Monday, 6 January 2014

தேவதை கதைகள்... (1)


அதிகமா, வழவழன்னு பேசாம, நான் உங்களுக்கு ஒரு கதை சொல்ல போறேன்... வாங்க, படிக்கலாம்.

(அதுக்கு முன்னாடி ஒரு முன்குறிப்பு: இந்த கதைய ஏற்கனவே பேஸ் புக்ல படிச்சுட்டேன்னு சொல்றவங்க, இருந்து முழுசா படிச்சுட்டு போங்கன்னு கேட்டுக்குறேன், முக்கியமா நம்ம கோவை ஆவி அண்ணாகிட்ட)

அது ஒரு அழகான ரோஜா தோட்டம். ரோஜானாலே அழகு தானேங்க, அப்புறம், தனியா வேற அத டிஸ்க்ரைப் பண்ணனுமா?

ஆனாலும், ஒரு பக்கம், வெள்ளை ரோஜா, அதுக்கு அடுத்து மஞ்சள் ரோஜா, அப்புறம் சிகப்பு ரோஜா, ஹை..... பாருங்களேன், அந்த பிங்க் கலர் ரோசஸ் எவ்வளவு அழகுன்னுன்னு. வாங்க, பக்கத்துல போவோம்.

ஷ்..... அதுல ஒரு பட்டர்ப்ளை தேன் குடிக்குது பாருங்க. நாம டிஸ்டர்ப் பண்ண கூடாது, இங்க இருந்தே கொஞ்சம் க்ளோஸ்ல ஜூம் பண்ணுவோம். அட, என்ன ஆச்சர்யம், இது ஒரு fairy-ங்க... அதாங்க, நம்ம தேவதை கதைகள்ல வர்ற குட்டி தேவதை.

அதோட சிறகுகள பாத்தீங்களா, வானவில் வண்ணத்துல பட்டு மாதிரி கண்ணாடி மாதிரி கூட இருக்கு. அத சுத்தி ஒரு மத்தாப்பு பொறி பறந்துட்டு இருக்கு பாருங்க. கைல ஒரு குட்டி மந்திர கோல், அத வச்சி தான் இந்த உலகத்தோட சந்தோஷ கதவுகள திறந்து விடுதுன்னு நினைக்குறேன்.

ஒரு கைய இடுப்புல வச்சுட்டு, இன்னொரு கைல மந்திரக்கோல் வச்சுட்டு அந்த ரெண்டு சிறகையும் படபடன்னு அடிச்சுட்டே ஒரு பூவுல இருந்து இன்னொரு பூவுக்கு பறந்து போகுது.

அது போட்டுருக்குற ரோஸ் கலர் ஏஞ்சல் டிரஸ் பாருங்களேன், அதுல வைரம் பதிச்சா மாதிரி எப்படி மின்னுது பாருங்க... ஹைய்யோ, பாத்துட்டே இருக்கலாம் போல இருக்குல....

சரி, சரி, அது பறக்குற அழக பாத்துட்டே இருக்காதீங்க, இதோ இங்க நான் உங்க பட்டர்ப்ளை உங்களுக்கு குட் மார்னிங் சொல்றேன். நீங்களும் குட் மார்னிங் சொல்லுங்க...

குட் மார்னிங் சொல்லிட்டீங்கல, இனி கதைய கண்டிநியூ பண்ணலாம். வாங்க, இன்னும் கொஞ்சம் பக்கத்துல போய் பாக்கலாம்.

இப்போ நம்ம குட்டி தேவதை ஒரு ஒரு வெள்ளை ரோஜா பூவுல போய் ரெஸ்ட் எடுக்குது. ஹைய்யோ, அதென்ன, குட்டி தேவதை இறுமுது?

பாவம், நம்ம குட்டி தேவதைக்கு உடம்பு சரியில்ல. எதனால உடம்பு சரியில்ல, நமக்கெல்லாம் சந்தோசத்த அள்ளிக் குடுக்குற இந்த தேவதை ஏன் திடீர்னு சோர்ந்து போச்சு?

இப்போ எனக்கும் இருமல் வருது. லொக்.... லொக்.... ம்ம்மக்க்க்கும்..... கொஞ்சம் திரும்பி பாக்கலாம்.


ஹே.... ஹே... யாரு அது சிகரட் பிடிக்குறது?

ஏங்க, நீங்க பிடிக்குற சிகரட், உங்களுக்கு கெடுதல்ன்னு தெரிஞ்சே பிடிக்குறீங்கன்னு வச்சுப்போம், அது ஏங்க மத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்றீங்க... பாருங்க, உங்களால இந்த உலகத்து சந்தோசம் கொஞ்ச கொஞ்சமா அடங்கி போறத...

நீங்க பிடிக்குற சிகரட் உங்களுக்கு மட்டும் தீங்கு இல்லீங்க, உங்கள சுத்தி இருக்குற எல்லாருக்கும் தான் தீங்கு செய்யுது.

இந்த உலகத்தோட சந்தோசம் மட்டுமில்லீங்க, உங்க சொந்த குடும்பத்தோட சந்தோசமும் தான் அழிஞ்சி போகுது. எப்படின்னு புரியலயா?

பின்ன, சிகரட் பிடிச்சி உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, உங்க குடும்பத்துல உள்ளவங்க ஈஈ-ன்னு சிரிச்சுட்டா இருப்பாங்க.

பாருங்களேன், உங்க வீட்டு குட்டி தேவதை உங்கள நோக்கி ஓடி வருது....

இப்போ என்ன பண்ண போறீங்க, நீங்களே முடிவு எடுத்துக்கோங்க...

நான் சுத்தமான காத்து அடிக்குற இடத்துக்கு குட்டி தேவதையோட போகணும்ன்னு நினைக்குறேன். அதுக்கு நான் மட்டும் நினச்சா பத்தாது, நீங்களும் நினைக்கணும்...


வழி விடுறீங்களா?

.

11 comments:

 1. வணக்கம்

  கதை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். படிக்கும் போது ஒரு இரசனையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
  புதிய பதிவாக என்பக்கம்-டெங்குவின் கோரவத்தாண்டவம்... மகனை பலிகொடுத்த தாயின் கண்ணீர்துளிகள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா, கண்டிப்பா உங்க பதிவ படிக்குறேன்

   Delete
 2. "புகை என்றும் பகை" உட்பட அனைத்தும் ரசித்தேன்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா

   Delete
 3. உங்கள் பதிவிலே அடுத்த கதை என்ன என்று தெரிஞ்சு போச்சே !!

  ஒரு பெரிய தேவதையின் வதை. சீ சீ...
  கதை.

  தேவதை கதை கேட்கப்போனா, அங்கே ஒரே
  நறுமணம். திடீர் அப்படின்னு ஒரு சகிக்க முடியாத நாற்றம்.

  என்ன அப்படின்னு பார்த்தா,

  அங்க ஒரு பாக்கிறதுக்கு கலரா ஒரு வாலிபர், அசப்பிலே சூர்யா போல இருக்காரு, தள்ளாடிகிட்டே வராரு.

  என்னது பாட்டு பாடிக்கிட்டே வராரு. அப்படின்னு பார்த்தா..

  தண்ணி தொட்டி தேடிவந்த ...கன்னுகுட்டி நான் ..

  அதே. அதே... நம்ம ......

  என்ன அண்ணா !! நீயே இது மாதிரி குடிக்கலாமா ?

  தெரியும் அக்கா.

  என்ன தெரியும் .?

  குடி குடியைக் கெடுக்கும்.

  அப்ப இனிமே குடிக்க கூடாது. சரியா...

  சரி. அக்கா ...

  என்ன...?

  அந்த தேவதை ...!!

  சரி. சரி....விடு.
  Let bygone be bygone

  Be enthusiastic about Life in 2014

  http://avisviswanathan.blogspot.in/2014/01/be-enthusiastic-about-life-in-2014.html
  சுப்பு தாத்தா.
  www.menakasury.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. ஹஹா தாத்தா, அப்படினா இந்த காயத்ரியோட கேரக்ட்டர நீங்க இன்னும் புரிஞ்சுக்கலன்னு அர்த்தம்...

   Delete
 4. கருத்துள்ள கதை! புகை நமக்குப் பகை!

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ் அண்ணா

   Delete
 5. ஏங்க, நீங்க பிடிக்குற சிகரட், உங்களுக்கு கெடுதல்ன்னு தெரிஞ்சே பிடிக்குறீங்கன்னு வச்சுப்போம், அது ஏங்க மத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்றீங்க..

  intha mathiri evalavu ketalum theruntha matragaley

  ReplyDelete
  Replies
  1. அட்லீஸ்ட் ஒருத்தராவது மாறினா சந்தோசம் தானே

   Delete