Tuesday 31 January 2017

தற்கொலைக் கடிதம்- Review



என்னோட புத்தகத்துக்கு வந்த ஒரு review இது.....
......................................

வணக்கம் மேடம்.

உங்களின் தற்கொலைக்கடிதம் புத்தகம் படித்த ஒரு சாதாரண மனிதன் நான்.

எனக்கு review எல்லாம் எழுதத்தெரியாது.

தமிழ் தட்டச்சும் தகராறுதான்.

புத்தகம் படிக்கப்படிக்க மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.


பொதுவாக, சென்னையில் வாழும் அரவிந்தாகிய நான் கிராம வாழ்க்கையின் என்னவெல்லாம் தொலைத்திருக்கிறேன் என்பதை நூல் நெடுகிலும் உணர்ந்தேன்.

கணேசன் மாமா அஞ்சு வயசுலயே தோப்புக்கணக்கு முழுசா போடுறது கால்குலேட்டர் வச்சே காலத்த ஓட்டுர எங்களுக்கு எட்டாவது உலக அதிசயம்.

கன்னி பூஜை கதைல வருசத்தில ஒருதடவ சாமி கும்பிடுற விசயம் ஒரு பெரும் விழாவா மாறுறது எனக்கு உங்கமேல பொறாமைய உண்டாக்கிரிச்சு ஏன்னா சென்னையில ஒரு பண்டிகைனா கூட டீவீ பார்க்குறதுதான் எங்க செலிபிரேஷன்.

தற்கொலைக்கடிதம் பெண்களின் சுதந்திரமின்மையையும் அவர்களின் ஏக்கங்களையும் அப்பட்டமாய் காட்டிருச்சு. ஒரு வாசகனாக இனி என் சகோதரியை கல்யாண விசயமாக எந்த கட்டாயமும் படுத்தக்கூடாது என்ற முடிவு எடுத்திருக்கிறேன் இந்த கடிதத்தால்.

அநுபவம் புதுசு கதையில் ஒரு கால் முறிஞ்சா வரும் சிரமங்களை அப்படியே கண்முன் கொண்டுவந்துட்டிங்க. என்னதான் டாக்டர்கள் தெய்வங்கள்னு நாம சொன்னாலும் அவங்களும் மனுசங்கதான், சராசரி பிரச்சனைகள் அவங்களுக்கும் இருக்கும்னு ஆப்ரேஷன் தியேட்டர் உரையாடல் காட்டுது. இது உங்க சொந்த அனுபவமாக இருக்கலாம்னு தோணுறதால லேசா தடுக்கி விழுந்தாலேயே கால் முறியும் அளவு உங்க பேஸ்மென்ட் வீக்கா இருக்கக்கூடாது என்பது எங்கள் கவலை. சரியாக உடற்பயிற்சியும் கால்சியம் உணவும் சேர்த்து உங்களின் அல்லது அந்த பெண்ணின் பேஸ்மென்ட்டை வலுப்படுத்துவது உங்கள் பொறுப்பு. அறிவியல் பேராசிரியை உங்களைவிட வங்கி அதிகாரிக்கு இந்த விசயத்தில் குறைவாகவே தெரியும் so take care of this.

ராக்காயி மருமக மாதிரி ஒரு அநுபவம் உங்க வலைதளத்தில் ஏற்கனவே படிச்ச நியாபகம். பெண்களின் இத்தகைய பெருந்துன்பங்களுக்கு ஆண்களைவிட முந்தின தலைமுறைப் பெண்கள் காரணமாய் இருப்பது மிகமிக கவலை அளிக்கிறது. அவர்களுக்கு இந்தகால முன்னேற்றங்களை புரியவைப்பது மிகப்பெரும் சவால். இது ஆண்களை நியாயப்படுத்த நான் செய்யும் தந்திரம்னு நீங்க என்னை அசிங்கமா திட்டலாம். but பெண்களுக்குள் உள்ள இயல்பான பொறாமையால் விளையும் அறியாமையின் செயல்களையே ராக்காயி செய்கிறாள். அப்படிப்பட்ட மாமியாரின் பயங்களை மருமகள் எப்படி படிப்படியாய் களைந்து அவளை நெருங்கி ராக்காயியின் பழங்கால அடிமை சிந்தனைகளை மாற்றுகிறாள் என்ற ஒரு புதினம் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன். அப்படிப்பட்ட ஒரு எதார்த்த தீர்வு சொல்லும் நாவல் பெண்களை புலம்புபவர்கள் நிலையிலிருந்து புது உலகை படைக்கும் வீராங்கனைகளாய் மாற்றும்.

மாதவன் சார் நலம் எழுதிய உங்களுக்கு இன்னொரு உளவியல் தீர்வு புதினம் அஸாத்தியம் இல்லை.

உங்கள் இணையம் படித்து வெகுநாட்களாய் என் அலுவலகப்பெண் பணியாளர்கள் சம்மந்தமில்லாமல் என்னிடம் கத்துவதாக தெரிந்தாலும் இதுபோன்ற உடல்பலவீனங்கள் இருக்கக்கூடும் என்றெண்ணி சற்று பொறுமையாகவே அவர்களை கையாளுகிறேன்.

அடுத்த புத்தகங்களில் பாலியல் கல்வி அவசியம் பற்றிய உங்கள் செரிந்த கருத்துகளை எதிர்ப்பார்க்கிறேன்.

உங்கள் ஹீரோவுக்கு டெடிக்கேட் பண்ணினதா தெரியுற அப்பா மாடுகளை பார்த்துக்கொள்ளும் விதம் ஜல்லிக்கட்டு தடை கோரும் மாடர்ன் பெடா அமைப்பு மேனாமினிக்கிகள் படிக்கவேண்டிய ஒன்று.பெண்கள் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கும் அம்சங்களை அப்பா வடிவில் அழகாக காட்டியிருக்கிறீர்கள்.

தீவிரமாக பெண்ணியம் எழுதும் நீங்க ஆண்களின் மனதில் எவ்வளவு ஆழக் குழி தோண்டி அவர்களின் உணர்வுகளை புரிந்துவைத்திருக்கிறீர்கள் என்பதை இருப்புக்குழி காட்டுது.

அப்பாவில் நாயகி குடும்பம் படிப்புக்காக வெளியூர் சென்று திரும்பும்போது அந்த நாயகியை அன்புள்ள ராமையா மட்டுமே அடையாளம் காண்கிறார். சும்மா லூசுத்தனமா ஒரு கனெக்ஷன் பண்ணிப்பார்த்தேன், என் மூளை வரைபடம் அப்படி இயங்குது. நன்கு முன்னேறும் அடுத்தவீட்டுப்பெண்ணை கொன்டாடும் ராமையா ஏன் சொந்த பெண்ணை இப்படி விட்டுவிட்டார் என்று எனக்கு புரியலை. ஒருவேளை அவருக்கு ஆசை இருந்திருக்கும் ஆனால் பல சிக்கலான காரணங்கள் அவரை இப்படி ஆக்கி இருக்கணும்.

ஒவ்வொரு மனிதருக்கும் பின்னால் ஒரு குடும்பம் இருக்கலாம், மிகப்பெரும் சோகம் இருக்கலாம்னு "அது ஒரு விபத்து" சிறப்பாக எடுத்துக்காட்டுது. ரோட்டில் ஒருத்தன் அல்லது ஒருத்தி தேவையில்லாமல் சண்டை போட்டால் அவர்களை இம்சையாக கருதாமல் ஏதோ குடும்பப்பிரச்சனையின் வெளிப்பாடு என்று புரிந்துகொண்டு அவர்களை பதிலுக்கு குறைந்தது காயப்படுத்தாமலாவது இருக்கலாம்.

ப்ரியம்வதனா போன்ற சம்பவங்களை சுற்றி நிறைய பார்த்து எனக்கு எப்பவும் ஏளனச் சிரிப்புதான் வரும் காதலிப்பவர்களை பார்த்தால். மனுசனுக்கு பிரச்சனையே இல்லனா இப்படி புதுசா உருவாக்குவார்கள். இது ஆண்களும் செய்வதுதான்.

தற்கொலைக் கடிதத்தில் சுதந்திர முடிவெடுக்கும் உரிமைக்காக துடிக்கிறாள் நாயகி. இங்கே, நகர்புற நாயகிக்கு அது கிடைத்தும் எப்படி தன்னையே குழப்பிக்கொள்கிறாள்? எனக்கு MBA இல் இதேபோன்று ஒரு தோழி அமைந்தாள். அவளைப் பற்றி விரிவாக பேசுவது எழுத்து மூலம் எனக்கு சாத்தியம் இல்லை. அவள் துயர் துடைக்கமுடியாத பாவி ஆகிவிட்டேன் என்ற குற்ற உணர்வு என் இறப்புவரை என் அடிமனதை அரித்துக்கொன்டுதான் இருக்கும். எனினும் ப்ரியம்வதனா கடைசியில் எடுத்த முடிவு சரிதான். சீக்கிரம் மாறிவிடுவாள்.

அநுபவம் புதுசு, சாகசப்பயணம் இரண்டும் சொந்த அனுபவங்களாக இருக்கக்கூடும்.

தினமும் பதினைந்து ரூபாய்க்கு பால் பாக்கெட் வாங்கும் எங்களுக்கு அதற்குப் பின்னால் உள்ள வலியை புரிந்துகொள்ள உங்களைப் போன்றவர்கள் நிறைய லட்சுமி ப்ரசவம் எழுதணும்.

காட்டுப்பசங்களின் பின்னால் இருக்கும் வறுமை குடும்பமும் கண்ணீரையும்அருமையாக சித்தரித்துள்ளீர்கள். அவர்களை சரியாக வழிகாட்டும் பொறுப்பு அரசாங்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைய இருக்கு.

உங்கள் குறும்பு கொப்பளிக்கும் இதர கதைகள், பீஸா செஞ்சு, சாப்பிட்ட வாய்களை பீஸ்பீஸாக்கிய சம்பவங்கள் எல்லாம் ஸூப்பர்.

அப்பா அம்மா இடையில் ஓடிய நுணுக்கமான காதலை அற்புதமாக ஆங்காங்கே காட்டி இருக்கிறீர்கள்.

தற்கொலைக்கடிதம் போல் பாதிக்கப்படும் இன்றைய பெண்கள் ராக்காயி போல் மாறாமல் என் செல்ல அம்முக்குட்டி அம்மா போல் மாறவேன்டும் என்பதே என் அவா. அதை நோக்கியே நம் கல்விக்கொள்கைகள் மாற்றியமைக்கப்படவேன்டும்.

சூப்பர்ஸ்டார் படங்களில் பெஸ்ட் ஃபைட் கடைசியில் வருவதுபோல் கடைசியாய் வந்த மாதவன் சார் நலம் மனதில் ஆழமாய் பதிந்தது.

எழுத்தாளருக்கு எல்லா துறைகளிலும் அடிப்படை ஞானம் இருக்கணும்னு சொல்வாங்க. உளவியல் துறையில் தன்னைவிட வயதில் பெரியவர்களை ட்ரீட்மென்ட் செய்யும் சிக்கல்களை அனாயசமாக காட்டிவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள் மேடம்.

இது நல்ல தொடக்கம்.

இன்னும் பல புத்தகங்களின் மூலம் நீங்கள் நிச்சயம் புகழ் பெறுவீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு நூறு சதவிகிதம் இருக்கிறது.

நன்றி.
-------------------------------------------



ரொம்ப நன்றி Aravind Rajendran...




13 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இன்னும் பல புத்தகங்களின் மூலம் நீங்கள் நிச்சயம் புகழ் பெறுவீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கும் நூறு சதவிகிதம் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுஜாகனி.... கண்டிப்பா அடுத்த புத்தகம் ரெடி பண்ணிடலாம்

      Delete
  3. அழகான அருமையான விமர்சனம்...

    வாழ்த்துகள் தங்கையே...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அண்ணா...

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஏன் கமெண்ட்டை தூக்கிட்டிங்க? அண்த review எழுதியவனை ஏழு தலைமுறைய தோந்டியே திட்டியிருண்தாலும் அத ஏழு பல் காட்டிச் சிரிச்சிக்கிட்டே படிப்பான் அண்த பாதகன். அவனுக்கு டெய்லி அது பழகிப்போன விஸயம். So, போடுங்க அண்த கமெந்ட்டை.

      Delete
    2. ஹாஹா.... அவங்க மேலயே கமன்ட் போட்டுட்டாங்க அரவிந்த்.... ஒருவேளை repeat ஆகிடுச்சுன்னு டெலிட் பண்ணி இருக்கலாம். மத்தப்படி அந்த review எழுதினவர் பிரமாதமா எழுதி இருக்கார்ன்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு இருக்கு

      Delete
  5. புத்தகத்தை முழுவதும் உள்வாங்கி அழகிய விமர்சனம் தந்தமைக்கு மிக்க நன்றி Aravind.

    ரொம்ப நல்லா எழுதி இருக்குரீங்க.
    உங்க மேல ஒரே ஜெலசியா இருக்குது. எப்படி இப்படி எல்லாம்?:)))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா.... இப்படி பொறாமை படலாமா மகேஷ்

      Delete