Thursday 21 November 2013

கோர்க்கத்துடிக்கும் ஆசைகள்...!

சுகமும் துக்கமும்
கலந்து விரைகின்ற மேகக் கூட்டத்திற்கிடையில்
துருவ நட்சத்திரமாய் நீ...!

அர்த்தமற்றதாய் கழிந்து செல்லும் நாட்காட்டியில்
உன் நினைவுகள் மட்டும்
ஏதோ ஒரு அர்த்தத்தை
கற்பித்துக் கொண்டிருக்கிறது...!

காற்றின் மெல்லிய உணர்வுகளோடு
உன் வாசம் தாங்கிய நினைவுகள்
என்னில் கண்ணாமூச்சி ஆடி
தோற்றுபோய் வெளிப்படுகிறது...!

சட்டென பெருமழையொன்று அடித்துவிட்டு
ஓய்ந்தது போல்
கனவுக்குள் நீ தோன்றி புன்சிரிப்பை தந்து விட்டு
கண்மணிக்குள் மறைந்து கொள்கிறாய்...!

பல நேரங்களில்
என் நெற்றிப்பொட்டில்
பதியப்படும் ஈரங்களில் தான்
உன் மொத்த அன்பும்
கொட்டிக் கிடக்கிறது...!

நீ பேசிய வார்த்தைகளை கோர்க்க நினைக்கிறேன்...
சடசடவென உதிர்ந்தே விடுகிறது
சற்றும் ஈரமில்லாமல்.....
மனம் மட்டும் குதூகலமாய்...!

காத்திருக்கிறேன்....
காத்தே கிடக்கிறேன்...
காதோரம் உன்னிடம் ரகசியம் சொல்ல...!




-இது ஒரு மறுபதிவு


19 comments:

  1. வணக்கம்
    பல நேரங்களில்
    என் நெற்றிப்பொட்டில்
    பதியப்படும் ஈரங்களில் தான்
    உன் மொத்த அன்பும்
    கொட்டிக் கிடக்கிறது...!

    ஆகா ...ஆகா... என்ன வரிகள் கவிதை அருமை வாழ்த்துக்கள்.

    என்பக்கம் பெற்றவளின் ஓர் அழுகை...கவிதையாக

    http://2008rupan.wordpress.com/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா உங்களோட ரசிப்புக்கு... கண்டிப்பா உங்க கவிதைய பாக்குறேன்

      Delete
  2. காற்றின் மெல்லிய உணர்வுகளோடு
    உன் வாசம் தாங்கிய நினைவுகள்
    என்னில் கண்ணாமூச்சி ஆடி
    தோற்றுபோய் வெளிப்படுகிறது...!
    //

    உணர்வுப்பூர்வமான வரிகள்!! அப்புறமா வந்து உங்க மத்த கவிதைகளையும் படிக்கிறேன்.. ஆர்வத்தை கிளறி விட்டுடுச்சு இந்த கவிதை..

    ReplyDelete
    Replies
    1. ஹஹா தேங்க்ஸ். கண்டிப்பா வந்து பாருங்க... எதோ உளறி வச்சிருப்பேன்

      Delete
  3. ஆகா... ரசிக்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா, வாழ்த்துக்கு

      Delete
  4. Replies
    1. தேங்க்ஸ் கங்க்ராட்ஸ் சொன்னதுக்கு

      Delete
  5. ரகசியமும் காத்திருக்கிறதோ ?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் ஆமா, சொல்லிட்டா அப்புறம் அது ரகசியமாகவும் இருக்காது... அதான் ஒரே கன்புயூசன்

      Delete
  6. eththanai murai padiththaalum salikkaatha gayathri kavithaigal,,, GD Kavithaigal

    ReplyDelete
  7. ///-இது ஒரு மறுபதிவு.///


    ஆகா என்ன கவித்துவமான வரிகள் ............

    ReplyDelete
    Replies
    1. ஆமா, இத எல்லாம் எழுதி வச்சி ஒரு வருஷம் ஆச்சு, அதான் மறுபடியும் ஒரு ரீ-கால்....

      Delete
    2. சும்மா தமாசுக்கு .உண்மையில் நல்லா இருக்கு கவிதை .... மானாவரியா பதிவு எழுதி இருக்கீங்க . ஒன்னு ஒண்ணா படிக்க ஒரு வாரம் ஆகும் போல இருக்கு . படிச்சிட்டு மொத்தமா கருத்து சொல்றேன் ..

      Delete
    3. ம்ம்ம்ம் ஓகே ஓகே (y)

      Delete
  8. ஐயையோ தப்பா காப்பி பண்ணிட்டேன் ................ சாபம் விட்டுறாதீங்க ..
    நான் காப்பி பண்ண நினைத்தது .இதுதான் .....
    //
    நீ பேசிய வார்த்தைகளை கோர்க்க நினைக்கிறேன்...
    சடசடவென உதிர்ந்தே விடுகிறது//////

    ReplyDelete
    Replies
    1. சாபம் எல்லாம் விடல, அத விட ஒரு பெரிய தண்டனை தரலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்

      Delete
  9. மிக அருமை, ஒவ்வொரு வரியிலும் உணர்வுகள் இழையோடுகின்றன

    ReplyDelete