நாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்கணும். அப்பா அப்பான்னு கூப்ட்டு பாத்து சத்தம் இல்லாததால போன் பண்ணி, நாப்கின் தீந்து போய்டுச்சுப்பா, உடனே வாங்கிட்டு வாங்கன்னேன்.
நான் கொஞ்சம் வெளில இருக்கேனே, அவசரமா தேவையான்னு அப்பா கேட்டதும் சுள்ளுன்னு கோபம் வந்துடுச்சு. அப்புறம் துணி எல்லாம் பட்டுச்சுனா தொவச்சி போடுறது யாரு? நான் பாத்ரூம்லயே இருக்கேன், உடனே வேணும்பான்னு சொன்னதும் சரி, உடனே வர்றேன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டார்.
ஒரு பத்து நிமிஷம் இருக்கும், அக்கா, அக்கான்னு தம்பி கூப்ட்டு சத்தம் கேக்குது. எத்தனையோ வருசத்துக்கு அப்புறம் அவன் என்னை இப்படி கூப்டுறான். இப்ப கொஞ்ச நாளாவே என் கிட்ட பேச ஆரம்பிச்சுட்டான்னாலும் ஏதாவது தரணும்னா “இந்தா”, “பக்கெட் சிக்கன்”, “பரோட்டா வேணுமா”ன்னு ஒத்தை வார்த்தைல தான் பேசுவானே தவிர, அக்கான்னு கூப்ட்டு எதுவும் ஆரம்பிக்க மாட்டான். திடீர்னு அவன் அக்கான்னு கூப்ட்டதும் ஒரே சந்தோசம். பாத்ரூம்ல இருந்து ஹுர்ரே-ன்னு ஓடியா வர முடியும்?
“நான் பாத்ரூம்ல இருக்கேன், என்ன வேணும்”னு கேட்டேன். “நாப்கின் பாக்கெட் இந்தா, பெட்ல வைக்குறேன்”னு சொல்லிட்டு பாட்டிகிட்ட “அக்காவுக்கு நாப்கின் எடுத்து குடுத்துடுங்க”ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.
ஹப்பாடா, நாப்கின் வந்துடுச்சுன்னு நிம்மதியா ஒரு பெருமூச்சு விட்டுட்டு பாக்கெட்ட நிமிர்ந்து பாத்தா நான் வழக்கமா யூஸ் பண்ற ப்ராண்ட் இல்லாம இது வேற. இந்த பயலுக்கு நான் யூஸ் பண்ற ப்ராண்ட் கூட மறந்து போச்சான்னு சிடுசிடுத்துட்டே வேற வழியில்லாம அத வச்சுட்டு வெளில வந்தேன். ரூமுக்குள்ள வந்து கட்டில்ல பாத்தா அதே ப்ராண்ட்ல இன்னும் ரெண்டு பாக்கெட் இருக்கு. உடனே அப்பாவுக்கு போன் பண்ணி அப்பா, தம்பி வேற ப்ராண்ட் வாங்கிட்டு வந்துட்டான். நீங்க வரும் போது எனக்கு தேவையானத கண்டிப்பா வாங்கிட்டு வந்துடுங்கன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டேன்.
ஒரு நாப்கின்ல என்ன ப்ராண்ட் பாக்க வேண்டியிருக்குன்னு கேட்டா, கண்டிப்பா இருக்கு. ஒவ்வொரு மாசமும் வர்ற பீரியட்ஸ் வயித்து வலிய மட்டுமில்லாம, உடம்பு வலி,முதுகு வலி, மயக்கம், தலைசுத்துன்னு எப்படி பட்ட அவஸ்த்தய குடுத்தாலும் சரியான நாப்கின் யூஸ் பண்ணினா ஒரு மாதிரி கம்போர்ட்டா இருக்குற மாதிரி பீல் ஆகும். வலில எவ்வளவு உருண்டு பொரண்டாலும் அந்த நாப்கின் தான் ட்ரெஸ்ல கறை படுறத தடுக்கும்.
நாப்கினோட வேலை, ரெத்தத்த உறிஞ்சுட்டு கறைபடாம தடுக்குறது மட்டும் தானா?
மார்கெட்ல பாத்தா அல்ட்ரா தின்ல இருந்து எக்ஸ்ட்ரா லார்ஜ் வரைக்கும் விதம் விதமா நாப்கின் விக்குறாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ப்ராண்ட் செட் ஆகும். அத நாமா யூஸ் பண்ணி அனுபவத்துல தெரிஞ்சுகிட்டா தான் உண்டு. இன்னமும் நாப்கின் சரியா யூஸ் பண்ண தெரியாதவங்களும் எவ்வளவோ பேர் இருக்காங்க. சில பேருக்கு என்ன நடந்தாலும் சரி, ஓவர் ப்ளீட் ஆகுறதுல ட்ரெஸ் கறை பட்டுர கூடாது, அதுக்கு எது வேணா யூஸ் பண்ணலாம்னு நினைப்பாங்க.
அதென்னமோ இந்த விஸ்பர் மேல மக்களுக்கு அவ்வளவு மோகம். நாப்கின்னு சொன்னாலே முதல்ல விஸ்பர் தான் நியாபகத்துக்கு வருது. அதுலயும் அல்ட்ரா தின் நாப்கின்கள் வச்சா, வச்ச மாதிரியே இருக்காது, ரொம்ப கம்போர்டபிளா பீல் பண்ணுவாங்க. அதே மாதிரி எவ்வளவு ப்ளீட் ஆனாலும் தாங்கி பிடிக்கும். அதையே கொஞ்சம் நிதானிச்சு யோசிச்சு பாத்தா இந்த மாதிரி அல்ட்ரா தின் நாப்கின்கள்ல மேல கவர் சொரசொரப்பா இருக்கும். தொடர்ந்து யூஸ் பண்ணிட்டு இருந்தா ரெண்டாவது நாளே தொடை எல்லாம் அறுத்து சிவந்திடும். அப்புறம் பீரியட்ஸ் அவஸ்தையோட சேர்ந்து இதையும் அனுபவிக்கணும். இதுக்காகவே என்னோட சாய்ஸ் காட்டன் நாப்கின்கள் தான். கொஞ்சம் திண்ணமா இருந்தாலும் உடம்புக்கு எந்த தீங்கும் இருக்காது. ராஸஸ் வர்றது ரொம்ப கம்மி.
இன்னும் சில பேர் டாம்பான் யூஸ் பண்றாங்க. ஒரு சாக்பீஸ் துண்டு மாதிரி உள்ள சொருகி வச்சுட்டா உள்ளயே ப்ளீடிங் அரெஸ்ட் ஆகிடும். வசதியோ வசதி. ஆனா இதனால வர்ற சைட் எபக்ட்ஸ் நிறைய பேருக்கு புரியவே புரியாது. நல்ல வேளை இந்த டாம்பான் நம்ம இடங்கள்ல பயன்படுத்துறது ரொம்ப குறைவுன்னு நினைக்குறேன். ஒரு தடவ ஹாஸ்பிடல் போயிருந்தப்ப டாக்டர்கிட்ட பேசிட்டு இருக்கும் போது எதேச்சையா இத பத்தி பேச நேர்ந்துது. இந்த டாம்பான் யூஸ் பண்றதால டீன் ஏஜ் மரணங்கள் அதிக அளவுல ஒரு காலத்துல (1980s) நடந்துச்சாம். உடம்புல இருந்து வெளியேறுற ரெத்தத்த வெளிலயே வர விடாம உள்ளயே அடக்கி வைக்குறதால வெஜைனால இருக்குற சில நுண்ணுயிர்கள் (Steptococcus sp) ரெத்தத்த உணவா பயன்படுத்தி, விசத்த வெளிபடுத்துது. இந்த விசத்துனால செத்துப் போனவங்க ஏராளம் பேர். இத டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் (toxic shock syndrome)ன்னு சொல்றாங்க. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், ஒரு பாக்டீரியா கிட்டத்தட்ட இருபதுல இருந்து அரைமணி நேரத்துக்குள்ள தன்னோட இனத்த டபுள் டபுளா பெருக்கிடும்னு.
மரணம் வெளில சட்டுன்னு தெரிஞ்சுடுறதால அந்த பாதிப்பு மட்டும் தான் பெருசா தெரியும். ஆனா இதே டாம்பானோ இல்ல நாப்கினோ ரொம்ப நேரம் யூஸ் பண்றதால வர்ற இன்னொரு பாதிப்பு குழந்தையின்மை. இன்னைய காலகட்டத்துக்கு வேலைக்கு போகாம வீட்லயே பொண்ணுங்க இருக்க முடியாது. அதனால இத எல்லாம் யூஸ் பண்ண வேண்டியதாயிருக்கு. ரொம்ப நேரம் வெளியேறுற ரெத்தத்த இப்படி அடைச்சி வைக்குறதால சில நேரம் ரெத்தம் ரிவர்ஸ்ல கருக்குழாய்க்குள்ள ஏறிடுமாம். இதனால கருப்பைல உருவாகுற முட்டை ஒழுங்கா கர்ப்பபைக்குள்ள வர முடியுறதில்ல. இதுவும் டாக்டர் சொன்னது தான். இத ஈசியா கரைச்சு எடுத்துடலாம்ன்னு டாக்டர் சொன்னாலும் எத்தனையோ பேர் அத பெரிய விசயமா எடுத்து, ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட்னு காசை கரியாக்கினவங்களும் இருக்காங்களாம்.
அதுக்காக நாப்கின் யூஸ் பண்ணாம இருந்துடவும் முடியாது. என்ன ப்ராண்ட் யூஸ் பண்ணினாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் தான் ஒரு பேட் யூஸ் பண்ணனும். மிஞ்சி மிஞ்சி போனா ஒரு நாளைக்கு மூணு பேட் மாத்தலாம். நிறைய ப்ளீட் ஆனா அதுக்கு தகுந்த மாதிரி மாத்திகிட்டே இருக்கனும். தொடைல எரிச்சலோ, சிவந்து போனாலோ சொரசொரப்பா இருக்குற ப்ராண்ட் அவாய்ட் பண்ணிடுறது நல்லது. நல்லா ஸ்மூத் சர்பேஸ் இருக்குற ப்ராண்ட்களும் கிடைக்க தானே செய்யுது. ஆனா எது யூஸ் பண்ணினாலும் சுத்தமா பராமரிக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு தடவ பாத்ரூம் போகும் போதும், பாத்ரூம் டவல் யூஸ் பண்ணி நல்லா தொடச்சுட்டு அப்புறம் நாப்கின் வச்சுக்கலாம். இதெல்லாம் ட்ராவல் நேரத்துலயோ ஆபிஸ் நேரத்துலயோ முடியலனாலும் அட்லீஸ்ட் டிஷ்யூ யூஸ் பண்ணலாம். எப்படியோ மொத்தத்துல கிளீனா இருக்கவேண்டியது முக்கியம்.
ரொம்ப போர் அடிக்குறேன்னு நினைக்குறேன். அதனால நம்ம ஸ்டைலுக்கு வந்துருவோம்.
என் ஸ்கூல் டேஸ்ல இந்த நாப்கின் கூட கிடைக்காம எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுருக்காங்க. ஆனாலும் எங்க டீம் கொஞ்சம் அதிரடியானது. எங்க டீம்ல யாருக்கு பீரியட்ஸ் வந்தாலும் கூச்சமே படாம நாப்கின் வேணும்னு மிஸ் கிட்டயோ கடைலயோ போய் கேட்ருவோம். அதுவும் பல நேரம் நடக்க முடியாம பசங்க கிட்ட சொல்லிவிட்டு வாங்குறதும் உண்டு. ஸ்கூல்ல மத்த பிள்ளைங்க எல்லாம் எங்க டீமை கொஞ்சம் வித்யாசமா தான் பாப்பாங்க.
ஒரு நாள் இப்படி தான், செவன்த் படிக்குற ஒரு பொண்ணுக்கு பீரியட்ஸ். அன்னிக்கி திங்கட்கிழமைங்குறதால யூனிபார்ம் வேற வொயிட் அண்ட் வொயிட். சின்ன பொண்ணுங்குறதால முன் யோசனை எதுவுமில்லாம நாப்கின் எதுவும் கொண்டு வராம ஸ்கூல் வந்துட்டா. அப்ப பாத்து ஸ்போர்ஸ் டே, ஸ்கூல் டே நெருங்குறதால அதுக்கான ரிகர்சல்ல நிறைய பேர் இருந்தாங்க. ஒழுங்கா க்ளாஸ் எதுவும் நடக்கல. இந்த பொண்ணு வயித்து வலில ஒரு மரத்தடில உக்காந்துட்டு இருந்துருக்கா. என் ப்ரெண்ட் ஒருத்தன் பாத்துட்டு, ஏன் இங்க வந்து உக்காந்துருக்க, ஏன் அழுறன்னு கேட்டதுக்கு பதில் எப்படி சொல்லன்னு தெரியாம அவ திருதிருன்னு முழிச்சிருக்கா.
போ, ஒழுங்கா க்ளாஸ்ல போய் உக்காருன்னு அவன் அதட்டியிருக்கான். வேற வழியில்லாம அவ எழுந்து போனப்ப தான் அவ ட்ரெஸ்ல கறைய கவனிச்சிருக்கான். எங்க கிட்ட வந்து, நாப்கின் இருந்தா அந்த பொண்ணுக்கு குடுங்க, பாவம் பிள்ள அழுதுட்டு இருக்குன்னு சொன்னான். எங்க யார் கிட்டயும் இல்ல, மிஸ் கிட்ட போய் கேட்டா, அன்னிக்கி பாத்து நாப்கின் தீந்து போய்டுச்சாம். ஸ்கூல்லயும் ஸ்டாக் இல்ல. சரி, பக்கத்து கடைல வாங்கலாம்னா எங்க கெட்ட நேரம், கடை பூட்டியிருக்கு.
கறைபடுறது ஒண்ணும் உலகமகா குத்தம் இல்ல, ஆனா அந்த கறை அதோட முடிஞ்சுடாது. மறுபடியும் மறுபடியும் ப்ளீட் ஆகிட்டே இருக்கும். அந்த பொண்ணு பயத்துல அழவே ஆரம்பிச்சுட்டா. மிஸ் எல்லாரும் ஒவ்வொரு ஈவென்ட்ல பிசி. அப்படியே சில பேரு பக்கத்துல நின்னாலும் நேப்கின் கிடைக்காம கைய பிசஞ்சுட்டு நிக்குறாங்க. எனக்கு செம கடுப்பு. இந்த ஸ்கூல்ல ஒரு நேப்கின் கூடவா கிடைக்கலன்னு. என்ன கடுப்பாகி என்ன பண்ண?
அப்ப தான் என்னோட ப்ரெண்ட்ஸ்ல ஒருத்தன் ஒரு காரியம் பண்ணினான். சட்டுன்னு அவன் போட்டுருந்த பனியன கழட்டி என் ப்ரெண்ட் ஒருத்தி கிட்ட குடுத்துட்டு, எங்க வீட்ல அம்மாவும் தங்கச்சியும் பழைய பனியன் துணிய தான் யூஸ் பண்ணுவாங்க, அதனால இத யூஸ் பண்ண சொல்லுன்னு சொல்லியிருக்கான். அவளும் நாங்களும் அப்புறம் அந்த பொண்ணை பாத்ரூம் கூட்டிட்டு போய் பனியனை மடிச்சு குடுத்து, வைக்க சொல்லிட்டு, அவ ஸ்கர்ட்ட துவைச்சு குடுத்துட்டு வந்தோம்.
அதுக்கப்புறம் ஸ்கூல்ல எது தீர்ந்தாலும் பரவால, கண்டிப்பா நாப்கின் தீரக் கூடாதுன்னு பிரின்சிபால்கிட்ட போய் சொல்லி, அதுக்கான ஏற்பாடும் பண்ண வச்சோம். அந்த பொண்ணு தான் ரொம்ப நாள் கூச்சத்துல எங்கள கண்டா ஓடி ஒளிஞ்சுகிட்டு இருந்தா. அவள சஜமாக்குறதுக்குள்ள நாங்க ஒருவழி ஆகிட்டோம்.
.
ஒரு மருத்துவர்கூட இத்தனை தெளிவாகவும் நகச்சுவையாகவும் இப்படியோர் தீர்வைச் சொல்லியிருக்கமுடியாது காயு...வாழ்த்துகள்...பெண்களுக்குத் தேவையானதும், இன்றியமையாததுமான ஒரு பதிவு...
ReplyDeleteதேங்க்ஸ். இங்க தீர்வுன்னு எதையும் நான் சொல்லல. என்னோட பாயின்ட் ஆப் வியூவை தான் சொன்னேன்
Deleteஆண்கள், பெண்கள் அனைவரும் அறிய வேண்டிய அவசியமான விஷயம்.தங்களின் பல பதிவுகளை படித்திருந்தாலும் குறிப்பிட்டு, பாராட்ட வேண்டிய முக்கியமான பதிவு இது. சீரியஸான மேட்டரை லைட்டாக எழுதியிருக்கும் விதம் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்கலாமோனு தோண வச்ச பதிவு இது. ஆனாலும் உங்க வாழ்த்துக்கு நன்றி
Deleteஅந்த பனியன் கொடுத்த பையனுக்கு ஒரு சல்யூட்
ReplyDeleteகண்டிப்பா... ஆனா அந்த வயசுல அவன பாராட்டணும்னு எல்லாம் தோணல. ரொம்ப சகஜமா எங்களுக்குள்ள ஒருத்தனா தான் நாங்க நினைச்சோம். ஆனா இந்த மாதிரி ஒருத்தர் போட்டுருக்குற பனியன யூஸ் பண்ணினது கூட தப்பு தான். வியர்வைல நிறைய பக்டீரியா இருக்கும். இத இப்ப என்னால புரிஞ்சுக்க முடியுது, அந்த வயசுல தெரியல. ஆனாலும் அந்த நேரத்துக்கு அவனோட உதவி மிகப்பெரிய ரிலீப். அப்புறம் இண்டர்வல் நேரத்துல ஸ்கூல்ல இருந்து நாப்கின் வாங்கி கொண்டு வந்து குடுத்தாங்க
Deleteஅக்கா, தங்கையோடு பிறந்த ஆண்களுக்கு இது பற்றிய புரிதல் கொஞ்சமேனும் இருக்கலாம்.. சகோதரிகள் இல்லாத குடும்பத்தில் இருக்கும் ஆண்களுக்கு இந்தனை பற்றிய புரிதலோ அறிவோ இருப்பது என்பது மிகவும் குறைவுதான்... இந்த கட்டுரை பெண்களுக்கு மட்டும் இல்லாது ஒவ்வொரு ஆணுக்கும் தேவையான ஒன்றாக பார்க்கிறேன் ..
ReplyDeleteஎன் அப்பா, தம்பி, அம்மாவுக்குள்ள உள்ள அந்த அன்யோன்யம் பத்தி நான் நிறைய பதிவுகள்ல சொல்லியிருக்கேன். குடும்பத்துக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் புரிதல் இருந்தாலே விழிப்புணர்வு தானே வரும்
Deleteபுதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் Vanessa விற்கு ஆண்ட்ரியா தரும் விளம்பரம் செமையாக இருக்கும். அதுவும் கடைசியில் அவர் "do not whisper.." என சொல்வது punch. விளம்பரங்களில் Cola War போல நாப்கின் War...
ReplyDeleteஅது என்னமோ அந்த பிராண்ட் எனக்கு ஒத்து வர்றதே இல்ல. காசும் நிறைய குடுத்து அவஸ்தையையும் வாங்கி கட்டிக்குற மாதிரி இருக்கும். "do not whisper.." தான் என்னோட கொள்கையும்
Deleteஎளிமையான புரிதல். நான்கு ஆண்கள் சேர்ந்து பேசாத விசயமில்லை. ஆனால் பெண்களுக்கிடையில் கூட வெகு சகஜமாகப் பேசக் கூடியதாக இல்லாத இந்த இயற்கையான உடல் உபாதையை மிக சகஜமாக துளியும் தேவையற்ற வார்த்தைகள் வெளிப்படாமல் எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDeleteஉடல் உறுப்புகளைக் குறித்து பக்கம் பக்கமாகக் கவிதை எழுதித் தங்களை முற்போக்கு வாதிகளாகக் காட்டிக் கொள்ளும் பெண் கவிஞர்கள் பலருக் தொடாத இந்த உதிரப்போக்கு விசயத்தை சாமர்த்தியமாக ஒரு ஆணும் புரிந்து கொள்ளும் விதமாக எழுதியிருக்கிறீர்கள். சபாஷ்.
ஹஹா... எனக்கு கார்த்திக் கிட்ட இருந்து இப்படி ஒரு கருத்து பிரமிப்பா இருக்கு. தேங்க்ஸ் கார்த்திக்
Deleteஆண்கள் என்றில்லை பெண்கள் கூட பேச யோசிக்கும் ஒரு சகஜமான உடல் உபாதை குறித்து மிக அழகான பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள் சகோதரி. பனியன் கொடுத்த அந்தப் பையனுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களோட வாழ்த்துகளுக்கு நன்றி
Deleteஉண்மையில் அருமையான பகிர்வு பலர் இதை பொதுவில் பேச வெளிக்கிட்டாள் முகம் சுழிப்பார்கள் உங்க பாணியில் பேசவேண்டியதை பேசியிருக்கின்றீர்கள்.
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை இது ஒரு சாதாரண விஷயம். இத பொதுவுல பேச கூச்சப் படுறதுல எதுவுமே இல்லன்னு நினைக்குறேன். ஆனா நீங்க சொல்ற மாதிரி நிறைய பேர் முகம் சுளிக்குறாங்க. தேங்க்ஸ் உங்க கருத்துக்கு
Deleteஇங்கு use and throw underwear napkins (ஜட்டி) போல உண்டு!! கொஞ்சம் காஸ்ட்லி என்றாலும் படு வசதி!!
ReplyDeleteஅதெல்லாம் இங்க கிடைத்தாலும் கிடைக்கலாம். எனக்கு அது பத்தின அவேர்னஸ் இல்ல. கண்டிப்பா தெரிஞ்சுக்க ட்ரை பண்றேன்
Deleteஆண்களும் பெண்களும் குறிப்பாக டீன் ஏஜ் மாணவியர் கூச்சபடாமல் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் . இது போன்ற விழிப்புணர்வுப் பதிவை பத்திரிகைகளில் கூட படித்ததில்லை . மிக சிறப்பான பதிவு வாழ்த்துகள்
ReplyDeleteடீன் ஏஜ் பெண்கள் இப்ப கொஞ்சம் விவரமா தான் இருக்காங்க. ஆனா என்ன சந்தேகத்த யார்கிட்ட போய் தீத்துக்கன்னு அவங்களுக்கு தெரிய மாட்டேங்குது. இத எல்லாருக்கும் பொதுவானதாவும் ஈசியா சொல்லிட முடியாது, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான பீலிங்க்ஸ்... அனுபவங்கள்... அத எல்லாம் விரிவா யார் கிட்டயாவது கேட்டு தெரிஞ்சுகிட்டா தான் நல்லாயிருக்கும்
Deleteமிகவும் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! அந்த பனியன் கொடுத்த மாணவருக்கு பாராட்டுக்கள்! நாப்கின் கடையில் வாங்குவதை சிலர் கேவலமாக நினைக்கின்றனர். இதுவும் ஓர் அத்தியாவசிய பொருள் என்று உணர வைத்துவிட்டீர்கள்! சிறப்பான பதிவு! நன்றி!
ReplyDeleteகண்டிப்பா இது ரொம்ப ரொம்ப அத்யாவசியமானது. முன்னாடி பொண்ணுங்க வீட்டுக்குள்ள இருந்தாங்க, அவங்களுக்கு துணிய கிழிச்சு யூஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அப்பவும் அவங்க படுற கஷ்டம் இருக்கே.....
Deleteஒவ்வொரு தடவையும் புது துணி யூஸ் பண்ண முடியாது, கறை பட்ட துணிய பப்ளிக்ல அலச முடியாது, காயப் போட முடியாது, சமூகம் தப்பா பேசும்... ஈரத் துணி காயாம அதிக நேரம் இருந்தா அதுல பூஞ்சைகள் வளரும், அதுல வேற விஷம்... அடுத்து, யாருக்கும் தெரியாம எங்கயாவது மடிச்சு வைப்பாங்க, தேள், பூரான்னு அதுல ஏறி உக்காந்துட்டு, தெரியாம அத வச்சுட்டா போச்...
இன்னும் நிறைய இருக்கு. இத பத்தி அதிகமா எழுதனும்னு நினைக்குறேன்
Such an informative post ma'am. Each and everything was simply elegant and understandable. Even doctors may not explain this much. The choice of diction was noteworthy. Moreover, this post is for all men and women. It helps men to understand women better and helps women to understand their needs better. To tell the truth, this is one of the best post I have ever read in my Blog history.
ReplyDeleteஉங்களோட கருத்துக்கு ரொம்ப தாங்க்ஸ். இன்னும் விளக்கமா, இத பத்தி நிறைய எழுதணும்னு நினைச்சிருக்கேன்.
Deleteமேற்கத்திய நாகரீகம் இங்கே வளர்ந்து தள்ளிவிட்டதாக நாம் எண்ணிக்கொண்டாலும் அது வெறும் கருதுதல் மட்டுமே. இன்னும் இங்கே இவற்றைப் பேசுதல் பின்னேறித்தான் நிற்கிறது.இன்னும் இன்னுமாய்ப் பேசுங்கள்.எளிதாய்ப் புரியவைத்தல் சாத்தியம்தான் உங்கள் எழுத்துக்களைப் போல.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎளிதாய்ன்னு சொல்றத விட இயல்பா சொன்னா, நிறைய பேர் புரிஞ்சுப்பாங்கன்னு நினைக்குறேன். உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ்
Deleteநிறைய பேர் வெளியே சொல்லத் தயங்குகிற விஷயத்தை மிக எளிமையாக சங்கடமே இல்லாம எழுதியிருக்கீங்க காயத்ரி. இந்த தைரியமும் விழிப்புணர்வும் எல்லாப் பெண்களுக்கும் வரணும்.
ReplyDeleteசொல்ல வந்த விஷயத்தை எளிமையா புரியும்படி சொல்லியிருக்கீங்க. நிச்சயம் ஆண்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம். நல்ல விழிப்புணர்வுப் பதிவு!
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்!