Wednesday 20 November 2013

இணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்


சில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல இருந்து “மார்கழி பூவே, மார்கழி பூவே, உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்”ன்னு பாட்டு கேட்டுச்சு. உடனே மனசு உற்சாகம் ஆகிடுச்சு. அந்த உற்சாகம் உங்களுக்கும் வர வேண்டாமா? வாங்க அப்படியே உற்சாகத்தோட ஒரு வணக்கத்த வச்சுப்போம்.

அப்புறம், நாளைக்கு என்ன பதிவு போடலாம்னு நேத்து உக்காந்து யோசிச்சப்போ சோம்பல் வந்து என்கிட்ட அத நாளைக்கு பாத்துக்கலாம், இப்போ தூங்குற வழிய பாருன்னு மிரட்டோ மிரட்டுன்னு மிரட்டிடுச்சு. நானும் அதுக்கு பயந்துகிட்டு பம்மிகிட்டே போய் தூங்கிட்டேன். காலைல எழுந்து ஏதாவது பழைய கவிதை ஒன்ன ரீ-போஸ்ட் போடலாம்னு தான் இருந்தேன், ஆனா அதுக்குள்ள ஒரு விஷயம் கண்ணுல தட்டுபட்டுடுச்சி. அதென்ன விசயம்னு கேக்குறீங்களா? இந்தா அது பத்தி தானே சொல்ல வரேன், முழுசா படிங்க....

நானும் இந்த பேஸ் புக் வந்து கிட்டத்தட்ட வருஷம் மூணரை ஆகுதுங்க. நான் இங்க வந்தப்போ எல்லாருமே கொஞ்சம் ஒற்றுமையா ஜாலியா பழகிட்டு இருந்தாங்க. அதனால இங்க நான் பெரிய அளவுல மன உளச்சல அடைஞ்சதில்ல. ஆனா அத விட பெரிய ஆபத்துல சிக்கியிருக்கேன். அத பத்தி அப்புறமா ஒருநாள் கண்டிப்பா டீடைலா சொல்றேன். இப்போ நான் சொல்ல வரது பொண்ணுங்கள குறி வச்சு அவங்களுக்கு மனரீதியான தொல்லை குடுக்குற சில வக்கிரம் பிடிச்ச ஓநாய்ங்கள பத்தி.

இது நடந்து கிட்டத்தட்ட ஆறு மாசம் இருக்கும். நான் யூ.ஜி படிக்குறப்பவே அப்பா கைய எதிர்பார்க்காம சின்ன சின்னதா ப்ராஜெக்ட் பண்ணி குடுத்து அதுல இருந்து வர்ற காச என்னோட மனசுக்கு பிடிச்ச மாதிரி செலவு பண்ணி பழக்கம். இது என் அம்மா கத்து குடுத்தது. உனக்கு அடுத்தவங்களுக்கு உதவணும்னு தோணிச்சுனா அப்பா காச எடுத்து குடுக்கணும்னு நினைக்க கூடாது, நீ சம்பாதிச்சு குடுக்கணும்ன்னு அம்மா தான் இந்த ஐடியாவே எனக்கு சொல்லி குடுத்தாங்க. அதுல இருந்து நானும் அதையே பாலோ பண்ணிக்கிட்டு வரேன். நான் பி.ஹச்.டி ஜாயின் பண்ணப்போ ஒரு பொண்ணு எனக்கு அறிமுகம் ஆனா. அவளோட ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும் போதும் எனக்கு அப்படியே என்னை பாத்த மாதிரியே இருக்கும். அதனால அவள எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போ தான், அவளுக்கு பீஸ் கட்ட முடியாத சூழ்நிலை, அதுக்கு மேல அவளால படிப்ப தொடர முடியாதுன்னு தெரிஞ்சுது. நான் ஏன் அவளுக்கு உதவக் கூடாதுன்னு கைல இருந்த காச அவ கிட்ட குடுத்துட்டேன். காசே இல்லாம நான் இருந்து பழக்கமில்ல. அதனால நான் ப்ராஜெக்ட் எழுதி தரேன், யாராவது தேவைனா சொல்லுங்கன்னு என்னோட எப்.பில ஆறு மாசம் முன்னாடி ஒரு ஸ்டேடஸ் போட்டேன்.

அதுல தான் ஒருத்தன் வந்து ஒரு கமன்ட் போட்டான், நான் நீங்க சொல்ல வரது எனக்கு புரியலீங்கன்னு அடுத்த கமன்ட் போட்டேன். அவ்வளவு தான், அவன் இன்பாக்ஸ் வந்துட்டான் (அதர்ஸ் போல்டர்ல தான், காரணம் அவன் என் பிரெண்ட் லிஸ்ட்ல கிடையாது). வந்தவன் ஹாய் டின்னு ஆரம்பிச்சான். சும்மாவே எனக்கு நல்லா தெரிஞ்சவங்க யாராவது டி-ன்னு சொன்னா சூர்ருனு கோபம் தலைக்கு ஏறும். இவன் என்ன பாத்து எப்படி சொல்லலாம்ன்னு கடுப்பாகிட்டேன் (நீ மட்டும் அவன், இவன்ன்னு சொல்லலாமான்னு கேட்டீங்கனா, இவனுக்கெல்லாம் மரியாத குடுத்தா தான் தப்பு). அப்பவே அவன உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பேன், ஆனாலும் அந்த நேரம் வேற வேலைல இருந்ததால அப்படியே விட்டுட்டேன்.

அப்புறம், பிசில நான் அப்படியே அந்த விசயத்த மறந்தாச்சு. ஒரு வாரம் கழிச்சு அதர்ஸ் போல்டர் பக்கம் போனா, அந்த பொறம்போக்கு தொடர்ந்து எனக்கு மெச்சேஜ் அனுப்பிகிட்டே இருந்துருக்கான். அத்தனையும் வெளில சொல்ல முடியாத வார்த்தைகள். அதுலயும், உனக்கு பயமா இருந்தா வேற ஐ.டி தரேண்டி, அங்க வந்து பேசிடின்னு எனக்கே ஐடியா வேற குடுக்குறானாமாம். இவன ப்ளாக் பண்ணிட்டு போக எனக்கு கண்டிப்பா அதிக நேரம் ஆகாது. ஆனா இவன் எத்தன பேர் இன்பாக்ஸ்-ல இந்த மாதிரி பேசியிருப்பான். எத்தன பேர் வெளிலயே சொல்ல முடியாம மனசுக்குள்ள வெந்து போயிருப்பாங்க. அதனால தான் நான் அவன ரிபோர்ட் பண்ணி அப்புறமா ப்ளாக் பண்ணினேன். அதோட விடாம அவன் ஐடிய குறிப்பிட்டு ஒரு ஸ்டேடஸ்-ம் போட்டேன்.

அப்புறமா தான் தெரிஞ்சுது, அந்த பொறுக்கி இன்பாக்ஸ்ல வந்து பேசினான். சில பொறுக்கிங்க ஸ்டேடஸ்லயே வந்து அதோட புத்திய காட்டுதுங்க. ஒருத்தர் அவன் அப்படி என்ன பேசினான்ன்னு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இங்க போடு, அப்படி என்ன இருக்குன்னு பாக்கலாம்னு கேக்குறார் (பெரிய மனுசர் அக்கறைல கேக்குறாராம்). இன்னொருத்தன் அவன் கிட்ட அவனுக்கு ஏத்த மாதிரி பேசி அவன் நம்பர் வாங்குன்னு ஐடியா குடுக்குறான். அவன் தான் சாக்கடைன்னு தெரியுது, இதுல நாம வேற அவனுக்கு ஏத்த மாதிரி வளைஞ்சி போகணுமாம். இதுல என் மேல அக்கறை உள்ளவங்க, பதறிக்கிட்டு தயவு செய்து ஸ்க்ரீன் ஷாட் போட்டுடாதன்னு தனியா வந்து சொன்னாங்க. அந்த அளவு நானும் முட்டாள் இல்லன்னு நானும் அவங்களுக்கு பதில் சொன்னேன். கொஞ்சம் நிம்மதியா போய்ட்டாங்க.

அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்போ தான் என்னோட பிரெண்ட் எனக்கு ஹெல்ப் பண்றதா சொன்னாங்க. இந்த மாதிரி ஆட்கள உளவியல் ரீதியா தான் அணுகணும்ன்னு சொல்லிட்டு போனவங்க, அப்புறமா அவனை பற்றி சொன்ன விஷயங்கள் கேட்டு எனக்கு தலை சுற்றி போச்சு.

அவன் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்துல மலேசியாவுல வேலை பாக்குறானாம். ஊருல அம்மா, மனைவி குழந்தைகள் எல்லாரும் இருக்குறாங்களாம். இவனோட பொழுது போக்கே குத்துமதிப்பா பொண்ணுகளுக்கு தூண்டில் போட வேண்டியது, ஒண்ணு அவங்க வழிக்கு வந்தா அப்படியே அவங்க கிட்ட பேசிகிட்டு, அலுக்குறப்போ அவங்க அக்கௌன்ட் வாங்கி அத ஹாக் பண்ண வேண்டியது, ரெண்டாவது, வழிக்கு வராத பொண்ணுங்ககிட்ட வேற ஐ.டில வந்து, நல்ல பையனா பேசி, அவங்களோட நட்ப்ப சம்பாதிச்சு, அவன் மேல நம்பிக்கைய வர வச்சு அவங்க ஐ.டிய ஹாக் பண்றது, மூணாவது, பாக்க கொஞ்சம் அழகா இருக்குற பசங்க கூட நல்லவனா பேசி, அவங்க கிட்ட நட்பா இருந்து அவங்க ஐ.டிய ஹாக் பண்றது. இதெல்லாம் அவன் பொழுது போக்காவே பண்ணிக்கிட்டு இருக்கானாம்.

அப்படினா, இவன் யூஸ் பண்ற ஐ.டிக்கள் யாரோ ஒருத்தருடைய ஒரிஜினல் ஐடிக்கள். அவங்க போட்டு வச்சிருக்குற பெர்சனல் போட்டோஸ், அவங்க நட்பு வட்டம்னு எல்லாமே இவன் கைல. இதனால இன்னும் அதிகமா பல பேர் அவன ஒரிஜினல்ன்னு நம்பி அவன் கிட்ட பழகுவாங்க.

கேக்க கேக்க எனக்கு தல சுத்திடுச்சு. அப்படினா நாம நம்மோட பிரெண்ட்ன்னு ஒருத்தங்கள நினச்சா, அவங்க ஐடி இன்னொருத்தன் கைக்கு போக வாய்ப்பு இருக்கான்னு. இந்த மாதிரியெல்லாம் கூட நடக்குமான்னு நான் ரொம்பவே குழம்பி போயிட்டேன். அப்போ தான் என் பிரெண்ட் சொன்னாங்க, அவனோட குறிக்கோள் எதுவா வேணா இருக்கலாம், ஆனா அவன் கிட்ட பேசுறவங்களோட டீடைல்ஸ் எடுத்து வைக்குறதோட இல்லாம அவங்க போன் நம்பரையும் அவன் வாங்கி வச்சுக்கிறான். இதனால அவனால பாதிக்கப்பட்ட பெண்களால பயந்துகிட்டு வெளில சொல்ல முடியாம தவிக்குறாங்கன்னு. அவன் ஹாக் செய்யப்பட்ட ஒரிஜினல் ஐ.டியில போய் பேசுறதால, அவன் மேல சந்தேகம் வர்றது குறைவுன்னும், பெண்கள் ஐ.டில ஆண்கள்கிட்டயும், ஆண்கள் ஐ.டில பெண்கள் கிட்டயும் பேசுறான்னும் சொன்னாங்க.

இது நடந்து ஆறு மாசத்துக்கு அப்புறம், என் கிட்ட அவன் பேசின ஐ.டிய ரிபோர்ட் குடுத்ததால எப். பி அத முடக்கிடுச்சு. ஆனா அவன் வேற ஐ.டில இப்போ வேற பெண்கள் கிட்ட பேச முயற்சி பண்ண ஆரம்பிச்சுட்டான். சமீபத்துல என்னை மாதிரியே ஒருத்தங்க இத பத்தி ஸ்டேடஸ் போட. அது என்ன ஏதுன்னு நான் விசாரிக்குறப்போ தான், அதே ஆள் தான்ங்குறது தெரிய வந்துச்சு.

இப்போ நாம எச்சரிக்கையா இருக்க வேண்டியது இதுதான், இது நான், இது என் அம்மா, இது என் மனைவி, இல்ல தங்கை, இல்ல கணவர், இது என் குடும்பம்ன்னு யாராவது நம்ம கிட்ட அவங்க பேஸ் புக்ல இருக்குற போட்டோஸ் காட்டினாலும் அத எல்லாம் நம்பி, நம்மோட டீடைல்ஸ் தயவு செய்து யாரும் குடுத்துடாதீங்க. இந்த மாதிரி நம்பிக்கைய ஊட்டி நம்மோட ஐ.டிய திருடி, நம்மோட குடும்பத்த தன்னோடதுன்னு இன்னொருத்தங்க கிட்ட சொல்லிட்டு இருப்பான் ஒருத்தன். இங்க யாரை நம்புறது, யாரை நம்பக்கூடாதுன்னே தெரியாம தலைய புடிச்சுக்குற நிலைமை தான்.

அப்படினா, இதுக்கெல்லாம் வேற வழியே இல்லையா? இவன் மாதிரி ஆட்கள தண்டிக்க வாய்ப்பே இல்லையானா கண்டிப்பா இருக்கு. இங்க பிரச்சனையே, எல்லோரும் அவங்கவங்களுக்கு வராத வரை நமக்கென்னன்னு இருக்குறதும், பிரச்சனை வந்தவங்களும் வெளில தெரிஞ்சா நமக்கு தான் அவமானம்ன்னு நினைச்சுக்கிட்டு அமைதியா இருக்குறதும் தான் அந்த மாதிரி ஆட்கள் தப்பு செய்ய ஈசியா வழி அமைச்சு குடுக்குது.

இதுக்காகவே இப்போ பேஸ் புக்ல தனியா இணைய பெண்கள் பாதுகாப்பு குழு-ன்னு ஒரு பேஜ் ஆரம்பிச்சிருக்காங்க. அத ஒரு சங்கமா மாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிச்சிருக்காங்க. இத பத்தி விரிவான ஒரு விளக்கத்த நாம அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போ இத படிக்குற நீங்க எப்.பில இருந்தா கண்டிப்பா இந்த பக்கத்த லைக் பண்றதோட இல்லாம இவங்களுக்கு தேவையான ஒத்துழைப்பும் குடுங்க. நாம ஒண்ணா, ஒற்றுமையா இருந்தா கண்டிப்பா இந்த மாதிரி ஆட்களுக்கு ஒரு பயம் வரும். அப்படி ஒரு பயத்த நாம காட்டிட்டாலே சில பயந்தாங்கொள்ளி குற்றவாளிங்க திருந்திட வாய்ப்புண்டு. மீதி இருக்குற சமூக விரோதிகள நாம சட்டத்தோட பிடியில கூட கொண்டு போய் நிறுத்தலாம்.


வாங்க, இப்போ முதல் அடி எடுத்து வைப்போம்.

.

53 comments:

  1. இவற்றையெல்லாம் முடிந்தளவு யோசிப்பதையே தவிர்த்து விடுங்கள்... விரிவான விளக்கத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புரியல அண்ணா, முடிஞ்ச அளவு யோசிப்பதை தவிர்ப்போம்னா, அப்போ அவங்கள பத்தி யோசிக்க வேணாம்னு சொல்ல வரீங்களா?

      Delete
  2. பேஸ் புக்குல ஒருத்தன் நம்ம கருத்துகெல்லாம் லைக் போட்டா உடனே நாம நம் சொந்த பெர்சனல் விஷய்த்தை அப்படியே கக்குகிற பெண்கள் இருக்கிற வரைக்கும் இந்த ஒநாய்கள் ஒழிவதில்லை நமக்கு தெரியாதவன் இன்பாக்ஸில் மெசேஜ் அனுப்பினால் அனுப்பிய அன்றே அவனை ப்ளாக் செய்துவிட வேண்டும் அதை முதலில் பெண்கள் செய்ய வேண்டும் அதை அவர்கள் செய்வார்களா?

    ReplyDelete
    Replies
    1. இதயெல்லாம் பண்ணலாம் தான், இங்க ஆண் பெண்ன்னு வித்யாசம் இல்லாம இந்த பேஸ் புக் எப்படி யூஸ் பண்றதுன்னே தெரியாம நிறைய பேர் இருக்காங்க, நீங்க கேர் புல்லா இருக்கலாம், அதே மாதிரி எல்லாரும் இருப்பாங்க ன்னு சொல்ல முடியாது, அதுக்காக அவங்க எல்லாருமே தப்புன்னும் சொல்ல முடியாது, அனுபவங்கள் தானே இந்த மாதிரி தப்புகள எல்லாம் சுட்டி காட்டி, அப்புறமா பாதுகாப்பா இருக்கனும்ன்னு சொல்லி குடுக்குது.

      Delete
  3. முகநூல் ஒரு பொதுவான தளம்... ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாகத் தான் போய்க் கொண்டிருந்தது... நாளாக ஆக.. அதிக ஆட்கள் வரத் துவங்க பிரச்சனைகளும் அதிகமாய்க் கொண்டிருக்கிறது... எப்போதுமே ஒரு எச்சரிக்கை உணர்வோட இருக்கும் போது நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை... சிலர் அத்துமீறி ஒருவரிம் தன் அந்தரங்கத்தை, குடும்ப சூழலை பகிர்ந்துக் கொள்ளும் போது தான் வினை ஆரம்பிக்கிறது. ஃபேஸ்புக் ப்ளாக் பண்ண, ரிப்போர்ட் பண்ண, அன்ஃப்ரெண்ட் செய்ய, ஃபோட்டோ கஸ்டமைஸ், ப்ரொஃபைல் கஸ்டமைஸ், டைம்லைன் கண்ட்ரோல், டேக் கண்ட்ரோல் எல்லாம் இதற்காகத் தான் செய்து தந்திருக்கிறார்கள்.. முறையாக இதைப் பயன்படுத்தும் போது எந்த விதமான பாதிப்பும் நமக்கு ஏற்படப்போவதில்லை என்பது தான் நான் அனுபவத்தில் உணர்ந்தது. கயவர்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள். அவர்களை இனம் காணுவது இயலாது. சில சந்தர்ப்பங்களில் அவர்களின் முகமூடியைக் கழற்றுவார்கள்.. அதற்கு நாம் இடம் தராமல் இருப்பது எல்லோர் மீதும் போறுப்பாக இருக்கிறது காயத்ரி..

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, ஏதாவது பட்டு திருந்தினா தானே இந்த எச்சரிக்கை உணர்வே வருது பல பேருக்கும். நான் எப்பவுமே ரொம்ப ரொம்ப எச்சரிக்கையோட தான் இருப்பேன், அப்படி இருந்தும் எனக்கே பெரிய அடி கிடைச்சுதே, ஆனா அத நினச்சு சோர்ந்து போகாம மறுபடியும் ஒரு நிகழ்வு நடந்துடாம நம்மள பாதுகாக்க தான் முடியும். நான் இப்போ நிறைய செட்டிங்க்ஸ் மாத்துறதுன்னு இல்லாம, தேவையில்லாத எதையும் யார் கிட்டயும் பகிர்றது இல்ல, இதே மாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாதே. எத்தனையோ பேர் இன்னும் நம்பிட்டு தான் இருக்காங்க, அவங்க கிட்ட இப்படி இப்படி நடக்குது, ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்றது ஒன்னும் தப்பு இல்லையே... இது ஒரு எச்சரிக்கை பதிவு தான் அண்ணா

      Delete
  4. தலைசுத்துது டா... இதை படிக்கும் போது.... இன்னும் அந்த நாய் திருந்தலையா.... சில சைகோகளை திருத்தவே முடியாது ... முயற்சியும் வீணே...

    ReplyDelete
    Replies
    1. ஆமா அம்மா, அவன் திருந்தணும்னு இல்ல, நாம ஏமாறக் கூடாது இல்லையா?

      Delete
  5. காயத்ரி, உங்க பதிவை முழுவதும் படித்தேன்.. இணைய வளர்ச்சியின் இடர்பாடுகளில் இதுவும் ஒண்ணு. நீங்க சொன்ன மாதிரி சும்மா பிளாக் பண்ணினா மட்டும் போறாது.. இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல.. பெண்கள் ஐ.டி இலிருந்து ஆபாசமாக பலவற்றை இன்பாக்சுக்கு அனுப்புகிறார்கள். முகம் தெரியாதவர்களுக்கு முகநூல் அக்செப்ட் செய்யக் கூடாது.. அதே போல் முடிந்தவரை அக்சப்ட் செய்யும் ஒரு சிலருடன் எப்போதாவது பேசும் போது அவர்கள் எப்.பி உபயோகப் படுத்திக்கொண்டிருக்கிரார்களா என செக் செய்து கொள்ளலாம்.. வேறு என்ன செய்ய?

    ReplyDelete
    Replies
    1. நான் கூட அதிகமா யாரையும் ஆட் பண்றதே இல்ல அண்ணா... இன்பாக்ஸ் chat கூட பண்றது இல்ல... இத நான் வெளிப்படையாவே எல்லாருக்கும் புரியும் படி தெளிவா சொல்லிடுறேன். ஆனாலும் சில பேரால தொல்லை வர தான் செய்யுது, நான் அதையும் தைரியமா பேஸ் பண்றேன், ஆனா எத்தன பேர் கஷ்டப்படுவாங்க... இத எல்லாம் படிச்சா கொஞ்சம் அலெர்ட்டா இருப்பாங்க தானே

      Delete
  6. உங்க பயம் பிரமை இல்ல. நெசமாவே

    நெசம் .

    அன்லஸ் யூ நோ த பர்சன் ப்ளீஸ் நவர் அச்செப்ட் எ ஸ்ட்ரேஞ்சர் ஆஸ் யுவர் பிரண்ட் .

    அது இருக்கட்டும்.

    இதெல்லாமே அதாவது பேஸ் புக், ப்ளாகர் எல்லாத்தையுமே பி.ஹெச். டி.முடிக்கறவரைக்கும் மூட்டை கட்டி ஒரு ஓரமா தள்ளி வைங்க.

    ப்ளாக்லே உங்க true பிரண்ட்ஸ் known to you personally மட்டும் பாக்கும்படியா ப்ரோவிசன் இருக்குது. அத செய்யுங்க.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. என்னோட வேலைல நான் சரியாவே இருக்கேன் தாத்தா... பெரும்பாலும் இன்டர்நெட் யூஸ் பண்ணிட்டே இருக்குறதால ரிலாக்ஸ் பண்ண தான் இங்க எல்லாம் வரேன். அந்த அளவு எனக்கு பெரிய பாதிப்பு வந்தது இல்ல, வர அளவு நடந்துக்கவும் மாட்டேன், விடவும் மாட்டேன்

      Delete
  7. சொந்த விசயங்களையும், குடும்ப விசயங்களையும் facebook ல் பதியாதே... அது நம் நிம்மதியை குலைத்துவிடும்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, சொந்த விசயங்கள பதிய வேணாம் தான், இந்த மாதிரி முட்டாள் தனமா இருந்துட கூடாதுன்னு சொல்றது தப்பே இல்ல. எல்லாரும் எல்லாம் தெரிஞ்சவங்களா இருக்க முடியாது. சில நேரம் பட்டு தான் உணர வேண்டியிருக்கு

      Delete
  8. தெரிந்தவர்கள் தவிர்த்து முகநூலில் நண்பர்கள் வட்டத்தில் இணைப்பதும் சாட் செய்வதும் தவறு.

    ReplyDelete
    Replies
    1. please tell this to all your friends to follow this practice. Of late, the nuisance has grown sky high.

      subbu thatha.

      Delete
    2. உண்மை தான் ராஜி அக்கா... இந்த தப்பை தெரியாம நிறைய பேர் செய்றாங்க, அவங்களுக்கு எப்படி பேஸ் புக் யூஸ் பண்ணனும்ன்னு கூட தெரிய மாட்டேங்குது

      Delete
    3. கண்டிப்பா சொல்லணும் தாத்தா.... உங்க கருத்துக்கு தேங்க்ஸ்

      Delete
  9. Oh epadi ellam kuda nadakutha ?? Sari nan neenga sona udan member agitan nga

    ReplyDelete
    Replies
    1. ஆமா, நடக்குது, மெம்பர் ஆனா மட்டும் போதாது, அவங்க போடுற ஸ்டேடஸ்கள உங்க நட்பு வட்டங்கள்ல ஷேர் பண்ணுங்க

      Delete
  10. நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் சரியே. ஒரு வருடம் முன்பு என்று நினைக்கிறேன், முக நூல் மூலமாக நட்பு வளர்த்து ஒரு பெண்ணை காதலிப்பதாக ஒரு ஆண் சொல்ல இவளும் அதில் விழ, மும்பையில் அவர்கள் ஒரு ஹோட்டலில் சந்தித்த போது அந்தப் பெண்ணை அவன் கொலை செய்தது அப்போது சூடான செய்தியாக வந்தது. இப்படிப்பட்ட ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு சங்கடம்தான். ஆனால், பெண்களும் கூட இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். பெண்கள், ஆண்களின் ஐடியிலும், ஆண்கள் பெண்களின் ஐடியிலும், இல்லை ஒரு பொதுவான ஐடியிலும் கூடத்தான் முகமூடி அணிந்து வருகிறார்கள். டெக்னாலஜி வளர வளர ஆபத்துகளுக்கும் பஞ்சமே இல்லாமல்தான் போகிறது. எனவே, இதில் நம்மைத் தற்காத்துக் கொள்ள கொஞ்சம் ஓவராகவே மூளையையும் கசக்கத்தான் வேண்டி இருக்கிறது.!! Be Careful!!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் எச்சரிக்கையா இருக்க வேண்டியது அவசியம்

      Delete
  11. இவ்வளவு அறிவு ,நேரம்,நிதானம் உள்ள நீங்க இணையத்தில் ஏன் வெட்டியாக பொழுது போக்க வேண்டும்? ஒரு ஐம்பது ஆயிரம் முதலீடு செய்து nifty யில் தினமும் எளிதாக ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்க லாமே! அறிவும் ,அனுபவமும் போனஸ் ஆக கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆனா, என் துறை இதுல இருந்தெல்லாம் வேறுபட்டது. இது ஒரு பொழுதுபோக்கா மட்டும் தான் யூஸ் பண்றேன்

      Delete
    2. learn nifty love nifty if ur knowledged

      Delete
    3. சரி, முயற்சி பண்றேன்

      Delete
  12. வணக்கம்

    பதிவு அருமையாக உள்ளது இனியாவது எச்சரிக்கையுடன் இருக்கலாம்.........அடுத்த பதிவை தொடருங்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அண்ணா

      Delete
  13. I also encountered the same problem 2 year back, after that simply I closed/deleted my FB and came out. Today I'm not having account in FB. "NO FB NO PROBLEM!!"

    ReplyDelete
    Replies
    1. இங்க யாருக்குமே பாதுகாப்பு இல்லன்னு அனுபவத்துல தெரிஞ்சுக்குறோம், அதே அனுபவம் தான் எப்படி நம்மள பாதுகாத்துக்கணும்னும் கத்துக்கொடுக்குது

      Delete
  14. தெரிந்த நபர்களை தவிர மற்ற யாரையும் கூட்டத்தில் சேர்க்காதீர்கள் இது பெண்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க. ஆனா ஆபத்து தெரிஞ்சவங்களால கூட வருது, அது தான் கொடுமை

      Delete
  15. தலைப்பு "இணையத்திலும் திரியும் ஓநாய்க் கூட்டங்கள்" என்பதே பொருத்தம், அந்த அளவு எங்கும் இந்தத் தொங்கப் போடும் கூட்டம் மோசமாகத் தான் உள்ளது. இணைய வளர்ச்சி இந்த சலன புத்திகளுக்கு ஏதுவாக அமைந்துள்ளது.
    நேற்றுக் கூட ஒரு பிரஞ்சுப் பெண் "ஏன் இந்தியாவில் பெண்களுக்கு இவ்வளவு துன்பம்" எனக் கேட்டார்.
    இந்தியா, இலங்கையில் பெண்களுக்கு நடக்கும் நேரடி, மறைமுக அச்சுறுத்தல் பற்றி என்னால் விளக்கவே முடியவில்லை.
    வெட்கமாக இருக்கிறது.
    பெண்கள் எவரிடமும் ஆழமான பகிர்வைத் தவிர்ப்பதே நன்று.
    நம் நாடுகளில் முற்றும் துறக்கவேண்டிய துறவிகளே அடிக்கும் கூத்து நாடு தாங்க முடியாமல் உள்ளது.
    மற்றவர்களைப் பற்றி சொல்வதற்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. இங்க எல்லாம் பெண்களோட எண்ணங்களும், உணர்வுகளும் எப்படி இருக்கணும்னு ஆண்கள் தானே முடிவெடுக்குறாங்க

      Delete
  16. இணைய சமூகத்தைப் பொறுத்தவரை குறிப்பாக பேஸ்புக்கை பொறுத்தவரை அறியாதோரை இணைப்பதே கூடாது. அறியாதோரோடு சம்பாசணைகள் செய்ய ட்விட்டர் சிறந்த இடம், ஏனெனில் அங்கு அந்தரங்க தகவல்கள் பதிவது குறைவு. அத்தோடு இப்போது பேஸ்புக்கில் அறியாதோர் நம் பக்கத்தை காணவோ, பதிவிடவோ, தகவல் அனுப்பவோ முற்றாக தடுக்கும் முறைகளை தந்துள்ளது. ஆனால் நிறைய பெண்களும், பல ஆண்களும் அவற்றை பயன்படுத்துவதில்லை. அறியாதவர்களுக்கு கதவு திறந்துவிட்டு உள்ள வரவிட்டு பின்னர் குத்துது குடையுது என்கின்றனர். பெண்கள் மட்டுமல்ல பல ஆண்களையும் இத்தகைய ஓநாய்க்கள் குறி வைப்பதுண்டு.இணைய உலகில் தனிப்பட்ட தகவலை முன் பின் அறியாதோரோடு பகிர்வதும், கதைத்துக் கொள்வது மிக மிக ஆபத்தே.

    ReplyDelete
    Replies
    1. நான் பாக்குற பெரும்பான்மையான profiles ல அவங்களோட படம், எல்லாம் பப்ளிக்ல ஷேர் பண்ணிடுறாங்க. அது எப்படி செட்டிங்க்ஸ் வச்சு பாதுக்காக்குறதுன்னே தெரியாம எப்.பி யூஸ் பண்றவங்களும் இருக்காங்க. ஸ்கூல் படிக்கும் போதே எப்.பி வந்துடுறாங்க

      Delete
  17. I think you can limit the persons who can access / tag your profile and you can ask your friends to do the same settings

    ReplyDelete
    Replies
    1. ஆமா, சரியா சொன்னீங்க

      Delete
  18. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட இணையத்தைப் பற்றி போதிய விழிப்புணர்வின்றி சமூக வலைத்தளங்களில் தங்களின் பிரத்யேகத் தகவல்களை மனம் போன போக்கில் கட்டவிழ்த்து விடுவதன் விளைவே இது. யார், எந்த பயனாளர் கணக்கைப் பயன்படுத்தினாலும், நாள், நேரத்தோடு சட்டத்தினை அணுகினால் சம்பந்தப்பட்ட நபர்களைப் பிடிக்க முடியும்.

    மக்களுக்கு இணையம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் உடனடித் தேவை. மற்றபடி கணிணி பயன்படுத்துபவரெல்லாம் பண்பாளர் என்று நம்புமளவுக்கு நம் சமூகம் இன்னும் தயாராகவில்லை,

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே சரிதான், ஆனா தப்பே பண்ணலனாலும் சட்டத்தை அணுகினா ஊர் தப்பா பேசுமோ, வீட்ல உள்ளவங்க தப்பா பேசுவாங்களோன்னு பயந்துகிட்டே நிறைய பேர் ஊமையாகிடுறாங்க

      Delete
  19. இந்த மாறி பேமானிலாம் நம்ப அர்சியல்வியாதிங்க மாறி, "ராங்கு" பண்றத ரெம்ப "கரீட்டா" பண்ற கோஷ்டி. ஒரு தபா நம்ப அத்த கண்டுக்கினா உஷாரா கம்முன்னு சைடு வாங்கிக்கணும், அத்த வுட்டுட்டு, அத்து கைல நம்பளும் ராங்கு காட்ட நென்ச்சா... அத்துதான் அந்த பேமானிங்களோட வெற்றி... அதத்தான் அந்த பேமானிங்களும் எக்ஸ்பெக்ட் பண்ணும்... அது விர்ச்ச வலையாண்ட நம்பளா போய் மாட்டிக்க பூடாது... இத்தத்தான் நம்ப திண்டுக்கல் தன்பால் சொல்ல வர்து... புர்ஞ்சுக்கமே...

    ReplyDelete
    Replies
    1. புரிஞ்சுது. நாம கம்னு சைடு வாங்கிடலாம், அப்போ ஏமாந்து போறவங்க ஏமாந்து போய்ட்டே தான் இருக்கனுமா?

      Delete
    2. அந்தப் பேமானிங்களை ப்ளாக் பண்றது, இப்புடிக்கா ஒரு வியிப்புணர்வு இடுகை போட்றது அல்லாம் நல்லது. இதப் பாத்து 4 பேர் உஷாரானா அத்து போதுமெ... நம்ப மதுரை சொக்கன் ஐயா சொல்லிக்கினார் பார்... அத்தான் நடைமொறை... யு பிர்லியண்ட் கேர்ள்...

      Delete
    3. ம்ம்ம்ம் புரியுது புரியுது

      Delete
  20. துஷ்டரைக் கண்டால் தூர விலகு!இது போன்ற மன நோயாளிகள்: பலர் உள்ளனர். எத்தனை ஓநாய்களை வேட்டையாட முடியும்?ஒதுக்குங்கள்.ஒதுங்குங்கள்தற்காத்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நம்மள தற்காத்துக் கொள்ளலாம், அப்பாவிங்க கதி?

      Delete
  21. enakku ennamoo avinga antha oonai kuttam..pengalai mattume kuri vachu thakkuramathiri thonnuthuu.....


    na ennota profile la address & phone number nu ..ellathayum add panni vachurukken

    ..!!..ithuvaraikkum na problems varummnu yosichathe illaa..

    $
    but, ennala uruthiya solla mudiyum intha Facebook la pengalukku paathugappe illa ;(

    ReplyDelete
    Replies
    1. இல்ல, இங்க ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்ல, ஆண்களோட போட்டோக்கள், அதுவும் குடும்ப போட்டோக்கள திருடி, பேக் ஐடி ஒப்பன் பண்ணி கீழ்த்தரமான நடவடிக்கைகள்ல ஈடுபடவும் செய்றாங்க சிலர்

      Delete
  22. நல்ல பதிவு, நல முயற்சி, மோசமான ஓநாய்களை ஒழிக்க என் ஆதரவும்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாங்க... ஆதரவுக்கு தேங்க்ஸ்

      Delete
  23. பயங்கரமாத்தான் இருக்கு. பெண்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்சொந்த விஷயங்களை குறிப்பாக சோகங்களை பகிர்ந்து கொள்வதில் ஆபத்து உள்ளது. இதைப் பற்றி கவிஞர் தாமரை பற்றி எழுதிய பதிவில் தெரிவித்திருந்தேன்.ஒரு சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
    ஆண்களுக்கும் இது எச்சரிக்கை பதிவுதான். நன்றி காயத்ரி

    ReplyDelete
  24. fb pathi enkau ethum theriyathu so itha padichathum thalasuthuthu pa

    ReplyDelete