Tuesday 26 November 2013

என்ன மாதிரி சமூகத்துல வாழ்றோம் நாம???? கடுப்பேத்துறாங்க மை லார்ட்..... (2)


சோம்பல்ங்குறது நமக்குள்ள வந்துடுச்சுன்னா அன்றைய நாள் முழுக்க சோம்பலாவே தான் இருக்குமாம். அப்படி தான் ஒரு பதிவு எழுதணும்னு ஒரு வாரமா யோசிச்சுட்டு இருக்கேன். சோம்பல் வந்து, ஏனோ தடுத்துட்டே இருந்துச்சு. இந்தா காலைல ஒன்பது மணிவரை எதுவுமே தோணாம வெறிக்க வெறிக்க மானிட்டர தான் பாத்துட்டு இருந்தேன். அப்புறமா தான் எழுதுவோம்னு முடிவுக்கு வந்தேன்.

எழுதுவோம்னு முடிவு பண்ணியாச்சு, எத பத்தி எழுதலாம்னு யோசிச்சுகிட்டே என்னோட blog போய் ஒவ்வொருத்தர் பதிவா பாக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் நம்ம கோவை ஆவி அண்ணாவோட பதிவு கண்ணுல பட்டுச்சு.  அதனால அடுத்தவங்க பதிவ சுட்டு போடுறாங்களே, அவங்களுக்கு மறுபடியும் நானும் ஒரு சூடு வச்சா என்னன்னு தோணிச்சு. (இத பத்தி ஏற்கனவே ஒண்ணு சொல்லியிருக்கேன், அத இங்க போய் பாத்துக்கோங்க)

இந்த மாதிரி சொந்த பதிவுகள சுட்டு போடுறவங்க கிட்ட தொலைச்ச அனுபவம், மூளைய போட்டு கசக்கியோ, இல்ல, மனசுக்கு தோணுறத சுயமா எழுத பழகியோ போஸ்ட் போடுறவங்களுக்கு கண்டிப்பா இருக்கும். மாங்கு மாங்குன்னு ஒரு ரசனையோட அவங்க எழுதுவாங்க, அத அப்படியே சுட்டுட்டு போய் தன்னோடதுன்னு போட்டுட்டு ஜாலியா இருப்பாங்க சில பேரு. அவங்களுக்கு எல்லாம் கண்டிப்பா மனசாட்சின்னு ஒண்ணு இருக்கவே இருக்காது.

நானும் தெரியாம தான் கேக்குறேன், இப்படி அடுத்தவங்க பதிவுகள சுட்டு போடுறீங்களே, உங்களுக்கு மானம், ரோசம், இதெல்லாம் கிடையவே கிடையாதா. ரொம்ப நல்லா இருக்குன்னு அத யாராவது பாராட்டினா, உள்மனசுல உறுத்தல் வரவே வராதா?

ஆனா, சொந்த பதிவ எழுதிட்டு, அத இன்னொருத்தன்/ஒருத்தி சுட்டுட்டு போறத பாத்து எத்தனை நாள் தான் அமைதியா இருக்குறது? இல்லனா மனசுக்குள்ளயே கஷ்ட்டப்பட்டுட்டு இருக்குறது? தப்பு செய்றது நீங்க, அதுக்காக வருத்தப்படுறது மட்டும் நாங்களா? இதெல்லாம் பாத்து கொஞ்சமாவது எங்களுக்கு கோபம் வர கூடாதா? அந்த கோபத்துல அத எல்லாம் தட்டிக் கேக்க கூடாதா?

இப்படி தான் ஒரு சம்பவம் (என்னோட கவிதைய அவங்க சொந்த கவிதை மாதிரி சுட்டு போட்டுருந்தாங்க ஒருத்தங்க) நடந்துச்சு. எதேச்சையா அது என் கண்ணுல பட, அங்க போய் சண்டை போட்டேன். இதோ இங்கயே ஒரு பதிவு எழுதினேன். அப்புறம், அந்த பொண்ணு அந்த பதிவ டெலிட் பண்ணிட்டு போய்ட்டாங்க. நானும் அதோட கொஞ்சம் அமைதியா தான் இருந்தேன். இத்தனைக்கும் அந்த குரூப் (single frame) இத கண்டுக்கவே இல்ல.

அப்புறமா தான் இன்னொரு சம்பவம் நடந்துச்சு. எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க, இந்த பேஸ் புக்கால எனக்கு கிடைச்ச இன்னொரு அம்மா, அவங்க எழுதின கவிதைய தான் எழுதினதா ஒருத்தங்க அதே single frame குரூப்ல போஸ்ட் பண்ணியிருக்காங்க. அத வேற சிறந்த கவிதைன்னு செலக்ட் பண்ணி, அத அந்த குரூப் கவர் போட்டோல வாழ்த்து தெரிவிச்சிருந்தாங்க.



இத பாத்துட்டு சொந்தமா எழுதினவங்க மனசு எப்படி கஷ்ட்டப்படும்? அவங்க என்கிட்ட சொன்னாங்க. இத கொஞ்சம் என்ன ஏதுன்னு கேளுடா காயத்ரின்னு (ஏன், அவங்களே அத கேட்ருக்கலாமேன்னு யோசிக்குறீங்களா? அவங்களால அந்த குரூப்ல கமன்ட் போட முடியாது, காரணம் அவங்க அந்த குரூப்ல கிடையாது) .

சரி, இப்போ உங்களுக்கெல்லாம் நியாயமான ஒரு விஷயம் தோணியிருக்கும். ஒரு குரூப் இருக்கு, அதுல ஒருத்தங்க ஒரு போஸ்ட் போடுறாங்க, அவங்க போடுறது அவங்க சொந்த போஸ்ட்டா இல்ல சுட்ட போஸ்ட்டான்னு குரூப் அட்மின்னுக்கு தெரிய நியாயம் இல்ல தானே. அதனால தான் நாம தானே எடுத்து சொல்லணும்னு தான் நான், அங்க ஒரு போஸ்ட் போட்டேன், அது இது தான்.

“இன்னிக்கி நீங்க அப்டேட் பண்ணியிருக்குற குரூப் போட்டோல நீங்க பாராட்டி தள்ளியிருக்குற கவிதைக்கு சொந்தக்காரர் நீங்க குறிப்பிட்ட அம்மணி இல்ல, குரூப் அட்மின் அது என்னன்னு விசாரிச்சு அந்த போஸ்ட்ட டெலிட் பண்ணி, அது பத்தி ஒரு போஸ்ட் போட முடியுமா?”


இந்த போஸ்ட் போட்டதுமே, இந்த குரூப் அட்மின்ஸ் கண்ணுக்கு எப்படியோ தெரிஞ்சுடுச்சு. அதுல ஒருத்தர் Kala Roshan. அவர் வந்து என்ன ஏதுன்னு விசாரிச்சார். இது யார் எழுதினது, அத அவங்க தான் எழுதினாங்கன்னு உங்களால எப்படி சொல்ல முடியும்னு எல்லாம் கேள்வி கேட்டார். நானும், அது ஏற்கனவே போஸ்ட் பண்ணியிருந்த லிங்க் எல்லாம் எடுத்து குடுத்து, இந்த தேதிக்கு முன்னாடி இது வேற எங்கயாவது போஸ்ட் ஆகியிருக்கான்னு கூகிள்ல போய் தேடி பாருங்கன்னு சொன்னேன். அத உண்மையா எழுதினவங்க பெயரும், அவங்க வச்சிருக்குற பேஜ் எல்லாமே அவருக்கு தெரியும். ரெண்டு பேருமே நண்பர் வட்டத்துல இருக்குறவங்க தான்.

சரி, இப்போ நீங்க என்ன தான் சொல்ல வறீங்க, அடுத்தவங்க எழுதினத பகிர்றது ஒரு தப்பா? இந்த மாதிரி காப்பி அடிச்சு போடுறவங்கள எப்படி கண்டுபிடிக்குறது? அது இன்னொருத்தர் பதிவு தான்னு எப்படி நம்புறது? அந்த மாதிரி காப்பி அடிக்குரவங்கள என்ன பண்றதுன்னு ஒரு கேள்வியும் எழுப்பினார். சரியான கேள்விகள் தான்னு நானும் எனக்கு தெரிஞ்ச பதில சொன்னேன்.

அது என்னன்னா “முதல்ல அந்த போஸ்ட் பண்ணினவங்கள இங்க வந்து பதில் சொல்ல சொல்லுங்க, தவறா அந்த போஸ்ட் கவர் போட்டோல வந்துச்சுன்னு ஒரு போஸ்ட் அதுவும் pinned போஸ்ட் போடுங்க, அப்புறமாவது அடுத்தவங்க எழுதினத எடுத்து போடுறவங்க எழுதினவங்க பெயரோட சேர்த்து போடுவாங்க. அடுத்தவங்க எழுத்தை பகிரலாம், தப்பில்ல, ஆனா அது யாரோட எழுத்துன்னு சேர்த்தே பகிரனும்நு சொல்லுங்க, அவங்க பண்ணினது தப்புன்னு சொன்னா அத இந்த குரூப்-ல பகிரங்கப் படுத்துவோம்னு சொல்லுங்க, அப்போ ஒரு ஆரோக்கியமான பகிர்தல் இங்க இருக்கும்”-ன்னு சொன்னேன். இதுல இன்னொருத்தங்க வந்து “இனிமேல் யாருடைய பதிவும் மிக நல்லதெனக் கண்டு பாராட்டி முதல் பதிவா போடுமுன் பதிவாளரிடம் அறிவித்து ஆக்கம் அவங்களது தானான்னு தெளிவு படுத்தினா நல்லது என்கிறது எனது அபிப்பிராயம்”ன்னு சொன்னாங்க. நியாயம் தானே.


அப்புறம் எல்லாம் சுமூகமா முடிய Kala Roshan ஒரு போஸ்ட் போட்டார். அதாவது, நான் கேட்ட கேள்வியையும், சொன்ன பதிலையும் வச்சு, கேள்வியும், பதிலும்னு கவர் போட்டோ ஒண்ணு ரெடி பண்ணி போட்டார். இது கண்டிப்பா காப்பி அடிச்சு போட்டவங்களுக்கு ஒரு பயத்த உருவாக்கும் தானே. ஒட்டு மொத்தமா எல்லாரும் திருந்த முடியாது, திருத்தவும் முடியாதுனாலும் ஒண்ணு ரெண்டு பேர் இத பாத்துட்டு திருந்தியோ, இல்ல பயந்துகிட்டோ இதே தப்ப செய்யாம இருந்தா அது நமக்கு பெரிய வெற்றி தானே...




அப்படா, எல்லாம் நல்லப்படியா முடிஞ்சுதுன்னு நினச்சு சந்தோசமா ஒரு வணக்கத்த வச்சுட்டு வந்தேன்.

இதுவரைக்கும் எல்லாமே சுமூகமா தான் போயிட்டு இருந்துச்சு. ஒரு நல்ல குரூப் அட்மின்னா என்ன பண்ணனும்? ஒரு சம்பவம் நடக்குது, சரி, அது என்ன ஏதுன்னு விசாரிச்சு, அத பத்தி ஒரு முடிவுக்கு வரணும். அதுதானே நியாயம். அத விட்டுட்டு இங்க ஒருத்தர் எப்படியெல்லாம் காப்பி அடிச்சவருக்கு வக்காலத்து வாங்குறார் பாருங்க. யாரவர்னு கேக்குறீங்களா? அவர் தான் single frame-மோட இன்னொரு அட்மின் Mohan PRao.











முதல்ல நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்குற மாதிரியே ஆரம்பிச்சார். “இத எல்லாம் நாங்க ரூலாவே சொல்லிக் கொண்டு தான் வருகிறோம், ஆனால் யார் செய்யுறாங்க, எல்லாரும் ஈசியா காப்பி பேஸ்ட் தானே செய்யுறீங்க, உங்க சொந்த பதிவுகள போட முயற்சி பண்ணுங்களேன், அடுத்தவங்களுக்கு வக்காலத்து வாங்கி பக்கத்த ரொப்பி தள்ள வேண்டாமே, ஸ்டேடசே இல்லாமல் போர் அடித்துக் கொண்டு இருந்த பேஜ் உங்க டிஸ்கசனால ரோம்பிடுச்சு இல்லே. உங்க பேரும் பேனர்ல வந்துடுச்சு இல்ல”ன்னும் “காயத்ரி தேவி சொல்வதைபோல் திருடுங்கள் ஆனால் திருடிய இடத்தின் விலாசத்தையும் பெயரையும் போட்டு திருடுங்கள், இல்லையென்றால் சண்டை போடுகிறவர்களின் பதிவு எல்லாம் முக்கியத்துவம் பெற்று விடும்”ன்னும் அவர் சொன்னப்போ தான், நான் காப்பி பேஸ்ட் செய்யுறதாகவும், சண்டை போடுறதாகவும், விளம்பரத்துக்காக தான் இத எல்லாம் பண்ணினேன்னும் அவர் சொல்றார்ன்னு எனக்கு புரிஞ்சுது. சபாஷ்... அப்போ ஒரு விசயத்த தப்பு, அத சரி பண்ணுங்கன்னு எடுத்து சொல்றவங்க எல்லாம் சண்டைகாரங்களா? விளம்பர பிரியர்களா? இது எனக்கு தெரியாம போச்சேன்னு நினைச்சுகிட்டே அங்கயே என்னோட கண்டனத்தை தெரிவிச்சுக்கிட்டு நான் வந்துட்டேன்.

எப்பவுமே, என்னுடைய ப்ரோபைல் தாண்டி, நான் யார்கிட்டயும் வம்புக்கு போறதே இல்ல. அதுவும் என்னோட ப்ரொபைல்ல தேவையில்லாம வந்து கமன்ட் போடுறவங்கள தான் நான் கண்டிப்பேன். யார் எதை பற்றி சொன்னாலும் நானா ஆராய்ஞ்சு அத அறியுற வரை அதை கண்டுக்கவும் மாட்டேன். இது என்னை பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு தெரியும். இங்க அந்த பெரிய மனுஷன், என்னை பத்தி சொன்னதும் எனக்கு சுர்ர்ர்னு கோபம் வந்துச்சு. ஆனா ஒரு விஷயம், ஒரு தெரு நாய் நம்மள பாத்து குலைக்குதுன்னு வச்சுக்கோங்க, நாமளும் அந்த இடத்துல நின்னே திருப்பி குலைச்சா பாக்குறவங்க நம்மள தான் தப்பா நினைப்பாங்க. அந்த நேரம் நாம அந்த இடத்துல இருந்து வந்துடுறது தான் நல்லது. அதனால தான் நானும் அந்த இடத்த விட்டுட்டு வந்துட்டேன். (இந்த இடத்துல இந்த example சரியா இருக்கும்குரதால இத நான் சொன்னேன், இத யாரையும் புண்படுத்த சொல்லல)

ஆனா இத அப்படியே விடவும் கூடாதே, இந்த இடத்துல இப்படியும் ஒரு ஆள் இருக்கார்ன்னு கண்டிப்பா தெரிஞ்சவங்களுக்காவது எடுத்து சொல்லனுமே, அவங்களாவது ஜாக்கிரதையா இருப்பாங்களே, அதனால தான் நான் அதெயெல்லாம் இங்க சொல்றேன்.

நான் அங்க இருந்து வந்ததுக்கு அப்புறமும் அவரோட மனக்குமுறல் அடங்காம அவர் புலம்புனதையும் நான் இங்க சொல்லணும்ல.

அவர் புலம்பினது இது தான்.

“வயித்தெரிச்சல் யாருக்கு வந்ததுன்னு இந்த ஸ்டேடஸ் படிச்சவங்க எல்லாருக்கும் தெரியும். புகழ் தேடாதவங்கன்னா எதை பற்றியும் கண்டுக்காம விடுறது தான். நாலாயிரம் பேரு குரூப்ல இருக்காங்க, நாப்பது பேர் தான் கமன்ட் போடுறாங்க, அந்த மாதிரி தான்” “இந்த குரூப்ப விட்டு வெளியே போய் டிஸ்கஸ் பண்ணி ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணி இங்க கமன்ட் போடுறவங்களும் சில பேர் இருக்காங்க” “இந்த குரூப்போட அமைதியை கெடுக்க நினைக்குற எந்த சக்தியும் ஒன்னும் செய்ய முடியாது என்பதை எங்க குழுவின் அன்பர்கள் ஆதரவு தெரிவிக்கும்”




ஆமா, நான் வயித்தெரிச்சல்-ன்னு சொன்னேன் தான், ஆனா அதுல தப்பு இருக்குறதா எனக்கு தோணல, ஒரு தப்பு நடந்தப்போ அத சுட்டி காட்டி, அத அவங்க சரி பண்ணனும்னு நாம சொன்னது அவங்களுக்கு அமைதிய குலைக்குறதாம். இதுல, அவங்க குரூப்-ல நாலாயிரம் பேர் இருக்குறதாகவும், அவங்க ரொம்ப ஒற்றுமையா இருக்குறதாகவும், அந்த ஒற்றுமைய நான் திட்டம் போட்டு குலைக்க நினைக்குறதாகவும் சொல்லியிருக்கார். ஏங்க, நான் தெரியாம தான் கேக்குறேன், நாலாயிரம் பேர் இருக்க கூடிய இடத்துல அந்த போஸ்ட்ட நாலு பேர் ஒழுங்கா பாத்தாங்களாங்குறதே சந்தேகம் தான். அங்க அவ்வளவு சீரியஸா டிஸ்கசன் போயிட்டு இருக்கும் போதே, என்ன ஏதுன்னு கவனிக்காம, அருமை, அற்புதம்னு ஒப்புக்கு வந்து கமன்ட் போட்டுட்டு போனவங்க தான் அதிகம். இதுவா ஒரு குரூப்போட வெற்றி? யாரும் எதையும் கண்டுக்காம இருக்குறதுல தான் அவங்க ஒற்றுமையா காட்டுறாங்களாயிருக்கும்.

அங்க எந்த அன்பர்கள் குழுவும் ஆதரவு தெரிவிக்கலன்ன உடனே எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டார் அந்த பெரிய மனுசர்.

செய்யுறதையும் செய்துட்டு, கொட்ட வேண்டிய வார்த்தைகளையும் கொட்டிட்டு, அப்புறம் அந்த பதிவுகளை டெலிட் பண்ணிட்டா எல்லாம் சரியா போய்டுமா? இந்த மாதிரி ஆகக்கூடும்ன்னு தான் நான் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வச்சுக்கிட்டேன். இந்த போராட்டத்துல என் பக்கம் இருக்குற நியாயத்த உணர்ந்து பேசினவங்களும் இருக்காங்க. அவங்களுக்கு என்னோட தேங்க்ஸ்.

நியாயமான கோபம் எல்லாருக்கும் வரணும். இல்லனா நாம எல்லாம் உணர்சிகளோட பிறந்ததே வேஸ்ட். இந்த மாதிரி தவறு உங்க கண்ணுக்கும் தெரிஞ்சா தயங்காம சுட்டிக் காட்டுங்க, தட்டி கேளுங்க. அப்படியும் முடியலையா அத பத்தி ஒரு போஸ்ட் போட்டு, அடுத்தவங்கள தட்டிகேக்க ஊக்கப்படுத்துங்க.



நான் இன்னொரு போஸ்ட்டோட இன்னொரு நாள் உங்கள மீட் பண்றேன்...



33 comments:

  1. intha visayathula solla puthusa onnum illa akka. already intha pathivn muthal pakuthiyum padichu irukken angaiye ellarum solitanga. nama thali iruppathutan nallathu akka. fb ya vidavum blog la problem kammi nu naninaikkuren. ini ingaiye eluthungal. fb vidavum palaral padikka vayppu irukkum and nirantharamaka irukkum. vera enna sollurathunu theriyala. padikka nalla irunthichu second part um..

    ReplyDelete
    Replies
    1. மகேஷ்.... பிரச்சனை எல்லா இடமும் இருக்குறது தான்... ஆனா எல்லாரும் நமக்கென்ன நமக்கென்ன ன்னு ஒதுங்கி போறதால தான் இந்த மாதிரி திருடுற கூட்டம் பெருகி போகுது. இப்படி திருடுரவங்களுக்கு வக்காலத்தும் வாங்குறாங்க... என்ன சொல்றது?

      Delete
  2. Nan theriyama arumai nu post panaen apram than theriynjuthu entha post ah nama munadi padichi erukom nu !! Athukula neenga vanthu keetenga ana apava avanga action Ethu eruntha marupadiyum thapu nadanthuerukathu !!

    ReplyDelete
    Replies
    1. நானும் அதை தான் சொல்ல வரேன் Venkatesan Sundaresan, தவறு பண்ணினத அவங்க கண்டிக்கவும் இல்ல, அதோடு விட்டுருந்தா கூட பரவால, சுட்டி காட்டிய நம்மை காயப்படுத்த நினைக்காம இருந்துருக்கணும். ரெண்டு சம்பவம் நடக்கும் போதும் நீங்க உண்டு. உண்மை தெரிஞ்சுகிட்ட உங்களுக்கு நன்றி

      Delete
    2. Yen nadri enga unga talent pathi avangaluku theriyala Ella avanga kudthuvachierukala !! Avanga erundu Peru kum Napa theritum thapu avanga pakkam than nu Anna ego thadukuthu polo !!

      Delete
    3. இல்ல, அதுல ஒருத்தர், kala rosan அண்ணா, ஆரம்ப காலத்துல அவர் போட்டோஸ் போடும் போது நான் தான் ஓடி ஓடி போய் லைக், கமன்ட் போட்டு ஊக்கப்படுத்துவேன், அத எல்லாம் அவர் மறந்துருக்க மாட்டார். அவர் எப்.பி வந்த ஆரம்ப காலங்கள்ல நிறையவே என் கூட பேசியிருக்கார், அப்படி இருந்தும் அந்த இன்னொரு அட்மின்னுக்கு (mohan pro ) என்னை பற்றி அவர் ஏன் எடுத்து சொல்லலன்னு வருத்தம் இருக்கு. ஆனா அவர் நான் வாதிட்டதுக்கு சரியான முடிவு தந்தார், அந்த விசயத்துல அவர் பெரிய மனுசன்னு நிரூபிச்சுட்டார்

      Delete
  3. இந்த மாதிரி சொந்த பதிவுகள சுட்டு போடுறவங்க கிட்ட தொலைச்ச அனுபவம், மூளைய போட்டு கசக்கியோ, இல்ல, மனசுக்கு தோணுறத சுயமா எழுத பழகியோ போஸ்ட் போடுறவங்களுக்கு கண்டிப்பா இருக்கும். மாங்கு மாங்குன்னு ஒரு ரசனையோட அவங்க எழுதுவாங்க, அத அப்படியே சுட்டுட்டு போய் தன்னோடதுன்னு போட்டுட்டு ஜாலியா இருப்பாங்க சில பேரு. அவங்களுக்கு எல்லாம் கண்டிப்பா மனசாட்சின்னு ஒண்ணு இருக்கவே இருக்காது. /// மனசாட்சி இருப்பவங்க இது போல செய்ய யோசிப்பாங்க டா...


    நன்றி டா காயு மா.... எனக்காக நீ அந்த குரூப்ல சண்டை போட்டதும்.... ஸ்க்ரீன் சாட் எடுத்து இங்கே ப்ளாக்ல அதையும் சேர்த்து பதிவா போட்டதுக்கும்.... இது போல உள்ளவர்களை எல்லாருக்கும் அடையாளம் காட்டனும் டா....

    ReplyDelete
    Replies
    1. அம்மா, தப்புன்னு தோணிச்சு, நான் கேட்டேன். உள்மனசுல ஏதோ பட்டுச்சு, இத screen shot எடுத்து வைப்போம்னு... மனசுல பட்ட மாதிரியே கன்னாபின்னான்னு பேசிட்டு அவர் எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு போய்ட்டார். நல்ல வேளை என்கிட்ட எல்லா கமண்ட்ஸ்க்கும் screen shot இருந்துது. அதனால இத போஸ்ட் பண்ணினேன். என்னோட முந்தின பதிவுக்கு ஆதாரம் என்னால குடுக்க முடியல, ஆனா இப்போ குடுக்க முடிஞ்சுது

      Delete
  4. எப்படியோ திருந்தினால் சந்தோசம்...

    ReplyDelete
    Replies
    1. சில ஜென்மங்கள திருத்த முடியாது அண்ணா

      Delete
  5. முதலில் வரவேற்க்கிறேன் உங்களது அடங்க மறுக்கும் கொள்கைகளையும், இறுதி வரை சென்று உண்மையை உரைக்கும் வலிமையையும்.
    அதே நேரத்தில் இப்படியும் சொல்றீங்க "//ஒரு தெரு நாய் நம்மள பாத்து குலைக்குதுன்னு வச்சுக்கோங்க, நாமளும் அந்த இடத்துல நின்னே திருப்பி குலைச்சா பாக்குறவங்க நம்மள தான் தப்பா நினைப்பாங்க. அந்த நேரம் நாம அந்த இடத்துல இருந்து வந்துடுறது தான் நல்லது.// "
    இது போராட முடியாத!! அல்லது விரும்பாத! ஆட்கள் (என்னையும் சேர்த்துதான்) தங்கள் மன ஆறுதலுக்காக சொல்லும் வார்த்தைகள். அவற்றால் பயன் ஒன்றும் இல்லை (வேண்டுமானால் எதிராளிக்கு பயன் கிட்டும் -எந்த எதிர்ப்பும் இருக்காது) அவ்வளவே. பதிவு திருட்டுக்கு மட்டுமன்றி அனைத்திற்கும் இது பொருந்தும்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இல்லை, அந்த இடத்தில் இன்னும் போராடியிருப்பேன், ஆனாலும் பலன் இல்லன்னு தெரிஞ்சுது. என் சார்பா வேற ஒருத்தங்க போராட ஆரம்பிச்சாங்க, அதற்குள்ள அந்த போஸ்ட் அவங்க டெலிட் பண்ணிட்டாங்க. ஆனா இப்போ நீங்க சொன்னப்போ தான் உணர்றேன், நானும் அங்க இன்னும் அதிகமா போராடியிருக்கணும். சுட்டி காட்டியதுக்கு நன்றி...

      இந்த மாதிரி கருத்துக்களை நான் எதிர்பார்க்குறேன். என்னை கூர்தீட்டி கொள்ள இது உதவியா இருக்கும்

      Delete
  6. ஒரு படைப்பின் வெளிப்பாடு எப்படி வெளிவருமோ அதே போல் அதை களவாடி கண்முன்னே காணும் போதும் குமுறும் உள்ளத்தின் வெளிப்பாடும், உண்மையை உணர்த்தும் தன்மையும் ஒன்றாய் கொண்ட பதிவு..பலரும் செய்யும் பகிரங்க பணியாகவே முக நூலில் அரங்கேறி வருகிறது. நிசத்தின் நிலையை அறியாது நிசமாக்க முனைபவர்களுக்கு நெத்தியடி தந்த தங்களின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறோம்... உணர்வால் உணரவைக்கும் உங்களது துணிச்சலுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...

    தொடரட்டும் உணர்வின் வெளிப்பாடுகள் காயு

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டுக்கு நன்றி அண்ணா...

      ஆனாலும் சிலர் அவங்க செய்றது தான் சரின்னு செய்துட்டு இருக்காங்க...

      Delete
    2. சரியென்பதும் தவறென்பதும் சத்தியத்தின் பார்வையில் தெரிந்துவிடும்;... சாத்தான் ஓதும் வேதம் கேட்டோர் உண்டா? அது போன்று தான் காயு...

      Delete
    3. ஹஹா அது உண்மை தான்

      Delete
  7. நம்ம கண்ணில படாத திருடப்பட்ட பதிவுகள் எத்தனை எத்தனையோ? அதைக் கண்டுபிடிப்பதற்கு ஏதேனும் வழிமுறை தெரிந்தால் உடனுக்குடன் போய் கேள்வி கேட்பதற்கும் பதிவை நீக்குவதற்கும் எளிதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹா அதென்னமோ உண்மை தான், ஆனா கண்ணு முன்னாடி நடக்குற திருட்ட தடுக்க கூட யாரும் உதவுறது இல்ல, அதான் வேதனையான விஷயம்

      Delete
  8. அப்போ ரொம்ப கஸ்டம்

    ReplyDelete
    Replies
    1. நீங்க யாருன்னும் தெரியல, எத பத்தி சொல்றீங்கன்னும் தெரியல.. ஆனா எதோ சொல்ல வரீங்கன்னும் புரியுது

      Delete
    2. அவ்வவ்வ்வ்வ் அண்ணா நீங்களா

      Delete
    3. அந்த அனானி நான் இல்லே.. ஸ்மைல் என் தங்கையோட ரிப்ளைக்கு.. :)

      Delete
  9. வாழ்த்துகள் காயத்ரி.. தயங்கி நிற்காம முன்னாடி வந்து தோழிக்கு உதவி செஞ்ச உங்களைப் பாராட்டுறேன். ஒவ்வொரு வரியும் அவ்வளவு மெச்சூர்டா இருந்தது.. நல்ல விஷயத்த சொல்ல யோசிக்க கூடாது.. அதேபோல தவறுகளை தட்டிக் கேட்க தயங்கக் கூடாது.. Good Job!!

    ReplyDelete
  10. // கோவை ஆவி அண்ணாவோட பதிவு //

    என்னை அண்ணனா தத்தெடுத்துகிட்டதுக்கு நன்றி.. ;-)

    ReplyDelete
    Replies
    1. ஹஹா தேங்க்ஸ்க்கு தாங்க்ஸ்... அண்ணா

      Delete
  11. remmba kastama irunthathuu.....ninga mattum porratunatha paakum pothu !...

    ..

    ReplyDelete
    Replies
    1. இல்ல, இன்னும் சில பேர் நான் சொன்னத ஏத்துகிட்டாங்க. அத நீங்க screen shot ல பாக்கலாம், இன்னொரு அக்கா, சுந்தரி கதிர்ன்னு, அவங்க, நான் அங்க இருந்து வந்ததுக்கப்புறம், எனக்காக mohan PRho கூட வாதிட்டாங்க... அவங்களுக்கும் நான் தாங்க்ஸ் சொல்லணும்.

      Delete
  12. copy paste தடுக்க முடியாது. சுயமரியாதையும், கௌரவமும். படைக்கும் திறனற்று எளிய வழியில் முன்னேற நினைக்கும் சிலர் செய்யும் செயல் இது. கண்ணுல படும்போது கேட்க்க தவறவே கூடாது. உன்னுடைய முயற்சி பாராட்டுக்கு உரியது.

    ReplyDelete
  13. தெரிந்து நடக்குறது சிலது தான். இந்த மாதிரி தெரியாமல் எத்தனையோ நடக்குது. திருடுரவங்க கொஞ்சமாவது யோசிக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹா ரெண்டு நாள் முன்னாடி ஒரு போஸ்ட் பாத்தேன், நீங்க எழுதினத ஒருத்தங்க போஸ்ட்டா போட்டுருந்தாங்க... அவங்கள பாராட்டி நிறைய கமண்ட்ஸ், கிட்டத்தட்ட அம்பது ஷேர்... நீங்க எழுதின அதே ஒரிஜினல் எழுத்துக்கு ஒரு ஷேர் கூட இல்ல.... ஆனா நான் அங்க இருந்து அமைதியா வந்ததுக்கு ஒரு காரணம் இருந்துச்சு, அது அவங்க அந்த போஸ்ட் கடைசியில உங்க பெயர போட்டுருந்தாங்க. கமன்ட் அண்ட் share பண்ற கூட்டம் அத கண்டுக்கல. ஆனா எப்படியோ மேடம், உங்க எழுத்து அவ்வளவு தூரம் நல்ல ரீச் ஆனதுக்கு வாழ்த்துகள்

      Delete