Tuesday, 26 July 2016

களவாணித்தனங்கள்




வாசிக்குற அனுபவம் ரொம்ப சின்ன வயசுல எனக்கு உண்டு. அப்போ எல்லாம் ஸ்கூல் லைப்ரரில இருந்து புக் எடுத்துட்டு வந்து படிப்பேன். அப்புறம் ஒரு கட்டத்துல வீட்ல இருக்குறதுக்கே நேரம் இல்லாம ஊர் சுத்த ஆரம்பிச்சதும் அந்த பழக்கம் அடியோட அழிஞ்சு போச்சு.

ஸ்கூல் நாட்கள்லயும் சரி, யூ.ஜி படிக்குறப்பவும் சரி, தமிழ் மேல ஒரு தனி பற்று இருந்தது உண்மை தான். ஆனாலும் எனக்கு பிடிக்காத ஒண்ணு மனப்பாடம் பண்றது. அதனாலயே தமிழ்லயும் சரி இங்கிலீஷ்லயும் சரி, எப்பவுமே மார்க் எழுபதுக்கு மேல தாண்டாது. இந்த செய்யுள் எல்லாம் மனப்பாடம் பண்ணனும்ல...

ப்ளஸ் டூ படிக்குறப்ப ஒரு தமிழ் சார் இருந்தார். ஒருத்தர உருவத்த வச்சு கிண்டல் பண்றது எல்லாம் தப்பு தான், ஆனா ஒரு தடவ அவர் ஒரு செய்யுள் நடத்தினார். அந்த செய்யுள் ஒரு ஆளை உருவகப்படுத்தி இருக்கும்.

பனங்கொட்டை மாதிரி தலை, பனை நார் மாதிரி மீசை, குள்ள உருவம்னு அவர் எம்பி எம்பி பாடம் எடுத்தப்ப அவரையே அவர் வர்ணிச்ச மாதிரி தோணிச்சு. “அதாவது சார், உங்கள பாத்தா அவர பாக்க வேண்டியது இல்ல, அப்படியே இருக்கீங்க”ன்னு கவுண்டர் குடுத்ததுல அவர் ஒரு மாதிரி என்னை முறைச்சு பாத்துகிட்டே இருந்தார். பாவம் அவருக்கு என்னை யார்னு அடையாளம் தெரிஞ்சிருக்காது.

காரணம், அப்பலாம் நான் ரொம்ப அமைதி. இருக்குற இடம் வெளில தெரியாது. கிட்டத்தட்ட எந்த நண்பர்களும் எனக்கு கிடையாது. நான் பாட்டுக்கு ஒரு இடத்துல சோகமா தேமேன்னு உக்காந்துட்டு இருப்பேன். அதுக்காக அது தான் என்னோட குணம்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க, பத்தாவது வரைக்கும் படிச்ச ஸ்கூல்ல போடாத ஆட்டம் கிடையாது, அடிக்காத லூட்டி கிடையாது. அட, எப்பவும் டென்த் ரிசல்ட்ல சென்டம் வாங்கிட்டு இருந்த எங்க ஸ்கூல்ல முதல் தடவையா நாலு பேரு பெயில் ஆனது எங்க பேட்ச்ல தான். அந்த அளவு கோச்சிங் கிளாஸ் வச்சாலும் கொட்டமடிப்போம்.

ப்ளஸ் ஒன் ஸ்கூல் மாறி போனதாலயும் அத்தன வருஷம் ஒண்ணா சுத்தினவங்க பிரிஞ்சி போன சோகத்துலயும் இருந்து மீள எனக்கு கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆச்சு. அதனாலயே அந்த தனிமை வாசம். எனக்கென்னவோ அவங்கள தவிர வேற யாரையும் ப்ரெண்ட்ஸ்சா ஏத்துக்க மனசு வரலன்னு தான் சொல்லணும்.

ஆங், நான் தமிழ் க்ளாஸ்ல நடந்தத பத்தி சொல்லிட்டு இருந்தேன்ல, அன்னிக்கி என்னை கவனிச்சவர் தான், தினமும் என்னை எழுப்பி விட்டு கேள்விகளா கேட்டு கொன்னுடுவார். எப்பவுமே பாடத்த நான் உன்னிப்பா கவனிக்குற பழக்கம் இருந்ததால நானும் பதில் சொல்லி தப்பிட்டு இருந்தேன். அப்படி தான் திடீர்னு ஒரு நாள் திருக்குறள்ல ஒரு அதிகாரம் பெயரை சொல்லி, எல்லா செய்யுளையும் சொல்லுன்னு சொல்லிட்டார்.

என்னதான் நான் மேத்ஸ் குரூப்னாலும் தமிழும் இங்கிலீஷ்சும் எல்லோருக்கும் பொதுங்குறதால சயின்ஸ், கம்யூட்டர் சயின்ஸ், காமேர்ஸ்னு எல்லா பேட்ச் பிள்ளைங்களும் க்ளாஸ் ரூம்ல இருப்பாங்க. அத்தன பேர் முன்னாலயும் அன்னிக்கி ஒரு மணி நேரம் நின்னுகிட்டே இருந்தேன். சாருக்கு என்னை பழி வாங்கிட்ட திருப்தி. அடுத்த நாள் திருக்குறள்ல வெறும் செய்யுள் மட்டும் டெஸ்ட்னு வேற சொல்லிட்டார்.

செய்யுள் பகுதி கூடவே வேற கேள்விகளும் இருந்தா, அத எழுதி எப்படியாவது பாஸ் ஆகிடுவேன். இங்க எல்லாமே மனப்பாடம் பண்ணனும்னா எப்படி? எப்படியும் பெருசா முட்டை தான் வாங்கப் போறேன்னு தெரிஞ்சி போச்சு. சும்மாவே அவருக்கு நம்ம மேல காண்டு, இதுல முட்டை வேற எடுத்தா அத்தன புள்ளைங்க முன்னாலயும் அவர் திங்கு திங்குன்னு எம்பி குதிப்பாரே.

ச்சே, வெட்கம், அவமானம், வேதனைன்னு பீல் பண்ணி உடனே அந்த திருக்குறள படிச்சிருப்பேன்னு தான நினைக்குறீங்க, அதான் இல்ல. இதுல இருந்து தப்பிக்க என்ன பண்றதுன்னு என்னோட கிரிமினல் மூளை யோசிக்க ஆரம்பிச்சது. ஒரு பக்கம் எனக்குள்ள ஒரு நல்லவ உக்காந்துட்டு, “நீ யோசிக்கவே செய்யாத, தயவு செய்து எப்படியாவது திருக்குரள படிச்சு சொல்லிட்டு நல்லப் பிள்ளையா உக்கார பாரு”ன்னு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சா. ஆனா அத எல்லாம் கேக்குற நிலைமைல நான் இல்ல. வீட்ல வந்தும் பனங்கொட்டை வாத்தியார என்ன செய்யலாம்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். திடீர்னு ஒரு முடிவுக்கு வந்து தூங்கிட்டேன். அதுவும் அன்னிக்கி நான் ரொம்ப நல்லா குறட்டை விட்டேன்னு வேற தம்பி பஞ்சாயத்து பண்ணினான்.

அடுத்தநாள் வழக்கம் போல ஸ்கூல் போனேன். அதுவும் வழக்கத்துக்கும் அதிகமா அமைதியாவே போனேன். மூஞ்சிய தொங்கப் போட்டுட்டு டெஸ்ட் பேப்பர்ல சைன் எல்லாம் வாங்கிட்டு என் இடத்துல வந்து உக்காந்தேன்.

சார் என் பக்கத்துல வந்து நின்னுகிட்டார். நீ எப்படி என்கிட்ட இருந்து தப்பிக்குறன்னு பாப்போம்னு பார்வை வேற.

நான் பாட்டுக்கு முதல்ல ஜியாமெட்டரி பாக்ஸ் எடுத்து டெஸ்க் மேல வச்சேன். அத தொறந்து, பென்சில், ஸ்கேல், பென், ரப்பர்ன்னு எல்லாம் ஒண்ணொண்ணா எடுத்து அடுக்க ஆரம்பிச்சேன். சார் அதுக்குள்ள ஒரு ரவுண்டுஸ் போயிட்டு வந்துட்டார். இங்க நான் அமைதியா எழுத ஆரம்பிச்சிருந்தேன்.

அவனவன் ஷூகுள்ள பிட் வச்சு எழுதுறான், பொண்ணுங்க மடியில பிட் வச்சு எழுதுறாங்க, சில பேர் டெஸ்ட் பேப்பருக்கு உள்ள வச்சு பாத்து பாத்து எழுதுறாங்க, சார் க்ளாஸ்ல கால்வாசி பேரை பிட் அடிக்குறதா சொல்லி எழுப்பி விட்டு வெளில அனுப்பிகிட்டே இருக்காரு. ஆனாலும் பார்வை என்னை விட்டு அகலல.

ஒரு கட்டத்துல நான் எழுந்தேன். டெஸ்ட் பேப்பர அவர் கைல குடுத்தேன். மீதி இருந்த பேப்பர், பென், பென்சில், ரப்பர், ஸ்கேல் எல்லாம் எடுத்துட்டு வெளில போயிட்டேன்.

அடுத்த நாள் சார் பேப்பர் குடுத்தார். ஒரு மாதிரி அதிர்ச்சியில உறைஞ்சு போய் அவர் என்கிட்ட நீட்டுன பேப்பர்ல எத்தன மார்க் இருந்துருக்கும்னு நினைக்குறீங்க?

அப்படியே அச்சடிச்ச மாதிரி நூத்துக்கு நூறு.

அப்ப ஆ-ன்னு வாயப் பொளந்தவர் தான், அப்புறம் அதிகம் என்கிட்ட வம்பு வச்சுக்குறது இல்ல.

ஒருத்தி என்கிட்ட வந்து கை குடுத்தா. சூப்பர். நீ நல்லா படிப்பியான்னு கேட்டா. சிரிச்சுகிட்டேன். ஏதோ ப்ளஸ் டூ முடிக்குறதுக்குள்ள கொஞ்சமா பழையபடி சேட்டை பண்ண ஆரம்பிக்க இந்த சம்பவம் ஒரு காரணமா அமைஞ்சது.

அது மட்டுமில்ல, இதனால என்னோட ஞாபக சக்தி அதிகமாச்சு.

அதெப்படி எல்லாம்?னு ஷாக் ஆகாதீங்க.

ஆமா, நான் எப்படி அந்த நூத்துக்கு நூறு மார்க் வாங்கினேன்?

விஷயம் சிம்பிள்.

எல்லா பசங்களும் புள்ளைங்களும் அங்கங்கே பிட்டை ஒளிச்சு வச்சு கஷ்டப்பட்டு பாத்து பாத்து எழுதி மாட்டிகிட்ட நேரத்துல, நான் பதட்டமே இல்லாம பிட்டை என் டேபிள் மேலயே, அதுவும் விரிச்சு வச்சே அடிச்சுட்டு இருந்தேன். எந்த பேப்பரயும் திருப்பி திருப்பி பாக்கல, மடிய குனிஞ்சு பாக்கல, காலை குனிஞ்சி பாக்கல, அப்படியே கம்பீரமா நிமிர்ந்து உக்காந்து எழுதிட்டு இருந்தேன்....

ஆச்சா, இப்ப நியாபக சக்திக்கு வருவோம்.

அதுவரைக்கும் படிச்சத எல்லாம் எழுதி பாக்குற பழக்கம் இல்லாத நான் இப்படி பிட் அடிக்குற சாக்குலயாவது மனப்பாட பகுதிகள ஒரு தடவ எழுதிடுரதாலயும் பிட் அடிச்ச சம்பவம் இன்ச் பை இன்ச் என் மனசுல ரெகார்ட் ஆகிடுற காரணத்தாலயும் பப்ளிக் எக்சாமுக்கு செய்யுள் பகுதியையும் விட்டுடாம அட்டென்ட் பண்ணின காரணத்தாலயும் தமிழுக்கு இருநூறுக்கு நூற்றி தொன்நூறு மார்க் வாங்கினேன்.

ஹலோ ஹலோ, பிட் எல்லாம் மனப்பாட பகுதிகளுக்கு மட்டும் தான். அதுவும் நம்ம தமிழ் வாத்தியார் க்ளாஸ்ல மட்டும் தான். மத்தப்படி நமக்கு இந்த பிட் அடிக்குரதெல்லாம் சுத்தமா பிடிக்காது – வேற சில சம்பவங்கள சொல்ற வரைக்கும் இது தான் உண்மை. அதனால இதயே இப்போதைக்கு நம்பிட்டு இருங்க.

....................................................

அப்புறம் ஆரம்பிச்சதுக்கும் முடிச்சதுக்கும் சம்மந்தமே இல்லையேன்னு ரொம்ப யோசிக்காதீங்க. நான் இப்ப எல்லாம் புக் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்னு ஒரு வரி செய்திய சொல்லத் தான் முதல்ல எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் என்ன எழுதுறேன்னு எனக்கே புரியாம என் போக்குல எழுத ஆரம்பிச்சு நிமிர்ந்தா நிறைய விஷயங்கள் சொல்லணும் போல இருந்துச்சு. சரி, ரொம்ப எழுதினா படிக்குற நீங்க டயர்ட் ஆகிடுவீங்கங்குற ஒரே காரணத்தால, நான் செய்த களவாணித்தனங்கள பிட் பிட்டா அப்பப்ப எடுத்து விடலாம்னு முடிவு பண்ணி, இதுக்கு களவாணித்தனங்கள்னு லேபல் போட்டு வச்சிட்டேன்.

அப்படியே உங்க ஆதரவுகள குடுத்தீங்கனா செய்த மொத்த களவாணித்தனங்களையும் புட்டு புட்டு வச்சு என் பெருமைய நானே பேசிக்குவேன், நன்றி வணக்கம்.

11 comments:

  1. பதட்டமே இல்லாம பிட்டை என் டேபிள் மேலயே, அதுவும் விரிச்சு வச்சே அடிச்சுட்டு இருந்தேன். எந்த பேப்பரயும் திருப்பி திருப்பி பாக்கல, மடிய குனிஞ்சு பாக்கல, காலை குனிஞ்சி பாக்கல,
    அப்படியே கம்பீரமா நிமிர்ந்து உக்காந்து எழுதிட்டு இருந்தேன்....////

    ஹாஹாஹா
    செம:)

    எனக்கும் செய்யுள் பகுதி பிடிக்காததுக்கு ஒரே காரணம் மனப்பாட பகுதிதான்.

    பதிவ வாசிக்கும்போதே school days கு போய்ட்டேன்.

    தொடர்ந்து எழுதுங்க அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ அத ஏன் கேக்குற, இந்த செய்யுள்ல ஒரு வரிய போட்டு, இது எங்க, யார் சொன்னது, இத எழுதினது யார்ன்னு எல்லாம் கேள்வி கேப்பாங்க. மத்த புள்ளைங்கள விட நான் தான் சரியா பதில் சொல்லுவேன். ஆனா இந்த மனப்பாடம் தான் கடைசி வரைக்கும் எனக்கு செட் ஆகவே இல்ல.

      Delete
  2. ஹாஹா.... தைரியமா பிட் அடிச்சு நூறு வாங்கிட்டீங்க போல! :)

    களவாணித் தனங்களும் ஸ்வாரஸ்யம் தான்!

    ReplyDelete
    Replies
    1. பிட் அடிக்குறது எல்லாம் அந்த க்ளாசோட போச்சு. ஒரு தடவ எழுதி பாத்துட்டா மனசுல அப்படியே பதியும்னு அப்புறமா புரிஞ்சுகிட்டேன்

      Delete
  3. //அப்படியே கம்பீரமா நிமிர்ந்து உக்காந்து எழுதிட்டு இருந்தேன்....//
    - ப்ப்பாஆ.., பாரதி கண்ட புதுமை பெண் தான் போங்க...!!

    ReplyDelete
    Replies
    1. அப்டீங்குறீங்க? சரி ரைட்டு....

      Delete
  4. அப்ப இனி உங்க ணிக் ணேம் களவாணி காயத்ரி ணு வச்சிரலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, பொறுமை பொறுமை. இன்னும் பல பல சேட்டைகள் இருக்கு. அதுக்கு முன்னாடி இப்படி ஒரு முடிவுக்கு வரக் கூடாது

      Delete
  5. Sema rasikum padi iruthathu. vaalthukal.

    ReplyDelete
  6. oh super, இன்னும் ணிரைய சொல்லுங்க.
    அப்பதான் உங்களுக்கு எதிரான evidences strong ஆகும்.
    ணான் ஒரு ABC officer.
    oh ச்ச கை குளரிடுச்சு.
    ணான் ஒரு CBI officer ணு ஒழுங்கா டைப் கூட அடிக்கத்தெரியாத ABC officer.

    ReplyDelete
  7. எழுதுறேன். உங்களுக்கு வேலை வைக்கணும்ங்குரதுக்காகவே எழுதுறேன்... மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete