காலைல சீக்கிரமே எந்திரிச்சு ரிப்ரஸ் ஆகி, அப்பா போட்ட டீய மூக்கால இழுத்து வாசத்த உள்ள விட்டு, எனக்கு ஜூஸ் போட்டு குடிச்சுட்டு, பட படனு ஒரு தக்காளி சாதம், காலைல அப்பாவுக்கு ஓட்ஸ், தம்பிக்கு நாலு சப்பாத்தி, எனக்கு ரெண்டு சப்பாத்தி கூடவே கொண்டைகடல குருமா வச்சு முடிச்சாச்சு. இனி என்ன, உங்கள எல்லாம் மறக்காம உங்களுக்கு குட் மார்னிங்க சொல்லிட்டு அப்படியே கிளம்பிறலாம்தான்...
Monday 30 September 2013
சத்தியமா மொக்க இல்லீங்க, தத்துவம் தான்
காலைல சீக்கிரமே எந்திரிச்சு ரிப்ரஸ் ஆகி, அப்பா போட்ட டீய மூக்கால இழுத்து வாசத்த உள்ள விட்டு, எனக்கு ஜூஸ் போட்டு குடிச்சுட்டு, பட படனு ஒரு தக்காளி சாதம், காலைல அப்பாவுக்கு ஓட்ஸ், தம்பிக்கு நாலு சப்பாத்தி, எனக்கு ரெண்டு சப்பாத்தி கூடவே கொண்டைகடல குருமா வச்சு முடிச்சாச்சு. இனி என்ன, உங்கள எல்லாம் மறக்காம உங்களுக்கு குட் மார்னிங்க சொல்லிட்டு அப்படியே கிளம்பிறலாம்தான்...
Saturday 28 September 2013
ரெத்ததானமும் என் அனுபவமும்....
Friday 27 September 2013
ஆட்டிசம் குழந்தைகளும் என் தம்பியும்....
Thursday 26 September 2013
Wednesday 25 September 2013
மாங்காய் பறிக்கலாம் வாங்க
அப்போ நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்த நேரம். எங்க கிராமத்துல பொம்பள பிள்ளைங்க ஸ்கூல் போயிட்டு வந்தா வீட்லயே தான் இருப்பாங்க. லீவு நாள்ல மொத்தமா யாராவது ஒருத்தர் வீட்ல கூடி ஊர் கதை எல்லாம் பேசுவாங்க. பசங்க ஆறு, குளம் னு ஊர் சுத்த கிளம்பிடுவாங்க. நமக்கு தான் ஒரு இடத்துல இருந்தா பிடிக்காதே, நானும் பசங்க கூட சேர்ந்து கிளம்பிடுவேன்.
Tuesday 24 September 2013
பாட்டிக்கு வடை சுட கத்துக்குடுப்போம் வாங்க....
எப்பவும் சீரியஸா பேசிட்டு இருந்தாலும் சரிபட்டு வராது. கொஞ்சம் சிரிக்கவும் வேணுமே. ஹஹா இப்போ நீங்க சிரிக்குறத பத்தி யார் சொன்னா, நீங்க இத படிச்சுட்டு தலைல அடிச்சுட்டு போறத பாத்து நான் தான் விழுந்து விழுந்து சிரிக்க போறேன். என்னது? இந்த டகால்ட்டி எல்லாம் உங்ககிட்ட நடக்காதா? அப்படியா? சரி வாங்க, ஒரு கை பாத்ருவோம், நீங்க சிரிக்க போறீங்களா நான் சிரிக்க போறேனானு... ஆனா ஒண்ணு, கடைசி வர இத நீங்க படிக்கணும்... அவ்வ்வ்வ் படிச்சுடுங்க....
Monday 23 September 2013
சூதானமா நடந்துக்கணும் மக்கா..
வாழ்க்கைனா ஒரு சுவாரசியம் வேணும். சிரிப்பு, அழுகை, சந்தோசம், துக்கம் இப்படி எல்லாமே கலந்து தானேங்க வாழ்க்கை. அதனால எப்பவும் நாம சிரிச்சுட்டே இருந்தாலும் கூட சில நேரம் போரடிக்கும், சரி இப்போ என்ன அதுக்குன்னு கேக்குறீங்களா, வாங்களேன் கொஞ்சம் சீரியஸா பேசலாம்... அப்படியே கொஞ்சம் உசாராவும் இருந்துக்கலாம்...
Saturday 21 September 2013
Friday 20 September 2013
தோட்டம் பக்கமா ஒரு பொடிநடை உலா...
கிராமம் – இந்த வார்த்தைய கேட்டாலே இப்போ இருக்குற நடுத்தர மக்களுக்கு (வயசுல) பாரதி ராஜா தான் ஸ்க்ரீன் ஒப்பன் பண்ணுவார். சின்ன பசங்களுக்கு அதுவும் தெரியுமான்னு தெரியல. கிராமத்துலயே நான் இருந்தாலும் வீட்டை விட்டு அதிகமா வெளில போறதுமில்ல. ஒரு லீவு நாள்ல தூக்க கலக்கத்துல அணிலுக்கும் குருவிக்கும் நடந்த பாட்டுக்கச்சேரிய பத்தி ஒரு ஸ்டேடஸ் போட்டேன் பேஸ் புக்ல. உடனே கார்த்திக் கிராமத்து வாழ்க்கைய நான் அணுஅணுவா ரசிக்குறனு சொல்லிட்டார். நான் எனக்குள்ளயே ஒரு கேள்விய கேட்டுக்கிட்டேன், நிஜமா நான் கிராமத்து வாழ்க்கையை ரசிக்குறேனானு.
Thursday 19 September 2013
என் பட்டாம்பூச்சி இறகின் மறுதுடிப்பு...
நான் எப்.பி வந்த புதுசுல தமிழ்ல எழுதுறதுக்கு ரொம்ப தடுமாறி இருக்கேன், இங்க எல்லோரும் தமிழ்ல எப்படி டைப் பண்றாங்கன்னு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு கூகிள் மெயில்ல ஆன்லைன்ல டைப் பண்ணி அத காப்பி பண்ணி இங்க பேஸ்ட் பண்ணுவேன். ஆனா ஒரு விஷயம், தமிழ் நான் ரொம்ப படிச்சதில்லனாலும் ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்குற கமெண்ட்ஸ் இல்லனா போஸ்ட் பாத்தா கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கும், போஸ்ட் எழுதுறவங்க கொஞ்சம் சிரத்தை எடுத்து அதை சரி பண்ணலாமேனு.... அப்புறம் கவிதை னு ஏதோ கிறுக்க ஆரம்பிச்சேன்.
Subscribe to:
Posts (Atom)