Wednesday 6 June 2012

பட்டாம்பூச்சி உணர்வு...!


இதோ வந்துவிட போகிறதென
ஏழாம் அறிவு எச்சரிக்கும் முன்பே
எட்டிப்பார்க்க துவங்கியது வலி...!

கீழிருந்து மெதுவாக மேல்நோக்கி
வேகமாக நகர்ந்து விடத்துடித்த
பூரானாய் கிளை பரப்பத் துவங்கியது...!

“அம்மா” என்ற கேவல் அடுத்தநொடி
:ஐயோ”வென உச்சக்கட்டம்
அடையத் துடிக்கிறது...!

“விதி” உள்ளிருக்கும் அத்தனை
உணர்வுகளையும் சாகடித்து
“வலி” என்ற ஒன்றை மட்டும்
முன்னிருத்தி வேடிக்கை பார்க்கிறது...!

உயிர் பறிக்கும் வலி
சில நிமிடங்களே...
இதுவோ...
உயிர் வதைக்கும் வலியாகி
உதைத்தே உயிர் ருசிக்கிறது...!

செய்வதறியாது திகைத்தும்
துடிக்கும் கண்களை
சந்திக்கவும் இயலாத உறவுகள்
ஒரு கை பிடித்து மறுகை பிசைந்தே
என்னை யாசித்தே நின்றனர்...!

நான், எனது தேவை, எனது கடமையென
நானாய் இங்கு சுயநலம்
கொண்ட நொடி விருட்டென எழுகிறேன்
மேலும் மேலும்
வலி வதைத்து வலிமை பெற்றே...!

வேதனித்த வேளையிலும்
கவிதாகம் நெஞ்சடைக்க
பரவி விட்டிருந்த கரப்பான்
ஒரு மெல்லிய பட்டாம்பூச்சியாய்
சிறகடிக்கத் துவங்கியது...!

4 comments:

  1. சொல்லமுடியாத உயிர் வேரறுக்கும் வலியை கூட நுணுக்கமாக சொல்கிறது உன் கவிதை. வலியை நீ ஏற்றுக்கொள். இதுமாதிரி சிறந்த கவிதைகளை மேன்மேலும் கொடு.. GD.,

    ReplyDelete
  2. நன்றி அண்ணா

    ReplyDelete
  3. இந்த கவிதை நான் எழுதியது, ISO 9001,2012 சான்றிதழ் பெற்றது. 'கிக்கிலி பிக்கிலி'

    ReplyDelete
    Replies
    1. :( அய்யோ இங்கயுமா கொசு தொல்ல தாங்கல

      Delete