அதோ அந்த படித்துறையில்தான்
கால்கள் நனைந்தபடி கைக்கோர்த்திருந்தோம்...
கொஞ்சம் புன்னகை,
கொஞ்சம் வெட்கம்,
நிறைய காதலுமாய்
சிணுங்கிக் கொண்டிருந்தேன்...
என்னை உனக்கு எவ்வளவு பிடிக்குமென்றால்
சிறு குழந்தைப் போல் கைவிரித்து
இவ்வளவு பிடிக்குமென்று சொல்லிவிடுவேன் தான்...
ஆனால் நீயோ
படங்கள் வரைந்து பாகங்கள் குறி
என்பதுபோல் தனித்தனி பட்டியலிட சொல்கிறாய்.
எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும்
முறைப்பையன் தான் கண்முன் வருகிறான்...
நானென்ன செய்வது?
பார்த்தாயா பார்த்தாயா கோபித்துக் கொள்கிறாய்...
அடப் போடா பைத்தியக்காரா
காதல் என்ன கணக்கு பரிட்சையா?
ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்துவதற்கு?
ஒரு திருட்டுப் பூனையின்
அத்தனை குணாதிசயமும்
உன்னிடத்தில் உண்டு.
மொத்தமாய் திருடிக் கொண்டாலும்
கோபிக்கவே முடிவதில்லை உன்னிடம்.
இதோ பார்த்தாயா?
தன்னந்தனியாய் உன் பெயரை
புலம்ப வைத்துவிட்டு
ரகசியமாய் சிரித்துக் கொள்கிறாய்.
ஒன்றும் விளங்கவில்லை போடா
நம் காதலைத் தவிர....
பரிசு கிடைத்ததா சகோ?
ReplyDeleteஇப்ப ஊரெல்லாம்... (மன்னிக்க..) உலகமெல்லாம்.. (மீண்டும் மன்னிக்க.. )
பதிவுலகமெல்லாம் பரிசு பெற்ற உங்கள் பதிவை பற்றித்தான் பேச்சு
இன்னும் கிடைக்கல அண்ணா.... அனுப்பி வச்சிடுறேன்னு சொல்லியிருக்காங்க... ஹாஹா தேங்க்ஸ்
Deleteயோசிக்காமலே முறைப்பெண் தான் வருவதாக சற்று முன் என்னிடம் தெரிவித்தார் சகோதரி...
ReplyDelete!!!
ஹாஹா அண்ணா
Deleteopen statement. அருமை!
ReplyDeleteஹாஹா அதேதான்... எழுதணும்னு நினைச்சாலே ஸ்டேட்மென்ட் தான் வருது
Deleteஅருமையான கவிதை. மிக இயல்பாய் இருக்கிறது.
ReplyDeleteதேங்க்ஸ் அண்ணா... ஆனா கவிதைன்னு சொன்னத கேட்டா தான் கொஞ்சம் திக்குன்னு இருக்கு ஹாஹா
Deleteஅருமை. பாராட்டுகள்.
ReplyDeleteதேங்க்ஸ் :)
Deleteதேங்க்ஸ் அண்ணா
ReplyDeleteம்ம்ம் அழகா உங்கள் மனம் திறந்த வரிகள்...அட ! நீங்கதான் கவிதைனு சொன்னா திக் திக்குனு இருக்குனு சொல்லி அப்புறம் திக்குத் தெரியாத காட்டுல உங்களவரைத் தேடிப் போயிடக் கூடாதுனுதான்....ஹ்ஹஹ இல்லை காயு ரசித்தோம்
ReplyDelete