Thursday 23 August 2018

எது நேர்மை?



நேத்து தோழியும் அவங்க அம்மா கூடவும் பேசிட்டு இருக்கும் போது கமலோட கல்யாண வாழ்க்கை பத்தின பேச்சு வந்துச்சு.

அவன் ஒழுக்கம் கெட்டவன், இப்படி ஒவ்வொரு பொண்ணா பாத்துட்டு திரியுறது எந்த வகைல நியாயம்னு கேட்டாங்க அம்மா.

அவர் யார் கூட வாழுறார்ங்குறது முக்கியம் இல்ல, அது யாரா இருந்தாலும் அவங்களையும் மதிச்சு, பப்ளிக்ல அவங்க கூட வெளிப்படையா வராரே, அந்த நேர்மை தான் முக்கியம்னு நாங்க சொன்னோம்.


இங்க இந்த சமூகம் எதை ஒழுக்கம்னு சொல்லுது?

மனைவி தவிர பிற பெண்களோடு ஆண்களுக்கு தொடர்புகளே இருந்தது இல்லயா?

அப்படியே தொடர்பு இருந்தாலும் அந்த பெண்களை வெறும் sex toy மாதிரி use பண்ணிட்டு மனைவிக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்தா அவங்க சமூகத்துல நல்ல குடிமகன் அதானே...

என்னைக் கேட்டா எந்த விசயமா இருந்தாலும் அதுல ஒரு அடிப்படை நேர்மை வேணும்னு நினைப்பேன். நம்மோட சம்மந்தப்பட்ட, நாம் நேசிக்குறவங்கள வெளில இந்த சமூக பார்வைக்கு கொண்டு வந்து வெளிப்படையா இருக்குறதுல என்ன தப்பு இருந்துற போகுது?

ஒருத்தங்கள பிடிக்கலனா நேர்மையா விலகி இன்னொரு இணையை தேர்ந்தெடுக்குற உரிமை ஏன் ஆண், பெண் இருபாலருக்கும் இருக்க கூடாது?

இது பத்தின கேள்வி ஒண்ணை நண்பர் ஒருத்தர்கிட்ட கேட்டேன். அவர் சொன்னார், "நீ மேல் தட்டு பெண்களையே மனசுல வச்சுட்டு பேசிட்டு இருக்குற. சமூகத்துல கீழ் நிலைல இருக்குற பெண்களை யோசிச்சு பாரு, கணவன் பிடிக்கலனு கைவிட்டு போனா அவளோட நிலமை என்ன? அவளோட வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வா"னு கேட்டார். அவரை பொருத்தவரைக்கும் மட்டுமில்ல, இந்த சமூகத்த பொருத்தவரைக்கும் இது நியாயமான கேள்வி தான் இல்லயா?

ஆனா என்னோட சிந்தனை இதுல இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கு.

பெண்களை அடக்குமுறைக்கு கீழ வைக்குறதுனா அது வன்முறையாலயும், ஆதிக்கத்தாலும் மட்டுமில்ல, இந்த மாதிரி பாவம்னு சொல்றதும் தான்.

அதாவது இன்னமும் நம்ம சமூகத்துல பெண் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியங்குற எண்ணம் தான் மேலோங்கி இருக்கு. எல்லாரையும் போல அவ ஒரு சுதந்திர பறவைங்குறதையே மறந்துடுறாங்க. அதனால தான் பெண் பாவம், அவள் தெய்வம்ங்குற எண்ணம் எல்லாம்.

நான் அந்த நண்பர்கிட்ட சொன்னேன், " அவ பாவம்னு தான் அவள விட்டுர சொல்றேன். ஒரு பிரச்சனைய face பண்ற வரைக்கும் தான் பயம் இருக்கும். அதுவே அத அவ face பண்ணிட்டா தைரியமா வெளில வந்துருவா. நாலு வீட்ல சமையல், வீட்டு வேலை செய்தாவது பொழைச்சுப்பா. குழந்தைகள கவனிக்க பயந்து தான் இந்த ஆண்கள் பெண்கள் பாவம்னு சும்மா அடக்கி வைக்க பாக்குறாங்கன்னு.

என்ன ஒண்ணு, இந்த so called சமூகம் அவள தினமும் கேள்விகளால துளைச்சு எடுக்கும். அய்யோ பாவம்ன்னு ஒரு உச்சு கொட்டி அவ பரிதாபத்துக்குரியவள்ன்னு அவளையே நம்ப வைக்கும். ஒரு பெண் தனியா வாழ்ந்தா அவள கண்டுக்காம கடக்க பழகுங்க, இல்லயா நிஜமான அக்கறை இருந்தா அவளுக்கான பொருளாதார விடுதலைக்கு உதவி பண்ண முடிஞ்சா பண்ணுங்க... அவ்ளோதான்.

பெண் அவள அவளே பாத்துப்பா... இந்த ஆண் சமூகம் சுமக்க பயப்படுற குழந்தைகளையும் சேர்த்து....

3 comments:

  1. உட்கருத்து உண்மை தான்...

    ReplyDelete
  2. உண்மையான கருத்து, தனியாக வாழும் பெண்களுக்கு உதவி செய்யலாம் எந்த பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல்.

    ReplyDelete
  3. ***மனைவி தவிர பிற பெண்களோடு ஆண்களுக்கு தொடர்புகளே இருந்தது இல்லயா? ***

    நீங்க சொல்றதப் பார்த்தா..எல்லா ஆண்களூக்கும் மனைவி தவிர பலருடன் உறவு இருக்கு, கமலஹாசன் மட்டும் இதுவரை மூனே மூனு பெண்களோடதான் உறவு வைத்துள்ள யோக்கியன்னு சொல்ற மாதிரி இருக்கு.

    அப்படியா?

    உங்களூக்கு மனைவி தவிர வேறூ யாருடனும் உறவு வைக்காத ஆண்கள் தெரியாததும், கமலஹாசனுடன் இந்த மூனு தவிர உறவு கொண்ட பெண்கள் தெரியாததும் யார் தப்பு??

    ஸ்றிதேவி இவரோட sister போலாமில்ல? அதுபோல் உறவுள்ள ஒரு பெண்ணீடம் எப்படி காதல் சொரிய நடிக்க முடியும் இந்த யோக்கியன்?

    ஏன் சும்மா போட்டு இவருக்கு வக்காலத்து வாங்குறேன்னு இவரைத் தவிர எந்த ஆம்பளயும் யோக்கியன் இல்லைங்கிற தொணீயில் பேசிக்கிட்டு?

    ஆண்கள் பத்தி உங்களூக்கு என்ன தெரியும்?? Even if you know a little bit, you are yet to learn.

    I would have bought his story if he had said she was my good friend rather than sister. He is full of garbage!

    ReplyDelete