நீண்டு நெடிந்து கிடக்கும்
மலைப்பாம்பை போல தான்
இருண்டிருக்கும் இரவு
என் மொத்த உணர்வுகளையும்
விழுங்கி விட்டு அசைவற்று கிடக்கிறது.
பாரமாய் அழுத்திக் கொண்டிருக்கும்
இந்த கற்பாறை
உன் ஒரே ஒரு அணைப்பினில்
துகள்களாய் காணாது
போய் விடவும் கூடும்.
இருந்தும்
உன் கண் பார்க்கத் தயக்கம்
உன் மடி சாயத் தயக்கம்
எல்லாத்துக்கும் மேலாய்
மடைதிறந்து கண்ணீர்விட்டு
அழுது விடத் தயக்கம்.
நீ சொல்வதைப் போல்
சோகங்களை தூக்கி சுமக்க
எனக்கு பிடித்திருக்கிறது போலும்.
இதோ இந்த பட்டாம்பூச்சி
தன் இறகுகளை நெருஞ்சிமுள் வைத்து
துளையிட்டுக் கொண்டிருக்கிறது.
காரணங்கள் கேட்டு விடாதே
சொல்லத் தெரியாது
முக்கியமாய்
பட்டாம்பூச்சிகள் பேசுவதில்லை.
பிடித்திருக்கிறது என்றால் சரி தான்...
ReplyDeleteபிடிச்சதுனால தானே அண்ணா சொல்ல முடியாம சோகம் வருது
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஓட்டு போட்டதுக்கும் வாழ்த்துக்கும் தேங்க்ஸ் அண்ணா
Deleteஇந்த சோகம் தான் காதல் வரிகளை வாழ வைக்கிறதோ? பட்டாம்பூச்சிகள்பேசாததால்...!!
ReplyDeleteகாதல்ல சோகம் மட்டும் தான் இருக்கணும்னு அவசியம் இல்ல. இவள் இப்படி தான், சில நேரம் சோகம், ஆனா பல நேரம் சட்டைய புடிச்சு கேள்வி கேட்ருவா
Deleteசோகங்களைக் கூட சுகமாக்கி கொள்ள வேண்டியதுதான்! அருமை!
ReplyDeleteஹஹா சில நேரம் சோகம் தான் சுகமா இருக்கும் அண்ணா
Deleteபேசாம இருக்கிறச்சே இப்படின்னா, பேசினால்? :)
ReplyDeleteபேசினா அவ்வளவு தான். படபட பட்டாசு
Deleteகவிதை அருமை.
ReplyDeleteதேங்க்ஸ்
Delete