Wednesday 18 July 2012

உசிருக்குள்ள நீ தானே....

* ஒன் ஒத்தச்சொல்லில்
கிறங்கி போயி நானுங்கிடந்தேன்
# ஒங்கொலுசு சத்தம் காதில் மோதி
உசிர வறுத்து போனதே...

* ஒன் மீசக் குத்தும் குறுகுறுப்பில்
சொக்கிப் போனேனே...
ஒன் நெஞ்சு முடி கதகதப்பில்
கண் மயங்கி மாயம் செய்ததே...

# உசிரே உசிரே வானத்துல
நெலாவப் பிடிப்போம்...
நெலவ புடிச்சு புல்வெளியில்
பதியம் போடுவோம்...

* குட்டி குட்டி நெலவா வந்து
மண்ணில் பொறக்கும்...
உன்ன அப்பான்னு
சொல்லி சொல்லி உசிர எடுக்கும்...

# அட உசிரெடுக்கும் ராட்சசியே
உன்ன விடவா
நீ பெத்துப் போடும் தேவதைங்க
என்னை படுத்தும்?

# வானத்துல ஏறிப்போவோம்
விண்மீனு புடிக்க...
உன் கண்ணு ரெண்டும் போதும் பெண்ணே
நானும் மீனு புடிக்க...

* வெட்ட வெளி புல்வெளியில்
நானும் உன்னை அணைக்க...
வானமும் சந்திரனும்
வெக்கத்துல சிவக்க...

# மயிலே ஒன் நேசங்கண்டு
நானும் என்னை மறந்தேன்...
இந்த சென்மம் போதும் கண்ணே
எல்லா சென்மம் அறிஞ்சேன்...

* மாமா நான் கண்மூடி
நாளும் உன்னை ரசிச்சேன்
உன் உள்மூச்சு வாங்கி தானே
நானும் உசிர் வளத்தேன்...

3 comments:

  1. ஆஹா.....ஆஹா.....அருமையான பாடல்......கண்ணுக்குள் காட்சிகளையும் வளர்த்துப் போகின்றது !

    ReplyDelete
  2. அருமை வரிகள்...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
  3. மாந்தர்களின் உணர்வை புரிந்தால்தான் கவிதை.அது இதில் இருக்கிறது. கவிதையின் நடை அழகாகவும் , எளிமையாகாவும் இருக்கிறது. வெட்ட வெளி புல்வெளியில்
    நானும் உன்னை அணைக்க...
    வானமும் சந்திரனும்
    வெக்கத்துல சிவக்க... காட்சிகளை பளிச்சிட வைக்கிறது .. இந்த வரிகள். காதலோடு இயைந்து புனைய பட்ட கவிதை. ஒரு ஆழ்ந்த காதலை இக் கவிதையில் தரிசிக்க முடிகிறது. உவமைகள் அழகாக இருக்கிறது. பத்தோடு பதினொன்றாக இல்லாமல் , இது ஒரு வித்தியாசமான காதல் கவிதை.

    ReplyDelete