Friday, 27 September 2013

ஆட்டிசம் குழந்தைகளும் என் தம்பியும்....


Aug 15 2013 சுதந்திர தினம் - வழக்கமா குழந்தைங்க மத்தியில தான் இப்படி பட்ட ஹாலிடேஸ் நான் ஸ்பென்ட் பண்ணுவேன். ஆனா கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கும் மேலா என்னால அங்க போக முடியல. ரெண்டு நாளா ரொம்பவே மனச அழுத்திட்டு இருந்த பாரம் போகணும்னா எங்கயாவது ஓடி போகணும்னு தோணிச்சு. சரி, குழந்தைங்கள பாத்து வருசம் ஆச்சேன்னு போகலாம்னு முடிவு எடுத்தேன்.


வீட்ல சொன்னப்போ, தம்பி உதவிக்கு வந்தான். வா, நான் கூட்டிட்டு போறேன்னு சொன்னான். அவன் இதுவர அங்க வந்ததில்ல. அவங்களுக்கு தேவையான கொஞ்சம் ஸ்வீட்ஸ், பழம்னு வாங்கிட்டு கிளம்புறப்போ பக்கத்து வீட்டு நந்துவும் ஒட்டிகிட்டா.

அங்க நாங்க போய் சேரவும், கொடியேத்த எல்லாரும் தயாரா இருந்தாங்க. அதனால கொஞ்சம் ஒதுங்கி நின்னுகிட்டோம். தம்பியோடவும் கூடவே ஒரு பொண்ணோடவும் போனதால குழந்தைகளுக்கு அடையாளம் தெரியல, ரொம்ப தீவிரமா கொடியையே பாத்துட்டு இருந்தாங்க. அட்டென்ஷன்ன அவங்க நின்னுகிட்டு இருந்த அழக நான் ரசிச்சுகிட்டே இருந்தேன்.

கொடியேத்தி முடிச்சதும், வழக்கமான மார்ச் பாஸ்ட், அப்புறம், டான்ஸ், பேச்சுனு கொஞ்ச நேரம் போச்சு. மிட்டாய் குடுத்து கலையும் போது தம்பி ஸ்வீட்ஸ் எடுத்து என்கிட்ட குடுத்தான். நந்து கிட்ட நீ போய் குடுன்னு சொன்னேன். அவளுக்கு ஏதோ தயக்கம். இப்படி பட்ட இடங்களுக்கு அவ முதல் தடவ வர்ரானு நினைக்குறேன். அதனால தம்பியே அவள கூட்டிட்டு போய் ஸ்வீட்ஸ் குடுத்தான்.

நான் அப்படியே கார்ல சாஞ்சு உக்காந்துட்டு இருக்கேன், தலைல போன வாரம் தம்பி கொடைக்கானல்ல இருந்து வாங்கிட்டு வந்த தொப்பி. முதல்ல அந்த ஹோம் நடத்துற அங்கிள் வந்தார். நீயாமானு ஆச்சரியமா கேட்டார். ஹே அக்காடா... னு குரல் குடுத்தார், பசங்க ஓடி வராங்க.

என்னக்கா, எப்படி இருக்கீங்க, என்ன ஆளே மாறிட்டீங்க, கண்டே புடிக்க முடியலனு கைய எல்லாம் புடிச்சு சந்தோசப்படுறாங்க. திடீர்னு வந்துட்டேன்டா, எதுவும் கொண்டு வர முடியலனு சொன்னேன், போங்கக்கா, நீங்க வந்தது போதாதானு ஒரு வாலு கண்ணீரே விட்டுட்டான். எனக்கும் அழுகை வந்துடுச்சு.

உங்களுக்காக பிரார்த்தனை பண்ணிட்டே இருந்தோம்க்கா, உங்க நம்பர் மாத்திட்டீங்க, நீங்களும் கூப்பிடல, அதான் எங்களால காண்டாக்ட் பண்ண முடியாம போச்சுன்னு அவங்க சொன்னப்போ கடவுள் கண்முன்னால நின்னு என்னை ஆசிர்வதிக்குற மாதிரி இருந்துச்சு.

இப்போல்லாம் அதிக நேரம் பகல் நேரங்கள்ல வெயில்ல நிக்க முடியுரதில்ல. தலையை சுத்துற மாதிரி இருந்துச்சு. ஒருத்தி ஓடி வந்து கைய நீட்டிட்டு நிக்குறா. அடி பாவி, சினிமா பாத்து கெட்டு போயிட்டியேடி னு சொன்னேன். ஒரு முறை முறைச்சா பாருங்க, வந்த தலைசுத்து போயே போச்..

அப்படி இப்படி கொஞ்ச நேரம் எங்கள மறந்து அவங்க கூட இருந்துட்டு திரும்பி வந்தோம். வர்ற வழியில தம்பி ஒரு இடத்துல கார நிறுத்தினான்.

"Center For Slow Developers"னு போர்ட். என்னங்குற மாதிரி பாத்தேன். கொஞ்ச நேரம் போயிட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்னு சொன்னான். சரின்னு நானும் உள்ள போயாச்சு.

"ஆட்டிசம்" - ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு மாதிரி. நந்து என் பின்னாலயே பதுங்கிட்டா. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் மனசு கனத்துச்சு. இவங்க கடவுளோட குழந்தைகள்னா, அந்த குழந்தைகள பாத்துக்குறவங்க கடவுளுக்கும் மேலனு தான் சொல்லணும்.

அந்த குழந்தைங்க பிடிக்குற அடம், அவங்கள பொறுமையா ஹாண்டில் பண்ற அங்க இருக்குற இன்-சார்ஜ்ஜஸ், நானே கொஞ்சம் ஒதுங்கி தான் நடந்து போயிட்டு இருந்தேன்.

ஒரு குழந்தை ஒ-னு அழுதுட்டு இருக்கு, அதை சமாதானம் பண்ண பொம்மை எல்லாம் குடுக்குறாங்க, எல்லாத்தையும் தூக்கி போட்டு உடைக்குது. தம்பி போய் அவன தூக்கிக்கிட்டான். அது வில்லு மாதிரி வளைஞ்சு அடம் பிடிக்குது. என்ன நினச்சுச்சோ தெரியல, சப்பு சப்புன்னு தம்பிய அறைய ஆரம்பிச்சுடுச்சு. நானும் கிட்ட தட்ட நந்து ரேஞ்ல மிரண்டு போய் பாத்துட்டு இருக்கேன். தம்பி அவ்வளவு அடியையும் வாங்கிகிட்டு சிரிச்சுட்டே இருக்கான்.

கொஞ்ச நேரத்துல அதுவே சமாதானம் ஆகிடுச்சு. அதுவர குழந்தைய வாங்க வந்தவங்க கிட்ட கூட இவன் குடுக்கல. அப்புறம் கொஞ்சம் பேசிட்டு (தம்பி மட்டும் தான் பேசினான், நானும் நந்துவும் கப் சிப்) அங்க இருந்து கிளம்பினோம்.

இந்த தம்பி வந்தப்புறம் என்னை கார் ஓட்ட அலோ பண்றதே இல்ல, கொஞ்சம் அவன் மேல காண்டுல தான் இருக்கேன். ஆனாலும், அவன நினைச்சு இப்போ அவ்வளவு பெருமையா இருக்கு. எப்படியோ ஏதோ ஒண்ணு வாழ்க்கைல ஒரு பிடிப்ப குடுத்துச்சு எனக்கு.

13 comments:

 1. இவங்க கடவுளோட குழந்தைகள்னா, அந்த குழந்தைகள பாத்துக்குறவங்க கடவுளுக்கும் மேலனு தான் சொல்லணும்.

  அங்கே போய பார்த்தபிறகு எங்களுக்கும் இந்த எண்ணம் தான் வந்தது.!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா... ரொம்பவே பொறுமை வேணும்

   Delete
 2. மனம் கனத்து தான் போகும்...

  ReplyDelete
 3. "ஆட்டிசம்" ஹரிதாஸ் படம் பார்த்த பிரகுதான் தெரிந்து கொண்டேன்.

  பாவம் உங்க தம்பி அக்கா!

  ReplyDelete
  Replies
  1. என் தம்பி பாவம் இல்ல மகேஷ், அவன நினச்சா பெருமையா இருந்துச்சு அப்போ

   Delete
 4. விழியின் ஓவியம்: நண்பர்களின் வற்புறுத்தலும், பிரபல பதிவர்களின் விமர்சனமும்!

  http://www.sudarvizhi.com/2013/04/blog-post_9.html#more

  ReplyDelete
  Replies
  1. படிச்சேன் மகேஷ், நான் இன்னும் அந்த படம் பாக்கல, பாக்கணும் னு ஆவல தூண்டுது

   Delete
 5. உண்மையில் அவர்கள் உன்னதமானவர்கள்தான்..

  ReplyDelete
 6. மனம் நெகிழ்த்து போகிறது

  ReplyDelete
 7. ஆமா மேடம், ரொம்ப தேங்க்ஸ், கருத்துக்கு

  ReplyDelete
 8. அவர்கள் வேண்டுமென்று செய்வதில்லௌ காயு.......அந்த நிமிடத்தில் அவர்களின் உணர்வுகளை அவர்களால் கட்டுப்படுத்தமுடிவதில்லை. மிகவும் பாசமான குழந்தைகள் இவர்கள்.

  ReplyDelete