்னு வைரமுத்து சொல்ல இருக்கார்

    ReplyDelete