Monday 2 December 2013

மொக்கையிலும் மொக்க, படு மொக்க
இன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோம், அப்படி என்ன தான் பண்ணிட்டு இருந்துருக்கோம்னு பாக்கலாம்னு தோணிச்சு. பாட்டிங்க மட்டும் தான் நாங்க எல்லாம் அந்த காலத்துல...... ன்னு ஆரம்பிக்க முடியுமா? நாங்களும் ஆரம்பிப்போம்ல..... 

ஆரம்பத்துல பேஸ் புக் வந்தப்போ எல்லாரும் நிறைய ஜோக்ஸ் தான் சொல்லிட்டு இருந்தாங்க. நானும் அத பாத்துட்டு கவுன்ட்டர் குடுத்துட்டு இருந்தேன். இருந்தாலும் சொந்தமா எங்க ஜோக் சொல்றது? அதுக்கு தான் இருந்துச்சு பிரெண்ட்ஸோட எஸ்.எம்.எஸ். அத எல்லாம் வச்சு தான் ஒரு மூணு மாசம் நானும் பேஸ் புக்ல மொக்க போட்டுட்டு இருந்தேன்.


அப்படி என்ன தான் மொக்க போட்ருக்கேன்னு கொஞ்சம் பாப்பமா?


மொக்க தத்துவம்:

          1. பிறப்பு ஒரு முறை, 
              இறப்பு ஒரு முறை,
              காதல் ஒரு முறை,
              வாழ்க்கை ஒரு முறை
              ஆனால்
              சாப்பாடு மட்டும் தினமும் மூன்று முறை
              அதனால் கூச்சப்படாமல் சாப்டுங்க, ஆரோக்கியமா இருங்க 

          2. விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல,
              நம்மால் முடியும் வரை தூங்குவதுதான் தூக்கம்
              அதனால் நல்லா தூங்குங்க.

          3. யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்,
              ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்
             அதற்கு பதில்.
             அவர்களின் எலும்பை உடையுங்கள், அது 206 உள்ளது.....

சீரியஸ் தத்துவம்:

          1. நினைவுகளை உனக்குள் சுமப்பது வெற்றி அல்ல,
             உன்னுடைய நினைவுகளை அடுத்தவரை 
             சுமக்க வைப்பதுதான் வெற்றி

          2. உங்கள் அன்புக்குரியவருக்கு பரிசளிக்க நினைத்தால்,
              உங்கள் விலை மதிப்பில்லா நேரத்தை பரிசாக அளியுங்கள்...

          3. இமைகள் திறந்து நேசிப்பதை விட இதயம் திறந்து நேசித்து பார்,
              உன் உலகம் உனக்காய் காத்திருக்கும்

          4. குளம் வற்றியதும் பறந்து போகிற கொக்கு தான் காதல்
              ஆனால்
              குளம் வற்றினாலும் குளத்தோடு சேர்ந்து இறந்து போகிற 
              மீன் தான் நட்பு

          5. நீங்கள் காயப்படுத்திய மனிதரிடம் மன்னிப்பு கேட்க 
             தேவை இல்லை, ஏன் என்றால் உங்களை நேசிக்கும் 
             மனிதரையே நீங்கள் காயப்படுத்த முடியும், அவர்களோ 
            உங்களிடத்தில் மன்னிப்பை விட அதிக அன்பை தான் 
            எதிர்பார்ப்பார்கள்...

          6. நண்பன்!!! எதிரிகளின் கூட்டத்தில் உன் கைப் பிடித்து நிற்பவன்
              நீ தவறு செய்யும் போது உன் முதுகில் அறைபவன்
             உனக்காக எல்லாம் செய்து விட்டு நன்றியை எதிர்பார்காதவன்
             உன்னை புன்னகைக்க வைப்பவன்
             உன் கண்ணீரை துடைத்து ஐ மிஸ் யு சொல்பவன்
             உன் நன்றியை மறுத்து போடா லூசு என்பவன்
             நண்பேண்டா............


இப்போ கேள்வி பதில் நேரம்:

          1. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?

              அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல 
              அதனால போடுறதில்லை.!

          
          2. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?

              ஏன்னா அது வாய் சைசுக்கு இன்னும் பிரஷ் கண்டுபுடிக்கலயாம்


          3. லைப்ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும், 
              தலைல ஒண்ணுமே இல்லனா?

              பளபளன்னு க்ளார் அடிக்கும்


டவுட்டோ டவுட்: 

          1. இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி 
              தமிழ்ல ஏன் இல்ல ..?

          2. கொசுவுக்கு கொம்பு இருக்கா .?
     
          3. இருமல் வந்தால் இருமுவிங்க, 
              காய்ச்சல் வந்தால் காய்ச்சுவிங்களா?

          4. நாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழே விழுதுல,
             அப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..?

          5. மஞ்சத்தண்ணிக்கும் பச்சத்தண்ணிக்கும் என்ன வித்தியாசம்?

          6. கால்ல முள் குத்தாம இருக்குறதுக்காக செருப்பு போடுறோம், 
            அப்போ வாயில மீன் முள்ளு குத்தாம இருக்க என்ன 
            போடுறோம்?

          7. கிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும்.
             ஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறுமா?


இதெல்லாம் கூட பரவால, எதோ ஒரு எக்ஸாம் ஹால்ல யாரோ எழுதின கேள்வி பதில் அப்போ ரொம்ப பேமஸா வலம் வந்துட்டு இருந்துச்சு. அது என்னன்னும் கொஞ்சம் பாத்ருவோமே

கேள்வி 1:

நாயக்கர்கள் – பெயர் காரணம் கூறுக :

          Point no:1
          நாயக்கர்களுக்கு நாய்கள் பிடிக்கும் என்பதால் நாயக்கர்கள் என்று 
          பெயர் வந்தது என்று சிலர் கூறுகிறார்கள்.

          Point no 2: 
          நாயக்கர்களின் மண்டபங்களில் நாய் போன்ற சிற்பங்கள்                  
          வைத்திருப்பதால் நாயக்கர்கள் என்று பெயர் வந்தது என்று 
          சிலர் கூறுகின்றனர்.

          Point no 3: நாயக்கர் மஹால் மதுரையில் உள்ளது. அது மிகவும் 
          அழகாக இருக்கும். அந்த மண்டபத்தில் தான் இம்சை அரசன் 
          படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதை என் சித்தி பையன் 
          சென்று பார்த்துள்ளான். அதை பாண்டியர்களுக்கு கீழே உள்ள 
          கொத்தனார் நிருவியுள்ளமையால் பாண்டியர்களுக்கு அந்த 
          பெருமை வந்தது. உண்மையில் அந்த கொத்தனார் தான் மிகவும்   
         பாடுபட்டார். எனவே அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

கேள்வி 2:

கோவில்களின் சிறப்புகளை கூறுக :

          “ஜி” படத்தில் எங்கள் தல அஜித் ஒரு பாடலை பாடியுள்ளார்
          “டிங் டாங் கோவில் மணி கோயில் மணி நான் கேட்டேன்”
          இப்பாடலடி இவ்வளவு தான் எனக்கு தெரியும். அரையாண்டு 
          தேர்வில் கண்டிப்பாக இந்த பாடலை முழுமையாக எழுதி விடுவேன்                     என்று நம்பிக்கை தெரிவித்து கொள்கிறேன்.

கடைசியா, 


மொக்கையோ மொக்கை:
          1. கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் 
              “காக்கையாக மாறினால்”!

          2. பரம்பரைக்கு உக்காந்து சாப்டர அளவு சொத்து
              இருந்தாலும் பாஸ்ட் பூட் கடைல நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்

          3. நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும் அதால கால் மேல 
              கால் போட்டு உட்கார முடியாது

          4. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்சினியர் ஆகலாம், ஆனா 
              பெரசிடேன்சி காலேஜ்ல படிச்சிட்டு பிரசிடென்ட் ஆக முடியாது 

இப்போதைக்கு இவ்வளவு தாங்க.... இதெல்லாம் ரெண்டு மாச பதிவு... மீதி அப்பப்போ வந்து சொல்லிட்டு போறேன்...25 comments:

 1. டவுட்டோ டவுட்: உங்களுக்கு மட்டும் எப்படி டவுட்டோ டவுட்...?

  ReplyDelete
  Replies
  1. ஹஹா அதென்னமோ தானா வருது அண்ணா அவ்வ்வ்வ்

   Delete
 2. கண்டிப்பா நான் பாக்குறேன் அண்ணா

  ReplyDelete
 3. சிரிக்க வைத்த ஜோக்குகள் !Good!

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ் :)

   Delete
 4. நிழலாடும் நிஜங்கள்...நேர்த்தியான கோர்ப்பு... மொக்கையும் மொட்டாக மலரவைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்...

  தொடரட்டும்....

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ்....

   Delete
 5. கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம்
  “காக்கையாக மாறினால்”!
  >>
  குருவி, குயில், புறாவாய் மாறினா கரண்ட் கம்பில உக்கார முடியாதா!?

  ReplyDelete
  Replies
  1. இது ஒரு நல்ல கேள்வி, நாளைக்கு ஒரு பொதுக்கூட்டம் போட்டு டிஸ்கஸ் பண்ணி முடிவெடுப்போம்

   Delete
 6. ஆர்யபட்டா என்றால் என்ன?
  இது கருணாநிதியால் ஏழைகளுக்கு கொடுக்கப்பட் ஒரு பட்டா

  இப்படி ஒரு பதிலை ஒரு TNPSC பரிட்சையில் ஒருவர் எழுதியதாக படித்தேன்.
  +1

  ReplyDelete
  Replies
  1. இப்படியெல்லாம் கூடவா எழுதுவாங்க? அவ்வவ்வ்வ்வ்

   ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்

   Delete
 7. ellam super akka. kurippa starting la vantha antha மொக்க தத்துவம் and சீரியஸ் தத்துவம் rompa nalla irunthichu.

  ReplyDelete
 8. One day pothathu unga entha topic sh arumai !! Really enjoyed it

  ReplyDelete
 9. Enama joke soli mokka potu enjoy pannierukeenga !! Super I likes it

  ReplyDelete
  Replies
  1. எத்தினி தடவ? ரொம்ப வாசிச்சுட்டீங்க போல

   Delete
 10. எப்புடீம்மா இப்படீல்லாம்...! என்னா சிந்தனை...! என்னா அறிவு! படிச்சதுல அசந்துபோய் லேசா மயக்கமே வந்துருச்சு!

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ் அண்ணா, எல்லாமே எஸ்,எம்,எஸ் மகிமை, வேறென்ன சொல்ல

   Delete
 11. Replies
  1. ரசிச்சதுக்கும், ஓட்டு போட்டதுக்கும் தேங்க்ஸ்

   Delete
 12. நீங்கள் போட்ட மொக்கைகளில் எனக்குப் பிடித்த மொக்கை 'நாய்க்கு நாலு கால் இருந்தாலும் கால் மேல் கால் போட்டு தகார முடியாது' சிரித்து சிரித்து வயிற்றுவலியே வந்துவிட்டது.
  வலைச்சர அறிமுகத்திற்கு - அதுவும் பால கணேஷ் மோதிரக்கையால் குட்டுப்பட்டதற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஹஹா உங்க வாழ்த்துக்கு நன்றி

   Delete
 13. பாலகனேஷ் சார் உங்களைப் பற்றி சரியாத்தான் சொல்லி இருக்கார் ,மொக்கை கண்டுபிடிப்பில் g d நாயுடுவை மிஞ்சிட்டீங்க GD!
  த .ம 5

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வவ்வ்வ் தேங்க்ஸ்

   Delete