Friday, 29 November 2013

மழைக்காலம்ஹாய் ஹாய் ஹாய் ஹாய்.... எல்லாருக்கும் மணக்க மணக்க ஒரு இன்ஸ்டன்ட் காப்பி வணக்கம். 

கொஞ்சநாளாவே இங்க பயங்கர மழை பெஞ்சுகிட்டு இருக்கு. எப்பவும் ஒரு குளிர், அப்படியே போர்வைய போர்த்திகிட்டா ஒரு இதம், சலசலன்னு கேக்குற மழை சத்தம்ன்னு இப்போதைய நாட்கள் ரொம்ப ரொம்ப ரம்மியமா இருக்கு. 

இந்த மாதிரியான மழைக்காலங்கள்ல கைல சுட சுட பில்டர் காபியோட, ஜன்னல் பக்கமா திரைசீலைய ஒதுக்கி வச்சுக்கிட்டு மேல இருந்து விழுற மழைத்துளியை ரசிச்சுகிட்டே கொஞ்சம் கொஞ்சமா காபிய ஊதி ஊதி குடிக்குறதும் தனி சுகம் தான். 

அதுவே மழைல நனஞ்சுகிட்டே பச்சை பசேல்ன்னு இருக்குற இயற்கைய ரசிக்குற அழகு இருக்கே, வேற எதுவும் அதுக்கு ஈடு கிடையாது. 

புல்வெளிகள பார்க்கும் போது எப்பவுமே குளிச்சுட்டு வந்த மாதிரி ரொம்ப பிரெஷ்ஷா இருக்கும், அத பாத்து நம்மோட மனசுக்குள்ளயும் ஒரு புத்துணர்ச்சி வந்துடுது. குட்டி குட்டியா புற்கள்ல கலர் கலரா பூ பூத்துருக்கும் பாருங்க, அத ரசிக்க தனியா நமக்கு கேமரா கண்ணு தான் வேணும். அத எல்லாம் இன்னும் நல்லா ரசிக்கணும்ன்னா நான் ஒரு ரகசியம் சொல்லித்தரேன், காத கிட்ட கொண்டு வாங்க. அதாவது, அந்த புல் தரைல படுத்துகிட்டு அந்த பூக்கள க்ளோஸ் அப்ல பாத்தோம்னு வைங்க, ஹைய்யோ எவ்வளவு அழகா இருக்கும். ஒவ்வொரு புல்லும், பூக்களோட தனித்தனியா பாக்க அவ்வளவு அழகா இருக்கும். 

பச்சை கிளி, வெட்டுக்கிளி, ராத்திரியில மின்னுற மின்மினி பூச்சி இதெல்லாமே தனி அழகு தான். அதுவும் வெட்டுக்கிளி பச்சை கலருல இருந்தா அத நாங்க பச்சை கிளின்னு சொல்லுவோம். மழை காலங்கள்ல நிறைய வீட்டுக்குள்ள வரும். 

இன்னொரு அழகான விஷயம் கூட இருக்கு, அது தான் எறும்பு புற்று கட்டுறது. மழைல நனைஞ்சு எறும்பு கூடுங்க உள்ள தண்ணி போய்டும். கொஞ்சம் வெயில் அடிச்ச உடனே, உயிரோட இருக்குற எறும்புங்க எல்லாம் சுறுசுறுப்பா புற்று கட்ட ஆரம்பிச்சுடும். ஈர மண்ணை குட்டி குட்டி உருண்டையா இருட்டி, புற்று உள்ள இருந்து வெளில கொண்டு வந்து அதுங்க தள்ளுற அழகே அழகு. அப்படியே உக்காந்து ரசிக்கலாம். 

கொஞ்சம் மழை விட்ட நேரத்துல வயக்காடு வழியா இறங்கி நடந்து பாருங்க, சொர்க்கம் தான். அப்படியே ஏதாவது மரங்கள் கீழ போய் நிக்கும் போது காற்றுல கிளைகள் அசைஞ்சு, இலைங்க மேல இருக்குற மழைத் துளிங்க நம்ம மேல படும் போது வரும் சிலிர்ப்பு இருக்கே அட அட அட.... 

நேத்து பெய்த மழைல இன்னிக்கி மொளச்ச காளான்ன்னு புதுசா யாராவது சேட்டை பண்ணினா அவங்கள பாத்து சொல்லுவாங்க. ஆனா இந்த மழைக்காலங்கள்ல அங்கங்கே திடீர் திடீர்னு முளைச்சு வர்ற காளான் கூட அழகு தான். இந்த காளான்ல கூட எத்தனையோ வெரைட்டீஸ் இருக்கு. இப்போ அதோட பெயர் எல்லாம் எனக்கு மறந்து போச்சு. ஆனாலும், மண்ணுல குட்டியூண்டு வளர்ந்து நிக்குற காளான்ல இருந்து, மரத்துல பெருசா வளர்ந்து நிக்குற காளான் வரை எல்லாமே அழகு தான். பொதுவா, காளான் வெள்ளை கலர்ல தான் இருக்கும். சிலநேரங்கள்ல மஞ்சள், நீலம்னு கலர் கலராவும் காளான் இருக்கும். ஆனா இதெல்லாம் விசக்காளான்கள். ஸ்கூல் படிக்குற வரைக்கும் இந்த மாதிரி நேரங்கள்ல முட்டைக் காளான தேடி தேடி போய் பிடிங்கிகிட்டு வருவோம். அத மேல் தோல் கொஞ்சம் சீவிட்டு, நாலா கத்தி வச்சு கீறி, மிளகா தூளும், உப்பும் வச்சு, வாழை இலைல பொதிஞ்சு வச்சு, சுள்ளி வச்சு நெருப்பு மூட்டி அதுல இந்த காளான சுட்டு எடுத்து சாப்பிடுற டேஸ்ட் இருக்கே, எந்த நான்-வெஜ்ஜூம் பக்கத்துல வர முடியாது. 

அது மட்டுமா, அங்கங்கே ரெஸ்ட் எடுத்துட்டு இருக்குற குருவிங்க, காக்கா, கோழி, கொக்கு மைனான்னு எல்லாமே மழைல நனைஞ்சு போய் அதுகளோட இறகுகள நீவி விட்டுட்டு இருக்கும். கொஞ்சம் அமைதியாவே பறவைகளோட சத்தம் இருந்தாலும், அதுவும் தனி அழகா தான் இருக்கும். 

ஆனா ஒண்ணு, இந்த இடியும் மின்னலும் கூட அழகா தான் இருக்கு, அது எங்கயாவது தாக்குற வரைக்கும். பக்கத்து தோப்பு ஒண்ணுல ஒரு தென்னை மரம் மேல இடி தாக்கி பாவம், மரம் பட்டு போச்சு. ஆங்காங்கே மின் கம்பத்துல இருக்குற தெருவிளக்குங்க வெடிச்சு சிதறுது. ஆனா இத எல்லாம் பாத்தா எப்படி நிலத்தடி நீர் உயரும்? 

முன்னாடி எல்லாம் ஓடைகள் வழியா மழைத் தண்ணி எல்லாம் ஆத்துலயோ, குளத்துலயோ போய் சேரும். அங்கயே தண்ணி தேங்கி, கொஞ்சம் கொஞ்சமா நிலத்துக்குள்ள போய்டும். எவ்வளவு வெயில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவு மண்ண தோண்டினா, மண் ஈரமா, ஜில்லுனு இருக்குறத பாக்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். ஆனா இப்போ எல்லாம் சிட்டீஸ்ல மழை வந்தாலே கஷ்டம் தான். மழைநீர் தேங்கவும் இடமில்லாம, சரியா போகவும் வழியில்லாம மழை இல்லனா குடிக்க கூட நிலத்தடி நீர் கிடைக்காம மக்கள் பாவம் தான், ஆனா இதுக்கெல்லாம் காரணம், சரியா திட்டமிடாம இருக்குறது தானே. எத்தன பேர் பொறுப்போட மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தியிருக்கீங்க?

எப்போ நான் வெளில போனாலும் மழைல மாட்டிகிட்டா எனக்கு பெரிய அவஸ்தை தான், காரணம் என்னோட உடல்நிலை அப்படி. உடனே சளி புடிச்சுக்கும், அப்புறம் காய்ச்சல், இருமல்ன்னு ஒரு ரெண்டு மாசத்துக்காவது படுத்தி எடுத்துடும். ஆனாலும் நான் மழைல மாட்டிகிட்டா, மழை நல்லா பெய்யட்டும், மண் குளிரட்டும், நிலத்தடி நீர் உயரட்டும்ன்னு தான் வேண்டிப்பேன். தனிநபர் அவஸ்தைய [பாத்தா, இந்த உலகத்துல இருக்குற மற்ற ஜீவராசிகளோட சந்தோசத்த பாக்க முடியாதே. பல பேர் சந்தோசப்படுவாங்கனா, யாராவது கொஞ்சம் அவஸ்தை பட்டு தானே ஆகணும், அதுதானே இயற்கை விதி. 

இப்போ ராத்திரியில சில்வண்டுகளோட ரீங்காரம் அதிகமா இருக்கு. முன்னாடியெல்லாம் தவளைகள் சத்தமும் அதிகமா இருக்கும். அது மட்டுமில்ல, மழைத்தண்ணி விழுற சத்தம் எல்லாம் சேர்த்து ஒரு சங்கீத கச்சேரிய நியாபகப்படுத்துது. ஆனா ஏனோ இப்போ தவளைகள் சத்தத்த கேக்க முடியல. இப்போ கொஞ்சம் கவலையா இருக்கு, ஒருவேளை தவளைகள் இனம் அருகிட்டு வருதோன்னு. கண்டிப்பா ஒரு நாள் இந்த தவளைங்க பத்தி ஒரு தனிப் பதிவு எழுதணும். 

உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்றேன், காலைல எழுந்த உடனே முடிவு பண்ணியிருந்தேன், இன்னிக்கி கொஞ்சம் ஜாலியா எழுதணும்னு. ஜாலியா எழுதனும்னா எப்படி? 

சின்ன வயசுல இருந்து இப்பவரைக்கும் நாம எவ்வளவோ சேட்டைகள் பண்ணியிருப்போம். அத இன்ன இன்னன்னு வகைப்பிரிச்சு பாத்தோம்னா அது ஒரு பெரிய லிஸ்ட்டா இருக்கும். அதனால தான் மழைக்காலங்கள்ல நான் பண்ணின சேட்டைகள்ல கொஞ்சமே கொஞ்சம் இங்க சொல்லலாம்னு நினச்சேன். ஆனா, மழைய பத்தி நினச்ச உடனே இவ்வளவு விஷயம் கடகடன்னு கொட்டிடுச்சா, அப்போ என்னோட சேட்டைகள இன்னொரு நாள் சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க, எல்லாமே ஜாலியான அனுபவங்கள் தான். அது என்னன்னு தெரிஞ்சுக்கணும்னா கண்டிப்பா நான் எழுதுற வரை காத்திருங்க. என்ன காத்திருப்பீங்க தானே..... நான் போய் மழைய ரசிச்சுட்டு வரேன்....

18 comments:

 1. Replies
  1. ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்

   Delete
 2. ம்ம்ம், சின்ன வயசுல காளான் பறிச்ச ஞாபகம் வந்திருச்சு... ரசிக்கவைக்கும் எழுத்து நடை...

  ReplyDelete
 3. அடடா...! என்னவொரு ரசனை...

  ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா, ரசனைக்கும், வாழ்த்துக்கும்

   Delete
 4. வாவ்!! ஆவி அண்ணன் மாதிரியே நீயும் நல்லா எழுதறே தங்கச்சி!! ;-)

  ReplyDelete
  Replies
  1. ஹஹா தேங்க்ஸ் அண்ணே...

   Delete
 5. த.ம. 100 ன்னு போட ஆசைதான்.. போட்டது ஒரு ஒட்டு தானே.. தவிர நாம பாட்ஷாவும் கிடையாது. ஏதோ என்னால முடிஞ்சது.. :)

  ReplyDelete
  Replies
  1. ஏண்ணே.... இந்த கள்ள ஓட்டு எல்லாம் எதுவும் போட முடியாதா?

   ஹஹா... ஓட்டு எல்லாம் பெருசு இல்ல அண்ணா... அன்பு தான் பெருசு.... உண்மையா சொல்ல போனா போகுற போக்குல எழுதிட்டு போற ஆளு நானு.... பாக்கலாம், எழுதற வரை எழுத வேண்டியது தான்

   Delete
 6. வணக்கம்

  கற்பனை வளம்மிக்கதாக எழுதியுள்ளிர்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஹஹா.... இது கற்பனை வளம் எல்லாம் இல்ல, எல்லாமே அனுபவிச்சது தான்... வாழ்த்துக்கு தேங்க்ஸ்

   Delete
 7. மழைகால நினைவுகளை தட்டி எழுப்பிடிங்க. . .

  ReplyDelete
 8. இயற்கை என்றுமே அழகுதான்! மழைக்கால நினைவுகள் அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆமா அண்ணா... நன்றி சொன்னதுக்கு தேங்க்ஸ்

   Delete
 9. மழைல நனைந்த உணர்வு நன்றி.

  ReplyDelete
 10. super akka, post. padikkum pothu chinna vayasula nanum malaiyil nanaintha anupavam ellam niyapakam varukirathu. ippo ellam varudam muluvathum veyil kalam pola tan irukku akka.

  ReplyDelete