Wednesday, 9 April 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்


ஒரு வீடு...

பிள்ளைங்க ஓடி விளையாட முற்றம், பெரியவங்க கதை பேச திண்ணை, குளிர்ச்சிக்கு ஓட்டு கூரைன்னு அழகா இருக்கு. புதுசா வெள்ளை அடிச்சிருப்பாங்க போல, பளிச்சுன்னு இருக்கு.

அப்படியே வாங்க, அந்த திண்ணைல உக்காந்து நாமளும் கொஞ்சம் சுத்தும்முத்தும் வேடிக்க பாப்போம்.

இங்க பாருங்க, ஒரு பட்டாம்பூச்சி வெள்ளை வெளேர்ன்னு பறந்து போகுது பாத்தீங்களா? அட, அதுபாட்டுக்கு போய் ஒரு சிகப்பு செம்பருத்தியில உக்காந்துடுச்சு. செம்பருத்தி பூ இதழ் விரிச்சு அழகா இருக்குல... பச்சை காம்பு, சிகப்பு இதழ், மஞ்சள் மகரந்தம்... நம்ம பட்டாம்பூச்சி மஞ்சள் மகரந்தத்துல தான் போய் உக்காருது.

என்ன இது, திடீர்னு கீச் கீச்ன்னு கிளிங்க சத்தம் கேக்குதே....
அப்படியே வலது பக்கமா திரும்பி, அண்ணாந்து வானத்த பாருங்க...

ஹப்பா.... எத்தனை கிளிங்க.... என்னா கூட்டம். ஆமா, இதுங்களுக்குள்ள சண்டையே வராதா?

ஹே.... அங்க பாருங்க, எல்லா கிளிங்களும் அந்த நாட்டு கொய்யா மரத்து மேல போய் உக்காந்தாச்சு. ஹஹா... கிளி உதடு சிகப்பா, அது கொத்தி சாப்டுற பச்சை கலர் கொய்யா பழத்தோட உள்பகுதியும் சிகப்பு... விட்டா எல்லா பழங்களையும் கிளிங்களே சாப்ட்ரும். நமக்கும் பழம் வேணும் தானே... வாங்க, போய் ஆளுக்கு ஓரே ஒரு பழம், அதுவும் கிளி கடிச்ச பழமா பறிச்சி சாப்பிடுவோம்....

சரி, பழத்த சாப்ட்டுட்டே நாம சில மனுசங்க குணங்கள தெரிஞ்சுப்போமா?


மனுசன்கள்ல சில வகை உண்டு. எப்பவும் தன் மேல ஒரு கழிவிரக்கம் இருந்து கிட்டே இருக்கும் அவங்களுக்கு.

நாம மட்டும் தான் ரொம்ப கஷ்ட்டப்படுறோம், நமக்கு மட்டும் தான் இந்த உலகம் துரோகம் பண்ணுதுன்னு எப்பவும் மனசுக்குள்ள புலம்பிட்டே இருப்பாங்க.

சின்னதா ஒரு வெற்றி அவங்க வாழ்க்கைல கிடைச்சாலும், ஹைய்யோ இந்த வெற்றிக்காக நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன், இவ்வளவு கஷ்டப்பட்டேன்ன்னு அப்பவும் தன்னோட கஷ்டங்கள முன் நிறுத்துவதுலயே குறியா இருப்பாங்க...

இவங்களோட கேரக்டர் எப்படி பட்டதுனா, எப்படியாவது மத்தவங்களோட ஈர்ப்ப தன் மேல திருப்பணும். அதுக்கு தன்னோட வாழ்க்கை சோக மயமானதுன்னு ஒரு மாயைய தன்ன சுற்றி வச்சுக்குறாங்க... தனக்கு எல்லாம் தெரியும்ங்குற மமதை வேற அவங்க மனசுக்குள்ள இருக்கும். ஆனா அத வெளிக்காட்டிக்க கூடாதுன்னு அவங்களே நினச்சாலும், புலம்பி புலம்பியே தன்னோட ஒரிஜினல் முகத்த காட்டிடுவாங்க....

எப்பவும் அடுத்தவங்க சோகத்த பாத்து தனக்கும் தாங்க முடியலன்னு புலம்பிட்டே இருப்பாங்க. கூர்ந்து பாத்தா, இதுவும் கூட அடுத்தவங்க பார்வைய தன்மேல திருப்பிக்க முயற்சிக்குற ஒரு டெக்னிக் தான்...

இப்படியானவங்க ரொம்ப சுயநலவாதிகள் கூட... தன்னோட தேவைகள நிறைவேத்த மட்டுமே அடுத்தவங்கள இவங்க பயன்படுத்திப்பாங்க...

சோகங்களை புலம்பிட்டே இருப்பவங்க கிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணும்.... 

பீ கேர்புல்.... நான் நாம எல்லாரையும் தான் சொன்னேன்.... 

21 comments:

 1. பதிவை மிக ரசித்தேன்
  குறிப்பாக இறுதி வரியை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்க கருத்துக்கு தேங்க்ஸ். கண்டிப்பா தொடர்ந்து எழுதுறேன்

   Delete
 2. வேற எதுக்காக இல்லாடினும் அவங்களோட எதிர்மறை எண்ணங்களை நமக்குள்ளும் நிரப்பிடுவாங்க...அதுக்காகவாவது நாம விலகி நிற்கணும்..

  ReplyDelete
  Replies
  1. ஐயோ அம்மா, அவங்க கிட்ட நாம படுற பாடு இருக்கே.... சொல்லி புரிய வைக்குறதுக்குள்ள ஹைய்யோ... முடியாது

   Delete
 3. உண்மையான கருத்து ,எனக்கும் சுயவிரக்கம் கொள்பவர்களைக் கண்டால் சுத்தமாய் பிடிப்பதில்லை !
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் பிடிக்காது அண்ணா... பாத்த உடனே ஓடி ஒளிஞ்சிடுவேன்

   Delete
 4. அருமை ... ரசித்தேன் ,,,,
  வாழத்துக்கள்....
  -அன்புடன்-
  S. முகம்மது நவ்சின் கான்.

  ReplyDelete
  Replies
  1. உங்களோட ரசிப்புக்கு தேங்க்ஸ்

   Delete
 5. சிலரிடம் தள்ளிப் போவதே நல்லது தான்...

  ReplyDelete
  Replies
  1. ஆமா அண்ணா, இல்லனா நம்மள தலைய பிச்சுக்க வைப்பாங்க

   Delete
 6. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகிறேன்
  அருமை சகோதரியாரே
  பீ கேர்புல்.... நான் நாம எல்லாரையும் தான் சொன்னேன்....

  ReplyDelete
  Replies
  1. உங்க வருகைக்கு தேங்க்ஸ் அண்ணா... தொடர்ந்து வாங்க.. வாசிச்சு கருத்தும் சொல்லுங்க

   Delete
 7. Replies
  1. ஓட்டு போட்டதுக்கும் தேங்க்ஸ்

   Delete
 8. இதுபோல சுய இரக்கம் கொண்ட நபருடன் நான் பழகியதுண்டு. இந்த மனப்பான்மையை விட்டொழித்து மனதில் தன்னம்பிக்கையை மலரச் செய்ய முயன்று தோற்றதுமுண்டு. அழகாய்ச் சொன்னம்மா.

  ReplyDelete
  Replies
  1. ஆமா அண்ணா, நாம எவ்வளவு புரிய வைக்க முயன்றாலும் முடியாது முடியாதுன்னு சொல்றவங்க கிட்ட நாம படுற பாடு இருக்கே.... ஹப்பா....

   Delete
 9. அருமையான பதிவு. எதிர்மறையான எண்ணங்கள் அவரை மட்டுமல்ல சுற்றி இருக்கும் மற்றவர்களையும் காயப்படுத்தும்.....

  ReplyDelete
  Replies
  1. அதே தான்... ரொம்ப டேஞ்சர்

   Delete
 10. இப்படியானவங்க ரொம்ப சுயநலவாதிகள் கூட... தன்னோட தேவைகள நிறைவேத்த மட்டுமே அடுத்தவங்கள இவங்க பயன்படுத்திப்பாங்க...

  சோகங்களை புலம்பிட்டே இருப்பவங்க கிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணும்....


  எப்போதும் புலம்புவவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்..!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் உண்மை தான்

   Delete
 11. என்னை பற்றி எழுதியது போல் இருந்தது.....
  என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன்...

  ReplyDelete