Sunday, 4 March 2012

என்னில் கலந்து விட்டவள் நீ...

அம்மா....
உயிர் விட்டால் உயிர் வேண்டும்மென எனை பெற்றாயோ?
உன் உறவுக்கு உயிர் கொடுக்க எனை பெற்றாயோ?
இல்லை உன் உயிருக்கு காவலாய் எனை பெற்றாயோ?

பெற்றவுடன் உன் கடமை துவங்கி விட்டாய்...
உச்சி மோர்ந்து எனை நீயே அணைத்துக் கொண்டாய்...
இரவெல்லாம் எனக்காக கண்விழித்தாய்...
உன் உதிரம் எனக்கெனவே தாரை வார்த்தாய்...

கட்டெறும்பு கடித்த போதும் உனையழைத்தேன்...
கத்தி என்னை பதம்பார்த்தும் உன்னை நினைத்தேன்...
அமுதூட்டும் நேரத்திலும் உன்னை வாசித்தேன்...
காதலின் நேசத்திலும் உன்னை உணர்ந்தேன்...
இதோ உன் வாசம் இப்பொழுதும் என்னில் சுவாசிக்கிறேன்...

என்னில் கலந்து விட்டவள் நீ...
என் உதிரத்தின் ஒவ்வொரு துளியிலும் நீ...
என் சுவாசத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும் நீ ...
என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் நீ...
என் சிந்தனையின் சூத்ரதாரி நீ...
உன்னின் மறு உருவம் நான்...

நீ... என் அம்மா.... எனக்கே எனக்கான அம்மா ......

4 comments:

  1. உன்னைப் பெற்றதாய் கொடுத்து வைத்தவர்-உன்னை சேயாய்ப் பெற்றதனால்...
    உச்சிமோர்ந்து உன் தாய் உனக்கு வைத்த முத்தம் இன்று சத்தமில்லாக் கவிதையாய்..பாசத்தின் விதையாய்.

    ReplyDelete
  2. Katerumbu kaditha pothum unai azaithaen
    Kathi ennai patham parthum unnai ninaithaen
    Amuthootum nerathilum unnai vaasithaen
    Kathalin nesathilum unnai unarnthaen
    Ithoe unvaasam Ippozuthum Ennil suvasikiraen.

    Super...
    To me..
    'Maa" is more than God..And She is.
    Very nice . Very very nice.

    ReplyDelete