Monday, 18 November 2013

நல்லத்தங்காள் - ஒரு அலசல்கவிதை எழுதுரதுங்குறது ஒரு மாதிரி போதை. சில பேர் அதுல ரொம்ப கைதேர்ந்தவங்களா இருப்பாங்க. அவங்க நினச்சா உடனே அடுத்த நிமிஷம் வார்த்தைகள் அவங்களுக்கு வசப்படும். ஆனா எனக்கு அப்படி இல்ல, அதுவா அமையணும், அப்படி அமைஞ்சுட்டா வார்த்தைகள் என்னோட வசம் வரதுல தயக்கமே இருக்காது. ஆனாலும் ரொம்ப நாள் எதுவுமே எழுதாம இருந்தேன். எதோ ஒரு தேக்கம். எப்பவுமே நான் சொல்லுவேன், இதே மாதிரி ஒரு தடவ நான் எழுத முடியாம போனப்போ கார்த்திக்கோட கவிதை தான் என்னை மறுபடியும் எழுத தூண்டிச்சுன்னு. அது தான் இப்பவும் நடந்தது. மறுபடியும் கார்த்திக் எழுதின ஒரு கவிதை என்னை மறுபடியும் இந்த பாலையாய் ஒரு வெற்றுக் கேவலை எழுத தூண்டுச்சு. எல்லோரும் ஒரு தடவ படிச்சு பாத்து அத பத்தின உங்களோட கருத்துக்கள தயங்காம சொல்லுங்க. எந்த கவிதை இத எழுத தூண்டிச்சுன்னும் நீங்க தெரிஞ்சுக்கணும்ல, அப்போ இதையும் படிங்க, படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.

சரி, இப்போ விஷயம் இது இல்ல, நான் சொல்ல வந்தது வேறொரு விஷயம் பற்றி. இந்த கவிதை பத்தி பிரகாஷ் அண்ணா கூட டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தப்போ அவங்க நல்லத்தங்காள் கதை பத்தி சொன்னாங்க. அது என்ன விசயம்னு இன்னொரு நாள் பாக்கலாம். இப்போ, நான் எழுதப் போற இந்த பதிவு எனக்கு நல்லதங்காள் கதைல வந்த பல சந்தேகங்களை பத்தினது.


என் அம்மா சின்னப் பொண்ணா இருக்குறப்போ அவங்க ஊர்ல பாவை கூத்து எல்லாம் போடுவாங்களாம். தாத்தா வீட்ல தான் அந்த டீம் வந்து தாங்குவாங்களாம். அதனால அம்மா எனக்கு நல்லத்தங்காள் கதை எல்லாம் நான் சின்ன வயசா இருந்தப்போ சொல்லியிருக்காங்க. அப்போ எனக்கு அந்த கதைல பெரிய அளவு சுவாரசியம் இருந்ததில்லன்னு தான் சொல்லணும். அம்மா அத பத்தி சொன்ன உடனே “போம்மா, யாராவது அவங்க பெத்த புள்ளைங்கள கொல்லுவாங்களா? இனி இந்த கதைய சொல்லாத”ன்னு ஓடிடுவேன்.

அப்புறமா அம்மாவும் அந்த கதையை சொல்றதில்ல, நானும் நாலு நாள் முன்னாடி பிரகாஷ் அண்ணா அதை பத்தி பேசுற வரைக்கும் அதை பத்தி நினைச்சுப் பாத்ததும் இல்ல.


இப்போ, நல்லத்தங்காள் என் மனசுக்குள்ள வந்து மொத்தமா உக்காந்தாச்சு. ஒரு பொண்ணு, அதுவும் ஏழு குழந்தைகள பெத்த ஒரு பொண்ணு, எவ்வளவு மனக்காயம் அடஞ்சுருந்தா அவளோட குழந்தைகள அவளே கொன்னுருப்பா? அவளோட மனஉறுதி அப்போ எப்படி பட்டதா இருந்துருக்கும்?

நல்லத்தங்காள் கதைய பத்தி அம்மாகிட்ட இப்போ கேக்க முடியாது. கூகிள்ல தேடி பார்க்கலாம்னா எனக்கு ஏனோ சரியான ஒரு விடை கிடைச்ச மாதிரியே இல்ல. அதனால நான் என்னோட பேஸ் புக்-ல இத பத்தி ஒரு ஸ்டேடஸ் போட்டேன். பிரகாஷ் அண்ணா ஒரு பி.டி.எப் பைலும் கீற்று டாட் காம்ல வந்த நல்லத்தங்காள் கதையோட லிங்க்கும் தந்தாங்க. அப்புறம் ரவி சங்கர் அண்ணா, லியாகத் அலி சாச்சா, மீரா அம்மா, பிரேமா வெங்கட் இவங்க எல்லாம் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச லிங்க்ஸ் குடுத்தாங்க. அத எல்லாம் வச்சு படிச்சு பாத்தப்போ எனக்கு அதுல கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு.

அது என்னென்ன சந்தேகம்னா...

1. இந்த கதை நடைபெற்றதா சொல்ற இடம் எது? 

2. நல்லத்தங்காள் பிறந்த ஊருக்கும் திருமணம் முடிந்து போன ஊருக்கும் உள்ள தொலைவு எவ்வளவு? 

3. நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகளாம். அப்படினா சம்பவம் நடக்குறப்போ அவங்க வயசு என்ன இருக்கும்? 

4. ரொம்ப பெரிய பஞ்சம் வந்துச்சுன்னு சொல்றாங்க, அப்படினா பக்கத்து பக்கத்துக்கு ஊர் காரங்களுக்கு தெரியாமலா போயிருக்கும்? 

5. நல்லத்தங்காள் அரச குடும்பத்த சேர்ந்தவளா?


பெரும்பான்மையான தகவல் வச்சு பாக்குறப்போ நல்லத்தங்காள் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டத்துல உள்ள அர்ச்சுனாபுரம்ன்னு தெரியுது. ஆனாலும் ரெண்டு இடங்கள்ல அவளோட சொந்த ஊர் மதுரைன்னு இருக்கு.

அவளை கல்யாணம் பண்ணிகுடுத்த ஊர் சிவகங்கை மாவட்டத்துல உள்ள மானாமதுரைன்னு சில பேர் சொல்றாங்க. சிலபேர் அவள காசியை ஆண்ட மன்னன் காசிராஜனுக்கு அவளை கல்யாணம் பண்ணி குடுத்ததா சொல்றாங்க. காசியில இருந்து ஒரு பெண், தன்னோட ஏழு குழந்தைகளையும் கூட்டிகிட்டு தன்னந்தனியா மதுரை வரை வர முடியுமா? அதுவும் சாப்பிட கூட எதுவுமே கிடைக்காத நிலைலன்னு நான் ரொம்பவே யோசிச்சுட்டேன். அப்புறமா, அவள் அவ்வளவு தூரம் போயிருக்க முடியாது, அவளோட கணவர் பெயர் காசிராஜன்ங்குரதால அப்படி வழி வழியா வந்த கதைல திரிஞ்சு போயிருக்கலாம்னு நினைக்குறேன்.

அடுத்து அவ குழந்தைகளை பற்றினது. அவள ஏழு வயசுல கல்யாணம் பண்ணி கொடுத்ததாகவும், அவளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்ததாகவும் அதன் பிறகு பனிரெண்டு வருஷம் கடுமையான பஞ்சம் நிலவியதாகவும் ஒரு இடத்துல சொல்லியிருக்காங்க. அப்படி பாத்தா அவளோட முதல் குழந்தைக்கு குறைந்தபட்சம் பதினாறு வயசு ஆகியிருக்காதா? அவ்வளவு பெரிய பையன் எப்படி பாலகனாகவே இருந்துருக்க முடியும்?

இன்னொரு இடத்துல நல்லத்தங்காள் காசி மன்னரின் மனைவினும், அவருக்கு ஏழு குழந்தைகள்ன்னும், அதன் பிறகு ஏழு ஆண்டுகள் பஞ்சம் வந்துச்சுன்னும் சொல்லியிருக்காங்க. அப்படி பாத்தாலும் முதல் பையனுக்கு பதினாலு வயசு இருக்காதா? அந்த காலத்துல அது கல்யாணம் பண்ற வயசில்லையா? அந்த பையனுக்கு ஒரு ஆணுக்குரிய எல்லாம் பொறுப்புகளுமே இருந்துருக்கணுமே, அதுவும் ஒரு வருங்கால அரசன் எப்படி அம்மா பின்னாடி போனான்?

அதே கதைல, நல்லத்தங்காளோட அண்ணி கதாபாத்திரம் சொல்றதா ஒரு காட்சி வருது. அதாவது திருமணம் முடிந்த பத்து வருடத்துக்குள் ஏழு பிள்ளை பெற்று விட்டாளா? என்பது தான். ஏற்கனவே ஏழு குழந்தைகள் பிறந்து ஏழு வருடம் என்பது இங்கு திரிந்து விட்டிருந்தாலும், பஞ்ச காலத்தில் அவள் குழந்தைகளை பெற்றாள் என்றால் குழந்தைகளின் வயது சரியாய் இருந்திருக்கும்.

தங்கச்சி மேல பாசமா இருக்குற ஒரு அண்ணன், அதுவும் ஒரு அரசன் அவளை திருமணம் செய்து கொடுத்ததோட சரி, அப்புறம் பாக்கவேயில்லைன்னு சொல்றது நம்புற மாதிரி இல்ல. அப்படியே அரச குலங்களுக்குள்ள தகவல் பரிமாற்றங்களாவது இருந்திருக்காதா? பஞ்சம் வந்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஒரு அரச வம்சமே அழிஞ்சுதுன்னா அது ஒரு வரலாற்று நிகழ்வு இல்லையா? அதுபத்தின கல்வெட்டுகளோ, ஒலைசுவடிகளோ எங்கயாவது இருக்குதா?

வாய்வழியா சொல்லப்படுற நாட்டார் கதைகள்ல நல்லத்தம்பியும் நல்லத்தங்காளும் அன்பான ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவங்களா தான் சொல்லப்பட்டுருக்காங்க. அதுவே ஏன் உண்மையா இருக்க கூடாது. அவங்க மேல இருக்குற அதீத அன்புல, கதைசொல்லிகள் காலப்போக்கில் அவங்கள அரசகுடும்பத்த சேர்ந்தவங்களா ஏன் சித்தரிச்சிருக்க கூடாது?

இதெல்லாம் வழி வழியா வந்த கதைங்குறதால நிறைய விஷயங்கள் திரிஞ்சு போய் இருக்கு. எல்லோரும் அவங்கவங்களுக்கு தகுந்த படி கற்பனைகள கலந்து இந்த கதைய அழியாம இவ்வளவு நாள் பாதுகாத்து வந்துருக்காங்க. உண்மையான கதை மறக்கடிக்கப் பட்டிருந்தாலும் நல்லத்தம்பி, நல்லத்தங்கள்ங்குற பெயர் மாறல, அவளுக்கு ஏழு குழந்தைகள்ங்குறது மாறல, பஞ்சம் பட்னியால அவளோட குழந்தைகளை அவளே கொன்னுட்டாங்குறதும் மாறல. அதெல்லாம் விட, வீட்டுக்கு பசின்னு வந்தவங்கள கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம வெளில துரத்தி விட்ட ஒரு பெண்ணால ஒரு அழகான குடும்பமும் அழிஞ்சு, அந்த பெண்ணோட கணவனும் அழிஞ்சான்ங்குறதும் மாறல. தன்னோட தங்கச்சியும் அவ குழந்தைகளும் தன் மனைவியால செத்து போனதால அந்த இடத்துலயே உயிரை விட்ட அண்ணனோட பாசமும் மாறல.

இனி நம்மால உண்மை எதுன்னு கண்டுபிடிக்க முடியலைனாலும், இந்த கதைக்கரு கண்டிப்பா எல்லோருக்கும் உணர்த்தப்படணும். வீட்டுக்கு ஒரே ஒரு குழந்தையை வச்சுக்கிட்டு சொந்த பந்தம்னா என்னன்னே தெரியாத நம்மோட வருங்கால சந்ததிக்கு நம்மோட பாரம்பரிய நடைமுறைகளையும், அது தவறினா ஏற்படுற விளைவுகளையும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது நம்மோட பொறுப்பு இல்லையா?

இனி கூட்டுக்குடும்பங்கள் அமையுமான்னு தெரியாது, ஆனா மனிதநேயத்த, கஷ்டபடுற உயிர்கள கண்டா இல்லன்னு சொல்லாத ஒரு பண்பை நம்மோட சந்ததிக்கு போதிக்க வேண்டியது நம்மோட பொறுப்பு இல்லையா?

அன்பா இருப்போம்

எந்த உயிரையும் இகழாது இருப்போம்

யாரும் யாருக்கும் தாழ்ந்தவரில்லைங்குற கோட்பாடை கடைபிடிப்போம்

கஷ்டப்படுற உயிர்களை தேவை அறிந்து அரவணைப்போம்.
நான் இன்னொரு பதிவோட உங்கள சந்திக்குறேன்.

21 comments:

 1. கடைசி நான்கும் முத்தான வரிகள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா.... வாழ்த்துக்கு நன்றி

   Delete
 2. இனி கூட்டுக்குடும்பங்கள் அமையுமான்னு தெரியாது, ஆனா மனிதநேயத்த, கஷ்டபடுற உயிர்கள கண்டா இல்லன்னு சொல்லாத ஒரு பண்பை நம்மோட சந்ததிக்கு போதிக்க வேண்டியது நம்மோட பொறுப்பு இல்லையா?
  கண்டிப்பாக இதை வரும் சந்ததிக்கு உணர்த்த வேண்டியது பெற்றோர்கள் கடமை. நல்ல அலசல்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் ஆமா, ஆனா இது இயந்திரத்தனமான உலகமாவே இயங்க ஆரம்பிச்சுடுச்சு

   Delete
 3. கடைசி வரிகள் அருமை. எனக்கு தெரிஞ்ச வரை நல்லதங்காள் பிறந்தது ஒரு சாதாரண குடும்பத்துல, வாகக்ப்பட்டது கொஞ்சம் பெரிய இடம் அவ்வளாவுதானே தவிர, அரசக் குடும்பம்லாம் இல்ல

  ReplyDelete
  Replies
  1. நானும் அப்படி தான் நினைக்குறேன் அக்கா... காரணம், அது எப்படி ஒரு ராஜ வம்சம் பஞ்சத்துல அழிஞ்சு போகும்? தேடி வந்த இடத்துல சாப்பிட ஒண்ணுமே இல்லாம போகும்?

   Delete
 4. காயத்திரி தேவி அப்படின்னு யாருமே கூப்பிடக்கூடாது.
  ஏன் அப்படின்னா அது நியாயமில்ல.

  பின்ன எப்படி கூப்பிடுவது ?

  காயத்ரி தேவி பி.ஹெச்.டி. அப்படின்னு கூப்பிடுங்க .

  எதுக்காகவ அப்படி சொல்றீக...

  நான் புறந்ததிலேந்து அதாவது எழுவது வருசமா இந்த கதைய சொல்லிக்கினு இருக்காக இல்லையா..

  யாருக்காச்சும் ஒருவருக்காவது இந்தக்கதைக்குள்ளார போயி இதுலே இன்னாடா இருக்குது அப்படின்னு பார்த்தீகளா....

  அம்மா காயத்ரி அம்மா இந்த நல்ல தங்கா கதைய பிச்சு பிச்சு அலசி அலசி பார்த்து , இந்த கதை மூலமா என்னதான்யா சொல்றாங்க அப்படின்னு சொல்றாங்க..

  கதை எல்லாத்துக்குமே ஒரு கருத்து உள்ளார இருக்கணும். ஒரு நீதி, ஒரு பாரம்பரியம். இருக்கணும். அத மேலோட்டமா சொன்னா என்ன மாதிரி மர மண்டைக இல்லைன்னா மறை கழன்ற மண்டைங்க புரிஞ்சுக்காதுங்க.

  பகுத்தறிவுக்கு உகந்ததா இல்லையே அப்படின்னு சொல்லிட்டு போயிடுவாக.

  காயத்ரி அம்மா அப்படி சொல்லிட்டு போயிட்டாங்களா ? இல்லையே...

  இந்த கதைக்குள்ளே என்ன நீதி கிடைச்சு இருக்குது அப்படின்னு பாத்திருக்காங்க.

  அவங்களுக்கு ஒரு சபாஷ் போடுங்க.

  இல்லையண்ணா ஒரு ஓ போடுங்க...

  இதே மாதிரி, பாகவதம் அப்படின்னு ஒரு புராணம் இருக்குது. அதுலே ஒரு இருபது ஆயிரம் கத இருக்குது.

  மேலோட்டமா பார்த்தா இப்படி எல்லாம் நடக்குமா அப்படின்னு நினைக்கலாம்.

  அப்ப கதைக்குள்ளே பொய் பார்த்தா ஒவ்வொரு கதைக்கு உள்ளாரையும் ஒரு நீதி இருக்குது.

  அதிலே இருந்து இனிமே ஒவ்வொண்ணா எடுத்து நம்ம சுற்றங்களுக்குப் புரிய வையுங்க..

  அடடா..

  பதிவு எப்படின்னு சொல்லவே மறந்து போச்சுங்க...

  சும்மா சொல்லக்கூடாது.

  சூப்பருங்க.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. அவ்வவ்வ்வ்வ்..... நானும் தாத்தா வருவாரா மாட்டாரான்னு தெரியாம தான் இந்த பக்கமா கூப்பிட்டேன், வந்துதும் இல்லாம இப்படியா என்னைய .................................. அவ்வவ்வ்வ்வ்..... அப்புறம் தாத்தா, இன்னும் ஒன்னரை வருசத்துல நான் நிஜமாவே பி.ஹச்.டி பட்டம் வாங்கிடுவேன், அதுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க

   Delete
  2. My Blessings are always there for U.
   That U R on ur way to receive the Ph.D. does not surprise me though,as the intrusive way u analyse the ongoings on a conventional story line.
   I am no less interested in knowing the discipline (or the specific subject )in which u r to get the doctorate. Is it anything related to nano technology /particle /quantum physics, bio sciences, or even a science subject remotely connected to meta physics, astronomy, or philology, psychiatry or psychology, or philosphy particularly western ?
   subbu thatha.
   meenasury@gmail.com

   Delete
  3. பி.ஹச்.டி பட்டம் விரைவில் பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

   Delete
  4. தேங்க்ஸ் சுப்பு தாத்தா.... அதென்ன நீங்க எதுவும் சைக்காலஜி படிச்சிருக்கீங்களோ?

   Delete
  5. தேங்க்ஸ் திண்டுக்கல் தனபாலன் அண்ணா.... அதுக்காக சீக்கிரமா எல்லாம் முடிக்க முடியாது. ஒன்னரை வருஷம் ஆகும்

   Delete
 5. நல்லத்தங்காள் கதையை நானும் சிறு வயதில் பாவை கூத்தாக பார்த்திருக்கிறேன், வழி வழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வந்ததால் சில சம்பவங்கள் மிகைபடுத்தப்பட்டதாகவே தோன்றுகிறது. நல்ல அலசல். நீயே ஒரு நவீன நல்லத்தங்காள் கதையை எழுத வேண்டியது தானே

  ReplyDelete
  Replies
  1. ட்ரை பண்ணலாம்... பண்ணாமலும் இருக்கலாம்... கருது போட்டதுக்கு தேங்க்ஸ் மேடம்

   Delete
 6. பொன்மொழிகள் நான்கும் அனிவரும் பின் பற்ற வேண்டிய ஒன்று நானும் முயற்சிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் கண்டிப்பா பின்பற்றுங்க...

   Delete
 7. ninga sonna kadhai na kelvi padala akka. lost la sonna varikal sariya soninga akka.

  ReplyDelete
  Replies
  1. மகேஷ், நிறைய பேர் கேள்விபடாம தான் இருக்காங்க, அதனால தான் இத பத்தி டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்

   Delete
 8. Replies
  1. அருமையான பகிர்வு

   Delete
  2. தேங்க்ஸ்ங்க உங்களோட பாராட்டுக்கு...

   Delete