சாயங்காலம் காலேஜ் விட்டு மாமா கூட கார்ல வந்துட்டு இருந்தேன். இன்னிக்கின்னு பாத்து ஒரே ட்ராபிக் ஜாம். வண்டி எல்லாம் மெல்ல மெல்ல ஊர்ந்து போய், ஒரு இடத்துல அப்படியே நின்னுடுச்சு.
திடீர்னு ஒரு குரல். ஹே.... டர்ஸ் அப்படின்னு. அட, யாருடா இது, நம்மள இப்படி யாரும் கூப்பிட மாட்டாங்களேன்னு பாத்தா அது என்னோட காலேஜ் மேட். ஐ மீன், க்ளாஸ் மேட். அவ கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு ட்ராபிக் நகர ஆரம்பிச்சதும் டாடா சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
ஆனா என்னோட நியாபகங்கள் பின்னோக்கி போச்சு. இருங்க, ஒரு டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் கொளுத்திக்குறேன், அப்ப தான் சிட்டிவேசனுக்கு சரியா இருக்கும்... சொய்ங்......
ப்ளஸ் டூ முடிச்சதும் பெருசா காலேஜ் போய் படிக்கணும், சாதிக்கணும்னு எல்லாம் ஆசைகள் இல்ல. எனக்குன்னு ஒரு ஸ்கூட்டி, ஜாலியா ஊர் சுத்தணும், விளையாட்டா காலேஜ் போகணும், இதான் ப்ளானே.
அப்பாகிட்ட சொன்னப்ப, சரி, போறது தான் போற, பிபிஏ ஜாயின் பண்ணு, அப்புறம் எம்பிஏ படிச்சு பேங்க் மேனேஜர் (ஞே) ஆகிடலாம்னு சொல்லிட்டார். நானும் அந்த கோர்ஸ் எனக்கு சுத்தமா பிடிக்கலனாலும் நல்லப் புள்ளையா சரி சரின்னு தலையாட்டிகிட்டேன்.
அங்க க்ளாஸ்ல போய் உக்காந்தா எனக்கு தெரிஞ்ச ஒரே சப்ஜெக்ட் தமிழும் இங்கிலீசும் தான். வேற எத பாத்தாலும் முட்ட முட்டையா கம்பி கோலம் போட்ட மாதிரியே ஒரு பிரம்மை.
சரி, இப்ப அது நம்ம பிரச்சனை இல்ல, நான் விசயத்துக்கு வர்றேன்.
நான் அந்த கோர்ஸ் படிச்சது வெறும் ஒண்ணரை மாசம் தான். அதுக்குள்ள அங்க பண்ணின அட்டகாசங்கள் தான் ஹை-லைட்டே...
என்னோட சத்தம் எப்பவும் ரொம்ப பலமா இருக்கும். யார் கிட்ட பேசினாலும் குரலை ஓங்கி தான் பேசுவேன். அதனாலயே என்னைப் பாத்து என்ன மைக்க முழுங்கிட்டியான்னு கேப்பாங்க. தூரத்துல என்னைப் பாத்தாலே “ஹே மைக்”ன்னு தான் ஆரம்பிக்கவே செய்வாங்க. அப்பலாம் எனக்கு கோபம் எல்லாம் வராது, ஒரே பெருமை தான். பின்ன, ஒரு பட்டப்பெயர் கிடைக்குதுனா சும்மாவா.
சத்தமா பேசினாலும் ஆரம்பத்துல கொஞ்சம் அடக்க ஒடுக்கமா தான் இருந்தேன். அப்ப பாத்து எங்க சீனியர்ஸ் வெல்கம் டே வச்சாங்க.
இங்க எல்லாம் வெல்கம் டேனா என்னன்னு பாத்தீங்கனா ஸ்டாப் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு அவங்க முன்னாடியே ராகிங் பண்றது தான்.
பாவம் எங்க சீனியர் அக்காங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருந்தாங்க. ஒரு துண்டு சீட்டுல பாட்டு படி, டான்ஸ் ஆடு, பாண்டி விளையாடுன்னு ரொம்ப ஈசியா தான் எழுதி வச்சிருந்தாங்க. அத நல்லா குலுக்கி நாம ஒரு சீட்ட எடுத்து அதுல இருக்குற மாதிரி பண்ணனும்.
என் கிளாஸ்மேட்ஸ் இருக்காங்களே, சரியான அழுவுனி புள்ளைங்க. இதுக்கே பயந்து நடுங்கி, அழுது வடிச்சுட்டு இருந்தாங்க.
அப்ப தான் ஒருத்திக்கு கோழி பிடிக்கணும்னு வந்துச்சு. அவ அந்த இடத்துலயே கண் எல்லாம் கலங்கி பொலபொலன்னு அழ ஆரம்பிச்சுட்டா. நான் பாத்தேன். அக்கா, நான் கோழி பிடிக்குறேன்னு சொல்லிட்டே, பா...பா....ன்னு பீல்ட்ல இறங்கிட்டேன்.
கோழினா சும்மா பிடிச்சுட முடியுமா என்ன? பறந்து பறந்துல போகும். நானும் அது பின்னாலயே ஓடி ஓடி, கடைசியா கோழிய சீனியர் அக்கா ஒருத்தங்க தலைல நிப்பாட்டி வச்சுட்டேன்.
அக்கா, அசையாதுங்கக்கா, கோழி உங்க தல மேல நிக்குது. கைய தூக்காதீங்க, தலைய திருப்பாதீங்கன்னு ஏகப்பட்ட கண்டிசன்ஸ். அந்தக்கா திருதிருன்னு முழிச்சுட்டு அசையாம நிக்குறாங்க. அப்புறம் கபால்ன்னு கோழிய பாய்ஞ்சு பிடிச்சுட்டு, கோழி உங்க தலைல ஆய் போய்டுச்சுக்கா, தொடச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு சீட்ல வந்து உக்காந்துட்டேன்.
அப்புறம் என்னை சீட்டு எடுக்க சொன்னப்ப பாட்டு பாடவும்னு தான் வந்துச்சு. நான் பாட்டுக்கு நடுவுல போய் நின்னு, ரெண்டு பக்கமா போட்டுருந்த ஷால கழட்டி ஒரு பக்கமா போட்டுட்டு சிவாஜி மாதிரி ஸ்டைலா நிமிர்ந்து நின்னு “யாருக்காக, இது யாருக்காக, இந்த காலேஜு இது யாருக்காக”ன்னு பாடி மறுபடியும் ஸ்டைலா ஒரு பார்வை பாத்துட்டு உக்காந்துட்டேன். அப்ப தான் “யாருடா இவ”ன்னு மொத்த டிபார்ட்மென்டும் என்னை திரும்பி பாத்துச்சு.
ஒரு மேடம் எடுக்குற பாடம் சுத்தமா புரியாது. அது என்ன சப்ஜெக்ட்னே எனக்கு இப்ப மறந்தும் போச்சு. அவங்க வாயத் தொறந்தாலே தாலாட்டு பாடுற மாதிரி தான் இருக்கும். அப்படி தான் ஒருநாளு பக்கத்துல ஒருத்தி நல்லா தூங்கிட்டு இருந்தா. எனக்கு அத பாத்து ஒரே கொட்டாவி கொட்டாவியா வர ஆரம்பிச்சிடுச்சு. “ஏவ், ஏவ்”னு ஒரே குனிஞ்சு உக்காந்து கொட்டாவி விட்டுட்டு இருக்கேன். திடீர்னு ஒரு குரல். “ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச், அண்ட் கெட் அவுட்”ன்னு. நான் பட்டுன்னு பெஞ்ச் மேல ஏறி நின்னுகிட்டு இப்படியே எப்படி வெளில போகன்னு அப்பாவியா கேட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது, அந்த ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச் பக்கத்து சீட்டுக்காரிக்கும், கெட் அவுட் எனக்குமாம். இதென்ன சொத்தா மை லார்ட், பங்கு பிரிக்குரதுக்கு?
மறுபடியும் அதே மேடம் தான். அவங்க எடுக்குறதே புரியாது, இந்த லெச்சனத்துல செமினார் வேற எடுக்க சொன்னாங்க. காலேஜ் போயே அப்ப பதினஞ்சு நாள் ஆகல, அதுக்குள்ள செமினார் எடுக்க சொன்னா எப்படி?
எல்லா புள்ளைங்களும் பயந்துகிட்டு வாயே தொறக்கல. எனக்கு அப்ப டாபிக் எதுவும் குடுக்கல. நம்ம பேரு ஆல்பபெட்டிகல்ல கடைசி பேருங்குறதால அப்புறமா டாபிக் குடுக்கலாம்னு விட்டு வச்சிருந்தாங்க.
முதல் நாள் செமினார் க்ளாஸ். எடுக்க வேண்டிய புள்ள எழுந்து நின்னு அழுகுது. அதுவும் கேவி கேவி அழுகுது. நம்ம செட்டுல ஒரு புள்ள அழுதா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? மிஸ் நான் செமினார் எடுக்குறேன் மிஸ்ன்னு ரெடி ஆகிட்டேன். அவங்க என்ன நினச்சாங்களோ, சரி எடுன்னு சொல்லிட்டாங்க.
நான் பாட்டுக்கு முன்னாடி போனேன். சாக்பீஸ் எடுத்து ஏ+பி தி வோல் ஸ்கயர் ஈக்குவல் டூ ன்னு எனக்கு தெரிஞ்ச ஒரே கணக்கு பாடத்த எடுக்க ஆரம்பிச்சுட்டேன். இதுல காமடி என்னன்னா மேடம் உக்காந்துகிட்டு என்னையே பாத்துகிட்டு, நான் ஓவர் மேடம் சொன்னதும் போய் உக்காருன்னு சொல்லிட்டாங்க. ஆக மேடமுக்கே ஒன்னும் தெரியல சப்ஜெக்ட் பத்தி. நான் செமினார் முடிச்சுட்டு வந்து புள்ளைங்க கிட்ட இத சொல்லி சொல்லி ஒரே சிரிப்பு. மேடம், என்ன அதுன்னு மிரட்டி கேட்டதும் ஒருத்தி உளறிட்டா. உடனே நான் க்ளாஸ்ல இண்டீசென்ட்டா பிகேவ் பண்ணினேன்னு சொல்லி பிரின்சிபால்கிட்ட கொண்டு போய் விட்டுட்டாங்க
பிரின்சிபால் கிட்ட போனாலும் நாம அசருற ஆளா? முதல்ல அவங்கள புரியுற மாதிரி க்ளாஸ் எடுக்க சொல்லுங்க, அப்புறமா நாங்க வேணா செமினார் எடுக்குறோம், அதுக்கப்புறமா வேணா தூங்காமலும் இருக்கோம்னு போர் கொடி தூக்கிட்டேன். அப்புறம் என்ன, அடுத்த நாள்ல இருந்து மேடம் விழுந்து விழுந்து படிச்சுட்டு வந்து க்ளாஸ் எடுத்தாங்க.
அதே மாதிரி இங்கிலீஷ் க்ளாஸ்க்கு செமினார் எடுப்பேன்னு அடம்புடிச்ச ஒரே ஆள் ஐயாம் தான். ஏன்னா, எல்லாம் தமிழ் மீடியம் பிள்ளைங்களா இருப்பாங்க, இங்கிலீஷ் கண்டா தெறிச்சு ஓடிருவாங்க. எனக்கு தான் நல்லா வருமே, அதான் பந்தாவுக்கு வீம்பா செமினார் வேணும்னு கேப்பேன். ஆனா அந்த ஒன்னரை மாசத்துல செமினார் டாபிக் கிடச்சும் என்னால செமினார் எடுக்க முடியலங்குறது ஒரு பெரிய வருத்தமான விஷயம்.
எங்களுக்கு வாரத்துல ஒரு நாள் ப்ரீ ஹவர் உண்டு, அப்ப ஏதாவது விளையாட்டு ப்ராக்டிஸ் பண்ணுவோம், அப்ப எங்க பி டி மேடம் here one girl sitting, where going-னு கேட்டாங்க, நான் உடனே i go, she go madam, i come, she no come madam னு சொல்ல அவங்க u good girl ன்னு சொல்லி தட்டிக் குடுத்தாங்க பாருங்க, அவங்க இங்கிலீஷ நினச்சு ஹாஹா கிரௌண்ட் விட்டு ஓடி வந்து அங்கயே விழுந்து விழுந்து சிரிச்சோம். இப்படி எல்லாம் படிச்சுக் குடுக்குறவங்கள கிண்டல் பண்ணக் கூடாதுன்னு யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க. வயசு அப்படி. அதோட படிச்சு குடுக்குற வாத்தியார் சரியா இருந்தா தான புள்ளைங்க சரியா இருப்பாங்க.
நான் படிச்சது லேடீஸ் காலேஜ். காலேஜ் உள்ள போகணும்னா மெயின் ரோட்டுல இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் நடந்து தான் போகணும். நான் ஸ்கூட்டில போவேனா, அதனாலயே சாயங்காலமானா ஸ்கூட்டில ரெண்டு ரெண்டு பேரா ஏத்தி ஒரு பத்து பேரை மையின் ரோட்டுல கொண்டு போய் விடுவேன். இப்படி நான் ட்ரிப் அடிக்குற இடத்துல தான் பசங்க நின்னுட்டு இருப்பானுங்க. நான் அங்கயும் இங்கயுமா மாத்தி மாத்தி ட்ரிப் அடிக்குறத பாத்துட்டு கொஞ்சம் கொஞ்சமா கிண்டல் பண்ண ஆரம்பிச்சானுங்க. நானும் கொஞ்ச நாள் கண்டுக்காம இருந்தேன்.
முதல்ல ஒருத்தன் லவ் லெட்டர் கொண்டு வந்து நீட்டினான். நானும் நல்லப்புள்ளையா அத வாங்கி அங்க வச்சே படிச்சு பாத்துட்டு, ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கரெக்சன் போட்டு பத்துக்கு மூணு மார்க் வேற போட்டுக் குடுத்தேன்.
அப்புறமாவது அந்த பசங்க திருந்தினாங்களா, இல்லையே, என்னைப் பாத்து ஒருத்தன் விசில் அடிக்க ஆரம்பிச்சான். ரெண்டு மூணு நாள் முறைச்சுப் பாத்தேன், அப்புறமும் அடங்குற மாதிரி தெரியல, நேரா அவன் முன்னால ஸ்கூட்டிய கொண்டு போய் விட்டுட்டு செவுள்லயே விட்டேன் ஒரு அறை. பையன் பொறி கலங்கிட்டான். அவனுக்கு சப்போர்ட்டா ஒருத்தன் பாட்டு பாடி கிண்டல் பண்ணிட்டு இருப்பான். அவனுக்கு செருப்பை கழட்டி மாத்தி மாத்தி மொத்திட்டேன். அவ்வளவு தான் காலேஜ் முழுக்க நான் பிரபலமாகிட்டேன்ல. அதனால என்னோட பெயர் மைக்ல இருந்து டர்ஸ் ஆகிடுச்சு.
இன்னும் நிறைய அலும்பல்கள். சேட்டைகள். எல்லாம் ஒரு ஒன்னரை மாசம் தான். அப்புறம் தான் என்னோட வாழ்க்கைல டர்னிங் பாயின்ட்டா ஒரு சம்பவம் நடந்துச்சு. அந்த சம்பவத்த தான் இங்க அப்பப்ப சொல்லிட்டு வரேன்னே....
இப்படியாக தான், மைக் என்றும், டர்ஸ் என்றும் டெரரா அழைக்கப்பட்ட நான் உங்களால் இப்பொழுது காயு என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.
இப்படிக்கு, அன்பும் பணிவும் மிக்க காயு.....
நான் படிச்சது லேடீஸ் காலேஜ். காலேஜ் உள்ள போகணும்னா மெயின் ரோட்டுல இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் நடந்து தான் போகணும். நான் ஸ்கூட்டில போவேனா, அதனாலயே சாயங்காலமானா ஸ்கூட்டில ரெண்டு ரெண்டு பேரா ஏத்தி ஒரு பத்து பேரை மையின் ரோட்டுல கொண்டு போய் விடுவேன். இப்படி நான் ட்ரிப் அடிக்குற இடத்துல தான் பசங்க நின்னுட்டு இருப்பானுங்க. நான் அங்கயும் இங்கயுமா மாத்தி மாத்தி ட்ரிப் அடிக்குறத பாத்துட்டு கொஞ்சம் கொஞ்சமா கிண்டல் பண்ண ஆரம்பிச்சானுங்க. நானும் கொஞ்ச நாள் கண்டுக்காம இருந்தேன்.
முதல்ல ஒருத்தன் லவ் லெட்டர் கொண்டு வந்து நீட்டினான். நானும் நல்லப்புள்ளையா அத வாங்கி அங்க வச்சே படிச்சு பாத்துட்டு, ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கரெக்சன் போட்டு பத்துக்கு மூணு மார்க் வேற போட்டுக் குடுத்தேன்.
அப்புறமாவது அந்த பசங்க திருந்தினாங்களா, இல்லையே, என்னைப் பாத்து ஒருத்தன் விசில் அடிக்க ஆரம்பிச்சான். ரெண்டு மூணு நாள் முறைச்சுப் பாத்தேன், அப்புறமும் அடங்குற மாதிரி தெரியல, நேரா அவன் முன்னால ஸ்கூட்டிய கொண்டு போய் விட்டுட்டு செவுள்லயே விட்டேன் ஒரு அறை. பையன் பொறி கலங்கிட்டான். அவனுக்கு சப்போர்ட்டா ஒருத்தன் பாட்டு பாடி கிண்டல் பண்ணிட்டு இருப்பான். அவனுக்கு செருப்பை கழட்டி மாத்தி மாத்தி மொத்திட்டேன். அவ்வளவு தான் காலேஜ் முழுக்க நான் பிரபலமாகிட்டேன்ல. அதனால என்னோட பெயர் மைக்ல இருந்து டர்ஸ் ஆகிடுச்சு.
இன்னும் நிறைய அலும்பல்கள். சேட்டைகள். எல்லாம் ஒரு ஒன்னரை மாசம் தான். அப்புறம் தான் என்னோட வாழ்க்கைல டர்னிங் பாயின்ட்டா ஒரு சம்பவம் நடந்துச்சு. அந்த சம்பவத்த தான் இங்க அப்பப்ப சொல்லிட்டு வரேன்னே....
இப்படியாக தான், மைக் என்றும், டர்ஸ் என்றும் டெரரா அழைக்கப்பட்ட நான் உங்களால் இப்பொழுது காயு என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.
இப்படிக்கு, அன்பும் பணிவும் மிக்க காயு.....
.
ha ha ha padika padika ora sripu than vaalthukal.
ReplyDeleteஹஹா பின்ன பண்ணினது எல்லாம் கலாட்டா தானே... சிரிப்பு வராம என்ன செய்யும்
Deleteஅழகான நினைவுகள்.........
ReplyDeleteஆமா. எப்பவுமே பசுமையானது
Deleteஎல்லாம் ஒரு ஒன்னரை மாசம் தான். அப்புறம் தான் என்னோட வாழ்க்கைல டர்னிங் பாயின்ட்டா ஒரு சம்பவம் நடந்துச்சு.///
ReplyDeleteevvalvu jaaliyaana kalluri naatkal aarampam oru vipathu ellavatraiyum matri vitthathai paarkumpothu
vazkaiya purinjukkave mudiyala.
ini varum anaithu turning point ungalukku nallathaaka irukkattum akka.
மகேஷ், எது நடந்தாலும் நல்லதுக்குனு நினைக்குறது தான் என்னோட குணம்மா. அப்படிப் பாத்தா எந்த டர்னிங் பாயிண்டா இருந்தாலும் சந்தோசமா வரவேற்போம்
Deleteஹாஹாஹா! காலேஜ் படிக்கிறப்ப இதெல்லாம் ஓர் ஜாலியாத் தான் இருக்கும்!
ReplyDeleteஆமா அண்ணா.... அதெல்லாமே அழகிய கனாக்காலங்கள். இப்ப நான் பிள்ளைங்கள சேட்டை பண்ணக் கூடாதுன்னு அடக்கிட்டு இருக்கேன்
Deleteகல்லூரி கால நினைவுகள்..... சிறப்பு.
ReplyDeleteஇனிமையான மூன்று வருடங்கள் - என்னுடைய கல்லூரி நினைவுகளையும் மீட்க உதவியது உங்கள் பதிவு. நன்றி.
ஹஹா... வாழ்க்கைல எல்லாத்தையும் மறந்து சுதந்திரமா திரியுறதே இந்த காலங்கள்ல தான். ஆனா இப்ப எல்லாம் அங்கயும் பிள்ளைங்க பயங்கர மன அழுத்தத்துக்கு ஆளாகுறாங்க...
Deleteஉங்க நினைவுகள நினச்சி பாக்க வச்சது எனக்கும் சந்தோசம் தான். தேங்க்ஸ் அண்ணா
கடைசியா கோழிய சீனியர் அக்கா ஒருத்தங்க தலைல நிப்பாட்டி வச்சுட்டேன்.
ReplyDeleteஅக்கா, அசையாதுங்கக்கா, கோழி உங்க தல மேல நிக்குது. கைய தூக்காதீங்க, தலைய திருப்பாதீங்கன்னு ஏகப்பட்ட கண்டிசன்ஸ். அந்தக்கா திருதிருன்னு முழிச்சுட்டு அசையாம நிக்குறாங்க. அப்புறம் கபால்ன்னு கோழிய பாய்ஞ்சு பிடிச்சுட்டு, கோழி உங்க தலைல ஆய் போய்டுச்சுக்கா, தொடச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு சீட்ல வந்து உக்காந்துட்டேன்// அஹஹஹ்ஹ்
காயு, இது ஹோலிக்ராஸா? அங்க பிபிஏ எல்லாம் வந்துருச்சா அட! சூப்பர்...எங்க காலத்துல ஒன்லி ஸ்டாண்டர்ட் கோர்ஸ்தான். நான் படிச்சப்ப இருந்த மிஸ் எல்லாம் நீங்க படிக்கும் போதும் இருந்தாங்களானு தெரில...ஹேய் அந்த பிடி மிஸ் யாருப்பா...நாங்க படிக்கும் போதும் ஒன் அவர் ஃப்ரீ டைம் உண்டு...ஆனா ஸ்போர்ட்ஸ்ல இருந்தவங்க மட்டும்தான் போவாங்க. நான் லைப்ரரி...
ஆனா அந்த அளவு அலப்பறை பண்ண முடியலை அப்போ ரொம்ம்ம்ம்ம்ப ஸ்டிரிக்ட்....அந்த ஒரு கிலோமீட்டர்ல பையனுங்க எல்லாம் வந்துட்டாங்களா உங்க பீரியட்ல ...பரவால்லப்பா...நல்லா டெவலப் ஆகிருக்கு. எங்க பீரியட்ல அது காடா இருக்கும் முந்திரிக் காடு...அப்புறம் ஒன்லி கேர்ல்ஸ் நாங்க மட்டும்தான் நடப்போம். காலேஜுக்குள்ள வர்ர பஸ்ஸ மிஸ் பண்ணிட்டா....இல்லைனா காலேஜ் பஸ்லதான் வரணும். ஏன்னா அதுதான் கரெக்டா டைமுக்குப் போகும். லேட்டா போனா கேள்வி எல்லாம் வரும்....உங்கள மாதிரியேதான் செமினார் எடுக்க ஆசைப்படுவேன்...பாராட்டும் கிடைக்கும் எல்லாம் லைப்ரரினாலதான்...
ஆனாலும் எனக்கு ரொம்பப் பிடித்த காலேஜ் ஹோலிக்ராஸ்....படிச்சு முடிச்சு வந்தப்புறம் அங்க போக சான்ஸே இல்லாமப் போச்சு...
அப்புறம் எம் ஏ ஹிந்து காலேஜ். அங்க தான் துளசியை மீட் பண்ணி... (இப்ப நான் அவர் கூடதானே எழுதறேன்...)
ஸ்கூல் சென்ட் ஜோசஃப் - அதுவும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்கூல். நல்ல டீச்சர்ஸ்
காயு ரொம்ப தாங்க்ஸ்பா ...நீங்க இப்ப எங்க இருக்கீங்க? இங்க சொல்லலைனாலும் பரவால்ல. எங்க ஐடிக்குச் சொன்னா போதும். உங்கள் சந்திக்கும் ஆசைலதான் உங்களுக்கு விருப்பம் இருந்தா....ஓகேயா...
கீதா