Tuesday 10 March 2015

பேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை

இந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு  போஸ்ட் போட்டேன்.  அது   இதோ,  இந்த  ரெண்டும்  தான்... இணையத்தில் பெண்கள் நிலை   இணையமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பும். அதுல நாம தெளிவா தான் எழுதியிருக்கோமானு கொஞ்சம் யோசிச்சு பாத்துகிட்டேன். அப்புறமா சில சம்பவங்கள உங்க கிட்ட பகிர்ந்துகிட்டா நீங்களும் எச்சரிகையா இருப்பீங்களேன்னு நினச்சு தான் மறுபடியும் அத பத்தி (அதாங்க பேஸ் புக் அனுபவம்) எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். நடந்த சம்பவங்கள எழுதுறதுன்னு முடிவு பண்ணியாச்சு, ஏன் யாருக்கோ நடந்தத பத்தி எழுதணும்? எனக்கு நேர்ந்த சில அனுபவங்கள முதல்ல உங்க கிட்ட பகிர்ந்துக்குறேனே...

அது நான் பேஸ் புக் வந்த புதுசு. அப்போ நான் அம்மாவ இழந்து மனசு எல்லாம் வெறுமையா இருந்த நேரம். ஆதரவு தேடியும் அம்மா மடி தேடியும் மனசு அலைபாய்ஞ்சுட்டு இருந்த நேரம். அப்போ தான் இங்க ஒரு குரூப் ரொம்ப ஜாலியா, சந்தோசமா, ஒருத்தருக்கொருத்தர் கலாய்ச்சுகிட்டு இருந்தாங்க. நானும் அவங்க கூட போய் ஒட்டிகிட்டேன். நான் அங்க செல்ல பிள்ளை மாதிரி.

நான் பேஸ் புக் வந்தப்பவே அப்பா எனக்கு குடுத்த எச்சரிக்கை இது தான்

1. எந்த காரணம் கொண்டும் யாருக்கும் போன் நம்பர் குடுக்காத
2. உன்னை பத்தின தனிப்பட்ட தகவல்கள பரிமாறிக்காத
3. யாரையும் அதிகமா நம்பாத
4. எந்த சூழ்நிலையிலும் உன்னோட புகைபடத்த யார்கிட்டயும் குடுக்காத
5. உன் மனசுல எப்பவும் ஒரு எச்சரிக்கை மணி அடிச்சுட்டே இருக்கணும்
6. வெளி நபர்கள் யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்குற மாதிரி நடந்துக்காத

இது எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டுட்டு தான் நான் இங்க வந்தேன். ஆனா என் அம்மாவுக்கு என் மேல அபார நம்பிக்கை. என் பொண்ணு ரொம்ப தைரியசாலின்னு. ஆனா உண்மைல நான் அப்போ அன்புக்காக ஏங்குற பலஹீனம் உள்ள பெண்ணா தான் இருந்தேன்.

அந்த நேரத்துல தான் ஒருத்தர் அறிமுகமானார். என் அப்பா வயசு இருக்கும் அவருக்கு. நான் கூட அவர பெரிய மனுஷன்னு நம்பி என்னோட எல்லா டீடைல்ஸ் ஷேர் பண்ணிருக்கேன். அவர ஒரு உயர்வான ஸ்தானத்துல வச்சி, என்னோட பிரச்சனைகள் எல்லாம் சொன்னேங்க. அந்த வருஷம் எனக்கு பிறந்தநாள் வந்துச்சு. எனக்கு பிறந்தநாள் வாழ்த்தா ஒரு வீடியோ போட்டார். அப்போ அந்த வீடியோ போட தனக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு ஆனதுன்னும் என் கூட போன்ல பேச பல லெட்சம் செலவு ஆச்சுன்னும் (அத நான் வேற வாய தொறந்து ஆ... அப்படியானு மலைச்சு போய் கேட்டுட்டு இருந்தேன், பாருங்க நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்துருக்கேன்னு) சொன்னார். எல்லாமே எனக்காக தான் பண்ணினதாகவும் எனக்காக என்ன வேணா பண்ணுவேன்னும் சொன்னார். இதுக்கெல்லாம் காரணம் நீ என் பொண்ணு மாதிரின்னு அடிக்கடி சொல்லிக்குவார்.

அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா அவரோட அடக்குமுறை ஆரம்பிச்சுது. நான் பொதுவா எல்லாத்தையும் விட்டு குடுத்து போய்டுவேன். இங்க எல்லோரோட பிறந்தநாளுக்கும் வாழ்த்து போடுறத பாத்து எனக்கு போட்டோஷாப் கத்துக்கணும்னு ஆசை. அதனால நானும் பிறந்தநாள் வாழ்த்து போடணும்னு ஆசைப்பட்டேன். அப்போ அவர் பெயரோட என்னோட பெயர சேர்த்துப் போட சொன்னார். எல்லாத்துலயும் சுதந்திரமா இருந்து பழகினவ நான். ஆனாலும் அவர் சொல்றாரேன்னு அவர் பெயர சேர்த்து போட ஆரம்பிச்சேன்.

மெல்ல மெல்ல என்னோட எப்.பி பாஸ்வேர்ட் குடுன்னு கேட்டார். நான் தர முடியாதுன்னு சொன்னதுக்கு ரொம்ப சண்ட போட்டார். நானும் அப்படி என்ன ரகசியம் என்கிட்ட இருக்கு, போனா போகட்டும்னு குடுத்தேன். அப்புறமா தான் என்னோட ஐ.டியில இருந்து அவரே போஸ்ட் போட ஆரம்பிச்சார். நான் காலேஜ்ல இருக்கும் போது என்னோட ஐ.டில இருந்து போஸ்ட் வரும். ப்ரெண்ட்ஸ் நீ என்ன காலேஜ் போறதே இல்லையான்னு கேக்க ஆரம்பிச்சாங்க. எனக்கு இது ரொம்ப பெரிய பிரச்சனையா இருந்துச்சு. அப்புறம் ஒரு நாள் என்னோட பாஸ்வேர்ட் மாத்திட்டேன், அப்புறமாவும் அதை கேட்டு ரொம்ப ரொம்ப தொல்லை படுத்த அப்போ கூட எனக்கு புத்தி வராம மறுபடியும் குடுத்தேன்.

அடுத்த வருஷம் எனக்கு பிறந்தநாள் வந்துச்சு. என்னோட போட்டோவ போட்டு வாழ்த்து சொல்ல போறேன்னு சொன்னார். அப்படியே போடவும் செய்தார். நானோ என்னோட போட்டோ வெளில வரதுல எனக்கும் என் அப்பாவுக்கும் இஷ்டம் இல்ல, அதனால அந்த மாதிரி விளம்பரம் எனக்கு தேவ இல்ல உடனே அதை எல்லாம் ரிமூவ் பண்ணுங்கன்னு சொன்னேன். ஹப்ப்பா, அந்த ஆளு வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சார் பாருங்க, நான் மிரண்டு போய் நிக்குறேன். உன் அப்பன் என்ன உன்ன எவனுக்கும் கட்டிகுடுக்காம வச்சிருக்க போறானா? காலேஜ் போறியே, அங்க ஒருத்தனும் உன்ன பாக்க மாட்டானா, மூஞ்சில துணிய போட்டு பொத்தி விட்டா உன்ன டெய்லி காலேஜ் அனுப்புறான்னு வாய தொறந்தார் பாருங்க, அந்த ஆளு பேசுனதுல அப்படியே கூவம் ஸ்மெல்.அப்போ தான் நான் உசார் ஆனேன். இருபது வயசு வர அன்ப கொட்டி கொட்டி வளத்த நம்ம அப்பாவுக்கு தெரியாதா, நமக்கு எது நல்லதுன்னு. அந்த ஆளு நல்லவரா இருந்துருந்தா என்ன சொல்லி இருக்கணும்? உன் அப்பா பேச்சை கேளுன்னு தானே. அது மட்டுமில்லீங்க, இந்த உலகத்துல நான் நேசிக்குற முதல் மனுஷன் என் அப்பா, அவர தப்பா பேசினா நாம விட முடியுமா? ஆனா அந்தாள அவ்வளவு தூரம் பேச விட்டது என் தப்பு தானே. அமைதியா விலகிடலாம்னு முடிவு பண்ணினா, அப்புறம் அந்த ஆளு தொடர்ந்து பண்ணின டார்ச்சர்ஸ் சொல்லி மாளாது. மவுனமா அந்த ஆளு சொன்னத கேட்டுக்குற மாதிரி அமைதியா போயிட்டேன்.

வீட்ல அப்பா எனக்கு கல்யாணத்துக்கு மாப்பிளை பாத்தாங்க. எனக்கு அதுல துளியும் விருப்பம் இல்ல. நான் வேற சும்மா இருக்காம அந்த ஆளு கிட்ட எனக்கு வீட்ல இருக்க இஷ்டம் இல்ல, எங்காவது போக போறேன்னு சொன்னேன். சொன்னதோட நான் அந்த விசயத்த மறந்தும் போயிட்டேன். அந்த ஆளோ அவர் மனைவி கிட்ட போய் காயத்திரி இனி நம்ம வீட்ல தான் இருக்க போறா, அவளுக்கு தேவையான வசதிய செய்து குடுன்னு சொல்லி இருக்கார். அவங்க எனக்கு போன் பண்ணி, உன் அப்பா உன்னோட நல்லதுக்கு தானே சொல்லுவாங்க, பையன் பாத்தா பாக்கட்டும், உனக்கு பிடிச்சா ஓகே சொல்லு, இல்லனா வேணாம்னு சொல்லு, அத விட்டுட்டு வீட்ட விட்டு வரணும்னு நினைக்குறது தப்புன்னு அட்வைஸ் பண்றாங்க. 

என்னடா இது, நாம எதோ ஒரு விரக்தியில தானே சொன்னோம், அதுக்கு இப்படி ஒரு ஏற்பாடானு பக்குனு ஆகிடுச்சு. அப்படி நான் வீட்டை விட்டு வந்தா என் அப்பா உயிருக்கு உத்தரவாதமில்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். அந்த ஆளுகிட்ட சொன்னேன், என் அப்பாவுக்கு என் மேல உயிரு, நான் அப்படி எல்லாம் வீட்டை விட்டு வர மாட்டேன்னு. உடனே அந்தாளு என்ன சொன்னார் தெரியுமா? உன் அப்பன் ஒரு நாளு சாக வேண்டியவன் தானே, அவனுக்கு ஒண்ணும் ஆகாது, நீ கிளம்புன்னு சொல்றார். எப்படி இருக்கும் பாருங்க, நான் வர முடியாதுன்னு ஒரே வார்த்தையில சொல்லிட்டேன். அதுக்கு அடுத்த வார்த்தை இதையெல்லாம் என் பொண்டாட்டி தான் உனக்கு சொல்லி குடுத்துருப்பா, ஊருக்கு போனதும் அவளுக்கு நிச்சயம் தண்டனை உண்டுன்னு. இப்பவும் நான் பயந்துட்டேங்க, பாவம், இவரால ஏன் மம்மி (அவர் மனைவியை நான் மம்மின்னு தான் கூப்பிடுவேன்) பாதிக்கப்படணும்ன்னு சரி, சரி, இப்போ வீட்ல பிரச்சனை இல்ல, பிரச்சனை வந்தா பாத்துக்கலாம்னு முற்றுப்புள்ளி வச்சேன்.


என்னோட நிம்மதி போச்சு, ஒவ்வொரு நிமிசமும் அந்த ஆளு மிரட்டுறது தான் கண்ணுக்குள்ள நின்னுகிட்டே இருந்துச்சு. அடுத்த பிரச்சனையா அப்பா நான் எல்லோருக்கும் வாழ்த்து அட்டை அவர் பேரோட சேர்த்து போடுறத பாத்துட்டு, அது வேணாம்டா, யாரவது தப்பா நினைப்பாங்கன்னு சொன்னாங்க. நானும் சரிப்பான்னு சொல்லிட்டு அப்படி போடுறத நிறுத்திட்டேன். அந்த ஆளு கிட்டயும் சொல்லிட்டேன். இப்போ மறுபடியும் குதிக்க ஆரம்பிச்சார். அப்படினா நீ இனி யாருக்கும் வாழ்த்து அட்டை போட கூடாதுன்னு. இது என்னங்க நியாயம்? என்னோட மொத்த சுதந்திரத்தையும் பறிச்சு என்னை ஒரு அடிமை நிலைமைக்கு கொண்டு போன அந்த ஆள கண்டு நான் ஏன் அவ்வளவு பயந்தேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு.

அந்த ஆளுக்கும் எனக்கும் பொதுவான நண்பர்கள்னு கல்யாணம் ஆன சில பெண்கள் இருந்தாங்க. நான் பேசலனா அந்த ஆளு அவங்க எல்லோருக்கும் போன் பண்ணி தொல்லை குடுத்துருக்கார். அவ எங்க, அவள என்கிட்ட பேச சொல்லுங்க அப்படி இப்படின்னு. அதுவும் ராத்திரி ஒரு மணி, ரெண்டு மணின்னு கால் பண்ணியிருக்கார். அவங்க கல்யாணம் ஆனவங்க, அவங்க வீட்ல அப்புறம் நிம்மதி இருக்குமா சொல்லுங்க? சரி, நம்மால ஏன் அவங்க எல்லாம் கஷ்டப்படனும்னு தான் நானே என்னை அவங்க எல்லோர்கிட்ட இருந்தும் விலக்கி கிட்டு அந்த ஆள் கிட்ட ஒரு அடிமை மாதிரி அவர் சொல்றதுக்கெல்லாம் தலையாட்ட வேண்டியதா போச்சு.

அந்த ஆளுக்கு ரொம்ப பண கஷ்டம்னு சொன்னாரு. அப்போ எனக்கு தெரிஞ்சவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்து கிட்டத்தட்ட எழுபதாயிரம் வரை வாங்கி குடுத்தேன். ஆனா அந்த ஆளு நான் வேணாம் வேணாம்னு சொல்லியும் ஒரு நாலு தடவ முன்னூறு முன்னூறு ரூபாய்க்கு மொபைல்க்கு டாப் அப் பண்ணி விட்டாரு. அதனால என்னை பிச்சைக்காரின்னு எல்லோர்கிட்டயும் போய் சொல்லி இருக்கார். நான் பண்ணினது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு இத படிக்குற உங்களுக்கு எல்லோருக்கும் புரிஞ்சு இருக்கும். என்னை திட்டோ திட்டுன்னு திட்ட நினைக்குற உங்களுக்கு ஒண்ணு சொல்லணும். நம்ம நாட்ல முக்கால் வாசி பேர் என்னை மாதிரி முட்டாளா தான் இருக்காங்க.

ஆனா எல்லாம் முட்டாள் தனமும் ஒரு நாள் முடிவுக்கு வரும்ங்க. எத்தனை நாள் தான் நான் அவருக்கு பயந்துட்டு இருப்பேன். என் வீட்ல விஷயம் தெரிஞ்சு, இதெல்லாம் சகஜம், அவன தூக்கி போடுன்னு சொன்னாங்க. இனி ஒரு நாளும் அவன கண்டு நீ பயப்படக் கூடாதுன்னு தைரியம் குடுத்தாங்க. அப்புறம் தான் எனக்கு பயம் தெளிஞ்சுது. என்னை சார்ந்த அந்த பெண்கள் எல்லார் கிட்ட இருந்தும் நான் ஒதுங்கிட்டதால அவங்களும் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்கன்னு தான் நான் அடுத்தக் கட்டம் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன்.

ரொம்ப கேர் புல்லா தான் அந்தாள டீல் பண்ண வேண்டியதா போச்சு. மறுபடியும் என்னோட பாஸ்வோர்ட் மாத்தினேன். அந்த ஆளு உடனே என்னோட ஈ.மெயில் மூலம் என்னோட பேஸ் புக் அக்கௌன்ட்டை ஹாக் பண்ணினார். பின் ரொம்பவே போராடி அந்த ஆள் கிட்ட இருந்து என்னோட பேஸ் புக் அக்கௌன்ட்டை மீட்டு அவரை ப்ளாக் செய்தேன். பின் ஏகப்பட்ட பேக் ஐ.டிக்கள் மூலம் அவர் உள் நுழைய பாக்கவே நான் எல்லோரும் பார்க்குற படி என்னோட வால் (wall) திறந்து விட்டேன். எனக்கு யார் மேலயும் பயம் இல்லைன்னு பிரகடனப்படுத்தினேன்.

அப்புறம் என்னங்க, அந்த ஆளு  என்னை கொலை செய்ய போறதாகவும், என்னோட ப்ரெண்ட்ஸ்சையும் கொலை செய்ய போறதாகவும் மிரட்டிகிட்டு இருந்தாராம். நான் எதையும் கண்டுக்குறது இல்ல. இந்த மாதிரி ஆளுங்களுக்கு பயந்தா நம்மோட வாழ்க்கையே போயிடும்னு நல்லா தெரிஞ்சுகிட்டேன். அதே மாதிரி ஆள் தெரிஞ்சு பழகணும், வெள்ளையா இருந்தா மட்டும் அது பாலாகிடாதுன்னும் புரிஞ்சுக்கிட்டேன்.  நாம இன்னொரு கதைய இன்னொரு நாள்ல பாக்கலாம்.

30 comments:

 1. உண்மையில் பயங்கரமாத் தான் இருக்கு. இவ்வளோ தெளிவா இருக்கிற பெண்கள் கூட ஏன் ஏமாந்து போறாங்கஆச்சர்யமா இருக்கு..இது ஒரு எச்சரிக்கை பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தெளிவு, தெளிவில்லங்குறது இங்க விஷயம் கிடையாது... அனுபவ பாடம் போல சிறந்த ஆசானும் கிடையாது. அதனால தான் மத்தவங்க தெரிஞ்சுக்கட்டும்னு இத போஸ்ட் பண்றேன்

   Delete
 2. சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க......இவ்வளவு லூசாவா நீங்க இருப்பீங்க அதுவும் இந்த காலத்துல

  ReplyDelete
  Replies
  1. நானும் ஒரு 'ரிப்பீட்டே' போட்டுக்கறேன் .

   Delete
  2. அட, நான் இருந்துருக்கேனே... எனக்கு இத பத்தி எல்லாம் சுத்தமா தெரியாமலே போய்டுச்சு. அம்மாவ நினச்சு ஏங்கிகிட்டு இருந்த காலம், உனக்கு அம்மாவா இருக்கேன்னு சரியான வீக்னெஸ் யூஸ் பண்ணிகிட்டார். என்னை கைக்குள்ள வச்சுக்கனும்ன்னு தோணி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எதுக்கும் பேச முடியாத படி பண்ணிட்டார். அதான் மீண்டு வந்துட்டேன்ல... நான் மட்டுமில்ல, நிறைய பேர் இருக்காங்க இந்த மாதிரி, ஆனா வெளில சொல்ல தைரியம் வர்றதில்ல அவ்வளவு தான்

   Delete
 3. Unga padivu padiche thala sothuthu...

  ReplyDelete
  Replies
  1. இதுக்கே தல சுத்தினா எப்படி, இன்னும் நிறைய இருக்கே (என்னோட ப்ரண்ட்ஸ் அனுபவங்கள்)

   Delete
 4. படித்ததும் ஒரு விஷயம் ஆச்சர்யமாக இருக்கிறது. இத்தனை செய்தும் அந்த ஆள் மீது உங்களுக்கு கோபமே வரவில்லையா? ரௌத்திரம் பழகு என்று பாரதியார் சொன்னதை மறந்துவிட்டீர்களோ?

  ReplyDelete
  Replies
  1. கோபம் இல்ல கொலைவெறியே வந்துச்சு. கோபத்த வெளில காட்டிக்காம அந்த ஆள் இந்தியா வந்ததும் தூக்கி உள்ளப் போடணும்னு எல்லாம் வீட்ல சொல்லி வச்சிருந்தேன். ஆனா இப்ப அதுக்கு அவசியம் இல்லாம போச்சு. இந்த பதிவு போட்டு நாலஞ்சு நாள்ல அவர் இறந்துட்டதா நியூஸ் வந்துச்சு. இனி அவர பத்தி பேச வேணாம்னாலும் இவர மாதிரி எத்தனையோ பேர் இருந்துட்டு தான் இருக்காங்க. அவங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கலாம்ல

   Delete
 5. பாட்டிசொல்லும் அறிவுரையை விட பட்டுத் தெளியும் அனுபவமே சிறந்தது என்று உணர்ந்திருப்பீர்கள்....

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா.... இதனால மன அளவுல நிறைய பாதிக்கப்பட்டேன். அதுவும் போன் நம்பர் எல்லாம் அந்த ஆள் கிட்ட குடுத்துட்டு, ராத்திரி பகல்ன்னு விடாத அவர் கால்ஸ் னால பட்ட கஷ்டம் சொல்லி மாளாது

   Delete
 6. வணக்கம்
  படித்த போது ஆச்சரியமாய் இருந்தது.. பலர் வாழ்க்கை இப்படித்தான்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நிறைய பேர் வெளில சொல்ல தயங்குறாங்க... அது தான் பிரச்சனை... அட்லீஸ்ட் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கட்டுமேன்னு தான் இந்த பதிவு

   Delete
 7. அந்த ஆள் ஒரு லூசு போல் இருக்கிறாரே!

  ReplyDelete
  Replies
  1. கிட்டத்தட்ட அப்படியே தான்...

   Delete
 8. உங்கள் பதிவைக் கண்டேன்! பாவமென்பதா ?பரிதாபம் கொள்வதா?இனியாவது கவனமாக இருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. பாவம்ன்னும் சொல்ல வேணாம், பரிதாபமும் கொள்ள வேணாம்... இதெல்லாம் வாழ்க்கை பாடமா எடுத்துட்டு முன்னோக்கி போய்ட்டே இருக்கேன்

   Delete
 9. என்ன கொடுமை அம்மா இது! இப்படியுமா இந்தக் காலத்தில் இருந்திருகிறீர்கள். அவதானமாக இருப்பது நல்லது! மற்றவருக்கும் பயன்படக்கூடிய செய்தியுள்ள பதிவுதான்.

  ReplyDelete
  Replies
  1. பயன்படும்ன்னு தான் போஸ்ட் பண்ணினேன். வருகைக்கு நன்றி

   Delete
 10. நிச்சயம் இது உங்கள் அனுபவமாக தெரியவில்லை. (நம்ப முடியவில்லை) சகோ.
  இது உண்மையாக இருக்கக்கூடாது என்பது என் பிரார்த்தனை.
  ஒரு வேளை இது உண்மையாக இருந்தால்..., அந்த இழி பிறவியை ஏன் நீங்கள் இந்த சமூகத்தின் முன் (வலை உதவியுடன்) தோலுரிக்க கூடாது.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கான அவசியமே இல்லாம போயிட்டு அண்ணா... சிலருடைய முடிவுகள் எதிர்பாக்காவிதமா அமைஞ்சுடுது... கடவுளின் விருப்பம் போல

   Delete
 11. நேரத்தை வீணடிக்க எப்போதும் நான் விரும்பதில்லை...

  ReplyDelete
  Replies
  1. நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியல அண்ணா

   Delete
 12. Replies
  1. அண்ணா, என்னோட இந்த அனுபவங்களுக்கு நீங்களும் சாட்சியா இருந்துருக்கீங்க. உள்ளுக்குள்ள பலநேரம் ஸ்ட்ரஸ் ஆகி பேஸ் புக் வரலைனாலும் என்னோட அக்கௌன்ட்ல இருந்து ஸ்டேடஸ்கள் போஸ்ட் ஆகியிருக்கு. ஆனா எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும் இல்லையா அண்ணா, எல்லாம் கடவுளுக்கு தெரியும்

   Delete
 13. நல்லவேளையா
  இங்கே யாரும்
  பேஸ்புக் லிங்க்
  கேட்காத வரையில்
  சந்தோஷம்தான்

  ReplyDelete
  Replies
  1. ஹஹா கேட்டாலும் குடுக்குறதுல பயன் இல்ல...

   Delete
 14. திண்டுக்கல் தனபாலன்


  #நேரத்தை வீணடிக்க எப்போதும் நான் விரும்பதில்லை...

  தவறான புரிதல் தோழரே தேர்ந்தெடுக்கும்
  நட்புகளை கொண்டு
  நேரத்தை வீரியமாக்கலாம்
  பல எழுத்தாளர்கள் கவிஞர்கள்
  தங்களின் அனுபவங்களை பேஸ்புக்கில் எழுதும் போது நமக்கு அது பாடமாய் அமைகிறது.
  இன்றை இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் களமாகவும் பேஸ்புக் இருக்கிறது
  தேர்ந்தெடுத்தல் என்பது நமது கையில் தானே
  உள்ளது .

  ReplyDelete
  Replies
  1. ஆமா, ஆபத்து வரும்ங்குரதுக்காக நம்மோட திறமைகள ஒளிச்சு வச்சுட்டு முடங்கி போக கூடாது. ஆனா எந்த ரூபத்துல ஆபத்து வரலாம்னு இந்த மாதிரி அனுபவங்கள படிச்சு தெரிஞ்சுகிட்டு அத ஒதுக்கி வைக்கலாம்... அவ்வளவு தான்

   Delete
 15. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது. வேறொன்றும் சொல்ல வேண்டியதில்லை!

  பெற்றோரின் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டாலே பெரும்பாலான பிரச்சனைகள் வராது.

  இன்று எல்லார் கையிலும் ஆறாம் விரலாக செல்போனும் இண்டர்நெட் வசதியும் இருப்பது, இதுபோன்ற நிகழ்வுகளை நிச்சயம் வளர்க்கும்.

  ReplyDelete