Friday, 10 July 2015

“பாய்ஸ் பிபோர் ப்ளவேர்ஸ்” (Boys before flowers) - விமர்சனம்
































நேரெதிர் குணம் கொண்ட ரெண்டு ஹை-ப்ரொபைல் நண்பர்கள். அவங்க லைப்ல வர்ற லோ-ப்ரொபைல் பொண்ணு. மூணு பேருக்கும் இடைல வர்ற காதல்... அத மொத்தமா இருபத்தி அஞ்சு மணி நேரம் ரசிக்க வச்சிருக்காங்க.


ரொம்ப குழம்ப வேணாம், இவ எத பத்தி பேசுறான்னு. நெட் கனெக்சன் சரியா கிடைக்காததால மூணு நாளா உக்காந்து  ஒரு கொரியன் சீரியல் இருபத்தியஞ்சி எப்பிசோட் பாத்து முடிச்சிருக்கேன். விறுவிறுப்பு, பயம், சந்தோசம், அழுகை, கலாட்டான்னு  செம இன்ட்ரெஸ்ட்டிங்கா போன முதல் நாலு எப்பிசோட் தான் என்னை தொடர்ந்து அந்த சீரியல பாக்க வச்சுது.


பொதுவா நம்ம இடங்கள்ல முக்கோண காதல்னாலே ரெண்டு பேரு ஹீரோயின/ ஹீரோவ லவ் பண்ணுவாங்க. ஆனா அடுத்த பக்கம் யாராவது ஒருத்தர் மேல தான் காதல் வரும். இங்க ஹீரோயின் தன்னை லவ் பண்ற ரெண்டு பேரையும் காதலிக்குறா. ஆனா  சீக்கிரமே தன்னோட உண்மையான காதல் யார் மேல இருக்குங்குறத புரிஞ்சுக்குறா.

சரி, உங்கள எல்லாம் குழப்புறதுக்கு முன்னாடி கதைய கொஞ்சம் சுருக்கமா சொல்லிடுறேன். என்ன ஒண்ணு, இந்த கேரக்டர்களோட பெயர்கள பாத்தா தான் வாய்லயே நுழைய மாட்டேங்குது.

கொரியாவோட மிக சிறந்த ஸ்கூல்கள்ல ஒண்ணான ஷின்வா ஹை-ஸ்கூல ஹை-ப்ரொபைல் ஆளுங்களோட பசங்க தான் படிக்க முடியும். அந்த ஸ்கூலயே கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்காங்க அங்க படிக்குற நாலு அழகான பணக்கார திமிர்பிடிச்ச பசங்க (F4 டீம்). அதுல “குஜுன் ப்யோ” ஷின்வா க்ரூப்ஸ் ஓனரோட பையன். இன்னொருத்தன் “ஜின் ஹோ” கொரிய முன்னாள் ஜனாதிபதியோட பேரன். மத்த ரெண்டு பசங்களும் கூட நாட்டோட முக்கிய பணக்கார வம்சங்கள் தான்.

இந்த நாலு பசங்களும் சேர்ந்து பண்ற அட்டகாசத்துல ஒரு பையன் பலியாக, மாடில இருந்து  குதிச்சிடுறான். அந்த நேரம் அவனோட யூனிபார்ம்ம டெலிவரி குடுக்க வந்த லாண்டரி கடை ஓனரோட பொண்ணு அவன காப்பாத்திடுறா. விஷயம் கொரியா முழுக்க பரவ, நிலைமைய சமாளிக்க அந்த பொண்ணுக்கு ஷின்வா ஹை-ஸ்கூல்ல ஒரு அட்மிசன்ன போட்டுக் குடுத்து சம்பவத்த அமுக்கிடுறாங்க நிர்வாகத்தார். அப்படி தான் “கும் ஜாண்டி” அந்த நாலு பசங்க லைப்ல என்ட்டர் ஆகுறா.

“ஜாண்டி” பத்தி நம்ம நாட்டாம ஸ்டைல்ல சொல்லனும்னா ஒரு அடம்புடிச்ச கழுத. எதுக்கும் பிடிவாதம், அத்தனை அடம். எப்ப பாத்தாலும் ஓ-ன்னு கத்தி தான் பேசுவா. ஆனா எல்லாத்துலயும்  நேர்மை இருக்கும்.  ஸ்கூலுக்குள்ள நுழைஞ்ச உடனே “குஜூன் ப்யோ” கூட மோதல் ஆரம்பிச்சுடுது. கூடவே “ஜின் ஹோ” கூட ஒரு இனம்புரியாத அன்பு ஏற்படுது.  
பொண்ணுங்க எல்லாருக்கும் F4 டீம் மேல ஒரு க்ரேஸ் இருக்க, “குஜூன் ப்யோ” மூஞ்சிலயே ஐஸ்க்ரீம தேய்ச்சி உன் ட்ரெஸ் கிளீன் பண்ண இவ்வளவு காசு தான் இருக்கும், போய் கிளீன் பண்ணிக்கோ, இல்லனா எங்ககிட்ட அனுப்பு நாங்க கிளீன் பண்ணித் தரோம்ன்னு பணத்தையும் விசிறியடிச்சுட்டு போய்டுறா.

சும்மாவே “குஜூன் ப்யோ” யாரையும் விட்டு வைக்க மாட்டான், அவன் கிட்டயே மோதினா விடுவானா, அவ சரண்டர் ஆகி மன்னிப்பு கேக்குற வரைக்கும் அவள விடக் கூடாதுன்னு F4 டீமோட ரெட் கார்ட் “ஜாண்டி”க்கு குடுக்கப்படுது.

தன் மேல எறியப்படுற முட்டை, மாவு எல்லாத்தையும் “ஜாண்டி” தாங்கிக்குறா. உணவுப் பொருட்களோட மதிப்பு தெரியாத அவங்க மேல இன்னும் கோபப்படுறா. அவள செக்சுவல் அபியூஸ் பண்ண வர்ற பசங்க கிட்ட இருந்து “ஜின் ஹோ” காப்பாத்துறான். கடைசியா அவ கர்ப்பிணின்னும் பல பசங்க கூட சுத்துறவன்னும் கேவலப்படுத்துறான் “குஜுன் ப்யோ”.

ஒவ்வொரு இக்கட்டுலயும் தனக்கு ஆதரவா இருக்குற “ஜின் ஹோ” மேல ஜாண்டிக்கு ஒரு பரிவு வர்ற அதே நேரத்துல, எவ்வளவு தொல்லை பண்ணியும் தன்கிட்ட சரண்டர் ஆகாம செருப்பு காலால மூஞ்சில எட்டி உதச்ச “ஜாண்டி” மேல “குஜுன் ப்யோ”வுக்கு காதல் வருது. “நான் ஆண்கள் கூட தூங்கினதையும், பசங்க கூட கைகோர்த்து சுத்தினதையும் நீ பாத்தியாடா, ஒரு சுத்தமான இன்னமும் முதல் முத்தம் கூட வாங்காத ஒரு பொண்ண பாத்து இப்படி பழி போட உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு”ன்னு கேட்ட அவ குரல் திரும்ப திரும்ப அவனுக்குள்ள எதிரொலிக்குது.

இந்த சீரியலோட ரெண்டாவது எப்பிசோட்ல என் ஓட்டு மொத்தமா “குஜுன் ப்யோ”வுக்கு தான். ஒரு முரடன், ஈவு இரக்கமே இல்லாதவன் காதல் வயப்பட்டா சரியான இளிச்சவாயன் ஆகிடுறான். மூஞ்சில செருப்பு காலால பஞ்ச் வாங்குன நிமிசத்துல இருந்து கேனத்தனமா சிரிச்சுட்டே இருக்கான். அவன் சிரிக்க ஆரம்பிச்ச அந்த நிமிஷம் நமக்கும் சிரிப்பு தொத்திக்குது. உனக்கெல்லாம் காதலிக்க கூட தெரியலடான்னு செல்லமா அவன் மூஞ்சி மேலயே குத்தணும் போல இருந்துச்சு.

அவனோட அந்தஸ்த்த காட்ட “ஜாண்டி”ய தூக்கிட்டு போய் முழு மேக் அப் போட்டு அழகாக்கி அவன் முன்னால கொண்டு வந்து நிக்க வச்சுட்டு “இப்ப சொல்லு, உன் காதல, நான் ஒத்துக்குறேன்”ன்னு அவ கிட்ட சொல்றான். இவரா ப்ரொபோஸ் பண்ண மாட்டாராமாம். ஒரு இடத்துக்கு அவள வர சொல்லிட்டு நாலு மணி கழிச்சு வர்ற அவ கிட்ட கோச்சுக்காம ஒரு குழந்தை மாதிரி குழையுறான். அவ கிட்டயே சொல்லாம ஹாலிடே ட்ரிப்ன்னு பிரெண்ட்ஸ் கூட அவளையும் தூக்கிட்டு பறந்துடுறான். அவளுக்கு சர்ப்ரைஸ் குடுக்கணும்னு அவன் செய்ற ஒவ்வொரு நடவடிக்கையும் பாத்துட்டு “ஜாண்டி” “எனக்கு என்ன தேவைன்னு நீ முடிவு பண்ணாத, எப்பவாவது என் கிட்ட என்ன பிடிக்கும்னு கேட்டுருக்கியாடா”ன்னு எகிறி குதிக்குறா. அவன் பக்கத்துல வந்தாலே ஆஆஆஆ-ன்னு கத்தியே அவன ஓட விடுறா.

அந்த ஹாலிடே ட்ரிப்ல வச்சு “ஜாண்டி”ய லவ் பண்றதா சொல்றான் “ஜின் ஹோ”. “ஜாண்டி” தன்னோட முதல் முத்தத்த “ஜின் ஹோ”கிட்ட வாங்கிக்குறா.  அப்புறம் என்ன, இத “குஜுன் ப்யோ” பாத்துட, பிரச்சனை ஆரம்பிச்சுடுது. இவங்க ரெண்டு பேரையும் அவன் எதிர்க்க, தங்களோட முதல் டேட்டிங்காக லவ் ஜோடி ரெண்டும்  
வெளில போகுது. “ஜாண்டி”யோட தயக்கத்தையும் “குஜுன் ப்யோ”வோட பதற்றத்தையும் பாத்து அவள விட்டுக் குடுக்குறான் “ஜின் ஹோ”.

“ஜாண்டி” “ஜின் ஹோ” மேல தனக்கிருக்குறது வெறும் பிரெண்ட்ஷிப் தான், தான் “குஜுன் ப்யோ”வ தான் விரும்புறத உணர்ந்துக்குறா. லவ் ஜோடி சேர்ந்தாங்களாங்குறது தான் மீதிக் கதை.

இதுல வில்லியா வர்ற “குஜுன் ப்யோ”வோட அம்மாவ பாத்தாலே ஆத்திரம் ஆத்திரமா வருது. இப்படியும் கூட ஒரு லேடி இருப்பாளான்னு திட்டணும் போல இருக்கு. “ஜாண்டி குடும்பத்த சிதைக்குறதோட இல்லாம அவ பிரெண்ட்ஸ் எல்லாரோட குடும்பத்தையும் ஆட்டி வைக்குறா.

காதலிக்குறேன்னு சொன்னதோட சரி, அப்புறம் அவ என்ன பண்றா, ஏது பண்றா, எப்படி கஷ்டப்படுறா எதையும் கண்டுக்காத ஒரு காதலன் “குஜுன் ப்யோ”. அவன் ஏன் இப்படி இருக்கான்னு கேட்டா அவனுக்கே தெரியாது. அவன் வளர்ப்பே அப்படி தான். தனிமை தவிர அவன் வாழ்க்கைல எதையும் அனுபவிச்சது கிடையாது. அவன் வாழ்க்கைல வந்த முதல் பொண்ணு “ஜாண்டி”. அவள எப்படி பாதுகாக்கணும்னு கூட தெரியாத ஒரு பிடிவாத குழந்தை அவன். ஒவ்வொரு கஷ்டத்துலயும் அவ கூட இருக்குற “ஜின் ஹோ”வ பாத்து பொறாமை மட்டும் படத் தெரியும். அத கூட அவனால ஒழுங்கா படத் தெரியாது. அம்மாவுக்கு பயந்த ஒரு பணக்கார கோழை.

“ஜின் ஹோ”. கடைசி வரைக்கும் அவள காதலிச்சுட்டு, அவளுக்காக எதுவும் செய்யும் ஒரு கேரக்டர். அவளுக்காக தன்னோட காதலையே விட்டுக் குடுக்குறான். “குஜுன் ப்யோ”வ “ஜாண்டி” தேடி அலையுறப்ப அவ கூடவே அலையுறான் “ஜின் ஹோ”. அவ அழுற ஒவ்வொரு நிமிசமும் அவளுக்கு ஆறுதலா இருக்கான். இப்படி ஒருத்தன் இருப்பானா, இந்த அளவு ஒரு பொண்ணை காதலிக்க முடியுமான்னு மலைக்க வைக்குற கேரக்டர் “ஜின் ஹோ”வோடது. இந்த சீரியல பாத்துட்டு இருக்குற நமக்கு பேசாம இவங்க ரெண்டு பேரும் மறுபடியும் லவ் பண்ணினா என்னன்னு தோணும். ஆனா எல்லாத்தையும் இழந்துட்டு “குஜுன் ப்யோ”வையும் விட்டுக் குடுத்துட்டு வர்ற “ஜாண்டி” அவன தவிர தன்னோட மனசுல யாருக்குமே இடம் இல்லன்னு சொல்லிடுறா.

ரெண்டாவது எப்பிசோட்ல எனக்கு “குஜுன் ப்யோ” மேல இருந்த க்ரேஸ் கொஞ்சம் கொஞ்சமா போக போக இறங்கியிருந்துச்சு. காதலிக்கவும் தெரியாத, அடுத்தவங்க உணர்ச்சிகள புரிஞ்சுக்கவும் தெரியாத, அம்மாவுக்கு பயந்து வாயே தொறக்காத அவன் எல்லாம் ஏன் காதலிக்கணும்னு தோணிச்சு. தன் காதலிய விட்டுகுடுக்கவும் மாட்டானாம், அவள பாதுகாக்கவும் மாட்டானாம். ஆனா, தன்னோட நிலை என்னன்னு அவன் முழுசா உணர்ந்த அந்த நொடி கண்ணுல தண்ணி வந்துடுச்சு. “என்னை மாதிரியான ஒரு கோழை, ஒரு அரக்க குடும்பத்துல பிறந்தவன் காதலிக்கவே தகுதி இல்லாதவன். எனக்கு அவளுக்கு என்ன தேவை, அவள என்ன பண்ணனும்னு கூட தெரியலயே”ன்னு அவன் கண் கலங்குரப்ப “இல்லடா, ஜாண்டி உனக்கு தான்”னு சீரியல் பாத்த நானே வாய் விட்டு சொல்லிட்டேன்.

காதலிக்காக அவன் எதுவுமே செய்யாத மாதிரி தோணினாலும் அவளுக்காக அவன் பண்ற ஒவ்வொரு விசயமும் கவிதை தான். கடல்ல மாட்டின “ஜாண்டி”ய “ஜின் ஹோ” காப்பாத்துறப்ப அடுத்த தடவ என் காதலிய எவனும் தொடக் கூடாதுன்னு நீச்சல் கத்துக்குறான், பனி மலைல அவ மாட்டிகிட்டப்ப பதறி போய் தூக்கிட்டு வர்றான், அட, எப்ப பாத்தாலும் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருக்காங்க. ஒரு டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி. அதாவது பரவால, டேட்டிங் போனாலும் சண்டைப் போடுற ஜோடி இந்த ஜோடியா தான் இருக்கும். ஒரு முத்தம் குடுக்க கூட அவ அனுமதி வேணும்னு எதிர்பாக்குறான். அவன் நினச்சா அவள என்ன வேணா பண்ணலாம், ஆனா தள்ளி நின்னே ரசிக்குறான்.

கடைசில “ஜாண்டி”ய பொறுப்பா பாத்துக்க தெரிஞ்ச ஒரே ஆள் “ஜின் ஹோ” தான்னு உணர்ந்துக்குறான். “உன்னைத் தவிர வேற யாராலயும் அவள பாதுகாக்க முடியாது”ன்னு நேரா சொல்றான். அந்த இடத்துல “குஜுன் ப்யோ” ஸ்கோர் பண்ணிட்டான்.


ஒரு சாதாரண குடிமகன்ல இருந்து இந்த பணக்கார பசங்க வாழ்க்கை எப்படி வேறுபட்டு இருக்குங்குறத ஒரு வித்யாசமான கோணத்துல சொல்லியிருக்காங்க. டெய்லி சாப்பிடுற சாப்பாட்டையே இங்க சேர்ந்து உக்காந்து சாப்பிடுறாங்க ஆனா அங்க கிறிஸ்மஸ் நாள்ல கூட அஞ்சு வயசுலயே தனியா உக்காந்து கேக் வெட்ட வேண்டியிருக்கு. அப்புறம் அந்த குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை எப்படி வரும்?


எப்படியோ, ஆரம்ப நாலு எப்பிசோட் குடுத்த அந்த பரபரப்பும் சந்தோசமும் அடுத்தடுத்து வந்த எப்பிசோட்ஸ் குடுக்கலனாலும் கடைசி வரைக்கும் பாக்க வைக்குற சுவாரஸ்யம் அந்த சீரியல் முழுக்க இருக்கு. ஆக  மொத்தம்  என்  மூணு நாளை முழுசா எடுத்துகிடுச்சு இந்த  சீரியல். பாத்தீங்களா, எந்த சீரியல்ன்னு சொல்ல மறந்தே  போயிட்டேன். சீரியல் பேரு “பாய்ஸ் பிபோர் ப்ளவேர்ஸ்” (Boys before flowers).

10 comments:

  1. 25 எபிசோடா?
    ரொம்ப பொறுமையா பாத்திருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. பொறுமைனா கிலோ என்ன விலைன்னு கேக்குற ஆளு நான், ஆனாலும் என்னப் பண்றது, நிலைமை அப்படி ஆகிடுச்சே

      Delete
  2. என்ன ஒண்ணு, இந்த கேரக்டர்களோட பெயர்கள பாத்தா தான் வாய்லயே நுழைய மாட்டேங்குது.///
    ஆமாம் அக்கா. இரண்டு தடவை வாசித்ததும் ஓக்கே.

    அப்பரம் கடைசியா ஜின்ஹோக்கும் ஜாண்டிக்கும்
    கல்யாணம் முடியுதா?

    ReplyDelete
    Replies
    1. கதைகள்ல நிறைய ட்விஸ்ட் உண்டுமா. குஜுன் ப்யோவ தான் ஜாண்டி விரும்புவா. அவள கடைசி வரைக்கும் ஜின் ஹோ பாதுகாப்பான்.

      Delete
  3. உங்கள் பொறுமைக்கு முதலில் ஒரு வணக்கம்....

    நமக்கு அவ்வளவு பொறுமை இல்லையே! :)

    ReplyDelete
    Replies
    1. ஹஹா வேற வழி இல்லயே

      Delete
  4. இதை முழுசா படிக்கவே எனக்கு பொறுமை இல்லை! சினிமா ஆர்வம் குறைவு என்பதால்! உங்களுடைய இடுகைகள் இரண்டினை இன்றைய வலைச்சரத்தில் அடையாளம் காட்டியுள்ளேன்! நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர அறிமுகத்துக்கு தேங்க்ஸ். நீங்க சுட்டி காட்டின அந்த பதிவு நிறைய பேர் சுட்டிகாட்டியிருந்தாங்க. அதுக்காக மறுபடியும் தேங்க்ஸ்

      Delete
  5. சகோதரி ஆங்கிலப் படங்கள் நிறைய பார்ப்பதுண்டு. ஆனால் சீரியல்கள் அது எந்த நாட்டினதும் பார்க்கும் பொறுமை இல்லை...இன்று நாங்கள் மிகவும் பழைய படம் - ஆங்கிலப்படம் ஒன்று..பார்த்தோம்...ஆஹா அருமையான படம்...டார்க் நைட்....த்ரில்லர் ...கண் தெரியாத பெண் தான் முக்கியக் கதாபாத்திரம். அருமையான நடிப்பு...முடிந்தால் பாருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நானும் சீரியல் எல்லாம் பாக்க மாட்டேன். நான் தொடர்ந்து பாத்த முதல் சீரியல் இது தான். நல்லா இருக்கவும் தான் அத பத்தி எழுதினேன். நீங்க சொன்ன படம் கண்டிப்பா பாக்க முயற்சி பண்றேன். தேங்க்ஸ்

      Delete