Thursday 12 July 2012

சாரலடிக்கும் நேரம்...!


நாளை வருகிறேன் என்ற உன் குரல்
ஆயிரம் கவிதைகளை தோற்கடித்து
புதிதாய் ஒன்றை விதைத்து சென்றது...!

உன் வருகை தெரிவித்த கைபேசி
எண்ணிட இயலா முத்தங்களை
அரைநொடி பொழுதில் பரிசாய் பெற்று
இயக்கம் மறந்து மவுனமானது...!

உன் ராஜ வீதியில் உலாவரும்
ஒற்றை ராணியாய் கர்வம் கொண்டு
இதழோர புன்னகை ஒன்றை படர விடுகிறேன்...!

கண்ணாடி கூட கண்டிருக்குமோ
என் பல்வரிசையை...
இன்று வீட்டில் அனைவருக்கும்
காட்சிப் பொருளாகி வியக்க வைக்கிறது...!

அய்யோ செல்லமே,
உன்னை திட்டி கடிதமெழுதினேனே...
நாளை அவையெல்லாம் உன்
ரகசிய தீண்டலில் வீரியமிழக்க போகின்றன...!

பாரடா, உன் பெயரை
பல லட்சம் முறை உச்சரித்து
உன் கிண்டல் பேச்சுகளில்
நெஞ்சுருகி கொஞ்சுகிறேன்...!

உன் வருகை அறிந்த நொடி, உனக்குள் நான் தொலைந்து,
உன் கவிதை வரி ஒன்றை களவெடுத்துச் சொல்கிறேன்
உன் நேசம் கொண்டு நான் நனையும் பொழுதெல்லாம்
தூறல் ஏறியது என் வானம்”...!

கை விரித்து காத்தே கிடக்கிறேன்,
உன் சாரலில் நனையப்போகும் பொழுதுக்காய்...!



4 comments:

  1. ///////////உன் வருகை அறிந்த நொடி, உனக்குள் நான் தொலைந்து,
    உன் கவிதை வரி ஒன்றை களவெடுத்துச் சொல்கிறேன்/////////
    நல்ல வரிகள் ! ரசித்தேன்.

    ஒரு சிறிய வேண்டுகோள் பின்புற படம் நீக்கினாள் எழுத்துகள் நன்றாக தெரியும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழன் பக்கங்கள்.... கூடிய சீக்கிரம் மாற்றம் செய்கிறேன்

      Delete
  2. உன் வருகை தெரிவித்த கைபேசி
    எண்ணிட இயலா முத்தங்களை
    அரைநொடி பொழுதில் பரிசாய் பெற்று
    இயக்கம் மறந்து மவுனமானது...!

    ஒரு சாதாரண நிகழ்வு , வார்த்தை வடிவில் மிக அருமை .

    ReplyDelete
  3. நனைய வைத்த வரிகள் !
    வாழ்ந்து அனுபவித்து
    வெளிப்படுத்திருப்பது ...
    அச்செழுத்து எடுத்துகாட்டுகிறது !

    கற்பனையில் உலாவருகையில்
    குடும்ப உலையில் எரிந்தது !
    காதலில் சிக்கித்தவிப்பதை
    சிக்காத மெருகூட்டும்
    அற்ப்புத தொகுப்பு பதுமைஎன்றாலும்

    இன்றையக் காதலர்களுக்கு
    மனதிலூறும் கவிதை
    என்பதாலாகும் புதுமை !
    சிகரத்திலேறுவது உண்மை !

    ReplyDelete