சமீப காலமா பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரிச்சுகிட்டே இருக்கு. எங்க பாத்தாலும் அத பத்தின நியூஸ். காரசாரமான விவாதங்கள். அத எல்லாம் படிச்சா தலையே வெடிச்சுடும்.
பொதுவா இந்த மாதிரியான சம்பவங்கள பத்தி கேள்விப்பட்டதுமே ஒரு கையாலாகாததனம் என் மனசுல வந்து ஒட்டிக்கும். நாட்டுல நடக்குற எந்த அநீதிகளையும் எதிர்த்து நம்மால போராட முடியாது. ரெண்டுநாள் பாதிக்கப்பட்ட/கொல்லப்பட்டவங்கள நினச்சு மனசுக்குள்ள அவங்களுக்காக பிரார்த்தனை மட்டுமே பண்ணிக்க முடியும் என்னால. அத தவிர இப்போதைக்கு நான் எதுவும் செய்யப் போறது இல்ல. அப்புறம் எதுக்கு இந்த பொங்கல்கள் எல்லாம்னு எனக்கு நானே மவுனமா இருந்துடுவேன்.
ஆனா இன்னிக்கி நாலு பொண்ணுங்கள கொன்னுட்டு நாலு நாள் அந்த உயிரில்லாத உடம்புகள பாலியல் வன்புணர்வு செய்தவன் பத்தி ஒன்-இந்தியா (one India) பத்திரிக்கை வெளியிட்டு இருந்த செய்திய பாத்தேன்.
அத படிச்சதும் ஒரு மிகப்பெரிய கொடூர சம்பவத்த எப்படி கிளுகிளுப்பு சம்பவமா இவங்களால மாத்த முடிஞ்சுதுங்குற எரிச்சல்தான் என்னை இத எழுத வைக்குது.
முதல்ல பேஸ்புக்ல தான் அத பத்தின நியூஸ் என் கண்ணுல பட்டுச்சு. ஒன்-இந்தியா வெளியிட்டு இருந்த செய்திய ஷேர் செய்திருந்த பெண், ‘மாத்தி மாத்தி காறி துப்பிப்போம்”ன்னு தலைப்பு குடுத்து அத ஷேர் செய்திருந்தார். “கள்ளக்காதலி”, “காமக் கொடூரன்”ங்குற அடைமொழிகள் எல்லாம் பலமாவே இருந்துச்சு.
இது முதல் கணவனோட சாபம், இந்த மாதிரி வீட்டை விட்டு ஓடிப் போறவங்களுக்கு இது தான் நிலைமைங்குற மாதிரியான கமண்ட்ஸ்... சரி, இத எல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல, மொத்தத்துல ஒரு துர்சம்பவம் “த்தூ”ன்னு துப்பிட்டு அடுத்த வேலைய பாக்கப்போற அளவு தான் மக்கள் மனசுல பாதிப்ப ஏற்படுத்தி இருக்கு.
பெண்கள போகப்பொருளா மட்டும் நினைக்குற இந்த சமூகத்துல பத்திரிக்கைகளும் அதையே தான் மக்களுக்கு போதிக்குதா?
நான் ஒன்-இந்தியாவின் அந்த செய்திய மட்டும் சொல்லல, அதே சம்பவத்த முன்னிறுத்தி அது வெளியிட்டு இருக்குற இந்த செய்தியையும் கொஞ்சம் பாருங்க.
கிட்டதட்ட ஒரு கிளுகிளுப்பு ரேஞ்சுக்கு அந்த சம்பவத்த கதையா தனி தனி தலைப்பு போட்டு விவரிச்சி இருக்காங்க. இத மேம்போக்கா படிக்குற எல்லாருக்குமே தப்பு செஞ்சா இதான் தண்டனைங்குற ஒரு குரூர எண்ணத்த ஒன்-இந்தியாவோட இந்த கட்டுரை ஏற்படுத்த தவறவே தவறாது.
கிட்டத்தட்ட கொலையுண்ட பெண்ணை எவ்வளவு கீழ்த்தரமா சித்தரிக்கணுமோ அவ்வளவு கீழ்த்தரமா சித்தரிச்சி இருக்காங்க. கணவன விட்டுட்டு ஒரு பொண்ணு இன்னொரு ஆண் கூட போயிட்டாலே அவளோட பேரு “கள்ளக்காதலி”யாம்.
அந்த பெண்ணோட நிலைமை என்னனோ, எதுக்காக அவனோட போனாள்னோ கண்டிப்பா அவள தவிர வேற யாருக்கும் சொல்ற அருகதை கிடையாது. அவரவர் நியாயம் அவரவருக்கு மட்டும் தான். அந்த பெண் கொலை செய்யப்பட்டாள்ங்குற ஒரே காரணத்துக்காக எவ்வளவு ஈசியா இந்த பத்திரிக்கை அவள கள்ளக்காதலியா மாத்திடுது?
வெறும் உடல் சுகத்துக்காக ஒருத்தனோட போற எந்த பெண்ணும் தன்னோட குழந்தைகளையும் அவளோட கூட்டிட்டு போக மாட்டா. அதுவும் மூணு பேரும் வளர்ந்த, வயசுக்கு வந்த பெண் பிள்ளைங்க. அவன் மேல எத்தன நம்பிக்கை இருந்துருந்தா தன்னோட பிள்ளைகளோட எதிர்காலத்த அவன நம்பி அவ அவன்கிட்ட ஒப்படைச்சி இருப்பா?
இது காதலையும் தாண்டி, காமத்தையும் தாண்டி அவளுக்கு அவன் மேல இருந்த நம்பிக்கைய தான காட்டுது? அப்படி இருக்குறப்ப அந்த நம்பிக்கை உடையுறப்ப அவ எவ்வளவு உடைஞ்சு போயிருப்பா?
தான் பெத்த பிள்ளைய வன்புணர்வு செய்ய துடிக்குற ஒரு ஜந்துகிட்ட இருந்து தன்னோட மகள காப்பாத்துற தாய்க்கோழி ஸ்தானத்துல அவ எவ்வளவு பதபதச்சு போயிருப்பா? நம்பி வந்தவன் சுயரூபம் தெரிஞ்சி அவன தன் கிட்ட அண்ட விடாம துரத்தி அடிச்சது அவ தப்பா? இதுல அவ தவிக்க விட்டான்னு ஒன்-இந்தியா பதறுது. அடப்பாவிகளா, தன்னை நம்ப வச்சு கூட்டிட்டு வந்ததோட இல்லாம, தன்னோட பெண்ணையும் அனுபவிக்க நினைக்குற எந்த மனுஷன் கூட தான் ஒருத்தி படுப்பா? வேற போக்கிடமும் இல்லாம, தன் பெண்களையும் காப்பாத்த அவன தான் இல்லாத நேரத்துல அவன வீட்டுக்குள்ள விடாம தன் பிள்ளைகள பாதுகாத்த அவ தப்பானவளா?
தவிக்க விட்டதால மதம் கொண்ட யானை போல இருந்தானாம் அவன் – am sorry one-india. இதுக்கு நீங்க ஒரு மஞ்சள் பத்திரிக்கை நடத்தலாம். ஆனா அதுல கூட தயவுசெய்து வக்கிரங்கள விதைச்சுடாதீங்க.
அவ அப்படி அவன் கூட போயிருக்கவே கூடாதுங்குற வியாக்யானங்கள் பேச நிறைய பேர் இருப்பாங்க. நான் எப்பவும் சொல்றது தான், தலைவலியும் திருகுவலியும் அவங்கவங்களுக்கு வந்தா தான் தெரியும். முதல்ல அடுத்தவங்க வீட்ல என்ன கிளுகிளுப்பு சமாச்சாரங்கள் நடக்குதுங்குறத எட்டிப்பாக்குறத விட்டுட்டு அவரவர் வேலைய பாத்தாலே போதும்.
ஏன்னா அந்த so called கிளுகிளுப்பு சமாச்சாரத்துக்கு பின்னாடி ஒரு மிகப்பெரிய வலி இருக்கலாம், ஒரு துரோகம் இருக்கலாம், ஒரு வயிற்று பசியாக இருக்கலாம், ஒரு எதிர்கால ஏக்கம் இருக்கலாம், வாழத் துடிக்குற ஒரு இதயம் இருக்கலாம்.
நாப்பது பேர் முன்னால நடந்த ஒரு கொலை ஏற்படுத்திய பாதிப்புல ஒரு கால்வாசி பாதிப்பு கூட இந்த நாலு பெண்கள் கொலை ஏற்படுத்தலையா? ஏன், இந்த நாலு பேருமே கிளுகிளுப்பு கதை எழுதவும் பத்திரிக்கை சர்குலேசன் ஏத்துற காரணகர்த்தாவா இருக்குறதுக்கு மட்டும் தான் லாயக்கா?
முதல்ல பத்திரிகைகள் ஒரு குறைந்தபட்ச பத்திரிக்கை தர்மத்தையாவது பின்பற்றணும். இந்த சம்பவத்த வெறுமனே நியூஸ்சா போட்ருந்தா கூட போதும், ஆனா அத விட்டுட்டு தங்களோட பத்திரிக்கை சர்குலேசனுக்காக பிணங்களை வைத்து கிளுகிளுப்பு தேடுற மனோபாவத்த ஒன்-இந்தியா மாதிரியான பத்திரிக்கைகள் நிறுத்தினா நல்லது. நாலு பேரை கொன்ன கொலையாளி நாலு பேரை தான் கொன்னான், பாலியல் வன்புணர்வு செய்தான். ஆனா அத பாலியல் கதைகளாக்கி மக்கள் மத்தியில உலவ விடுற இந்த மாதிரி பத்திரிக்கைகள் இன்னும் பல பேர் மனசுல நடந்த சம்பவம் நியாயமானதேங்குற மனோபாவத்த விதைச்சி பல கொலையாளிகள உருவாக்கி விடுது. அப்படியே இல்லாட்டாலும் சம்பத்தோட வீரியத்த நீர்த்து போக செய்யுது. இந்த மாதிரியான பத்திரிக்கை செய்திகள படிச்சுட்டு ஜஸ்ட் லைக் தட், த்தூன்னு துப்பிட்டு, இதெல்லாம் சகஜம்னு எடுத்துகிட்டு அவரவர் அவரவர் வேலைய பாக்க போய்டுறாங்க.
இந்தா, இத எழுதிட்டு நானும், படிச்சுட்டு நீங்களும் அவரவர் வேலைய பாக்கப் போற மாதிரி...

ஒன் இண்டியா செய்திகள் எப்போதும் இப்படித்தான் இருக்கும்! ஆரம்பகாலத்தில் நானும் படித்து இருக்கிறேன்! தற்போது அந்த தளம் செல்வது இல்லை!
ReplyDeleteநான் இப்ப தான் படிக்குறேன். இவ்வளவு மலிவாவா இருக்கும் அவங்களோட செய்திகள்? கொடுமையா இருக்கு
Deleteஒன் இண்டியா (பழைய பெயர் தட்ஸ் டமில்), ஒரு மஞ்சள் பத்திரிக்கை மேடம்.
Deleteஅத தான மக்கள் விரும்பி படிக்குறாங்க. முதல்ல இந்த சைக்கோ தனங்கள ஒழிக்கணும்
Deleteபெண் என்று வந்துவிட்டால் ஆண்களின் இயல்பு இதுதான். போதிப்பார்கள். அல்லது நடந்த அவலம் அட்டூழியத்தை நியாயப்படுத்துவார்கள். பெண் இருந்தாலும் இறந்தாலும் இதுவே ஆண்களின் வக்கிர புத்தி.
ReplyDeleteஇப்படி ஒட்டுமொத்த ஆண்களையும் குத்தம் சொன்னா எப்படி? இங்க நான் குறிப்பிட்டு இருக்குறது ஒரு பத்திரிக்கை செய்திய தான். எத்தனையோ ஆண்கள் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டுட்டு தான் இருக்காங்க.
Deleteஇன்னொரு விஷயம், உங்கள் வலைப்பக்கத்தில் அழகான பல படங்களுக்கு மத்தியில் காதல் என்ற தலைப்பில் ஒரு பொறுக்கியின் படத்தைப் போட்டிருக்கிறீர்களே முதலில் அதை மாற்றுங்கள். இவனைப் போன்றவர்கள்தான் காதலை மறுக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்யத் தூண்டும் நம் சமூகத்தின் அடையாளம்.
ReplyDeleteஅவர் ஒரு நடிகர். தன்னுடைய கதாபாத்திரம் என்னவோ அதுக்கு தகுந்த மாதிரி நடிக்குறார். நம் கோபங்கள் எப்பவும் தவறா நடக்குற சமுதாய செயல்கள்ல இருக்கனுமே தவிர தனிப்பட்ட நபர் மேல இருக்க கூடாது. நீங்க சொல்ற அந்த பொறுக்கி கெட் அப்குள்ள ஒரு நல்லவன் இருப்பான். அவன வெளிக்கொண்டு வர தான் இந்த சமுதாயம் பாடுபடணுமே தவிர அவன தூண்டி விட்டு தவறு செய்ய வைக்க கூடாது
Deleteவெரி குட். நீங்களே ஆண் திமிருக்கு வக்காலத்து வாங்கும்போது நான் என்ன சொல்வது? ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆண்களிடம் அடிமைப்பட்ட பெண் குலத்தின் நீட்சியாயிற்றியே? உங்கள் டி என் ஏ விலே இந்த அடிமைப் புத்தி பதிந்திருக்கத்தானே செய்யும்? பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஆண்கள் வெகு சிலரே. அவர்களை வைத்துக்கொண்டு நீங்கள் ஒட்டு மொத்த ஆண் சமுதாயத்தையும் எடை போடாதீர்கள்.
Deleteஹாஹா.... ///உங்கள் டி என் ஏ விலே இந்த அடிமைப் புத்தி பதிந்திருக்கத்தானே செய்யும்?/// இந்த வார்தையிலேயே நீங்கள் பெண்கள் தானேன்னு அலட்சியம் தானே தெரியுது. பெண்களுக்காக குரல் குடுக்குற நீங்க கூட குற்றசாட்டை தானே வைக்குறீங்க?
Deleteஅத விடுங்க. நீங்களே சொல்லிட்டீங்க, ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆண்களிடம் அடிமைப்பட்ட பெண் குலத்தின் நீட்சின்னு. ஆக, ஆண்கள் பெண்களை அடிமையா வச்சிருக்குறதும், பெண்கள் கிட்ட அடிமை புத்தி பதிஞ்சிருக்குனும் நீங்க சொல்றீங்க.
ஒரு விவாதத்துக்கு கேக்குறேன், இந்த மாதிரியான பெண்களை மட்டம் தட்டி தட்டி வச்சு கூடவே நீங்க இன்னும் எழவே இல்லன்னு சொன்னா என்ன அர்த்தம்?
எல்லா ஆண்களையும் குறை சொல்லிட்டா மட்டும் நான் சுதந்திரமானவள் ன்னு இந்த சமுதாயம் என்னை ஒத்துக்குமா?
எனக்கு யாரையும் குறை சொல்ல பிடிக்கலங்குறது தான் உண்மை. ஏன்னா காலம்காலமா ஆண்கள் மனசுல பதிஞ்சு இருக்குற விசயங்கள மாத்தனும்னா அவன் தலைல நாலு அடி அடிச்சு மாத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமா அவன் மனச தான் மாத்தனும். அதுக்கு குழந்தைல இருந்தே அவனுக்கு கத்துக் குடுக்கணும். ஆனா கத்துக் குடுக்குறோமா? இல்லையே... அப்புறம் எங்க இருந்து வரும் மாற்றம்?
அத தான் நான் சொல்றேன், மாற்றம் சமூகத்துல இருந்து ஆரம்பிக்கணும். ஆண் மாறனும், பெண் மாறணும்னு மாத்தி மாத்தி குற்றம் சொல்லிட்டு இருக்க வேணாமே
வக்கிரம்....
ReplyDeleteஅதனால தான் பாத்துட்டு அப்படியே கடந்து போக முடியாம எழுதிட்டேன்
Delete
ReplyDelete***அந்த பெண்ணோட நிலைமை என்னனோ, எதுக்காக அவனோட போனாள்னோ கண்டிப்பா அவள தவிர வேற யாருக்கும் சொல்ற அருகதை கிடையாது. அவரவர் நியாயம் அவரவருக்கு மட்டும் தான். ***
அடடா! அப்போஒ சட்டம்? Nobody is above law! அப்படி இப்படினு சொல்றாங்க.
அவள் மாசற்ற தாய்னு நீங்க அடிச்சுச் சொல்றமாதிரி இருக்கு!
------------------------
ஒரு தாய், 3 குழந்தைகளுக்கு தாய், கணவன் சரியில்லைனா விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை மணக்கலாம். அப்படி செய்யாமல் இன்னொருவருடன் தான் பெண்குழந்தைகளை கூட்டிக்கொணடு போயிருக்கிறாள்.
இதையெல்லாம் விமர்சிச்சா தாய்க்குலம் ஏற்றுக் கொள்ளுமா? இல்லைனா புருசன் உதவக்கறைப் புருசனை என்ன பண்ணுறது பேசுமா?
ஒரு தாய் தரமிழக்கிறபோது, ஒரு பொறுக்கியுடன் ஓடிப்போகும்போது அதை பெண் தெய்வமாக வணங்கணும்னு எதிர்பார்த்தால் கஷ்டம்தான். ஒரு ஆம்பளை இதேபோல் செய்தால் அவன் பொறுக்கி.
அதையே ஒரு பெண் செய்தால், அவள் தெய்வம்னு வணங்கணுமா?
அந்தளவுக்கு இன்னும் ஆண்கள் பண்படவில்லை.
ஒரு பெண் புருசனை விட்டு இன்னொருவனுடன் ஒடிப்போனா பிறகு அவள் படும் இன்னல்களைப் பார்த்து காண்ணீர் வடிக்கும் ஆண்கள் உலகம் பரலோகத்தில்தான் கிடைக்கும்.
அதுக்காக இந்த ஆர்ட்டிக்கிள் சரியா? என்றால் அப்படி எதுவும் நான் சொல்ல வரவில்லை!
இந்த அசிங்க எழுத்தை விமர்சிக்கும்போது ஒரு தாய் தரமிழந்து நடந்தூ கொண்டது கவனிக்கப் படாமல் விடப்படுகிறது என்பது என் வாதம்.
அந்த பெண்ணை தெய்வமா வணங்கணும்னு நான் எந்த இடத்துலயும் சொல்லல. அதே நேரம் ஒரு செய்திய அதுவும் பயங்கரமா நடந்த ஒரு செய்திய கிளுகிளுப்பு செய்தியாக்க வேணாம்னு தான் சொன்னேன்.
Deleteஅதே போல ஓடிப் போற பெண் பத்தி இந்த நேரம் விமர்சனம் பண்ணி தான் தப்ப நாம ஜஸ்டிபை பண்றோம்ங்குறதயும் மறுக்க முடியாது.
நீங்க மேற்கோள் காட்டியிருக்குற லைன்ஸ்ல நான் தப்பா சொன்னதா நினைக்கல. காரணம் ஒரு பெண் சார்பு நிலைல நான் இருந்து பேசுறப்ப அவ முதல் கணவனை பற்றியோ ஆணினத்த பத்தியோ நான் எந்த விமர்சனமும் வைக்கல. அவள் ஏன் போனாள்ங்குறது காரணத்த அவள் மட்டும் தான் சொல்ல முடியும். கண்டிப்பா நீங்களோ இல்ல நானோ சொல்ல முடியாது. இது ஆணுக்கும் சேர்த்து தான். மூணு பெண்களோட தாயை எதுக்கு குழந்தைகளோட கூட்டிட்டு போனான்னு அவனுக்கு மட்டும் தான் தெரியும். அத இப்ப அவன் வாக்குமூலமா குடுத்ததுல இருந்து அவன் ஆண்ங்குற தகுதியே இல்லாதவன்னு என்னோட பார்வையில நான் பாக்குறேன் அவ்வளவு தான்.
அப்புறம் சட்டம் பத்தி சொல்லி இருக்கீங்க. இந்த சட்டம் சார்ந்த நீதி எல்லா மக்களுக்கும் சரியா கிடச்சிடுதா? நம்மள்ல எத்தன பேருக்கு எல்லா சட்டமும் தெரியும்? உங்களுக்கு விவாகரத்து பத்தி நல்லா தெரிஞ்சிருக்குனா அது பத்தி மத்தவங்களுக்கும் தெரியனும்னு அவசியம் இல்ல. நான் இத ஏன் சொல்றேன்னா, இன்னமும் கிராமங்கள்ல அறுத்துக் கட்டுதல்னு ஒரு நிகழ்ச்சி இருக்கு. புருஷன் சரியில்லனா ஊர் பஞ்சாயத்துல சொல்லிட்டு வேற யார் கூடவும் வாழுற உரிமை இருக்குன்னு நம்பிட்டு இருக்குற கிராமத்து ஜனங்க (கவனிங்க, இதுல ஆண், பெண் எல்லோரும் அடக்கம்) இன்னமும் இருக்காங்க.
ஒரு பெண் புருசனை விட்டு இன்னொருவனுடன் ஒடிப்போனா பிறகு அவள் படும் இன்னல்களைப் பார்த்து காண்ணீர் வடிக்கும் ஆண்கள் உலகம் பரலோகத்தில்தான் கிடைக்கும்/// ஒட்டுமொத்தமா ஆண்களுக்கு யாருக்கும் புரியாதுன்னு சொல்லாதீங்க. அப்படி புரியலனாலும் அவள பத்தி பரிதாபப்பட வேணாம், ஒரு கொலை நடந்தா நமக்கென்னன்னு பாத்துட்டு போற மனபக்குவம் போலவே அவள காயப்படுத்தாம தாண்டி போய்டலாம்.
தரம் - அப்படிங்குற வார்த்தைய அளக்குற கருவி ஏதாவது இருக்கானு எனக்கு தெரியல. நான் அவ செய்தது சரின்னு வாதிடல. ஆனா எதுவோ அவள அப்படி செய்ய தூண்டியிருக்குனு தான் சொல்றேன்.
அப்புறம் ஒரு தாய் தரமிழந்து நடந்தூ கொண்டது இந்த இடத்துல கண்டிப்பா கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இல்ல. ஏன்னா நடந்தது ஒரு கொலை இல்ல நாலு கொலை. இந்த விஷயம் கவனிக்கப்படனும்னா தனியா ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்த ஏன் முன்னெடுத்துட்டு போக கூடாது?
ஒரு தாய் தரமிழக்கும் போது ஒரு தந்தையும் தான் தன் கடமைல இருந்து தவறுறான். ஏன் அந்த கணவன் தன்னோட மூணு பிள்ளைகளையும் தன்னோட வச்சுக்கலன்னு எதிர்வாதம் செய்ய நான் தயார் இல்ல. காரணம், இங்க ஒழுக்க நெறின்னு சட்டத்த வகுத்துட்டோம். well. அதை பற்றின பாடங்கள நம்மோட இளைய சமுதாயத்துக்கு சொல்லிக் குடுக்குறத விட்டுட்டு இன்னமும் அவள் ஒழுக்கம் தவறி விட்டவள்னே கொலையுண்டவர்கள பாத்து கூச்சல் போட்டுட்டு இருப்போம்.
***ஒரு தாய் தரமிழக்கும் போது ஒரு தந்தையும் தான் தன் கடமைல இருந்து தவறுறான்.****
Deleteகெடையாவே கெடையாது. அப்படித்தான் இருக்கணும்னு அவசியமே இல்ல unless you are living in a perfect world. You are NOT!
நல்ல மனைவி, தரமற்ற கணவன் தம்பதிகள் இருக்காங்க. அதேபோல் நல்ல கணவன், தரமற்ற மனைவியும் இருக்கத்தான் செய்றாங்க.
ஒரு பெண் தரமற்றவள்னா அதுக்கு அவ ஆம்படையான் தான் காரணம், ஒரு ஆண் தவறு செய்தால் அதற்கு அவன் மனைவிதான் காரணம். தப்பு ரெண்டு பக்கமும்தான்..நமகென்ன தெரியும் நாலு சுவருக்குள்ள நடப்பது? என்பதுபோல் சமாளிப்பு தேவையற்றது
ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க, நான் எப்பவும் ஆணோ பெண்ணோ யாரையும் ஒட்டுமொத்தமா குறை சொல்ல மாட்டேன். இந்த விசயத்த விவாத பொருளா மாத்த விரும்பலன்னு தான் தாய் தரமிழந்தான்னு நீங்க சொன்னதுக்கு நான் தந்தையையும் அப்படி சொல்லலாம் தானே, ஆனா நான் எதிர்வாதம் பண்ண தயார் இல்லன்னு சொன்னேன். இங்க தந்தைன்னு அந்த மூணு பெண்களோட தந்தைய மட்டும் தான் சொன்னேன். வேற யாரையும் குறிப்பிடல. ஏன்னா அந்த தாய் தரமிழந்து போனதா சொல்லப்படும் போது அந்த தந்தை பொறுப்பா தன்னோட குழந்தைகள பாத்துகாத்துருக்கலாம், இப்படி அவங்க சாக வேண்டிய அவசியம் இல்லன்னு சம்மந்தப்பட்டவங்கள மட்டும் தான் குறிப்பிட்டேன்.
Deleteஎன்னை பொருத்தவரைக்கும் நாம யாரையும் கிரிட்டிசைஸ் பண்ணாம இருந்தாலே போதும். நம்மால முடிஞ்ச அளவு குழந்தைகளுக்கு நல்ல விசயங்கள போதிக்கலாம். பிறரை அவங்க மனசை மதிக்க கத்துக் குடுக்கலாம்.
நீங்களோ நானோ இந்த விசயத்துல யாரையும் குற்றம் சொல்ல வேணாம்னு தான் நான் சொல்றேன். அடுத்து இப்படியான தவறுகள் நடக்காம இருக்க என்ன பண்ணனும்னு யோசிக்கலாம்.
காயத்ரி ஒன் இந்தியா செய்திகள் எதுவுமே சரியாக இருந்ததில்லை. எனவே வாசிப்பதில்லை. ஆனால் பொதுவாகவே பத்திரிகைத் தர்மம் என்பதெல்லாம் இப்போது அரிது. சென்சேஷனல்தான் பிரதானம். நான் அறிந்த ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டது தன்னால் முதல் வருடத்தை மூன்று வருடங்களாகியும் பாஸ் செய்ய முடியவில்லை (கால்நடை மருத்துவம்) என்பதால். ஆனால் பத்திரிகை போட்டது காதல் தோல்வி, கள்ளக் காதலன் என்றெல்லாம்...கதை கட்டியிருந்தார்கள். அப்போதுதான் நான் அறிந்தது பத்திரிகையில் வரும் செய்திகள் பலதும் இப்படித்தான் என்று. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் போல்தான்...
ReplyDeleteகொடூரம் வக்கிரம் இந்நிகழ்வு.
கீதா
இன்னைக்கு காலகட்டத்துல சாவ கூட பொழைப்புக்காக விக்குற நிலைமைல தான் இந்த ஊடகங்கள் இருக்கு. சீரியஸ் விசயத்த கூட நமுத்து போக வச்சுடுறாங்க... கொடுமையா இருக்கு
Delete