Monday 23 September 2013

சூதானமா நடந்துக்கணும் மக்கா..

வாழ்க்கைனா ஒரு சுவாரசியம் வேணும். சிரிப்பு, அழுகை, சந்தோசம், துக்கம் இப்படி எல்லாமே கலந்து தானேங்க வாழ்க்கை. அதனால எப்பவும் நாம சிரிச்சுட்டே இருந்தாலும் கூட சில நேரம் போரடிக்கும், சரி இப்போ என்ன அதுக்குன்னு கேக்குறீங்களா, வாங்களேன் கொஞ்சம் சீரியஸா பேசலாம்... அப்படியே கொஞ்சம் உசாராவும் இருந்துக்கலாம்...


இப்போலாம் இந்த இன்டர்நெட் இல்லாம ஒரு வேலையும் நடக்காதுங்குற நிலைமை வந்தாச்சு. அதாவது பரவால, இந்த சமூக வலை தளங்கள்னால உலகம் நம்மோட கைக்குள்ள வந்துடுச்சு. இதனால நிறைய நன்மைங்க இருக்கு. நம்மோட உணர்வுகள இங்க கொட்ட முடியுது, கண்காணா தேசத்துல இருந்தெல்லாம் நமக்கு ப்ரெண்ட்ஸ் கிடைக்குறாங்க, எல்லோரும் ஒரே நேரத்துல இருந்த இடத்துல இருந்தே ஒண்ணா கூட முடியுது. இங்க அன்பு கொட்டி கிடக்கு. ஆனா சில ஆபத்துகளும் கூடவே ஒட்டிகிட்டு இருக்கு. நாம கொஞ்சம் உசாரா இல்லனா அவ்வளவு தான். மொத்தமா வாழ்க்கையையே தொலைச்சுட்டு ஐயோன்னு தலைல கை வச்சுட்டு உக்கார வேண்டியது தான்.

எனக்கு மத்த சமூக வலைதளங்கள் பத்தி அவ்வளவா தெரியாது. ஆனா இந்த பேஸ் புக் யூஸ் பண்ணுவேன். வாழ்க்கைல ஒரு கட்டத்துல நாம தனியா இருக்குறோம்ங்குற உணர்வு வந்தப்போ இங்க தான் நான் நிறைய ப்ரெண்ட்ஸ் பாத்தேன். கொஞ்சம் சுறுசுறுப்பா மறுபடியும் நான் வளைய வர இந்த பேஸ் புக் ஹெல்ப் பண்ணிச்சுன்னு தான் நான் சொல்லுவேன்.

இந்த பேஸ் புக் பொறுத்தவரை நாம சந்திக்குற நட்புக்கள் மிக சிலரை தவிர எல்லாருமே முகம் தெரியாமல், உண்மையா பொய்யா என்றே தெரியாமல் பழகுரவங்க தான்.... இதுல சில பேரு அழகா பேசுறாங்க, அன்பா இருக்குறாங்க... நாமளும் அவங்க கிட்ட ஏதோ ஒரு ஈர்ப்புல அம்மா, அப்பா, அண்ணா, தம்பினு ஏதோ ஒரு வகையில அவங்க மேல அன்பு வச்சிடுறோம்...

இதுல தப்பே இல்லையே, அன்பை காட்டுறது நல்லது தானேன்னு எல்லோரும் நினைக்கலாம். கண்டிப்பா தப்பே இல்லீங்க, நம்மோட உரிமைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ள நாம வச்சிகிட்டா கண்டிப்பா தப்பே இல்ல.

என்ன இது? பெரிய மனுசி மாதிரி எதோ புரியாம உளருற, இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்னு கேக்குறீங்களா, எல்லாம் அன்பவம் தாங்க. நானும் இந்த பேஸ் புக்ல மூணு வருசமா இருக்கேனே, எனக்கே ஏற்பட்ட சில விசித்திர அனுபவங்கள், நண்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இதெல்லாம் நிறைய பாடம் கத்து குடுத்துருக்கு,

நீ நல்லா இருக்கணும், நீ எப்பவும் சந்தோசமா இருக்கணும், நீ யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை மாத்திக்காத, நான் உன்ன நல்லா பாத்துப்பேன், அப்படி இப்படினு ஏகப்பட்ட சென்டிமென்ட் டயலாக்ஸ் சொல்லி தான் கொஞ்சம் கொஞ்சமா இங்க அடக்குமுறை ஆரம்பிக்கும். நாம கொஞ்சமா அன்பு வச்சிட்டாலே அதையே அட்வான்டேஜ்ஜா எடுத்துகிட்டு அடக்கி வைக்க முயற்சி பண்ண ஆரம்பிப்பாங்க.

மகளே... உன் எப்.பி வால்ல சிலபேரு மோசமா கமண்ட் போடுறாங்க, நீ இல்லாதப்போ அத டெலிட் பண்ணனும், அதனால உன் பாஸ்வேர்ட் குடு-னோ , இல்ல, நீ வேற நான் வேற இல்ல, உன் பாஸ்வோர்ட் குடு-னோ எப்படியோ பாஸ்வோர்ட வாங்கிடுறாங்க, இதுல, நான் உன் பாஸ்வேர்ட் வச்சு ஒண்ணும் செய்ய மாட்டேன்னு வாக்குறுதி வேற. அப்புறமா ஆரம்பிக்குது அவங்க அடக்குமுறை. இன்பாக்ஸ்ச அலசி ஆராய்ஞ்சு, அதுல ஒண்ணுமே இல்லாத உப்பு சப்பில்லாத விசயங்களுக்கு எல்லாம் சண்ட பிடிக்க ஆரம்பிப்பாங்க. அவன் ஏன் உன்னை பாத்து அப்படி சொன்னான், இவன் கிட்ட ஏன் இன்பாக்ஸ்ல இப்படி பேசின, அவன் உன்ன பாத்து அப்படி ஒரு வார்த்தை சொன்னானே, நீ ஏன் சிரிச்ச, அவன ப்ளாக் பண்ணு, இவன ப்ளாக் பண்ணுன்னு ஆரம்பிச்சுடும் டார்ச்சர்.... அட தொல்ல தாங்க முடியலன்னு நாம கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்க ஆரம்பிச்சா அப்ப வரும் பாருங்க சாமியாட்டம். அந்த ஆள ப்ளாக் பண்ணினா அடுத்த தொல்ல போன் கால்ல ஆரம்பிச்சுடும். நம்ம மக்கள் தான் உடனே போன் நம்பர் எல்லாம் ஷேர் பண்ணிக்குறாங்களே (இது சொந்த கதை, சோக கதைங்க).

இன்னும் சில பேரு ஒரு படி மேல போய் பொண்ணுங்களோட போட்டோஸ் எல்லாம் வாங்கி வச்சிப்பாங்க. அதுவும் நல்லா தான் போயிட்டு இருக்கும், ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை இல்லாத வரை. எதாவது சின்னதா மனஸ்தாபம் வந்துடுச்சுன்னு வைங்க, அந்த போட்டோவ கண்ட கண்ட வெப் சைட்ல போட்டுடுவேன்ன்னு மிரட்ட ஆரம்பிச்சுடுவாங்க. போட்டோங்குறது சாதாரணமான விஷயம் தான்னாலும் அத எவ்வளவு கீழ்தரமா யூஸ் பண்ண முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமா யூஸ் பண்ணுவாங்க.

அப்புறமா ஒரு குரூப் கிளம்பும். ஒரு பெரிய சோக கதைய பின்னணியில இருக்குறதா சொல்லி வயசு பொண்ணுங்க கிட்ட அனுதாபம் தேடுற செட். தான் ஒரு பொண்ண ரொம்ப காதலிச்சதாவும், அந்த பொண்ணு தன்னை ஏமாத்திட்டு இன்னொரு பையன் கூட போய்டுச்சுனோ, இன்னும் வேற மாதிரியோ கதை விடுவாங்க. இவங்க மேல பரிதாபப்பட்டு கொஞ்சம் காத்து குடுத்து அவங்க கஸ்டத்த கேட்டுட்டா முடிஞ்சுது, அப்புறம், அந்த பொண்ணு அவ கஷ்ட்டத்த சொல்ல ஆள் தேட வேண்டியது தான்.

இன்னொரு டைப் இருக்காங்க. இந்த காதல், கத்தரிக்கானு இங்கயே டூயட் பாடிட்டு இருப்பாங்க. நீ எனக்கு மட்டும் தான் சொந்தம், என்கூட தான் பேசணும் அப்படி இப்படின்னு. பாவம், இந்த பொண்ணுக்கு தெரியாது, இதே டையலாக்ஸ ஜெராக்ஸ் எடுத்து நிறைய பேர் கிட்ட சொல்றது. இந்த புள்ளையும் அவளோட தனிப்பட்ட சந்தோசம் எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இங்க ஒரு ஜடம் மாதிரி இருந்தே ஆகணும், அந்த பையன் போட்டோவுக்கும் ஸ்டேடஸ்க்கும் நைஸ்னு கமன்ட் போட்டுட்டு. அவரு, மச்சி, இந்த பொண்ணு என்பின்னாடி அலையுதுடான்னு காலர தூக்கி விட்டுட்டு இருப்பாரு. உண்மையா லவ் பண்ணினா அத புரிஞ்சுக்குற பக்குவம் வேணுங்க. எந்த பையனும் ஒரு பொண்ண உண்மையா நேசிச்சா, அடக்கி வைக்கணும்னு நினைக்க மாட்டார்.

இன்னும் சில பேர் இருக்காங்க, அவங்க மேல ஒரு சுயபச்சாதாபத்த அவங்க மேலயே வச்சுக்கிட்டு. இப்படி பட்டவங்களுக்கு யார் என்ன சொன்னாலும் அவங்கள சொல்ற மாதிரியே இருக்கும். தன்னை சுற்றி யார் சிரிச்சாலும் அது அவங்கள பாத்து சிரிக்குற நக்கல் சிரிப்பாவே தான் இருக்கும். என்னமோ உலகத்துலயே அவங்க மட்டும் தான் நல்லவங்க மாதிரியும், மத்தவங்க எல்லோருக்கும் அதனால அவங்க மேல பொறாம மாதிரியும் ஒரு அசூயை அவங்களுக்கு வந்துரும். ஆனா இவங்களோட மறுபக்கத்த பாத்தா மனசு முழுக்க ஒட்டட புடிச்சி போய் இருக்கும். அப்படியே ஒரு சாத்தானின் பாதாள இருப்பிடம் தான் அவங்க மனசு. அவங்களும் சந்தோசமா இருக்க மாட்டாங்க, மத்தவங்களையும் சந்தோசமா இருக்க விட மாட்டாங்க. விலக நினைச்சாலும் வலிய வந்து தொல்லை பண்ணுவாங்க....இந்த மாதிரி ஆளுங்க கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...

இந்த மாதிரி பட்டவங்களுக்கு எல்லாம் நான் சொல்லிக்குறது என்னனா பெண்கள் உங்கள் வீட்டு அடிமைகள் இல்லை... விரிந்து இருக்கும் கைகளில் மட்டுமே அடைக்கலம் தேடுவோம் நாங்கள்... இறுக்கி பிடிக்க நினைத்தால் மீண்டும் அந்த கைகளை கனவிலும் நினையோம். உசாரா இருந்துக்க வேண்டியது நம்மோட பொறுப்பு. இன்னும் நிறைய சொல்லலாம், இங்க தானே இருக்க போறேன், கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன். சூதானமா நடந்துக்கணும் மக்கா....

12 comments:

  1. நல்ல அலசல்... //ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ள நாம வச்சிகிட்டா// முக்கியம்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கண்டிப்பா அண்ணா, நம்மோட எல்லைகளை நாம அடுத்தவங்களுக்கு தொல்லையில்லாமல் வகுத்துக் கொள்ள வேண்டும். அதை மீறி உள்நுழைய நினைக்கும் நபர்களை நாம் பின் தைரியமாக எதிர்கொள்ள உதவும்

    ReplyDelete
  3. பெண்கள் உங்கள் வீட்டு அடிமைகள் இல்லை... விரிந்து இருக்கும் கைகளில் மட்டுமே அடைக்கலம் தேடுவோம் நாங்கள்... இறுக்கி பிடிக்க நினைத்தால் மீண்டும் அந்த கைகளை கனவிலும் நினையோம். ///

    ஒவ்வொரு ஆண் மகனும் படிக்க வேண்டிய ஒரு வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தானே மகேஷ், பெரும்பாலான பெண்கள் இன்னமும் இந்த மாய வலைக்குள்ள சிக்கி தான் இருக்காங்க. நீ சுட்டி காட்டிய வார்த்தைகள் என்னோடது. என்னோட இயல்பு அது

      Delete
  4. Learning about naratation from u. Fine. Keep it up

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ். நானே இப்போ தான் தவழ்ற ஸ்டேஜ்ல இருக்கேன். இன்னும் என்னை மேம்படுத்திக்க வேண்டியது நிறைய இருக்கு

      Delete
  5. அருமை ..நல்ல எச்சரிக்கை பதிவு ..கீப் இட் அப் காயத்ரி ..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ் சாச்சா... இதோட தொடர்ச்சியா சில விசயங்கள எழுதலாம்னு நினைக்குறேன். அவசியம் அதையும் தெரிஞ்சுக்கோங்க

      Delete
  6. சூதனமா சீதனம் தந்த சகோதரியே...வாழ்க.. வாழ்க... எல்லைகளின் அளவுகளை எள்ளளவும் மீறாது சொன்ன வார்த்தைகள்... தாயீ நீங்க தவழும் குழந்த கெடையாது தாவி ஓடும் மான்குட்டி... சரிதான் தாயீ மான்குட்டினாவே சில புலிகள் வேட்டையாட தான் முயற்சி செய்யும் நாம் தான் உஷாரா இருந்துக்கனும் சூதனமா நடந்துக்கணும்...

    பொறுப்பின் புதுமைகளை அறிய இங்கேயே காத்திருக்கோம்..
    வாழ்த்துக்கள் காயு..
    வலிமை சேர்க்கும் சூதனம்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா உங்க வாழ்த்துக்கு

      Delete
  7. எந்த விஷயமுமே அது சொல்லப்படுற விதத்துலதான் பாதிப்ப ஏற்படுத்தும்....

    ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க..

    பேசுற மாதிரியே எழுதுறது ஒரு கலை... அந்த கலை உங்களுக்கு தெரிஞ்சுருக்கு....

    ஒருகூட்டம் முகநூல் சைக்கோக்களின் முகமூடிய சிரிச்சுக்கிட்டே கிழிச்சிருக்கீங்க...

    வாழ்த்துகள்......

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டுக்கு தேங்க்ஸ். நீங்க குடுக்குற விமர்சனங்கள் தான் தொடர்ந்து எங்கள எழுத தூண்டும்.

      Delete