Friday 5 September 2014

ஆசிரியர் தினம்



எந்த பண்டிகை எந்த நாள்ல வந்தாலும் சரி, அதுக்கு முந்தைய வொர்கிங் டே-ல அதை கொண்டாடிறது எங்க காலேஜ் வழக்கம். அந்த வரிசைல நேத்து எங்க டிபார்ட்மென்ட்ல இரண்டு கொண்டாட்டங்கள்...

ஒண்ணு, திரு ஓணக் கொண்டாட்டம்

அடுத்து, டீச்சர்ஸ் டே கொண்டாட்டம்...


இத பத்தி எழுதலாம்னா ஒரே சோம்பல். சோம்பேறித்தனம் வந்து குடியேறிச்சுடுச்சுன்னா அப்புறம் அவ்வளவு தான் ஒரு வேலையும் ஓடாது. சோம்பல் யார விட்டது? இந்தா ஒரு மணி வரைக்கும் எழுத சோம்பல் பட்டுட்டு தான் இருந்தேன்... ஆனா திடீர்ன்னு ஒரு மைன்ட் வாய்ஸ்... ஹோய், நேத்து தான உனக்கு புள்ளைங்க எல்லாம் ஹாப்பி டீச்செர்ஸ் டே விஷ் சொன்னாங்க, நீ உன் டீச்செர்ஸ்க்கு சொல்ல வேணாமான்னு.... இந்தா கடகடன்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்ல...

வாழ்க்கைல நாம எதையோ சாதிச்சுட்டோம்ன்னு பெருமை எப்போ தோணும் தெரியுமா? மனசுல இருந்து நமக்கு ஒரு பாராட்டு கிடைக்கும் போதோ, இல்ல உரிமையோட நம்மள ஒருத்தங்க தூக்கி கொண்டாடும்போதோ தான்.

நேத்து எங்க டிபார்ட்மென்ட்ல முதல்ல ஓணம் கொண்டாட்டம் நடந்துச்சு. எல்லா ஸ்டாப் அப்புறம் ஸ்டுடென்ட்ஸ் குழுமி இருந்தாங்க. எல்லா ப்ரோக்ராமும் முடிஞ்சதும் டயர்ட்டா இருந்ததால நான் தனியா அங்கயே இருந்தேன். எப்பவுமே நான் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட கொஞ்சம் இல்ல நிறையவே சிடு சிடு தான். ஆனா நிஜம் என்னன்னா ஒண்ணு கூட எனக்கு பயப்படாது. நேத்து நான் பாட்டுக்கு கத்திகிட்டே இருக்கேன், எல்லாம் என்னை சுத்தி வளைச்சுட்டாங்க. ஹாப்பி டீச்சர்ஸ் டே மேடம்ன்னு ஆளாளுக்கு ரெட் ரோஸ், அப்புறம் பைவ் ஸ்டார் சாக்லேட் குடுத்து என்னை திக்குமுக்காட வச்சுட்டாங்க. அப்புறம் எங்க மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருக்க? சிரிச்சுட்டேன்... ஹஹா...

சரி, நானெல்லாம் இந்த அளவுக்கு படிச்சி, என் கைலயும் சாக்பீஸ் வந்துச்சுனா அதுக்கு காரணம் என்னோட டீச்சர்ஸ் தானே....

ரொம்ப பொடியா இருந்தப்போ என்னை எல்லாம் சமாளிக்கவே முடியாது. எத பாத்தாலும் அத ரசிப்பேனாம். பட்டாம்பூச்சி, கோழி, ஆடு, இப்படி எத கண்டாலும் வழிமாறி அது பின்னால ஓடிடுவேன். என்னை சமாளிக்கவே பத்து பேர் வேணும். அப்பா எப்பவும் பிசி, அம்மா வீட்டை விட்டு அதிகம் வர்றதில்ல. அதனால என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக அங்க உள்ள மிஸ் தான் வருவாங்க. ஊருல பாதி பிள்ளைங்களும் அவங்க கூட ஒழுங்கா ஸ்கூல் போறப்ப என்னை மட்டும் சமாளிக்க ரொம்ப தான் திணறிப் போவாங்க... எனக்கு வீட்ல இருந்து சாப்பாடு தந்து விட்டுருவாங்க. நான் சத்துணவு தான் வேணும்னு அடம் பிடிப்பேன்... ஹஹா.... எனக்கு இப்பவும் அந்த கின்டர்கார்டன் நியாபகங்கள் வருது. என்னோட சாப்பாடை அந்த மிஸ் கிட்ட குடுத்துட்டு, நான் சத்துணவு முட்டைக்கு அடி போட்டுட்டு இருப்பேன். அவங்க வேற வழியில்லாம என் சாப்பாட்டை மத்த ஸ்டாப்ஸ் கிட்ட பகிர்ந்து குடுத்துட்டு அதுக்கு பதிலா எனக்கு விதம் விதமா முட்டாய், பலூன் வாங்கி தருவாங்க.

அது என்னது, அப்படினா என்ன? தெளிவா சொல்லுங்க, ஏன் அப்படி? எதனால? இப்படி தான் எப்பவும் கேள்வி கேட்டுட்டே இருப்பேன். என் கேள்விகளுக்கு பதில் சொல்லி சொல்லியே பாவம் எல்லாரும் டயர்ட் ஆகிடுவாங்க... அப்புறம் பிப்த்க்கு அப்புறமா நிஜமாவே கத்துக்கணும்ங்குற ஆர்வம், சந்தேகம் வந்தா உடனுக்குடன் கேக்குறத எல்லாம் பாத்து அவங்களே எனக்கு நிறைய சொல்லித்தருவாங்க. நான் கேள்வியே கேக்க முடியாத படி கத்து குடுத்தவங்க என்னோட டீச்சர்ஸ்...

என்னோட வாழ்க்கைல முக்கியமா ஒருத்தங்க வந்தாங்க. அவங்க, தங்கம் மிஸ். அவங்க உண்மையான பெயர் எனக்கு இப்போ மறந்து போச்சு, ஆனா நாங்க தங்கம் மிஸ் தங்கம் மிஸ்ன்னே சொல்லி பழகிடுச்சு. அப்போ நாங்க காமராஜ் மெட்ரிக்குலேசன்ல டென்த் படிச்சுட்டு இருந்தோம். லீவ் நாள்ல எங்களுக்கு கோச்சிங் கிளாஸ் எல்லாம் உண்டு. அந்த வயசுல சேட்டை ரொம்பவே அதிகம். எப்பப் பாத்தாலும் பிரெண்ட்ஸ்க்குள்ள சண்டை போட்டுட்டு, ஜடைய புடிச்சு இழுத்து வம்பு பண்ணிட்டு, சைக்கிள் கத்துக்குறோம்ன்னு கீழ விழுந்து அடி பட்டுட்டு சுத்திகிட்டு இருந்த நேரம். அப்ப தான் தங்கம் மிஸ் எங்க ஸ்கூல் வந்தாங்க. ரெண்டே ரெண்டு நாள் எங்கள நல்லா வாட்ச் பண்ணின அவங்க எங்கள வலுகட்டாயமா புடிச்சு ஸ்கூல் என்.எஸ். எஸ்.ல தள்ளி விட்டுட்டாங்க. அங்க போனதுக்கு அப்புறம் தான் எனக்கு என்னை சுத்தி உள்ளதையும் தாண்டி ஒரு சமூகம் இருக்குன்னே தெரிய வந்துச்சு. ஏழ்மைனா என்ன, இப்படியும் சூழல்ல மனுசங்க இருக்காங்கன்னு எனக்கு புரிய வச்சவங்க அவங்க. அவங்க முதல் முதலா எங்ககிட்ட சொன்னது ஒரு விஷயம், இங்க நீங்க சேவை செய்ய போறீங்க. அதுக்கு முன்னாடி நீங்க ஒரு விஷயம் தெரிஞ்சிக்கணும். இங்க நீங்க யார் மேலயும் அனுதாபப்படக் கூடாது, இரக்கப்படக் கூடாது, ஏன்னா, எது இருக்கோ இல்லையோ இவங்களுக்கு சுய மரியாதை நிறைய இருக்கும். அத இம்மியளவு கூட நீங்க குலைக்கக் கூடாதுன்னு சொன்னாங்க. உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்தா நீங்க எப்படி செயல் படுவீங்களோ, அப்படி அவங்க கூட இணைஞ்சு நீங்க செயல் படணும்ன்னு சொல்லிக் குடுத்தாங்க. அந்த வார்த்தைகள் எப்பவுமே எனக்கு பசுமரத்து ஆணி மாதிரி மனசுல பதிஞ்சுடுச்சு. இன்னிக்கும் யாரைப் பாத்தாலும் ஐயோ பாவம்னு கண்டிப்பா எனக்கு தோணாது, என்னால முடிஞ்சா ஓடி போய் அவங்க கூட இருந்து தோள் குடுக்குறேன்...

அதுக்கப்புறம் படிப்படியா ஸ்கூல் முடிஞ்சு காலேஜ் வந்தப்போ அங்கயும் எனக்கு தோள் குடுத்தவங்க ஏராளம். என்னோட ஆர்வத்தை பாத்துட்டு அப்பவே ப்ராஜெக்ட்ஸ் பண்றதுக்கு என்கிட்ட நம்பி குடுப்பாங்க. மத்த ஸ்டுடென்ட்ஸ் மாதிரி நான் ரொம்ப மார்க் எல்லாம் எடுக்க மாட்டேன், எப்பவுமே ஆவெரேஜ் தான். ஆனாலும் யாருமே என்னை திட்ட மாட்டாங்க. சந்தோசத்தையும் அக்கறையும் ஏராளமா அள்ளிக் குடுத்த அத்தனை பேருக்கும் என்னோட நன்றிகள்....

சொல்ல மறந்துட்டேனே, எப்பவுமே சந்தோசமாவும் செய்த காரியத்துல எல்லாம் வெற்றியும் கிடைச்சுட்டே இருக்குமா என்ன? வாழ்க்கைல தோற்றுப் போவோமோன்னு கண்ணு கலங்கி என்னோட யூனிவர்சிட்டி வாசல்ல நான் நின்னப்ப, உன்னோட பீல்ட் பத்தி எனக்கு எதுவும் தெரியாது தான், ஆனா உனக்கு என்னால முடிஞ்ச அளவு பின்புலமா இருக்கேன். நம்பிக்கை இருந்தா சொல்லு, இப்பவே கைட்ங்குற இடத்துல நான் சைன் பண்றேன்னு சொன்னவங்க என்னோட கைட் வசந்தா மேடம். தலைமுடி எல்லாம் இழந்து உருகுலைஞ்சு போன என்னோட உருவம் கொஞ்சம் கூட அவங்களுக்கு சந்தேகத்த குடுக்கல. மாறா நீ முன்னாடி போ... பக்கபலமா உன் பின்னால நான் வருவேன்னு சொன்னவங்க. இப்ப வரைக்கும் தெரியாது தெரியாதுன்னே நிறைய விசயங்கள எனக்கு கத்துக் கொடுக்குரவங்க. கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம என்னை வேலை வேலைன்னு வேலை வாங்குறவங்க... ஹஹா லவ் யூ மேடம்.

இப்படி என்னோட வாழ்க்கைல நான் ஆசிரியர் தின வாழ்த்து சொல்லனும்னா நிறைய பேர் இருக்காங்க... என்னோட வாழ்க்கைல நான் வாழ்க்கைய கத்துக்குறதுக்கு காரணமா இருக்குற எல்லாருக்கும் என்னோட இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்...

14 comments:

  1. நல்ல பதிவு. ஆசிரியர்களைப் பற்றி எவ்வளவு எழுதினாலும், எழுத்தறிவித்த நன்றிக்கு ஈடாகுமா? அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. நமக்கு பாடம் எடுக்குறவங்க ஒவ்வொரு வகையிலும் நமக்கு ஆசிரியர்களா தான் இருக்காங்க... கண்டிப்பா அவங்க நல்லா இருக்கணும்

      Delete
  2. ஆசிரியர் தின வாழ்த்தக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா

      Delete
  3. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றி

      Delete
  4. லேட் ஆசிரியர்தின வாழ்த்துக்கள்! நல்ல பதிவு சகோதரி! ஆசிரியர்கள் ஆசிரியர்களே!

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் லேட் ஆசிரியர் தின நன்றிகள்.... கிட்ட தட்ட நாலு மாசம் கழிச்சு

      Delete
  5. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
    Replies
    1. உடனே பாத்திருந்தா படிச்சிருப்பேன்... இந்தா உடனே பாக்குறேன்

      Delete
  6. ஹலோ!
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. இது வேறயா? ஹாய், ஹலோ, குட் மார்னிங்...

      Delete
  7. இங்க நீங்க சேவை செய்ய போறீங்க. அதுக்கு முன்னாடி நீங்க ஒரு விஷயம் தெரிஞ்சிக்கணும். இங்க நீங்க யார் மேலயும் அனுதாபப்படக் கூடாது, இரக்கப்படக் கூடாது, ஏன்னா, எது இருக்கோ இல்லையோ இவங்களுக்கு சுய மரியாதை நிறைய இருக்கும். அத இம்மியளவு கூட நீங்க குலைக்கக் கூடாதுன்னு சொன்னாங்க. உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்தா நீங்க எப்படி செயல் படுவீங்களோ, அப்படி அவங்க கூட இணைஞ்சு நீங்க செயல் படணும்ன்னு சொல்லிக் குடுத்தாங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆமா, சொல்லிக் குடுத்தாங்க... உண்மை தானே

      Delete