Tuesday, 12 November 2013

சாரலடிக்கும் நேரம்...!


நாளை வருகிறேன் என்ற உன் குரல்
ஆயிரம் கவிதைகளை தோற்கடித்து
புதிதாய் ஒன்றை விதைத்து சென்றது...!

உன் வருகை தெரிவித்த கைபேசி
எண்ணிட இயலா முத்தங்களை
அரைநொடி பொழுதில் பரிசாய் பெற்று
இயக்கம் மறந்து மவுனமானது...!

உன் ராஜ வீதியில் உலாவரும்
ஒற்றை ராணியாய் கர்வம் கொண்டு
இதழோர புன்னகை ஒன்றை படர விடுகிறேன்...!

கண்ணாடி கூட கண்டிருக்குமோ
என் பல்வரிசையை...
இன்று வீட்டில் அனைவருக்கும்
காட்சிப் பொருளாகி வியக்க வைக்கிறது...!

அய்யோ செல்லமே,
உன்னை திட்டி கடிதமெழுதினேனே...
நாளை அவையெல்லாம் உன்
ரகசிய தீண்டலில் வீரியமிழக்க போகின்றன...!

பாரடா, உன் பெயரை
பல லட்சம் முறை உச்சரித்து
உன் கிண்டல் பேச்சுகளில்
நெஞ்சுருகி கொஞ்சுகிறேன்...!

உன் வருகை அறிந்த நொடி, உனக்குள் நான் தொலைந்து,
உன் கவிதை வரி ஒன்றை களவெடுத்துச் சொல்கிறேன்
உன் நேசம் கொண்டு நான் நனையும் பொழுதெல்லாம்
“தூறல் ஏறியது என் வானம்”...!

கை விரித்து காத்தே கிடக்கிறேன்,
உன் சாரலில் நனையப்போகும் பொழுதுக்காய்...!# இது ஒரு மறுப்பதிவு

29 comments:

 1. அருமை....

  கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா.... சீக்கிரம் உங்க கணினி சரியாகிடணும். எத்தன பேர் உங்கள எதிர்பார்த்துட்டு இருக்காங்க..

   Delete
  2. கவிதை மிகவும் அருமை

   Delete
 2. வணக்கம்
  ஆகா....ஆகா... கவிதை எழுதிய விதம் நன்று வாழ்த்துக்கள்

  -நன்றி-
  அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் தேங்க்ஸ் உங்க ரசனைக்கு :)

   Delete
 3. அப்படியே ஒரு புத்துணர்ச்சி துள்ளல்.. அழகு

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? அப்போ உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தேங்க்ஸ்

   Delete
 4. அருமை உங்களுக்குச் சாரல்
  எங்களுக்கு இக்கவிதை அடைமழை
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களோட அடைமழை வாழ்த்துக்கு தேங்க்ஸ்... தொடர்ந்து சாரல் அடிக்கும், வந்து நனைஞ்சுட்டு போங்க

   Delete
 5. Replies
  1. ஓட்டு போட்டதுக்கும் தேங்க்ஸ்

   Delete
 6. மழைச்சாரல் போல உங்க கவிதையும் அழகு. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ். எப்பவுமே மழைச்சாரல் அழகு தானே...

   Delete
 7. ரொம்ப நாள் ஆச்சு டா உன் கவிதையில் நனைந்து .... உணவுகளில் ஒரு உலா வரப் போகிறேன் ....:)

  ReplyDelete
  Replies
  1. அம்மா, கண்டிப்பா.... எனக்கு மனசு லேசாகணும்னா அப்பப்ப அந்த பக்கமா போறதுண்டு

   Delete
 8. சாரலாய் எனையும் நனைத்துப்போனது வரிகள். வாழ்த்துக்கள் பா.

  ReplyDelete
  Replies
  1. அட, வாங்க வாங்க, உங்கள நீங்க நனைச்சுக்கிட்டதுக்கு தேங்க்ஸ்... ஹஹா

   Delete
 9. Kavithai solum vedtham eruka athirku negar Neengala !!!

  ReplyDelete
  Replies
  1. எதுவோ சொல்ல வரீங்க, நல்லதா தான் சொல்றீங்கன்னு நினச்சுகிட்டு உங்களுக்கு ஒரு தேங்க்ஸ்

   Delete
 10. super !

  konjam (love) fell panni patichathaan puriyuthuu :) -

  summma :-}

  ReplyDelete
  Replies
  1. இத கூட புரிஞ்சுக்க முடியலனா என்ன சொல்றது, ஆனாலும் கமன்ட்ல கண்ணியம் காக்க வேண்டியது உங்க கைல இருக்கு

   Delete
 11. Replies
  1. ஏற்கனவே ஒரு நன்றி சொல்லிட்டேனே.... அதனால இது போனஸ் தேங்க்ஸ்

   Delete
 12. arumai thozhi saara mazhai pola thodara vaalthugal

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ்....

   Delete
 13. காயத்ரி நீங்க நல்லா எழுதுறிங்க காயத்ரி...கலக்குங்க.

  ReplyDelete