கார்முகில் சூழ்ந்த அந்த
மழை நாளில் அவனை சந்தித்தேன்...
வெட்கமறியாத என் உதட்டில்
குறு நகையொன்று மின்னலென பூத்தது...
இந்திரன் சந்திரன் என
புகழ்ந்திட மனமில்லைதான்...
ஆனால், இவன் கிடைக்கவில்லையென
வான்மகள் கண்ணீர் உகுத்தாளோ...
பட்டென கரம் பிடித்தான்...
பற்றிய கை விடவில்லை நான்...
பற்றி விட்ட கொடியாய் நாங்கள்
பற்றற்ற வாழ்க்கை துறந்தோம்...
இடியொன்று பேரிரைச்சலோடு
இறங்கி கொண்டிருந்தது
இடியாய் என்மனம் துடிப்பதறியாமல்...
இதயம் வருடும் இன்னிசை நீயென்றான்...
இதய கூட்டில் சிறையிட்டாய் என்றேன்...
உனக்கென உயிர் தந்தேன் என்றான்...
என் உயிரை பறித்து விட்டாய் என்றேன்...
மின்னலாய் வந்தான்
மின்னலென மறைந்தும் போனான்...
என்நேசம் கொண்டு
எத்தேசம் சென்றானோ???
என்றோ எழுதி விட்ட கவிதையொன்றின்
உயிர் துடிப்பாய் இவன்...
முளை விட துடிக்கும் காளானாய்
ஒவ்வொரு மழை நாளும்
அவன் வருகைக்காக நான்...
மழை நாளில் அவனை சந்தித்தேன்...
வெட்கமறியாத என் உதட்டில்
குறு நகையொன்று மின்னலென பூத்தது...
இந்திரன் சந்திரன் என
புகழ்ந்திட மனமில்லைதான்...
ஆனால், இவன் கிடைக்கவில்லையென
வான்மகள் கண்ணீர் உகுத்தாளோ...
பட்டென கரம் பிடித்தான்...
பற்றிய கை விடவில்லை நான்...
பற்றி விட்ட கொடியாய் நாங்கள்
பற்றற்ற வாழ்க்கை துறந்தோம்...
இடியொன்று பேரிரைச்சலோடு
இறங்கி கொண்டிருந்தது
இடியாய் என்மனம் துடிப்பதறியாமல்...
இதயம் வருடும் இன்னிசை நீயென்றான்...
இதய கூட்டில் சிறையிட்டாய் என்றேன்...
உனக்கென உயிர் தந்தேன் என்றான்...
என் உயிரை பறித்து விட்டாய் என்றேன்...
மின்னலாய் வந்தான்
மின்னலென மறைந்தும் போனான்...
என்நேசம் கொண்டு
எத்தேசம் சென்றானோ???
என்றோ எழுதி விட்ட கவிதையொன்றின்
உயிர் துடிப்பாய் இவன்...
முளை விட துடிக்கும் காளானாய்
ஒவ்வொரு மழை நாளும்
அவன் வருகைக்காக நான்...
அருமையான ஒப்புமை ... அழகு வரிகள் ...எழுது எழுது ......... இன்னும் நிறைய எழுது .... இன்னும் நல்லா எழுது .நல்ல முன்னேற்றம் .கலக்கறே போ.
ReplyDeletethanks anna
Deleteஇவரது கவிதைகளை வாசித்தல், வண்ணத்துப் பூச்சியின் பறத்தலை ரசிப்பது போன்ற ஒரு சுகானுபவம்! இவரது கவியுலகில் அழகியல் நிறைந்து வழிகிறது. அங்கே இலைகள் நட்சத்திரங்களாகவும் மாறும்; நட்சத்திரங்கள் இலைகளாகவும் உதிரும். எதிர்பாரா சமயங்களில் எதிர்பாராத வார்த்தைகளால் எதிர்பாராத முத்தங்களை வழங்கிவிடுவது இவரது இயல்பு!
ReplyDelete