எப்.பி-ல ஒரு ரௌண்ட்ஸ் வந்தப்போ அந்த ஐடி கண்ணுல பட்டுச்சு. தெரிஞ்ச பொண்ணோட போட்டோ. அவளா இருக்காதே, ஒரு வேளை யாராவது அவ போட்டோ போட்டு பேக் ஐடி க்ரியேட் பண்ணிட்டாங்களோன்னு ஒரு ஷாக்...
காரணம், போன ஆறு மாசம் முன்னாடி தான் அவ ப்ளஸ் டூ முடிச்சா. வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஒரு மொபைல்ல கூட அவளால பேச முடியாது. அவள எனக்கு புக்கும் கையுமா தான் தெரியும். ப்ளஸ் டூ முடிச்சு, இப்போ ஹாஸ்டல்ல தங்கி இஞ்சினியரிங் படிச்சுட்டு இருக்கா.
சரி, யாருன்னு உள்ள போய் பாத்தா, ப்ரோபைல் பிக்சர்ல இருந்து கவர் போட்டோ வரைக்கும் பப்ளிக்ல போட்டு வச்சிருக்கா. அதுவும் கவர் போட்டோல ப்ரெண்ட்ஸ் கூட கூல் ட்ரிங்க்ஸ் குடிக்குற மாதிரி, மண்டை மேல கொம்பு வச்ச மாதிரி, கொரியன் ஸ்டைல்ன்னு ஆள் காட்டி விரல நீட்டுற மாதிரி இப்படி ஏகப்பட்ட போஸ் வேற....
அதுல இருக்குற கமண்ட்ஸ் எல்லாம் நிறைய டபுள் மீனிங் டயலாக்ஸ்... அவளுக்கு புரிஞ்சுதா இல்லையான்னு தெரியல, ஹிஹி-ன்னு சிரிச்சு வச்சிருக்கா. அதுவும் கமன்ட்லயே சாட் மாதிரி காலைல எழுந்ததுல இருந்து தூங்கப் போறது வரைக்கும் விலாவாரியா பேசி வச்சிருக்கா... வீட்டு அட்ரெஸ் முதல் கொண்டு போன் நம்பர் வரைக்கும் ஷேர் பண்ணி வச்சிருக்கா...
சும்மாவே காலம் கெட்டுக்கிடக்கு, இதுல இவ பண்றதெல்லாம் தெரியாம தான் பண்ணுறான்னு நம்புறேன். காரணம் அவள வளர்த்த விதம் தெரிஞ்சதால... நாளைக்கு முதல் வேலையா அவள கண்டிச்சு ஐடிய டி-ஆக்டிவேட் பண்ண சொல்லணும்.
...............................................
எப்.பி-ல எத்தனையோ பக்கங்கள்ல இந்த மாதிரி பொம்பள புள்ளைங்க போட்டோவ தனியாவோ இல்ல ப்ரெண்ட்ஸ் கூட இருக்குற மாதிரியோ உள்ள போட்டோவ போட்டு கண்டமட்டுக்கு கன்னாபின்னான்னு கமண்ட்ஸ் போட்டு வச்சிருக்காங்க. அவங்க கைக்கு எல்லாம் ஈசியா மாட்டுற மாதிரி ஏன் போட்டோஸ் போடணும்? அதுவும் பப்ளிக்ல போடுறதால ஈசியா டவுன்லோட் வேற பண்ணிடுவாங்க...
இந்த மாதிரி தன்னோட போட்டோஸ் போட்டு தன்னை பத்தி தப்பு தப்பா பேசுறாங்கன்னு தெரிஞ்சா தாங்கிக்க முடியுமான்னே தெரியல...
...................................................
நமக்கு தெரியாமலே நம்மள பத்தி அசிங்க அசிங்கமா கனவு காண நம்மள அறியாம நாமளே காரணமாகிடுறோம்....
.....................................................
சுதந்திரமா இருப்போம் தப்பில்ல, ஆனா கொஞ்சம் கவனமாவும் இருக்கலாமே...
// நாளைக்கு முதல் வேலையா அவள கண்டிச்சு ஐடிய டி-ஆக்டிவேட் பண்ண சொல்லணும் //
ReplyDeleteமுதலில் அந்த நல்ல காரியத்தை செய்யுங்கள், சகோதரி!
த.ம.2
அத சொல்லி புரிய வச்சுட்டேன். தேங்க்ஸ் :)
ReplyDeleteஐடிய டி-ஆக்டிவேட் பண்ணிய பிறகு ஒரு பதிவு போடுங்க... உங்களுக்கு புண்ணியமா போகும்...! நன்றி...
Deleteஅந்த ஐடி deactivate பண்ணியாச்சு அண்ணா. நானே டிப்ஸ் குடுத்து புது ஐடி யூஸ் பண்ண கத்து தரேன்னு சொல்லியிருக்கேன். அவளுக்கு நெட் யூஸ் பண்ணக் கூட தெரியாது. அவங்க பயன்படுத்துற வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரியாது, அத்தனை பச்சை குழந்தை அவள். அங்க பிரெண்ட்ஸ் யூஸ் பண்றத பாத்து இவளும் பண்ணியிருக்கா.
DeleteGood Job well done sister.
ReplyDeleteM.Syed
Dubai
பாராட்டுக்காக செய்யல, அதே மாதிரி fb ல இருக்குறதையும் நான் தப்புன்னு சொல்ல வரல. கண்டிப்பா அந்த பொண்ணு இன்னும் fb வருவா, நானே வர வைப்பேன்.
Deleteதெரியாமத்தான் கேட்கிறேன்.. சாரி... தெரிஞ்சுக்கத்தான் கேட்கிறேன்.. பேஸ் புக் அத்தனை முக்கியமா?
ReplyDeleteஎத்தனையோ பேர் இந்த அடிக்சனைப்பத்தி பேசியிருக்கறாங்க ஆபத்தப் பத்தி பேசியிருக்கறாங்க அப்புறமும் ஏன் இப்படி?
எனக்குப் புரியலை.
ஒரு வேளை இந்த அட்ரினலின் ரஷ் பெண்களுக்கு தேவையோ..?
புரிதலுடனான பதிவு.
God Bless You
பேஸ் புக் அத்தனை முக்கியமானதான்னு என் கிட்ட கேட்டா, என் தனிப்பட்ட கருத்து (கவனிக்க, தனிப்பட்ட கருத்து தான்) ஆமான்னு தான் சொல்லுவேன். எத்தனையோ பெண்கள் வீட்டுக்குள்ள மனம் புழுங்கி ஒரு ஸ்ட்ரெஸ் ல வாழ்ந்துட்டு இருப்பாங்க, அவங்கள வெளி உலகம் தெரிஞ்சுக்க, அவங்க thoughts பகிர்ந்துக்க இது ஒரு நல்ல தளம். ஆனா அத சரியா பயன்படுத்த தெரியாம அரகுறையா தெரிஞ்சுகிட்டு யூஸ் பண்றதுல தான் ஆபத்து. ஏன் என்னையே எடுத்துகிட்டா எனக்கு பேஸ் புக் தான் பெரிய ரிலீப். ஆனா அத எப்படி பயன்படுத்திக்கனும்னு எனக்கு தெரியும்.
Deleteஇதுல நீங்க குறிப்பிட்ட அட்ரினலின் ரஷ் தான் காரணம்னா ஆண்கள் எதுக்கு பேஸ் புக்ல இருக்காங்க?
ஆபத்துன்னு வந்துட்டா பெண்களுக்கு மட்டும் இல்ல ஆண்களுக்கும் ஆபத்து தான். பசங்க போட்டோவ இன்னொருத்தன் எடுத்து fake id create பண்ணுவான்.
என்னோட இந்த பதிவோட நோக்கம், பேஸ் புக் யூஸ் பண்ண தெரியாதவங்க யூஸ் பண்ணாதீங்கன்னு தான். அத முதல்ல தெரிஞ்சுகிட்டு அப்புறம் யூஸ் பண்ணலாம்
உண்மைதான்...
ReplyDeleteபடங்களை அதில் பதியாதீர்கள் என்று சொன்னாலும் கேட்பதில்லை....
நிறையப் பேர் இந்தத் தவறைத்தான் செய்கிறார்கள்.
ஆண்களும் சரி பெண்களும் சரி இதனால ஆபத்துல மாட்டிக்குறாங்க. பெண்கள் அதிக அளவுல பாதிக்கப் படுறாங்க.
Deleteநல்லதோர் அறிவுரை. பலரும் அதில் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது பார்த்தால் மனது பதறும்....
ReplyDeleteத.ம. +1
இந்த சமூகம் தான் இப்படி ஒரு சூழ்நிலைய உருவாக்குது. எப்போ அடுத்தவங்க விசயத்துல மூக்க நுழைக்காம இருக்குறோமோ அப்போ தைரியமா வெளிவரலாம். இந்த அறிவுரைய கூட நான் அவளுக்கு சொல்லியிருக்க கூடாது தான், ஆனா பிரச்சனைன்னு வந்தா திணறிடுவா. அவ வீட்லயும் இதெல்லாம் புரியாது, அதனால மட்டும் தான் நான் தலையிட்டேன்
Deleteஇப்படி சிலர் பேஸ் புக் ஆபத்து உணராது இருப்பது வருத்தமான ஒன்று! எப்படியோ உங்கள் தோழியை காப்பாற்றிவிட்டீர்கள்! நன்றி!
ReplyDeleteஉங்க தேங்க்ஸ் கு ஒரு தேங்க்ஸ் ண்ணே
Deleteசரியான ஆலோசனை தந்திருக்கிறீர்கள்.அதை அந்தப் பெண் ஏற்றுக் கொன்டது மகிழ்ச்சி. நல்ல ஆலோசனகளை சொல்பவர்களை எதிர்களாகப் பார்க்கும் வயது அல்லவா அது
ReplyDeleteஉண்மை தான், இதுவே வேற யாரா இருந்தாலும் ஒரு பொது பதிவு போட்டுட்டு அவங்களா பாத்து தோணினா பண்ணிக்கட்டும்னு விடலாம். ஆனா இந்த பொண்ணு அப்படி இல்ல, மொபைல் கூட தட்டு தடுமாறி பயன்படுத்துற பொண்ணு, அவளுக்கு சரியா சொல்லி குடுக்கணும் இல்லையா
Deleteநல்ல காரியம் செய்தீர்கள்... அது பேஸ் புக் இல்ல வேஸ்ட் புக் ....
ReplyDeletehttps://www.scientificjudgment.com/