வாழ்க்கைல நாம நினைச்ச எல்லாமே நடந்துச்சுனா சுவாரசியம் இருக்காது. எதிர்பாராத திருப்பங்கள் அடிக்கடி நடந்துட்டே தான் இருக்கும். அத எல்லாம் சமாளிக்க கத்துக்கணும்...
அதென்னமோ தோல்வியோ இல்ல ஏமாற்றங்களோ வந்தா தொடர்ந்து வந்துட்டு தான் இருக்கும்போல. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு யாரும் கேள்வி கேக்க முடியாது, அதெல்லாம் அப்படித் தான்... சமாளிச்சு தான் ஆகணும்.
அஞ்சு நாள் முன்னால கொஞ்சம் சண்டை, கொஞ்சம் கொஞ்சலோட ஆரம்பிச்ச நாள். வலிகள் மறந்து போச்சு, இனி எறும்பு கடிச்சா கூட அழுவேன்னு பேஸ்புக்ல ஸ்டேடஸ் போடுற அளவு எல்லாமே மறந்திருந்த நாள்.
அப்ப தான் அது நடந்துச்சு.
வழக்கமா பாத்ரூம் போனா ரொம்ப கேர்புல்லா போவேன். ஈரமோ இல்ல வழுக்கோ எதுவுமே இருக்காம கண்ணுங்கருத்துமா பாத்துப்பேன். அப்படியும் மடீர்மடீர்னு கீழ விழத்தான் செய்வேன். விழுந்த கொஞ்சநேரத்துல டான்னு எழுந்திரிச்சும் நிப்பேன். அன்னிக்கி அப்படி எதுவுமே அவசியமா இல்ல. நான் பாட்டுக்கு ரெஸ்ட் எடுத்துட்டு தான் இருந்தேன்.
திடீர்னு எழுந்து நடக்கணும்ன்னு தோணிச்சு. எழுந்து ஒரே ஒரு ஸ்டெப் தான் வச்சேன்...
மடார்....
என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுன்னு யோசிக்குறதுக்கு முன்னால வலது கால் மடங்கி ஆப்போசிட் டைரக்சன்ல தெரியுது. போட்டுருந்த ட்ரெஸ் ஈரத்துல நனஞ்சிருக்கு. வலி, வலி, வலி. விண் விண்ணு தெறிச்ச வலில ஒரு செகண்ட் என்ன நடந்துச்சுன்னு யூகிக்க ஆரம்பிச்சேன்.
ஆமா, தரைல கொட்டிக் கிடந்த தண்ணில கால் பட்டு, வழுக்கி விழுந்து கால் முறிஞ்சிடுச்சு. இனி என்ன அழுது புரண்டாலும் ரிவர்ஸ்ல போக முடியாது.
சட்டுன்னு ரெண்டு கை ஊனி எழுந்து உக்காந்து, காலை பிடிச்சு அப்படியே நேராக்க ட்ரை பண்ண, மடக்குனு ஒரு சத்தத்தோட அது மறுபடியும் சரியான பொசிசனுக்கு வந்துச்சு. வலி அப்படியே உயிர் போற மாதிரி இருக்க, “அய்யோ அம்மா, நான் கீழ விழுந்துட்டேன் கீழ விழுந்துட்டேன்னு கூப்பாடு போட ஆரம்பிச்சுட்டேன்.
நல்லவேளையா ஒரு மொபைல் கைல கிடைக்க, அப்பாவுக்கு கூப்ட்டு அழுதுட்டே விசயத்த சொன்னேன். அடுத்த கால் பண்றதுக்கு முன்னே மொபைல் லோ பேட்டரி காட்ட, யாரையும் தொடர்புக் கொள்ள முடியாத சூழ்நிலை. அந்த மொபைல்ல யார் நம்பரும் இல்ல. திடீர்னு வாட்ஸ் அப் நியாபகத்துக்கு வர, அந்த மொபைல்ல இருந்து கார்த்திக்கு வாட்ஸ் அப் கால் பண்ணினேன். எப்பவுமே மொபைல் எடுக்காதவர் அந்த நேரம் சரியா கால் அட்டென்ட் பண்ண, விழுந்து கால் முறிஞ்ச விசயத்த சொல்லி, ஹாஸ்பிட்டல் போயே ஆகணும், உன்னை அடுத்து கூப்பிட எத்தன நாள் ஆகுமோ தெரியாது, கண்டிப்பா திரும்பி வந்துருவேன்னு சொன்னதும் தான் தாமதம், என்ன சொல்ற மக்கா, ஏட்டி போகாதடி, வந்துருடி வந்துருடின்னு அழ ஆரம்பிச்சுட்டார். இங்கப்பாரு, உனக்கு எதுவும் ஆகல, சீக்கிரம் வந்துருன்னு சொல்லிட்டு இருந்தப்பவே வீட்ல ஆட்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க. சரி, சரி அப்புறம் பேசுறேன்னு சொல்லி போனை கட் பண்ணிட்டேன்.
நந்துவோட அம்மா, பாட்டி, அஞ்சம்மாக்கா, அப்பா, தம்பின்னு எல்லாரும் வர, மாமா குடும்பமும் கூட ஆரம்பிச்சுட்டாங்க. நான் அப்பா கால் முறிஞ்சிடுச்சுப்பானு அழ ஆரம்பிச்சுட்டேன். அப்பா தம்பிகிட்ட அவள தூக்கு, ஹாஸ்பிட்டல் கொண்டுப் போவோம்னு சொல்ல, அதெல்லாம் எதுக்கு, கால் உடையலன்னு பாட்டி கத்துறாங்க. இல்ல உடஞ்சிருக்குன்னு நான் சொல்ல, உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதான்னு அவங்க பாட்டுக்கு திட்டுறாங்க. நடந்தத தான சொல்ல முடியும்னு நான் பதிலுக்கு எகிற, அப்பா பாவமா பாக்குறாங்க. உடஞ்சிருந்தா இந்நேரம் ரொம்ப வீங்கியிருக்கும், நீ வலி தாங்கியிருக்க மாட்ட, அதனால கால் உடையலன்னு அவங்களா முடிவெடுக்குறாங்க. தம்பி கார் எடுத்துட்டு வந்து என்னை தூக்க ட்ரை பண்ண வலி பின்னி எடுத்துடுச்சு. சொடக்னு சத்தத்தோட கால் எலும்பு ஸ்லிப் ஆக, என்னை விடு, விடுன்னு அழ ஆரம்பிச்சுட்டேன். அப்படியே அழுதுட்டே மறுபடியும் எலும்பை எடுத்து பொருத்தி வச்சதுக்கப்புறம் தான் வலி கொஞ்சம் குறைஞ்சுது. இவள எல்லாம் கார்ல தூக்கிட்டு போக முடியாது, வைத்தியர கூட்டிகிட்டு வந்து கட்டுப் போடுவோம்னும் ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சுட்டாங்க.
மாமா ஒருத்தர் கையோட வைத்தியர கூட்டிகிட்டு வர, அவர் என் கால புடிச்சு தூக்க, ஆஆவ், அம்மோவ் முடியலன்னு நான் போட்ட கூச்சல்ல பட்டுன்னு கைய எடுத்துட்டார். அப்புறம் எல்லாரும் அவங்கவங்களுக்கு தெரிஞ்ச வைத்திய முறைய எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
எனக்கு செம டென்சன். அப்பாவும் தம்பியும் கைய பிசஞ்சுட்டு நிக்குறாங்க. அப்பா ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி வரச் சொல்லுவோம்னு சொன்னாலும் யாரும் ஒத்துக்குற மாதிரி இல்ல. ஒரு சின்ன அடிக்கு ஆம்புலன்ஸ் எல்லாம் எதுக்குன்னு. கால் லேசா தான வீங்கியிருக்குங்குறது அவங்க வாதம். கோபத்துல கத்தினேன், என் கால் உடைஞ்சிடுச்சுங்குறது எனக்கு தெரியும், வைத்தியரே, நீங்க செக் பண்ணுங்க, வலிச்சா நான் கத்த தான் செய்வேன், ஆனா வைத்தியம் பாக்க வேண்டியது உங்க கடமைன்னு சொன்னேன்.அப்புறம் அவர் நான் கதற கதற காலை பிடிச்சு அங்க இங்க அசைச்சு செக் பண்ணிட்டு, ஆமா கால் உடஞ்சி தான் இருக்குனு சொல்லிட்டு, ஒரு எக்ஸ் ரே எடுத்துட்டு வந்துடுங்க, நான் சரி பண்ணிடுறேன்னு சொன்னார்.
அதுக்குள்ள தம்பி கொஞ்சம் தலையணை, பெட்சீட் எல்லாம் எடுத்துட்டு வந்து, பாட்டி இப்ப ஆம்புலன்ஸ் வரும், நாம ஹாஸ்பிட்டல் போறோம்னு சொன்னதும் அதெல்லாம் எதுக்குன்னு கேட்டவங்கள பாத்து, அதெல்லாம் அப்படித்தான்னு சொல்லிட்டான்.
ஆம்புலன்ஸ் வந்ததும் என் காலை அப்படியே பொருத்தி பிடிச்சு ஒரு தலையணை மேல வச்சு, அப்புறம் என்னைத் தூக்கி ஸ்ட்ரெக்சர்ல போட்டுட்டு அப்பா, தம்பி, நான், பாட்டி நாலு பேருமா ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தோம்.
அங்க போனா, ஸ்ட்ரெக்சர் தூக்க வந்த தாத்தா ஓவர் அலும்பு. யோவ், வாங்க பாடிய (?) தூக்க வாங்கடான்னு கூப்டுட்டே என் காலை தூக்கி ஆட்டிப் பாக்குறார். யோவ், அவளுக்கு வலிக்கும்யான்னு தம்பி கத்திட்டான். அப்புறம் மரியாத இல்லாம பேசிட்டேன், சாரின்னு சாரி கேட்டதும் அவர் வேற எதுவும் பேசல. அமைதியா தூக்கிட்டு ஓ.பி-ல கொண்டுப்போய் வச்சுட்டாங்க.
தினமும் பத்து பேரையாவது பாத்து பாத்து இவங்களுக்கு எல்லாம் மரத்துப் போய்டும் போல. எங்க பிடிச்சா வலிக்காது, எப்படி தூக்கினா அவங்க கம்போர்டா பீல் பண்ணுவாங்க – இப்படி எதையுமே யோசிச்சுப் பாக்காம முரட்டுத் தனமா நடந்துக்குறாங்க. எதோ ஒரு அட்மிசன், தூக்கி போய் கடாசுங்குற மாதிரியான எண்ணம் அவங்களுக்கு. அதுலயும் அந்த தாத்தா என்னை தூக்கி பெட்ல எறிஞ்சுட்டு காசு குடுங்கன்னு அப்பா கிட்ட அதிகாரமா கேக்குறார். ச்சே... நானும் மனுசி தான், எனக்கும் கால் முறிஞ்சா வலிக்கும். கொஞ்சம் மனிதாபிமானத்தோட நடந்துக்கோங்க, அப்புறம் காசு கேக்கலாம்னு நான் அந்த வலிலயும் கத்தினேன்.
அங்க இருந்து நேரே எக்ஸ் ரே எடுக்க தூக்கிட்டு போனாங்க. இந்த தடவ தாத்தா சளசளன்னு பேசாம அமைதியா வந்தார். அங்க இருந்து என்னைத் தூக்கி எக்ஸ் ரே டேபிள் மேல படுக்க வச்சாங்க. ஆ...ன்னு நான் கத்தவும் ஒருத்தன் மெதுவா என் காலை பிடிச்சான். நெத்தில கை வச்சு ரிலாஸ்னு சொன்னான். கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்கன்னு சொல்லிட்டே மெதுவா காலை நகட்டி எக்ஸ் ரே எடுக்க வசதியா வச்சான். அவ்வளவு தான், அவ்வளவு தான், ரிலாக்ஸ் ரிலாக்ஸ்னு சொல்லி சொல்லியே அஞ்சாறு நேரம் அங்கயும் இங்கயுமா திருப்பி எக்ஸ் ரே எடுத்துகிட்டான். அப்பப்ப கன்னத்துல தட்டி ஒரு சிரிப்பு. வலில ஸ்ஸ்ன்னு முனங்குறப்ப எல்லாம் உள்ளங்கைய பிடிச்சு அழுத்தி விட்டான். என் வலி எங்க போச்சுனே தெரியல. அவன் முகத்த பாத்தப்ப அம்மா தான் நியாபகத்துக்கு வந்தா. மறுபடியும் தூக்கிட்டு போக தாத்தா க்ரூப்ஸ் வர, “கெட் வெல் சூன்” சொல்லி வழி அனுப்பி வச்சான். அப்பவே என் முகத்துல புன்னகை வர ஆரம்பிச்சிடுச்சு.
அடுத்து மறுபடியும் ஓ.பி. ரெண்டு நர்ஸ் வந்து உங்கள ஆப்பரேசன் தியேட்டர் கொண்டு வர சொல்லிட்டாங்கன்னு சொல்லி என்னை ரெடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆப்பரேசன் ட்ரெஸ் மாட்டி விட்டதும் ஒருத்தி “பயமா இருக்கா”ன்னு கேக்க, இல்லன்னு தலையாட்டினேன்.
உள்ளப் போய் பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சி கைல நரம்பு தேடிப்புடிச்சி மருந்து அடைச்சி, மெதுவா எழுந்து உக்காருங்க, ஒரு சின்ன ஊசி தான் முதுகுலன்னு டாக்டர் சொன்னதும் தான் நான் நோ நோ எனக்கு இந்த அனஸ்தீசியா வேணாம், புல்லா குடுங்கன்னு மறுக்க ஆரம்பிச்சுட்டேன். டாக்டர் திகைச்சு, இதான் ஈசிமா, வலியே தெரியாது, ரிலாக்ஸ் பண்ணிக்கோங்கனு சொன்னா யார் கேக்குறா. அப்புறம் சீப் டாக்டர அவங்க கூப்ட்டு விட, உங்க மெடிக்கல் ஹிஸ்டரி எல்லாம் படிச்சுட்டு நான் தான் சஜஸ்ட் பண்ணினேன். பயப்படாதீங்கன்னு அவர் கன்வின்ஸ் பண்ணினதுக்கு அப்புறம் தான் ஊசிப் போட சம்மதிச்சேன்.
கொஞ்சம் தான் வலிச்சுது. பொறுத்துகிட்டேன். கொஞ்ச நேரத்துல கால் பக்கம் பரபரன்னு இருந்துச்சு. அப்புறம் மரத்து போய்டுச்சு. கண்ணை மூடிகிட்டு படுத்துகிட்டேன். பேச்சு சத்தங்கள், கிர்ர்ர்ன்னு மரம் அறுக்குற மிசின் மாதிரி ஒரு சத்தம், அதுலயும் யாரோ ஒருத்தன் நான் அவங்கள பிரிச்சே தீருவேன், நான் தான் அவங்க காதலுக்கு வில்லன்னு சொல்றான். ஒரு பெண் குரல் பாவி, அதுல உனக்கு என்னடா சந்தோசம்னு கேக்குது, ஏன்னா நான் அந்த பொண்ண லவ் பண்றேன்னு இவன் சொல்றான். எல்லாரும் சிரிக்குறாங்க. “ஏண்டா டேய், என் காலை அறுத்து பிளந்துட்டு வச்சுட்டு என்ன பேச்சு பேசுறீங்க, ஒழுங்கா வேலைய பாருங்கடா”ன்னு சொல்லணும் போல இருந்துச்சு. சரி இவங்க பேசுறத கேட்டுட்டு இருந்தா டென்சன் ஆகிடுவோம்னு தூங்கிட்டேன்.
முழிச்சு பாத்தா ஆப்பரேசன் கிட்டத்தட்ட முடிஞ்சி என் காலை தூக்கி பேன்ட்டெய்ட் சுத்திட்டு இருந்தாங்க. அங்க இருந்து மறுபடியும் எக்ஸ் ரே ரூம் போக, இந்த தடவையும் அவன் தான் சிரிச்சுகிட்டே “ஆர் யு ஓகே”ன்னு வரவேற்றான். இந்த தடவ சுத்தமா வலி இல்ல. கால்கள் ரெண்டும் உணர்ச்சியே இல்லாம மரத்து போயிருக்கு. ஈசியா எக்ஸ் ரே எடுத்து முடிச்சு “டேக் கேர்” சொல்லி அனுப்பி வச்சுட்டான். ரூம் போற வரைக்கும் அப்பாவும் தம்பியும் கூடவே வந்தாங்க.
ஆப்பரேசன் அஞ்சு மணில இருந்து எட்டு மணி வரை. கால்ல சென்சேசன் வர பதினோரு மணி ஆகிடுச்சு. அதுவரைக்கும் மத்த பெசியன்ட்ஸ் எல்லாம் ஐயோ அம்மா வலிக்குதேன்னு புலம்புறத எல்லாம் வேடிக்கை பாத்தேன். அப்புறம் தான் இங்க வலிக்க ஆரம்பிச்சுது. பெயின் கில்லர் போடுங்கன்னு சொல்லி, அதுக்கு இன்ஜெக்சன் போட்டாங்க.
அப்புறம் என்ன, அடுத்த நாள் ஒரே சொந்தக்காரங்க கூட்டம் தான். ஆளாளுக்கு கைல ஆப்பிளும் ஆரஞ்சுமா பாக்க வர, மூணாவது நாளே வீட்டுக்கு போங்கன்னு தொரத்த ஆரம்பிச்சுட்டாங்க.
ஒரு மாசம் காலை கீழ ஊனவே கூடாதாம். படுத்து கிடந்து லேப் டாப் பாக்கவும் டைப் பண்ணவும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனாலும் விடுறதாயில்ல. ரெண்டு நாளா கஷ்டப்பட்டு உக்காந்து எழுதி முடிச்சுட்டேன்.
இப்போதைக்கு டாடா.... மறுபடியும் வருவேன்.
.
avvalvu nadanthum ninga thairiyamaa irukka. verum pathivai mattum vasitha enakku ennavo seyyuthu akka:-)
ReplyDeleteinspiration thundakkudiya ezuthu.
ஹாஹா தேங்க்ஸ் மகேஷ்
Deleteஉங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா...? உடல்நலம் முக்கியம்... மற்றவை எல்லாம் அப்புறம்...
ReplyDeleteஅண்ணா, அப்படியே இருந்தா போர் அடிக்கும். என்னை பொருத்தவரைக்கும் வேலை வேலைன்னு ஓடிகிட்டே இருக்கணும்.
Deleteintha sulnelilaum padivu potathuku vaalthukal. nadpavai nanmaika endru manathai thida padithika vendiyathu than. intha valilium periyavar paadi ya thukuga pa nu solum pothu oru sripu varathan seiuthu. ungal padivil engalaium valiyai unara seithu vitergal. iuwx
ReplyDeleteஹஹா அடுத்த தடவ அவர பாத்தா நான் தான் பேய் ன்னு சொல்லி பயங்காட்டனும்
Deletestory super...
ReplyDeleteSeshan
இது கதை இல்ல, எனக்கு நடந்த சம்பவம்
Deleteஅடாடா... டேக் கேர் காயூ. டாக்டர் சொல்றத பாலோ பண்ணி நல்லா ஓய்வெடுத்துகிட்டு தெம்போட வா. காத்திருக்கோம். விரைவில் நீ உடல்நலம் சீராகத் தேற நல்வாழ்த்துகள். (இதனால உன் புக் வர்றது தள்ளிப் போகுமோ...?)
ReplyDeleteஅனேகமா நாளைக்கு இல்ல மறுநாள் இன்னொரு சர்ஜரி இருக்கும் அண்ணா, அப்புறம் ஒரு மாசத்துல சரியாகிடலாம். புக் வேலை அநேகமா முடிஞ்சுது அண்ணா, ப்ரூப் ரீடிங் தான் பண்ணனும்
Deleteஎலும்பு கூடுற வரைக்கும் கால் தரையில படக் கூடாது மூச்! கெட் வெல் சூன் தங்கா! :)
ReplyDeleteம்க்கும்... போர் அடிக்குது
Deleteம்க்கும்... போர் அடிக்குது
Deleteவிரைவில் குணமாகி ஓடோடி வர வாழ்த்துக்கள்!
ReplyDeleteதேங்க்ஸ் அண்ணா
Delete