Monday, 11 November 2013

கனவு கண்டா அது பலிக்குமா? பலிக்காதா?


ரெண்டு மூணு நாளா மனசுல எதோ ஒரு பாரம். அத எப்படி விவரிக்கன்னு கூட தெரியல. இன்னும் ஒண்ணரை வருசத்துல எப்படியாவது என்னோட கனவை நனவாக்கிட ரொம்ப ஆசை. இதுக்காக பெங்களூர் போகலாம்னு பாத்தா ஏனோ மனசு இங்க இருந்து கிளம்பவே மாட்டேங்குது. எதுவுமே வேணாம், இப்படியே இருந்துடலாம்னு தீவிரமா ஒரு மனசு சொல்லுது. வாழ்க்கைல அப்படி என்ன பெருசா சாதிச்சுட போறோம்னு ஒரு விதமான எண்ணம் மனசுக்குள்ள அலக்கழிச்சுட்டே இருக்கு.

ராத்திரி தூக்கத்துல கூட என்னன்னவோ கனவுகள். எனக்கு கொஞ்சமும் பிடிக்காத யாரோடவோ நான் கட்டாயம் இருந்தே ஆகணும்ங்குற மாதிரி ஒரு நிர்பந்தனை கனவுல வந்து இம்சை பண்ணுது. இதெல்லாம் ஏன் நடக்குது, எதனால நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல.

கனவுகள் எப்பவுமே எனக்கு அதிகமா வரதே இல்ல. ஆனா அப்படி வர்ற கனவுகள் ஏனோ என் நிம்மதிய குலைக்குற மாதிரியும், என்கிட்ட எதோ செய்தி சொல்ல வர்ற மாதிரியுமே தோணும். இது எனக்கு மட்டும் தான் நடக்குதா, இல்ல பெரும்பாலும் எல்லோருக்கும் நடக்குதான்னும் தெரியல.

எல்லா வீட்லயும் அப்பாவும் அம்மாவும் சண்டை போடுவாங்க தான். ஆனா என்னோட வீட்ல ரெண்டு பேரும் சண்டை போட்டு நான் பாத்த நாட்கள் குறைவு. அதெல்லாம் நான் ரொம்ப ரொம்ப சின்ன பொண்ணா, விவரமே தெரியாம இருக்குறப்போ, அப்பா குடும்பத்தால அம்மா நிறைய கஷ்ட்டப்படுவாங்கன்னு என்னோட உள்ளுணர்வு சொல்லும்.

அப்பா சாபிட்டுட்டு இருக்குறப்போ திடீர்னு சாப்பாடு தட்டு பறக்கும். பயத்துல நானும் தம்பியும் ஓடி போய் பெட்ரூம்ல பெட்ல குப்புற படுத்துட்டு கண்ண இறுக்க மூடிப்போம். அம்மா தான் வந்து அணைச்சு படுத்துப்பாங்க. அடுத்த நாள் அம்மா முகத்த பாக்கவே முடியாது, அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருக்கும்.
ஏன் நம்ம வீட்ல இப்படி சண்டை வருதுன்னு இப்போ வரைக்கும் எனக்கு தெரியாது. ஏன்னா, நான் பாத்த அப்பா, அம்மா, முழுக்க முழுக்க காதல தான் கொட்டி தீத்துருக்காங்க. ஆனாலும் சில நேரங்கள்ல இப்படி...

சொன்னா நம்ப மாட்டீங்க, அவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறதுக்கு முந்தின நாள் எனக்கு கனவு வரும். நிம்மதியே இல்லாம தூக்கம் கெட்டு, வேர்க்க விறுவிறுக்க எழுந்து உக்காந்துடுவேன். என்னவோ நடக்க போறது மாதிரி, பேந்த பேந்த முழிக்க ஆரம்பிச்சுடுவேன்.

அப்போ எனக்கு நாலரை வயசு இருக்கும். கனவு கண்ட அன்னிக்கே ராத்திரி சண்டை வந்துடும். அப்பா, அம்மா கூட சண்ட போட்ட அடுத்த நாள் பேச மாட்டார், வீட்ல சாப்பிடவும் மாட்டார். எனக்கும் தம்பிக்கும் சாப்பாடு குடுத்துட்டு அம்மாவும் பட்னி இருப்பாங்க. இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்க்கணும்ன்னு நான் ப்ளான் எல்லாம் போடுவேன். அம்மாகிட்ட போய் உன் சமயல சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிப்பேன். பாவம், அப்பா கோவிச்சுகிட்டது பாத்தாதுன்னு நான் வேற அடம் பிடிப்பேன். அப்பா தான் சமைக்கணும்னு உண்ணாவிரத போராட்டம் எல்லாம் நடத்துவேன். அப்புறமா அடுத்த நாள் அப்பாவ எப்படியாவது சமைக்க வச்சு, அவர் கூடவே உக்காந்து தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சு, அப்படியும் விடாம ஊட்டி விட்டா தான் ஆச்சுன்னு ஒத்த கால்ல நின்னு, அம்மாவ மூணு பேருக்கும் சேர்த்து ஊட்டி விட சொல்லுவேன்.

என்னோட இந்த பிளான் எல்லாம் ரெண்டு மூணு சம்பவத்துலயே அம்மா கண்டுப் பிடிச்சுருவாங்க. அப்புறம் எல்லாம் சுபம்தான்னாலும் கனவு கண்ட ராத்திரியும், அத தொடர்ந்து வர்ற அடுத்த நாள் ராத்திரியும் மனசு ரொம்பவே அமைதி எல்லாம இருக்கும். என்னோட இந்த அவஸ்த்தை பாத்துட்டு தானோ என்னவோ, அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்குறது ரொம்பவே குறைஞ்சு போய்டுச்சு.

அதுக்கு அப்புறமா எனக்கு நடந்த ஒரு ஆக்சிடென்ட்... அது நடக்குறதுக்கு முந்தின நாள் நான் கண்ட கனவு இப்பவும் மனசுக்குள்ள இருக்கு. கனவுல நான் ஒரு பதிமூணு வயசு சிறுமியா இருக்கேன். ஜாலியா சைக்கிள் எடுத்து ஊர் சுத்திட்டு இருக்கேன். ரெண்டு கையையும் ஜாலியா விரிச்சுட்டு ரெண்டு காலால பெடல் போட்டு சந்தோசமா பறந்துட்டு இருக்கேன். திடீர்னு ஒரு கழுகு, என் தலை முடி பிடிச்சு தூக்கிட்டு போகுது. வில்-னு கத்திகிட்டே நான் கைய கால உதறுறேன். கொஞ்ச கொஞ்சமா என்னோட தலை முடி எல்லாம் பிய்ஞ்சு போக ஆரம்பிக்குது. முகம் முழுக்க ரெத்தம், ரொம்ப உயரத்துல பறந்துட்டு இருந்தப்போ, அந்த கொத்து முடி அப்படியே அத்து மேல இருந்து கீழ விழுறேன் நான்...

முழிச்சு பாத்தா, கட்டில்ல இருந்து பொத்துன்னு கீழ விழுந்து கிடக்குறேன். எழுந்து உக்காந்து, கனவுல இருந்து மீண்டு வரதுக்கே ரொம்ப நேரம் ஆச்சு. அப்புறமா என்னோட ஸ்கூட்டி எடுத்துட்டு வெளில கிளம்பி போனா, எதிர்ல வந்த வண்டியினால நிஜமாவே பறக்கத் தான் செய்தேன். சின்னதா பட்ட அடி தான்னாலும் அப்புறம் அந்த அடி, என்னோட வாழ்க்கையையே புரட்டி போட்டுடுச்சு. அப்புறமா நான் இப்போவரை டூ-வீலர் ஒட்டினதே இல்ல. நீ ஸ்கூட்டி ஓட்டினதெல்லாம் போதும்னு அம்மா சொல்லிட்டாங்க.

அப்புறமா இடையிடைல நிறைய கனவுகள் வரும். எதுவுமே ஒரு சந்தோஷ கனவா வந்ததா நினைவே இல்ல. இந்த கனவு வர்ற நாள்ல எல்லாம் ஏனோ மனசுல சொல்லவே முடியாத பாரம் வந்து பட்டக்குனு ஒட்டிக்கும்.

ஒரு ரெண்டு மாசம் முன்னாடி ரொம்ப ரொம்ப ஜாலியா ஒரு கனவு கண்டேன். அது எனக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி, இது மட்டும் நடந்தா போதும்ங்குற மாதிரி இருந்துச்சு அது. ஆனா, அடுத்த நாள் அப்படி எதுவும் சந்தோசமான சம்பவம் ஒண்ணும் நடக்கல... அது ஏன்னு இப்ப வரைக்கும் புரியவும் இல்ல. ஆனாலும் அந்த கனவு கண்டிப்பா நிறைவேறும்ங்குற நம்பிக்கை இருக்கு எனக்கு. கண்டிப்பா நிறைவேறும்.

இன்னும் நிறைய கனவுகள் முழிச்சு பாத்தா நியாபகமே இல்லாம போயிருக்கு. ஆனா அடிக்கடி கனவு வந்து என்னை தொல்லை பண்றதும் இல்ல. இதுக்கெல்லாம் கேட்டா ஆழ் மன ஓட்டங்கள்னு சொல்லுவாங்க, நான் நாலரை வயசா இருக்கும் போது கூடவா, அம்மாவும் அப்பாவும் சண்டை போடணும்னு நினைச்சுருப்பேன்?

அப்புறமா, ஒரே மாதிரியான கனவுகள் என்னை துரத்த ஆரம்பிச்ச காலமும் உண்டு. நாலஞ்சு பேர் சேர்ந்து என்னை துரத்துவது போலவும், நான் ஓடி ஓடி ஒரு இடத்துல அவங்க கிட்ட மாட்டிக்குறது மாதிரியும், திரும்ப திரும்ப வரும். அம்மா கிட்ட சொல்லி பதறும் போது இறுக்கமா அணைச்சு ஒரு முத்தம் குடுத்து, நான் வந்து அவங்க கூட சண்டை போடுவேன்ன்னு சொல்லுவாங்க. ஆனா என்னோட மனசுல தைரியத்த மட்டும் ஊட்டி ஊட்டி வளத்தாங்கன்னு சொன்னா அது தான் சரியா இருந்துச்சு. ஒரு கட்டத்துக்கு பிறகு, என்னை துரத்திட்டு வரவங்கள எதிர்த்து சண்டை போடுற மாதிரி நானும் போராட ஆரம்பிச்சுட்டேன். சரி, இந்த கனவெல்லாம் பலிச்சுதான்னு கேட்டீங்கனா, கண்டிப்பா பலிச்சுது. அப்போ நான் வலியோட உச்சக் கட்டத்துல துடிச்சுட்டு இருப்பேன். சாவு வேணும்னு விரும்பி தவம் இருந்த காலம் அதெல்லாம். அப்புறம், அந்த வலிகள எதிர்த்து எப்படி போராடணும்னு நான் கத்துகிட்டேன். அதுக்குபிறகு அந்த கனவுகள் வர்றதே இல்ல.

சரி, என்னோட கனவுகள் எப்பவுமே என்னை இம்சை பண்ணக்கூடாதுன்னு தான் நானும் நினைக்குறேன். என்னவோ, இத எழுதி முடிச்சதும், மனசுல இருந்த பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு. ஈரமான என்னோட இறகுகள்ல இப்போ மெல்லிசா ஒரு காற்று கடந்து, என்னை மறுபடியும் பறக்க வைக்க தயாராக்கிடுச்சு.

அப்புறம் என்ன? கொஞ்சம் அப்படியே பறந்துட்டு வரேன்... 

41 comments:

 1. நீங்கள் கனவு குறித்து இங்கு பகிர்ந்துள்ளவையை பார்க்கும் போது, நீங்கள் குழம்பி போயுள்ளீர்கள் என தெரிகின்றது. கனவு என்பது நம் அன்றாட வாழ்வில் நடக்கும் விடயங்களை ஆழ்மனம் உள்வாங்கி அதனை நினைவுகளாய் சேமித்தும், மனதில் இருந்து அவற்றை அழித்தும் செய்யும் நிகழ்வின் போது உண்டாகும் காட்சி உணர்வுகள். கண்கள் வேகமாய் அசையும் நிலையில் ஆழ்ந்த உறக்கதின் போது கனவுகள் ஏற்படும். பொதுவாக தினமும் கனவுகள் வரும் ஆனால் உணர்ச்சி மிக்க எதிர்மறையான கனவுகளை நாம் மறக்கத் தவறிவிடுவோம், மற்றவைகள் மறந்து விடும். சின்ன வயசில் கனவு கண்டதும் சண்டை வரும் என்ற எண்ணம் மன உருவாக்கலும் தற்செயலுமானவையே. நீங்கள் பிரச்சனைகளை சுமூகமாக்க நல்ல முறையை கையாண்டு பெற்றோர்களின் பிணக்கைத் தீர்த்துள்ளீர்கள். அதனால் பிரச்சனைகளை கையாளும் வலிமை திறமை உமக்கு உண்டு, ஆனால் எதோ மனக்குழப்பத்தில் உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் கனவுகள் ஏற்படுகின்றன. வேலை, காதல், கலியாணம், பணம், ஆரோக்யம் சார்ந்த பிரச்சனைகளே மிகுதியாக பலருக்கும் வருபவை, எனக்கும் உண்டு, நீரில் மூழ்குவது, காற்றில் பரப்பது, இருள் போன்ற கனவுகள் அச்சமூட்டும். ஆனால் அவற்றை சாட்டை செய்யாமல் விட்டுவிட வேண்டும். இல்லை எனில் கனவுகளை நம் மனமே நடத்திக் காட்டிவிடும், அதாவது பலிக்கச் செய்யும். மிகுந்த மன சஞ்சலங்கள் ஏற்படுமாயின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. ஹஹா உங்க கருத்துக்கு தேங்க்ஸ். இது எல்லாமே கொஞ்ச நேரம் கண்ண மூடிட்டு நியாபகத்துக்கு கொண்டு வந்து எழுதினது. குழப்பமோ, அழுகையோ, எப்பவுமே, பத்து நிமிசத்துக்கு மேல அதெல்லாம் என்னை சூழ்ந்து விடாதபடி எப்பவும் பாத்துக்குரவ நான். ஒரு சண்டை போட்டாலே, பத்து நிமிசத்துக்கு மேல அதை என்னால கண்டிநியூ பண்ண முடியாது. இப்போ எல்லாம் கனவுகளை அது போக்குல போய் எனக்கு ஏத்த மாதிரி க்ளைமாக்ஸ்ச நானே மாத்தி அமைச்சுடுவேன். இது நேத்து ராத்திரி கொஞ்சம் குழப்பமான மனநிலைல இருந்தப்போ எழுதினது, ஆனா எழுதி முடிக்குரப்போ எல்லாம் முடிஞ்சு தெளிவாவே தான் தூங்கினேன். கனவு எதுவும் வரல. எல்லோருக்கும் ஏற்படும் சின்ன சின்ன மனவியல் குழப்பங்கள பதிவு செய்யணும்னு தான் எழுதின இத டெலிட் பண்ணாம போஸ்ட் பண்ணவும் செய்தேன். உங்க அக்கறைக்கு நன்றி.

   Delete
 2. கனவுகள் பற்றி உங்கள் பதிவு நான்றாக இருக்கு; உங்கள் பதிவை படிக்க சிரமமாக இருக்கு. Font pபெரிசு பண்ணுங்கள்; இல்லை வெள்ளை கருப்பில் எழுதுங்கள்.

  தமிழ்மணம் பிளஸ் வோட் +1
  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ். ஏற்கனவே ஒருத்தர் சொல்லி இருந்தார், என்னோட பதிவுகள் படிக்க கஷ்டமா இருக்குன்னு. எனக்கு ரொம்பவே குழப்பமா இருந்துச்சு, சரியா தானே இருக்குன்னு. இத விட பெரிய fontல எழுதணும்னா அப்போ நான் இன்னும் blog பத்தி கொஞ்சம் தீவிரமா தெரிஞ்சுக்கணும். அதிகமா blog design பண்ண தெரியாது. அறிவுரைக்கு தேங்க்ஸ்.

   Delete
  2. நீங்க கறுப்பு background -ல் எழுதணும் என்றால், அருணா செல்வம் ப்ளாக்கைப் பாருங்கள். இல்ல background -ஐ வெள்ளையாக மாற்றி கருப்பு எழுத்தில் எழுதுங்கள்.

   ப்ளாக் அழகு முக்கியம்; ஆனால்..படிக்க கஷ்டமாக இருந்தால் விழலுக்கு இறைத்த நீர் தான்.

   Delete
  3. சரி, நான் பார்க்கிறேன் . தேங்க்ஸ்

   Delete
 3. கனவுகள் பற்றிய பெரிய அலசல் ..
  அதில் வந்த பின்னூட்டமும் நீங்க தந்த பதிலும் நல்லா இருந்தது. எதையும் 10 நிமிடத்தில் மறந்து விடுவது பல விஷயங்களில் நன்மையே.

  ReplyDelete
  Replies
  1. உங்க கருத்துக்கு தேங்க்ஸ்... அந்த பழக்கம் என் அம்மா கிட்ட இருந்து வந்தது. ஆனாலும் அம்மா, வீட்ல செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது ஆகிட்டா ரெண்டு நாள் சாப்பிட மாட்டாங்க. அவங்களோட ஆத்மாவுக்காக பிரார்த்தனை பண்ணிகிட்டே இருப்பாங்க, இது எனக்கு ரொம்பவே விசித்திரமா இருந்தாலும், நானும் அம்மா கூடவே அமைதியா இருந்து பழகியிருக்கேன்

   Delete
 4. உங்க கனவுகளில் காஞ்சுரிங் படமே வந்து போகுது போலிருக்கு.. ரொம்ப இன்டரெஸ்டிங்கா இருந்தது. ஆவி தூங்குற நேரமே குறைவுன்றதால கனவுகள் வருவது அபூர்வம்.. அப்படியே வந்தாலும் நான் கிரிக்கெட் விளையாடி வேர்ல்ட் ரெக்கார்ட் படைக்கிற மாதிரியோ, சினிமாவில் நடிச்சு அவார்ட் வாங்குற மாதிர்யோ தான் வரும்.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்க்ஸ், இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. ஹஹா கண்டிப்பா, என்னை பொறுத்தவரை, இலட்சியங்கள் எப்பவும் பகல் கனவா போய்ட கூடாதுன்னு நினைக்குரவ நான். அதனால தான் அத எல்லாம் ப்ரீ-ப்ளானா தனி இடம் குடுத்து ஒதுக்கி வச்சுடுறேன். மிதமிஞ்சி நான் பெரிய ஆளா வர்ற மாதிரி கனவெல்லாம் காணுறதே இல்ல... இன்னும் கடந்து போக வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னே நினச்சுட்டு போய்ட்டே இருப்பேன். உங்களுக்கு தெரியுமா, இதுவரை ஒன்பது national seminars, நாலு இன்டர்நேஷனல் seminars ல என்னோட works விளக்கி சொல்லியிருக்கேன். அதுல பரிசும் வாங்கியிருக்கேன். ஆனா இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்ஸ்...

   இந்த காஞ்சுரிங் கனவுகள் இப்போ எனக்கு ரொம்ப நல்ல பிரெண்ட் மாதிரி ஆகி போச்சு. சில நேரங்கள்ல அத ஒரு வகயான ரசனையோடவே பாக்குறேன் :)

   Delete
 5. எனக்கு கூட கனவு அதிகம் வராது டா.. வரும் கனவுகள் பலிக்கும்... அம்மா இறப்பதற்கு ரெண்டு நாள் முன் அப்பா என் கனவில் வந்து அம்மா கிட்ட பேசுவது போல... நான் மட்டும் இங்க தனியா ரொம்ப கஷ்ட படுறேன் .. பிள்ளைகள் கடமை எல்லாம் தான் நல்ல படியாக முடிச்சாச்சு இல்லையா ... நீயும் என் கூட வந்துவிடு மா என்று அப்பா அம்மா கிட்ட சொல்வது போல... அடுத்த ரெண்டாவது நாள் அம்மா உயிரோடு இல்ல.... :(

  ReplyDelete
  Replies
  1. அம்மா... என்ன சொல்றதுன்னே தெரியல... எனக்கு இப்படி எல்லாம் கனவு வருதே, ஆனா அம்மா போறேன்னு ஒரு வார்த்த கூட சொல்லாம போய்ட்டா... ஹஹா அதுக்காக அவள தேடி புடிச்சு கேள்வியா கேக்க முடியும்? ஆல் ஈஸ் வெல் அம்மா

   Delete
 6. அது சரி உங்க பிளாக் நேம் இப்படி வச்சிருக்கீங்களே நியாயமா? ஒவ்வொரு முறை படிக்கிறப்பவும் உங்களை மரியாதை இல்லாம கூப்பிடற மாதிரி இருக்கு.. ;-) (#ஜஸ்ட் கிட்டிங்)

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்... blog name என்னில் உணர்ந்தவைனு தானே இருக்கு? அப்புறம், மரியாதை மனசுல தானே இருக்கணும், என்ன நான் சொல்றது?

   நான் கொஞ்சம் மக்கு, விளக்கமா சொல்லுங்களேன், ஏன் அப்படி தோனுதுன்னு?

   Delete
  2. gayathrid.blogspot.com ன்னு இருக்கிறதை சொன்னேன்.. ;-)

   Delete
  3. ஹஹா ஆமா, அது என்னோட இனிசியல் கூட இல்ல, ஆனா blog ஆரம்பிக்கும் போது இந்த option தான் காட்டிச்சு.. நாம தான் கத்துக்குட்டி ஆச்சே, எதோ ஒண்ணுன்னு விட்டுட்டேன். ஹஹா இப்படி ஒண்ணு இருக்கோ? ஆனா இனி மாத்த முடியாதுல

   Delete
  4. சும்மா விளையாட்டுக்கு சொன்னேங்க.. இதுவே நல்லா தான் இருக்கு.. :)

   Delete
  5. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ்... நாம எதையும் சீரியஸா எடுத்துக்குறதும் இல்லையே

   Delete
 7. வணக்கம்
  கனவு கண்ட விதத்தை பதிவாக வெளியிட்ட விதம் அருமை தொடருகிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ்.... தொடருங்க தொடருங்க, இன்னும் தொல்லை அனுபவிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு

   Delete
 8. நீங்கள் கனவு குறித்த ஒரு புரிதலை தேடுவதால் சொல்கிறேன்...கனவுகள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை கொண்டதாக (perfect design) அமைந்திருந்தால் அது உங்களின் ஆசைகளை , விருப்பத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கும். அந்த கனவின் பின்புலத்தில் இயங்கும் செய்திகளை ஆராய்ந்து பாருங்கள்....உங்களின் உள்மன மற்றும் வெளிப்புற விழிப்புணர்வு சார்ந்ததாகவும் இருக்கலாம்.(internal or external arousal factor)... நம் தூக்கத்தின் டெல்டா ஸ்டேஜ்-ல் காண்பதே உண்மையில் கனவு...மற்ற ஸ்டேஜ்-களில் காணப்படும் கனவுகளில் உறக்க நிலையில் உலகத்தோடு தொடர்பில் தான் இருந்திருப்போம்... அது போன்றதொரு கனவுதான் நீங்கள் சிறு வயதில் கண்டதெல்லாம்.... அதுவே சிக்கலான ,ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்த முடியாத கனவானால் அது உங்களின் நிறைவேறாத ஆழ்மன ஆசையை வெளிப்படுத்துவதாகும்...மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமானால் Interpretation of dreams-sigmund Freaud படித்துப் பாருங்கள். நானும் இன்னம் முழுமையாகப் படிக்கவில்லை...

  ReplyDelete
  Replies
  1. ஹஹா டைம் கிடைக்கும் போது கண்டிப்பா படிக்குறேன். விளக்கம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்

   Delete
 9. உங்களது கனவுகள் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன! கனவை பகிர்ந்து மனம் லேசானதிற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்துக்கு தாங்க்ஸ்.... கனவுகள் வித்யாசமா இருந்தா தானே த்ரில்லா இருக்கு

   Delete
 10. super !

  ungalin kanavukalum ..sambavangalum apptiye en kan munne vanthu pokuthu..!..

  (naanum sinna vasasil oru mosamana kanavu kanten..athu ennai palavina makkiruchu...
  2days fever la irunthen !


  ReplyDelete
  Replies
  1. எப்பவுமே கனவு கண்டா நாம பயத்துல பலவீனமாகிடுறோம், இதயே பாசிடிவ்வா எடுத்து, எது நடந்தாலும் எதிர்கொள்வோம்னு இருந்தா அப்புறம் பயம் போய்டும்

   Delete
 11. kanavukkum nijatuukkum ..kantippa thotarpirukku

  nallathe kanavukaanpom nallathe natakkatum :)

  ReplyDelete
  Replies
  1. கனவு காணுறது நம்ம கைல இருக்குனா, அப்புறம் கெட்ட கனவுகளே வராதே... சரி எப்படியோ நல்லாயிருப்போம் நல்லாயிருப்போம், எல்லோரும் நல்லாயிருப்போம்

   Delete
 12. ungaloda kanavukala padikkumpothu kan mun vanthu selkirathu akka. anal enkku nampikkai ellam illa, kanavukkum athu nijathil nadappathukkellam thodarpu irukkathu...

  ezhil madam avarkal sonathu pola Sigmund Freud avar kanavukalai patri pala visayangal soli irukkurar.. neram iruppin padiyungal puriyum..

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா படிக்குறேன் மகேஷ். சில விஷயங்கள் நமக்கு நம்பிக்கை இல்லனாலும் சில நேரங்கள்ல தொடர்புடையதாகவே தோணும்... அது ஏன், எதனாலன்னு சொல்லத் தெரியாது. சில நாட்கள்ல அப்பா வீட்டுக்கு வர ரொம்ப லேட்டானா இறந்து போன மாமா வந்து அப்பா எங்க இருக்கார்னு ரொம்ப சரியா சொல்லுவாங்கன்னு அம்மா சொல்லுவாங்க, ஆனா அப்போ அம்மா தூங்கிட்டு இருக்க மாட்டாங்களாம். இதெல்லாம் உண்மையான்னு ஆராயாம அப்பா வந்ததும் கேட்டா மாமா சொன்னது ரொம்ப சரியா இருக்குமாம். அம்மா இத பெருசு படுத்திக்க மாட்டாங்க, ஆனா அப்புறம் வர்ற நாட்கள்ல அப்பா பத்தி கவலை படாம நிம்மதியா தூங்குவாங்களாம்..

   Delete
 13. ரெண்டு மூணு நாளா மனசுல எதோ ஒரு பாரம். அத எப்படி விவரிக்கன்னு கூட தெரியல. இன்னும் ஒண்ணரை வருசத்துல எப்படியாவது என்னோட கனவை நனவாக்கிட ரொம்ப ஆசை. இதுக்காக பெங்களூர் போகலாம்னு பாத்தா ஏனோ மனசு இங்க இருந்து கிளம்பவே மாட்டேங்குது. எதுவுமே வேணாம், இப்படியே இருந்துடலாம்னு தீவிரமா ஒரு மனசு சொல்லுது. வாழ்க்கைல அப்படி என்ன பெருசா சாதிச்சுட போறோம்னு ஒரு விதமான எண்ணம் மனசுக்குள்ள அலக்கழிச்சுட்டே இருக்கு.///

  phd panuratha tana solluringa akka.
  ippo poka pidikkattiyum pinnanlil kandippa feel pannuvinga.. avalvu thuram vantha ninga mudichitunga..


  kandippa poka mudiyatha sulalna ok paaravala.
  but venumne manasu solluthu , thona maatingthunu vayppa vidavendam. pinnalil mudikkalinu varutham varalam.

  ReplyDelete
  Replies
  1. இது எதோ விரக்தில வந்த எண்ணம் இல்ல மகேஷ், மருத்துவம் மேல எனக்கு இருக்குற புரிந்துனர்தல்னு சொல்லலாம். இங்க எல்லோரும் நோயாளியை குணப்படுத்தணும்ங்குறது முக்கிய லட்சியமா இருக்குறதில்ல, எவ்வளவு காசு தேறும்னு தான் குறியா இருக்காங்க... ஆனாலும் நான் தொடர்வேன்... நன்றி மகேஷ், உன்னோட புரிந்துனர்தலுக்கு

   Delete
 14. கனவு பற்றி பகிர்ந்த விதம் அருமை சகோதரி. கனவுகள் பற்றிய ஒரு பாடமே உளவியலில் இருக்கிறது. நம் எண்ண ஓட்டங்களே கனவாக வெளிவருகிறது. தூங்குவதற்கு முன் அன்றைய நிகழ்வுகளை அசை போட்டு விட்டு தூங்கச் சென்றால் பெரும்பாலும் கனவுகள் தவிர்க்கப்படும். பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. உங்களோட கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

   Delete
 15. ஒரு டவுட்டு, கனவு கலர் கலராக வருமா? இல்ல பிளாக்&ஒயிட்டுல வருமா?

  ReplyDelete
  Replies
  1. அடடா... இத நான் கவனிக்காமலே விட்டுட்டேனே, அடுத்த தடவ கவனிக்கலாம்னாலும் தூங்கியிருப்பேன். ஒண்ணும் பண்ண முடியாது

   Delete
 16. நடக்கட்டும்! நடக்கட்டும்!

  ReplyDelete
  Replies
  1. நான் தூக்கத்துல எல்லாம் நடக்க மாட்டேன். கனவுல வேணா யாராவது வந்து நடப்பாங்க

   Delete
 17. hello madam, I am Amuthavel.R. Today I see your "kanavu palikkuma ?" . I wish to share about my dreams and my Star Vijay TV shows which are held on around 2008. I participate Ippadikku Rose, Nadanthathu Enna and Neeya? Naana?. All the above I discusses about my dreams. I wish, you must see my Ippadikku Rose TV show on YouTube - amuthavel part 1 to part 6, then you can move a step to your dream research and also myself the same. my face book amuthavel.r and my email - amuthavel.r@gmail.com. Please, share your knowledge about the Dreams which will use to our future medical applications. Awaiting your notes. Thanks madam.

  ReplyDelete
  Replies
  1. உங்களோட நிகழ்ச்சி லிங்க் கிடச்சா நல்லாயிருக்கும். உங்க பேஸ்புக் ஐடி தேடிப் பாத்தேன், கிடைக்கல. உங்களுக்கு ஈமெயில் அனுப்புறேன், நன்றி

   Delete
 18. hello madam, I am Amuthavel.R. Today I see your "kanavu palikkuma ?" . I wish to share about my dreams and my Star Vijay TV shows which are held on around 2008. I participate Ippadikku Rose, Nadanthathu Enna and Neeya? Naana?. All the above I discusses about my dreams. I wish, you must see my Ippadikku Rose TV show on YouTube - amuthavel part 1 to part 6, then you can move a step to your dream research and also myself the same. my face book amuthavel.r and my email - amuthavel.r@gmail.com. Please, share your knowledge about the Dreams which will use to our future medical applications. Awaiting your notes. Thanks madam.

  ReplyDelete