ரொம்ப நாள் அப்புறம் இன்னிக்கி தான் பரோட்டாவும் சிக்கனும் சாப்ட்ருக்கேன். அதுக்கான காரணத்த சொன்னா யாரும் சிரிக்கக் கூடாது சொல்லிட்டேன்.
சாயங்காலமா கார்த்திக்கும் எனக்கும் சண்டை. நான் பாட்டுக்கு கோபத்துல இருக்கேன், அவர் கிச்சிலி காட்டுற மாதிரி சமாதான கொடி காட்டிட்டு இருக்கார், நான் விடுவனா கோபத்துல திட்டிட்டு இருக்கும் போதே பரோட்டா நியாபகம் வந்துடுச்சு. உடனே இன்னொரு மொபைல கைல எடுத்து அப்பாவுக்கு கால் பண்ணினேன். ரிங் போய்ட்டே இருக்கு, அப்பா அட்டென்ட் பண்ணின மாதிரி இல்ல. சரின்னு நந்து வீட்டுக்கு கால் பண்ணேன். நந்து எடுத்துட்டு தாத்தா கடைக்கு போய்ட்டாங்கன்னு சொல்லிட்டா. விடுவனா, எப்பவும் அப்பா போய் இருக்குற கடைக்கு கால் பண்ணி அப்பா கிட்ட பரோட்டா வாங்கிட்டு வர சொல்லிட்டு தான் கார்த்திக் கூட சமாதானத்துக்கே வந்தேன். திங்குற விசயத்துல நான் என்னிக்கும் வஞ்சம் வச்சதே இல்லன்னு உங்களுக்கு எல்லாம் இப்ப நல்லா தெரிஞ்சிருக்கும்.
சின்ன வயசுல வீட்ல அம்மாவுக்கும் எனக்கும் எப்பவாவது பயங்கரமா சண்டை நடக்கும். அப்ப எல்லாம் நான் கோபத்துல மூஞ்சிய தூக்கி வச்சுப்பேன். சாப்பாட்டு நேரம் வந்ததும் அம்மா என்னை சாப்பிட வர சொல்ல மாட்டா. “எம்பொண்ணு ரோசக்காரி, இன்னிக்கி சாப்பிட மாட்டா”ன்னு சொல்லிட்டே மத்தவங்களுக்கு எல்லாம் தட்டு எடுத்து வைப்பா. நான் அப்படியே ஹால்ல சோபால உர்ர்ர்ன்னு உக்காந்துட்டு இருப்பேன்.
அம்மா, முதல் தோசைய சுட்டு அப்பா தட்டுல வைப்பா. நான் விடுவனா, விறுவிறுன்னு எழுந்து போய் அப்பா முதல் வாய் வைக்குறதுக்கு முன்னாடியே தட்டை பறிச்சு நான் திங்க ஆரம்பிச்சுடுவேன். அம்மா உள்ளுக்குள்ள சிரிச்சாலும் முறைச்சுட்டே இன்னொரு தட்டுல இன்னொரு தோசைய அப்பாவுக்கு கொண்டு வந்து வைப்பா. நான் விடுவனா, அதையும் தூக்கிடுவேன்.
வழக்கமா ரெண்டு தோசைக்கு மேல திங்க மாட்டேன். ஆனா சண்டைன்னு வந்துட்டா கோபம் தலைக்கேறிடும். அதனால கிட்டத்தட்ட ஏழு தோசைய பிடுங்கி பறிச்சு தின்னா தான் என் கோபம் அடங்கும். இதுல தோசைக்கு பதில் சப்பாத்தி, புட்டு, பூரி, தாளிச்ச கப்பக்கிழங்கு, கோதுமை ரவை எத வேணா போட்டு ஃபில் பண்ணிக்கலாம்.
அப்பவும் வெறும் தோசைய தின்னா நல்லாயிருக்குமா, கிட்சன் உள்ள புகுந்து மிக்சர் டப்பா, சிப்ஸ் டப்பா, ஜாங்கிரி, அதிரசம்னு இருக்குறத எல்லாம் பதம் பாப்பேன். அம்மா ஜாடைலயே தீனிப் பண்டாரம்ன்னு சொல்லுவா. விடக் கூடாதுன்னு பாட்டியோட பொறிக்கடலை, திரிச்சி வச்ச அவல், முறுக்கு, சீவி வச்ச பனங்கிழங்குன்னு உள்ளப் போகும்.
ஆனா தம்பி இதுக்கு நேர் எதிர். என்னை விட பெரிய தீனி பண்டாரம் அவன்தானாலும் கோபம்னு வந்துட்டா தொர ஒரு நாள் ஆனாலும் பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டாரு. யார் வீட்டுக்கு போனாலும் தம்பி எதையுமே சாப்பிட தயங்கி தயங்கி நிப்பான். நான் தான் தட்டோட எடுத்துட்டு வந்து திங்க ஆரம்பிப்பேன். சரி போனா போகுதுன்னு அவனுக்கும் எதையாவது எடுத்து நீட்டினா பயபக்கி கூச்சத்துல தொடக்கூட செய்யாம நெளிஞ்சுட்டு நிப்பான். அவன பாக்க வச்சு தின்னா பாவம்னு போனா போகுதுன்னு நானும் ஒரு முக்கா தட்ட காலி பண்ணிட்டு மிச்சம் வச்சிடுவேன். ஆனா வீட்டுக்குள்ள மட்டும் வாங்கிட்டு வர்றதெல்லாம் அவன் கிட்ட முதல்ல போயே ஆகணும். அப்புறமா தான் அம்மா அத வாங்கி ரெண்டு பேருக்குமா பங்கு வச்சு தருவா. கொரங்கு, அவன் பங்க எப்பவும் வச்சி வச்சி தின்னு என்னை வெறுப்பேத்துவான். நான் தான் எல்லாத்தையும் ஒரே வாய்ல போடுற ராகமாச்சே, அடுத்த நேரத்துக்கு திங்க ஒண்ணும் மிச்சம் இருக்காது. கொஞ்சம் தாலேன்னு கேட்டா மனசிருந்தா தருவான், இல்லனா மாங்கு மாங்குன்னு அழுது காட்டிக் குடுத்துடுவான்.
ஒரு நாளு இப்படி தான், தம்பி கிட்ட பக்கத்து வீட்டு பொண்ணு சண்டைக்கு போயிருக்கா. விஷயம் வேற ஒண்ணுமில்ல, அவ எங்க வீட்ல பூனை போட்ட குட்டி ஒண்ணை தூக்கிட்டு அவ வீட்டுக்கு போய்ட்டா. இவன் அவங்க வீட்டு வாசல்லயே நின்னு அழுதுட்டு நின்னுருக்கான். பூனைக் குட்டி வேணும்னும் கேக்கல. அந்த பொண்ணு அங்க இருந்தே குட்டிய தூக்கி காட்டி அளவம் (வெவ்வவே) காட்டிட்டு இருக்கா. அப்புறம் மூஞ்சிய பாரு மூஞ்சிய, நல்லா அனுமார் மாதிரி இருக்க, என் முன்னால நிக்காத போன்னு அவன திட்டியும் விட்டுருக்கா. அவனோ பூனைக்குட்டி கிடைக்காத வரைக்கும் அந்த இடத்த விட்டு நகருறதா இல்ல.
விசயம் இன்னொரு பக்கத்து வீட்டு பையன் மூலமா எனக்கு வந்துச்சு. நேரா அவ வீட்டுக்கு போனேன். தம்பிய பாத்தேன். பாத்துட்டே அவ வீட்டுக்குள்ள போனேன். அங்க கிட்சனுக்குள்ள நுழைஞ்சேன். நல்லா கருவாட்டு குழம்பு வாசனை அடிச்சுது. சுத்தி முத்திப் பாத்தேன். புள்ள பூனைக்குட்டிய தூக்கிட்டு வெளில போயிடுச்சு போல.
தம்பி வான்னு அவன் கைய புடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் ரெண்டு பேருமா சேர்ந்து கருவாட்டு குழம்பையும் சோத்தையும் சுத்தமா வழிச்சு சாப்ட்டோம். அடுத்து என்ன இருக்குன்னு பாத்தேன். ஒரு டப்பால கடலை முட்டாய், பொறி உருண்டை எல்லாம் இருந்துச்சு. கேக்கணுமா, டப்பா காலி. இனி இத இப்படியே விடக் கூடாதுன்னு அடுப்பு பக்கத்துல பப்படம் இருந்துச்சு. கூடவே எண்ணெய் சட்டியும். அடுப்ப பத்த வச்சு பப்படத்தையும் பொரிச்சு சாப்ட்டு காலிப் பண்ணினோம்.
அதுக்குள்ள அந்த புள்ள வீட்டுக்குள்ள வந்துடுச்சு. அய்யய்யோ இவங்க எல்லாத்தையும் திங்குறாங்கன்னு கூச்சல் போட்டா. முதல்ல எங்க பூனை குட்டிய குடு, அப்புறம் வெளில போறோம்னு சொன்னேன். ஓடிப் போய் கடவாப்பெட்டி (பனை ஓலைல செய்த பெரிய பெட்டி) வச்சு கமத்தி வச்சிருந்த பூனைக் குட்டிய எடுத்து நீட்டிட்டு இருங்க, அம்மா வரட்டும் சொல்லிக் குடுக்குறேன்னு அழுதா.
அவ அழுறத எல்லாம் யாரு கணக்குல எடுக்குறது, நமக்கு பூனைக் குட்டி தான முக்கியம். தம்பிக்கு அவ அழுறத பாத்து ஒரே சந்தோசம். அன்னிக்கி தான் நம்மள அழ வச்சவங்கள எப்படி அழ வச்சு பழி வாங்கனும்னு தம்பிக்கு க்ளாஸ் எடுத்தேன்.
வீட்டுக்கு வந்தா அப்பா சாப்பிடக் கூப்ட்டாங்க. நல்ல புள்ளைங்களா போய் டைனிங் டேபிள்ல உக்காந்து அம்மா பொரிச்சு தந்த பூரில நால ஒரு வெட்டு வெட்டினோம். சொல்ல மறந்துட்டேனே, அந்த கருவாட்டுக் குழம்பு படு சூப்பரு.
கோபம் வந்தா இப்படி பலதும் உள்ளே போவுதே...!
ReplyDeleteஇரண்டுமே தவறு...!
ஹஹா கோபம் எப்பாவாவது தான் வரும் அண்ணா. அதோட சாப்பாட்டு விசயத்துல எப்பவுமே டயட் இருக்குறது உண்டு. என்னிக்காவது ஒரு நாள் இப்படி சாப்பிடுறதுல தப்பு இல்லன்னு நினைக்குறேன்.
Deleteஅப்பா சுகர் பேசியென்ட், அவரே கூட ஒரு நாள் டாக்டர் கிட்ட கேட்டுட்டு முன்னெச்சரிக்கையோட பிடிச்சது எல்லாம் சாப்பிடுவார். ஆசைப்பட்டத திங்கமுடியாம போனா அதென்ன வாழ்க்கைன்னு அப்பா அடிக்கடி சொல்லுவார். இப்ப கூட ஒரு மாசம் கடும் டயட் அப்புறமா தான் நேத்து பரோட்டா சாப்ட்டுருக்கேன். பாத்துக்கலாம் ஏதும் ஆனா கண்ரோல் பண்ண முடியும்னு நம்பிக்கை இருக்கு இல்லனா தாங்கிக்குற மன உறுதி இருக்கு
டி.டியின் பின்னூட்டமும்
ReplyDeleteதங்கள் பதிலையும் பதிவைப் போல்
மிகவும் இரசித்தோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஹஹா... சாப்பாடுனா பின்ன விட முடியுமா?
Deletetha.ma 4
ReplyDeleteஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்
Deleteஹஹஹஹஹ் கோபம்னா நெருப்பு கொழுந்துவிட்டும் எரியும்னு சொல்லுவாங்க.(எல்லாம் வயத்துலதான்) .அப்ப வயத்துல நெருப்பு எரிஞ்சா பசிக்கும்னு சொல்லுவாங்க....அதான் அந்த நெருப்பு - கொள்ளிவாய் அடுத்த வார்த்தை வேண்டாங்கோ..அஹஹஹ எல்லாத்தையும் முழுங்குதுபோல....
ReplyDeleteசும்மா ...டிடிக்கு நீங்க கொடுத்த பதில் வாசிச்சுட்டோம்...ம்ம்ம அப்பபா பிடிச்சத சாப்பிடலைனா அப்புறம் என்னங்க லைஃப்...எஞ்சாய்
அடுத்த வார்த்தை என்னான்னு எனக்கு தெரியும். சும்மாவே இங்க என்னை பிசாசு ன்னு தான் கூப்பிடுவாங்க.
Deleteஅப்புறம் எல்லாரோட வாழ்க்கைலயும் இப்படியான சம்பவங்கள் நடந்துருக்கும். என்ன அத சொல்ல நேரமில்லாம ஓடிட்டு இருப்பாங்க. அத எழுத்துல சொன்னா படிக்குரவங்களுக்கு சந்தோசம்
சாப்பிடுவதை கூட ஓர் சுவையான பதிவாக உங்களால்தான் தரமுடிகிறது! கலக்குங்கள்!
ReplyDeleteஹாஹா தேங்க்ஸ். சாப்பாடுனாலே டேஸ்ட் தான, அதான் சுவையா வந்துருக்கு
Deleteமிகவும் ரசிக்க வைத்த பகிர்வு.
ReplyDeleteரசிச்சதுக்கு தேங்க்ஸ். சின்ன வயசு நியாபகங்கள் எல்லாமே ரசிக்கத் தகுந்தது தான் இல்லையா
Delete