Thursday 17 October 2013

ஒரு நரியும் காக்காவும், முயலும், ஆமையும் கூடவே பவ்-வவ்வும் பாட்டியும்....


ஒரு ஊருல ஒரு நரி இருந்துச்சாம். அந்த நரி அப்படியே ரோட்டோரமா நடந்து வரப்ப நிலாவுல வடை சுட்டுட்டு இருந்த பாட்டி கை தவறி ரெண்டு வடை கீழ விழுந்துடுச்சாம். இத பாத்துட்டு இருந்த நரி, ரெண்டு வடையையும் தூக்கிட்டு ஜாலியா ரோட்ல நடந்து வந்துச்சாம்.


நரி வாயில வடைய பாத்த காக்கா, அத நம்பவே முடியாம அதிர்ச்சியில அதிர்ந்து போய் பாத்துச்சாம். அப்புறமா எப்படியாவது அந்த வடைய ஆட்டைய போட்டுடணும்னு முடிவு பண்ணிச்சாம்.

இப்போ தான் நம்ம கதைல ஒரு ட்விஸ்ட். நரி போயிட்டு இருந்த வழியில ஒரு திராட்சை தோட்டம் வந்துச்சு. நரிக்கு உடனே திராட்சை பழம் வேணும் போல இருந்துச்சு. அதனால வடைய கீழ வச்சுட்டு, அது திராட்சை கொடிய பாத்து ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி பறிக்க ட்ரை பண்ண ஆரம்பிச்சுடுச்சு.

காக்காவுக்கு ஒரே ஜாலி, வேகமா பறந்து வந்து வடைய தூக்கிடலாம்னு கனவு எல்லாம் கண்டு, மெதுவா ரெக்கைய விரிக்க ஆரம்பிச்சுது. இப்போ கதைல மறுபடி இன்னொரு ட்விஸ்ட்.

அந்த வழியில தான், நம்ம முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப்பந்தயம் நடந்துச்சாம். கண்ணுமண்ணு தெரியாம பாஸ்டா ஓடி வந்த முயலுக்கு ஒரே டையர்ட். அதுக்கு எங்கயாவது படுத்து கொஞ்ச நேரம் தூங்கனும் போல இருந்துச்சு. உடனே அது நம்ம நரி கீழ இறக்கி வச்சிருந்த வடைங்க ரெண்டு மேலயும் ஏறி படுத்துடுச்சு.

வடைய எப்படியாவது கைப்பத்திடனும்ன்னு ஆர்வமா வந்த காக்காய்க்கு இப்போ பெரிய பல்ப். எப்படியாவது முயல எழுப்பி விடலாம்னு பாத்தா அது குறட்டை எல்லாம் விட்டு தூங்கிட்டு இருக்கு. காக்காவும் விடல, குச்சி எல்லாம் எடுத்துட்டு வந்து முயல் காதுக்குள்ள விட்டு கிச்சு கிச்சு எல்லாம் மூட்டி பாக்குது. ம்ஹும்... முயல் அசையலையே.

இப்போ நான் என்ன பண்ண போறேன்னா ஒரு வில்லன அறிமுகபடுத்தப் போறேன். அதேதான், கதைல அகைன் ஒரு ட்விஸ்ட். இந்த வில்லன் ஒரு பவ் வவ். அதாங்க, அது ஒரு ஸ்ட்ரீட் டாக். அது செம கடுப்புல அந்த பக்கமா வந்துட்டு இருக்கு.

சரி, நாய் ஏன் கடுப்புல இருக்கு? அதுக்கு ஒரு பெரிய பிளாஸ்பேக் இருக்கு. சொல்றேன் கேளுங்க.

அந்த டாக் இருக்கே பவ் வவ், அது தங்குறதுக்கு இடமே இல்லாம தெரு தெருவா சுத்திட்டு இருந்துச்சு. அப்போ ஒரு சின்ன பொண்ணு அது மேல இரக்கப்பட்டு வீட்டுக்கு தூக்கிட்டு போச்சு. சின்ன பொண்ணுல, அது ஆச ஆசையா அந்த நாய கொண்டு போய் நல்லா லக்ஸ் சோப்பு எல்லாம் போட்டு குளிப்பாட்டி, தலைய துவட்டி விட்டு, டிரய்யர் வச்சு முடி எல்லாம் காய வச்சுது. நாயோட கண்ணு எல்லாம் கிச்சன்ல இருந்த ஆட்டுக்கால் மேல தான். ஆனா பாவம், அந்த பொண்ணு அத வச்சு நாய்க்கு சூப் வச்சு குடுக்கலாம்னு முடிவு பண்ணியிருந்துச்சு. அதனால அந்த ஆட்டுக்கால் போட்டு சூப் வச்சு கொதிக்க விட்டுட்டு இருந்துச்சு. அந்த பவ் வவ் கொஞ்சம் கூட பொறுமையே இல்லாம அடுப்புல இருந்து சூப்ல வாய வைக்க வாய் வெந்து போச்சு. உடனே அவ்வ்வ்வ் அவ்வ்வ்வ் னு அலறிகிட்டே அங்க இருந்து ஓடி வந்துடுச்சு. அது தான் அந்த நாய் இப்போ ஆட்டுக்கால் கிடைக்காத கடுப்புல வந்துகிட்டு இருக்கு.

சரி, இப்போ நாம நரிய கவனிப்போம். திராட்சை தோட்டத்துல நுழைஞ்ச நரி, எட்டி எட்டி திராட்சை பழம் பறிக்க ட்ரை பண்ணிட்டு இருந்துச்சா, அதுக்கு எட்டவே இல்ல. ரொம்ப நேரம் ட்ரை பண்ணிட்டு, ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் எனக்கு வேணாம்னு சோகமா முடிவு பண்ணிட்டு வடைய எடுத்துட்டு கிளம்புவோம்னு வடை இருந்த இடத்துக்கு வந்துச்சு. வடை இருக்குற இடத்துக்கு வந்த நரிக்கு ஷாக். அங்க தான் முயல் படுத்துட்டு இருக்கே.

நரிக்கு டபுள் போனஸ். வடையோட சேர்த்து முயலையும் தூக்கியிருக்கலாம். ஆனா முயல் தான் ஓட்டப்பந்தயத்துல கடைசியா ஓடி பல்ப் வாங்க வேண்டியிருக்கே, அதனால இப்போ முயலோட உயிரு பத்திரமா இருக்க வேண்டி இருக்கு. நரிக்கும் எப்படியாவது முயல எழுப்பி விட்டுட்டு வடைய எடுத்துட்டு கிளம்பினா போதும்னு ஆகிடுச்சு. அப்படியே முயல் எழுந்திரிக்குற வர காத்துட்டு இருக்க வேண்டியது தான்னு முடிவு பண்ணி அதுவும் குட்டியா ஒரு தூக்கத்த போட ஆரம்பிச்சுது.

இந்த மீன் டைம், ஓட்டப்பந்தயத்துல கலந்துகிட்ட ஆமை அந்த இடத்தை கிராஸ் பண்ணிடுச்சு. அதுக்கு எப்படியாவது ஜெய்க்கணும் அப்படிங்குற எண்ணம் மட்டும் தான் மனசுல இருந்துச்சு. அதனால, வெயில், ரோட்ல அடிக்குற வெப்பம்ன்னு எத பத்தியும் கவலை படாம நடந்துட்டே இருக்கு. அது மேல பரிதாபப்பட்டு நம்ம நரி தான் ஏற்கனவே நாலு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி குடுத்துருந்துச்சு. அத போட்டுட்டு தான் ஆமை நடந்து போயிட்டு இருக்கு. அது எப்போ நடந்துச்சுன்னு கேக்காதீங்க, அந்த ஓட்டப்பந்தயத்துக்கு ஏற்பாடு பண்ணினதே நம்ம நரி தான். அதனால தான் அது முயல விட்டு வச்சிருக்கு. அந்த கதைய இன்னொரு நாள் டீட்டைலா பாக்கலாம். இப்போ இந்த கதைக்குள்ள வருவோம்.

இந்த காக்கா வேற, பறந்து போய் பக்கத்து எலெக்ட்ரிக் கம்பத்துல உக்காந்து நடக்குறத எல்லாம் கவனிக்க ஆரம்பிச்சுது. அப்போ தான் நம்ம பவ் வவ் அங்க வருது. அது முயல பாத்ததும் அதோட காலு தானே பிரேக் போட்டு நிக்குது. நாக்குல எச்சி வேற பயங்கரமா ஊறுது. ஆட்டுக்கால் கிடைக்கலங்குற கடுப்புல எப்படியாவது முயல சாப்ட்டுடனும்னு முடிவு பண்ணிடுச்சு. அதுக்கு முயல்லோட லட்சியம் எல்லாம் பெருசா தெரியல. ஆனா பக்கத்துல பாத்தா நரி. நரினா நாய்க்கு பயம் ஆச்சே. அதனால எப்படியாவது நரிய தொரத்தி விட்டுடணும்ன்னு முடிவு பண்ணிடுச்சு.

சுத்தி சுத்தி பாத்துச்சு, காக்கா எல்லாத்தையும் பாத்துட்டே இருக்கு. உடனே காக்காகிட்ட போய் நீ நரி காதுல போய் ஒரு பாட்டு பாடு, நரி எழுந்து ஓடி போய்டும், நான் முயல சாப்ட்டுடுறேன், உனக்கு முயலோட காது ரெண்டும் தரேன்னு சொல்லிச்சு. காக்காக்கு ஜாலி. நரிய தொரத்தி விட்டுட்டா, முயல் காதும் கிடைக்கும், கூடவே வடையும் கிடைக்கும்ன்னு அது ஒரு மினி வில்லனா மாற முடிவு பண்ணிச்சு.

காக்கா மெதுவா நரி கிட்ட போகுது, கிட்டக்க போய் வாய தொறந்து கர்ண கொடூரமா கா............ கா........... னு பாட ஆரம்பிச்சுட்டுது. நரி பயந்து போய் எழுந்து நின்னு ஓடுறதுக்கு ரெடி ஆகிடுச்சு. மறுபடியும் காக்கா கா... கா ன்னு உச்ச ஸ்தானியில பாட, நரி ஓட ஆரம்பிச்சுடுச்சு. ஓடி போன நரி, நம்ம ஓட்டபந்தய கோடு தாண்டி ஓட, அது தான் ஜெய்ச்சதா கூடி நின்ன அனிமல்ஸ் எல்லாம் டிக்ளேர் பண்ணிட்டாங்க. பாத்தீங்களா, இப்போ, அந்த ஓட்ட பந்தயத்துலயே கலந்துக்காத நரி ஜெயக்கணும்னு இருந்துருக்கு, ஜெய்சுடுச்சு.

இங்க, அந்த பவ் வவ் முயல பிடிச்சு சாப்பிட ஜாலியா கிளம்பிடுச்சு. இன்னும் ஒரு அடி தான் எடுத்து வைக்கணும். அதுக்குள்ள பொத்துன்னு ஏதோ ஒண்ணு மேல விழுந்துடுச்சு. அது என்னன்னு நசுங்கி போன தக்காளி மாதிரி சாகுற நேரத்துல மெதுவா தலைய தூக்கி பாக்குது பவ் வவ். அட, அது நிலாவுல வட சுட்டுட்டு இருந்த பாட்டி.

பாட்டி எப்படி வடைய தவற விட்டாங்களோ, அப்படியே அவங்களும் தவறி போய் நிலால இருந்து கீழ விழுந்துட்டாங்க. நல்ல வேள, கீழ விழுந்து பீஸ் பீஸா போக வேண்டிய பாட்டி நாய் மேல விழுந்து சும்மா வில்லு மாதிரி எழுந்து நின்னாங்க.

பாட்டி விழுந்த வேகத்துல, யாரோ குண்டு தான் போடபோறாங்கன்னு பயந்து முயல் தூக்கத்துல இருந்து ஓட ஆரம்பிச்சுடுச்சு. ஆனா பாவம், கதைப்படி அது கடைசியா தானே வந்தாகணும், அதுக்கு முன்னாடியே ஆமை அங்க போயிடுச்சு.

இப்போ பாட்டி, இந்த பூமியில வடை சுடணும்னு விதி இருக்கு. அத நம்மால மாத்த முடியாதுல. எழுந்து நின்ன பாட்டி, அப்படியே காக்காவ பாத்து திரும்பி திரும்பி பாத்துட்டு நடக்க ஆரம்பிச்சுட்டாங்க. காக்காவுக்கும் பாட்டிக்கும் வருங்காலத்துல ஒரு வடை திருடுற பந்தம் உருவாக போகுதே, அத நினைச்சு கண்கலங்கிட்டே அந்த ஒத்தையடி பாதைல இறங்கி நடக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இப்போ நம்ம வில்லனும் மினி வில்லனும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்குறாங்க. பாட்டிகிட்ட இருந்து வடைய திருடி திங்க தான் விதி இருக்குறதால காக்காவும் சோகமா பறந்து போய்டுச்சு. வில்லன் தான் நசுங்குன தக்காளி ஆகிட்டாரே, இனிமேல் எதையும் திருடக்கூடாதுன்னு நினைச்சுகிட்டே உயிரை விட்டுடுச்சு. பாவம் டூ லேட் ஞானோதயம்.

மறுபடியும் கதைல ஒரு டுவிஸ்ட்.

நம்ம நரி போட்டியில ஜெய்ச்சதா அறிவிச்சாங்களே, அது நம்ம நரி மனசுல பெரிய தாக்கத்த உண்டு பண்ணிடுச்சு. போட்டியில ரெண்டாவதா வந்த ஆமையோட முகத்த பாக்குது, அப்புறம் கால பாக்குது. கால பாக்குது, முகத்த பாக்குது. அப்புறமா சத்தமா நோ, நான் இந்த போட்டியில ஜெய்க்கல, நான் இந்த போட்டியில கலந்துக்கவே இல்ல, அதனால இந்த வெற்றி கோப்பை ஆமைக்கு தான்னு சொல்லி ஆமைகிட்ட கோப்பைய குடுத்துட்டு வேகமா ஓடுன வழியே திரும்பி வந்துடுச்சு.

இங்க வந்து பாத்தா, வடை ரெண்டும் அப்படியே இருக்கு. பக்கத்துல பவ் வவ் செத்து கிடக்கு. சரி, நமக்கு கிடைக்க வேண்டிய வடை கிடைச்சுடுச்சுன்னு அந்த ரெண்டு வடையையும் எடுத்துக்கிட்டு ஸ்லோமோசன்ல நடக்க ஆரம்பிச்சுடுச்சு.

இப்போ மாரல் ஆப் தி ஸ்டோரி:

நமக்கு கிடைக்கணும்னு இருக்குறது கிடைக்காம இருக்காது, கிடைக்க கூடாதுன்னு இருக்குறது கிடைக்கவே கிடைக்காது. கிடைக்காதது கிடைக்கும்ன்னு நினச்சா கிடைக்க வேண்டிய சந்தோசம் கிடைக்காம போயிடும். கிடைக்காதது கிடைக்காதுன்னு நினச்சா கிடைக்க வேண்டியது கிடைக்கும்....

கதைல ஏதாவது டவுட் இருந்தா மறக்காம கேள்வி கேட்டுருங்க, மனசுலயே வச்சுட்டு கஷ்டப்படாதீங்க...

இந்த கதை பிடிச்சிருந்தா எனக்கு பாராட்டு விழா ஏதாவது நடத்த முடியுமான்னு ஆலோசனை பண்ணுங்க. கதை பிடிகலனா மேடை போட்டு திட்டிடாதீங்க... சைலென்ட்டா கமண்ட்ல திட்டிக்கோங்க. நான் நாளைக்கு ஏதாவது ஒரு பதிவோட உங்கள மீட் பண்றேன்.....


19 comments:

  1. வணக்கம்
    நரி முயல் காகம் கதை சின்னவயதில் 2.தரம் படிக்கும் போது படித்த கதை படிக்கும் போது அந்த நினைவுதான் வந்தது.
    கதை அருமை வாழ்த்துக்கள்.



    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இது நாலு கதைய மிக்ஸ் பண்ணி எழுதினது....

      Delete
  2. நல்ல ட்விஸ்ட்கள் - ரசிக்கும் படி இருந்தது...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா.... உங்க பாராட்டுக்கு

      Delete
  3. Eppadi Ippadi ellam Yosikkiringa????

    ReplyDelete
    Replies
    1. நான் எங்க யோசிக்குறேன். எப்.பி ல ஒரு ஸ்டேடஸ் போடலாம்னு ஆரம்பிச்சேன், இப்படி ஒரு பதிவா மாறிடுச்சு

      Delete
  4. ஆத்தா மகமாயி என்னை வுட்டுடு தாயி! இனி இந்த பக்கம் வரவே மாட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. அட, நீங்க எல்லாம் வரணும்னு தானே கஷ்டப்பட்டு (மொக்க போடுறது அல்வா சாப்டுற மாதிரி) எழுதிட்டு இருக்கேன். நாளைக்கு வாங்க, ஒரு கவிதையோட மீட் பண்றேன்

      Delete
  5. மிக்ஸ் கதையா இருந்தாலும் படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு...

    இன்னும் உங்க சிந்தனை குதிரை வேகமெடுத்து இது போல பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்..... அவ்வ்வ்வவ்...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தேங்க்ஸ்... உங்க மன ஓட்டத்த அந்த அவ்வ்வ்வ் காட்டி குடுத்துடுச்சு... அவ்வவ்வ்வ்வ்

      Delete
  6. நிலாவிலேர்ந்து விழுந்த பாட்டி சரியா இங்க எப்படி விழுந்தாங்கனு கேட்கலே ஏன்னா கதையை கதையாதான் எடுத்துக்கணும். நல்லாவே கதை பண்ணிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹஹா பாட்டி வெயிட் ஜாஸ்தில, அதான் நேரா அங்க விழுந்துட்டாங்க (எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)

      Delete
  7. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா ஒரு முரை படிச்சதுக்கே முடியல. எப்படிதான் அக்கா இப்படி எல்லாம் எழுதுரீங்கலோ...

    கடைசில மாரல் ஆப் தி ஸ்டோரிஆச்சும் புரியும் பார்த்தா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. ஹஹா மகேஷ், என்ன பண்றது, தானா வருது

      Delete
  8. கதை நல்லாருக்கு கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்ம் தேங்க்ஸ் :)

      Delete
  9. நரியில் ஆரம்பிச்சி வடையில் முடிச்சிட்ட.... எத்தன ட்விஸ்ட் கதையில் ..... சூப்பர் ப்ரெசென்ட்ஸ் ஆப் மைன்ட் .... சிரிச்சு முடியல டா ...

    ReplyDelete
    Replies
    1. அம்மா, ஆமா, எப்படியோ, கடைசியில நரிக்கு தான் வடை கிடச்சுது

      Delete
  10. அவ்வ்வ்வ்..... அப்படி எல்லாம் கிடச்சா உலகம் அழிஞ்சுடும்

    ReplyDelete