Friday 28 March 2014

மிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)


மிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த விதமான டயலாக்கும் இல்லாம பின்னணி இசைலயே காமடிய சேர்த்துட்டு, முட்ட கண்ண வச்சுட்டு திரு திருன்னு முழிச்சுட்டு, பேக்கு மாதிரி மூஞ்சிய வச்சுட்டு சேட்டைகள் பண்ற மிஸ்டர் பீன் ஏனோ எனக்கு ஹீரோவா தெரிஞ்சார்... அந்த அளவு விழுந்து விழுந்து சிரிக்க வைப்பார்...

அப்புறமா, எப்பவுமே சேட்டை பண்ணிட்டு, வீட்டை விட்டு வெளியிலயே சுத்த ஆரம்பிச்ச காலங்கள்ல பீன் கொஞ்சம் கொஞ்சமா என்னோட ஹீரோ இமேஜ்ல இருந்து விலகி, எதோ கோமாளின்னு ஒதுங்கி போற அளவு ஆகி போச்சு... அப்புறமா நான் மிஸ்டர் பீன் பத்தின எந்த படத்தையும் பாத்ததே இல்ல....

ஒரு வருஷம் முன்னாடி பிரெண்ட் ஒருத்தன் கொஞ்சம் படங்கள் தந்தான். நாம தான் படம் பாக்குறதுல சூப்பர் பாஸ்ட் ஆச்சே, போன வாரம் தான் அவன் என்னென்ன படங்கள் தந்துருக்கான்னு பாத்தேன். அதுல மிஸ்டர் பீன் படங்கள் ரெண்டு இருந்துச்சு...

போன வாரமே அத பாக்க முயற்சி பண்ணி அப்புறம் போர் அடிக்கும்னு நானே முடிவு பண்ணி பாக்காம விட்டுட்டேன். அப்புறமா இன்னிக்கி தான் வழக்கத்துக்கு மாறா ரொம்ப போர் அடிக்குதேன்னு படத்த பாக்க ஆரம்பிச்சேன்.

இந்த படத்த காமடி படமா பாக்க ஆரம்பிச்சிருந்தேன்னா கண்டிப்பா போர் அடிச்சிருக்கும். ஆனா, இது ஒரு செண்டிமெண்ட் படம். படம் முழுக்க எதோ ஒரு வகைல ஒரு உணர்வ தெளிச்சி விட்டுருக்காங்க...

படம் ஆரம்பிக்குறப்பவே வட்ட மேஜை மாநாடு மாதிரி ஒரு கும்பல் தீவிரமா முகத்த வச்சுட்டு எதையோ டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க... அப்படியே அடுத்த ஷாட்-ல பீன் என்ட்ரி... அவசர அவசரமா கிளம்புற அவரு, காப்பி கோப்பைய தட்டி விட, சீனி, பால், தூள்னு எல்லாத்தையும் வாய்ல போட்டே கொப்பளிச்சே கலக்கி குடிச்சு முடிக்குறார். ஒரு ஆர்ட் கேலரியில வேலை பாக்குற அவரு டூட்டி நேரத்துல தூங்கி வழியிறாரு...

இப்படி சதா சர்வ காலமும் தூங்கி வழியுற பீன அம்பது மில்லியன் டாலருக்கு வாங்கின ஒரு வரைபடத்த பாதுக்காக்குற பணில கோர்த்து விட்டுடுறாங்க ஆர்ட் கேலரி மக்கள். இவரே ஒரு தூங்குமூஞ்சி, இவர வேற செக்யூரிட்டியா போட்டா விளங்கவா போகுது?

அப்புறம் என்ன? படம் முழுக்க இவர் பண்ற அலம்பல் தான்.

அந்த படத்த பாதுகாக்க வர்றப்பவே இவர் ஏர்போர்ட்ல பண்ற அட்டகாசம் இருக்கே... அங்க இருக்குற போலிஸ்க்காரர் துப்பாக்கிய பாத்து இவரும் துப்பாக்கிய எடுக்க ட்ரை பண்ண, இவர தீவிரவாதின்னு போலிஸ் துரத்த, ஒரு இடத்துல இவர மடக்கி பிடிக்குற போலிஸ் “புட் யுவர் கன் டௌன்”ன்னு சொன்னதும் நடுங்கிகிட்டே துப்பாக்கிய எடுத்து கீழ வைப்பார் பாருங்க.... ஹஹா வயிறு குலுங்க சிரிக்க வச்சிடுச்சு.

போற இடத்துல மிஸ்டர் டேவிட்டோட குடும்பத்தோட தங்கிக்குறார். இந்த டேவிட், அந்த வரைப்படத்த பாதுக்காக்குற பெரிய பொறுப்புல இருக்குறவர். அந்த குடும்பத்தோட பீனுக்கு ஏற்படுற அனுபவங்கள், அவர் பண்ற முட்டாள்த்தனத்தால பாழாகி போற அந்த வரைப்படம்ன்னு படம் கொஞ்சம் திக் திக்ன்னு போகுது.

நம்மாளு தான் எதுக்கும் அஞ்சாதவராச்சே, பிரச்சனைய சமாளிச்சாரா, அந்த வரைப்படம் கடைசியில என்னதான் ஆச்சுங்குற கேள்விக்கு எல்லாம் பதில சொல்லிட்டு சுபம் சொல்லி தூங்க போறார்...

இதுல பீனை விட என்னை அதிகம் கவர்ந்தவர்ன்னு பாத்தீங்கனா அது டேவிட் தான்.

பீன் பண்ற அழிச்சாட்டியம் பொறுக்க முடியாம வீட்டை விட்டு கிளம்பிடுற அவரோட குடும்பத்த விட்டுட்டு, பீன் கூட சுத்துறார் டேவிட்... சின்னப்புள்ளைல தொலைச்சுட்ட குழந்தைத்தனத்த பீன் கிட்ட பாக்குற அவரு, விரும்புராரோ இல்லையோ, பீன் கூடவே இருக்குறார்.... அட, ரெண்டுபேரும் பாத்ரூம்ல குளிக்குறதுக்கு சின்னப்புள்ள மாதிரி சண்டையெல்லாம் போட்டுக்குறாங்க... சமைச்சு குடுக்குறேன் பேர்வழின்னு சமையல் அறையையே அதகளமாக்கி வச்சிட்டு அப்பாவி மாதிரி முளிக்குற பீன பாத்து இவர் ஒரு லுக் விடுவார் பாருங்க.... ஹஹா... செம.... பீன் பற்றி தப்பான தகவல் குடுத்து தன்னோட கோர்த்து விட்டுட்டாங்கன்னு தெரிஞ்ச உடனே மனுஷன் விரக்தியா அதையும் ஏத்துக்கிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க... பலத்த கைதட்டல் அவருக்கு...

அரும்பாடு பட்டு தனக்கு கிடைச்ச பெரிய பொறுப்பு பீனால போகப் போகுதுன்னு தெரிஞ்சும் ஏனோ பீன் மேல அதிகமா கோபத்த காட்டாம தனக்குள்ளயே வேதனை பட்டுக்குறார். பார்ல போய் தண்ணியடிச்சுட்டு பீன் கைய புடிச்சுட்டே தெருவுல சுத்துறார். அவர் படுற மனவேதனைய சகிக்க முடியாம, பீன் எப்படியாவது தான் நாசம் பண்ணின அந்த வரைபடத்த சரிபண்ண முடியுமான்னு முயற்சி பண்றார்...

படம் முடிஞ்சுதுன்னு நினைக்குறப்பவே கதையை இழுக்குறதுக்காக கொஞ்சம் மொக்கை போட்ருக்காங்க. எல்லாம் சுபமேன்னு வெளில வர்ற டேவிட்டுக்கு அவர் பொண்ணு விபத்துல மாட்டிக்குறதா தகவல் வருது. அவர் கூடவே மருத்துவமனைக்கு போற பீன், அங்க பண்ற சேட்டைகள் சிரிக்க வேணா வைக்கலாம், ஆனா அறிவு, அவர் பண்றது படு அபத்தம், இப்படி பட்ட சீன்ஸ் வச்சிருக்கவே கூடாதுன்னு என் மண்டைல ஓங்கி அடிச்சு அடிச்சு சொல்லிச்சு. அவ்வ்வ்வ்....

அந்த விபத்துக்கு அப்புறம், பீனை முழுசா ஏத்துக்குற டேவிட் குடும்பத்தோட சந்தோசமா கொஞ்ச நாள் கழிக்குறார் பீன்....

எல்லார்கிட்ட இருந்தும் டாட்டா காட்டி கிளம்பி, தன்னை வழியனுப்பி விட வர்ற டேவிட்ட ஓடி வந்து கட்டிக்குற போது, கண்ணுல தண்ணி வந்துடுது... லவ்வர்ஸ் மட்டும் தான் கட்டிக்கணுமா என்ன? இவங்க கட்டிக்குறத பாருங்க... என்ன ஒரு சீன்... அந்த கொஞ்சல்ஸ் பாக்கவே முழு படத்தையும் பாக்கலாம்...

இப்படி படம் முழுக்க முழுக்க ஒரு நட்போட பாசத்த அதிகம் காமடி கலக்காம தெளிச்சு விட்டுருக்காங்க...

ஆனாலும் எனக்கு பிடிக்காத சீன்னு பாத்தா, மூக்கு ஒழுகுறப்போ அத கர்சீப்ல அவர் சிந்துற சீன், வாந்தி எடுத்து வச்சிருக்குற பேப்பர் பைய பிடுங்கி ஊதி, தூங்கிட்டு இருக்குற மனுஷன் முகத்துக்கு நேரா அடிச்சி உடைக்குறது.... ஹய்யே.... மூஞ்சி சுளிக்க வச்சிடுச்சு. இதே சீனை சின்னப் புள்ளையா இருக்குறப்போ பாத்திருந்தா விழுந்து விழுந்து சிரிச்சிருப்பேனோ என்னவோ?

இத எழுதிட்டு இருக்கும் போது மறுபடியும் அந்த க்ளைமாக்ஸ் பாத்துட்டு இருக்கேன்.... கண்டிப்பா நீங்களும் பாருங்க.... உங்கள அறியாம ஒரு புன்னகை உதட்டுல வரும். இழந்து போன நட்புக்கள் கண்முன்னால வந்து ஹாய் சொல்லுவாங்க....

இப்படியே பாத்துட்டு இருந்தா எப்படி, போங்க போங்க, நீங்களும் உங்க பிரெண்ட்ஸ் பத்தி, அவங்க கூட லூசுத்தனமா சுத்தினத பத்தி யோசிச்சுட்டே இருங்க... நான் அப்புறமா வர்றேன்....


14 comments:

  1. தொலைக்காட்சியில் என்று போட்டாலும் மீண்டும் ரசிக்கத்தக்க படம்...

    ReplyDelete
  2. எனக்கும் ரொம்ப பிடிச்ச படம். ஆனாலும் ரோவன் ஆட்கின்சன சின்னத்திரையில் ரசிச்ச அளவுக்கு பெரிய திரையில் மக்கள் ரசிக்கல.. :( :(

    பீன்'ஸ் ஹாலிடே பாருப்பா.. அதுவும் நல்லா இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. சின்னத் திரைல அவரோட பங்கு குட்டி குட்டி நிகழ்ச்சியா வரும் அண்ணா... கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம் அவர் கோமாளி சேட்டைகளை பாக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்... நானே அவர் பிரெண்ட் கேரெக்டர தான் ரொம்ப ரசிச்சேன்....

      ஹாலிடே பாத்துட்டேன் அண்ணா... இன்னொரு நாள் அத பத்தி எழுதணும்

      Delete
  3. Mr. Bean.... மிகவும் ரசித்த ஒரு கதாபாத்திரம். முழு நீள படங்களைப் பார்த்ததில்லை. ஆனாலும் தொலைக்காட்சியில் அதுவும் POGO-வில் பார்த்து பல முறை ரசித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹா... குட்டி குட்டியா பாக்க ரொம்ப நல்லா இருக்கும் :)

      Delete
  4. mr.bean எப்பவுமே ரசிக்கும் பாத்திரம்....

    ReplyDelete
  5. சிறியவர்கள் பெரியவர்கள் முதற்கொண்டு அனைவருமே ரசித்து மகிழக்
    கூடிய நகைச்சுவையாளர் .வேற்று மொழியினர் என்றாலும் இவரது
    நடிப்புத் திறனால் மட்டுமே நகைச்சுவைகளை வெளிக்காட்டி வருபவர் .
    எங்களுக்கும் இவரது நகைச்சுவைகள் மிகவும் பிடிக்கும் .சிறப்பான
    விமர்சனத்திற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .

    ReplyDelete
    Replies
    1. உங்களோட வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் தேங்க்ஸ்

      Delete
  6. //அந்த படத்த பாதுகாக்க வர்றப்பவே இவர் ஏர்போர்ட்ல பண்ற அட்டகாசம் இருக்கே... அங்க இருக்குற போலிஸ்க்காரர் துப்பாக்கிய பாத்து இவரும் துப்பாக்கிய எடுக்க ட்ரை பண்ண, இவர தீவிரவாதின்னு போலிஸ் துரத்த, ஒரு இடத்துல இவர மடக்கி பிடிக்குற போலிஸ் “புட் யுவர் கன் டௌன்”ன்னு சொன்னதும் நடுங்கிகிட்டே துப்பாக்கிய எடுத்து கீழ வைப்பார் பாருங்க.... ஹஹா வயிறு குலுங்க சிரிக்க வச்சிடுச்சு.
    //
    நானும் இந்த படத்தை பார்த்துருக்கேன் !!!!

    வசனம் பேசாம முக பாவனைகளில் சொல்ல வந்ததை புரிய வைத்து,சிரிக்க வைத்த பீன், உண்மையிலேயே ஓரு மேதை தான்..

    ReplyDelete
    Replies
    1. அஷ்டக்கோணலா முகத்த வச்சிருந்தாலும், அந்த சீன்ல அவர் எக்ஸ்பிரஸன் செம....

      Delete
  7. திரும்பத் திரும்ப பார்த்தாலும் பீன் படங்கள் சலிப்பை ஏற்படுத்தாதவைதான்...!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் உண்மை தான்.... பலபேருக்கு சலிக்கவே சலிக்காது

      Delete