ப்ரேமி. கிட்டத்தட்ட பத்து பனிரெண்டு வருஷம் இருக்கும், அவள நான் பாத்தப்ப. ஒரு பிரவுன் கலர் நைட்டி போட்ருந்ததா நியாபகம். அவள பாக்க மூர்த்தி தான் கூட்டிட்டு போயிருந்தான்.
மூர்த்தி எங்களோட க்ளாஸ் மேட். எங்க பிரெண்ட்ஸ் வட்டத்துல அவன் தான் பேமஸ். எங்க எல்லாரோட இன்ஸ்பிரேசன். வெறுமனே பிறந்தோம், வாழ்ந்தோம்ன்னு வாழ்ந்துட்டு போறது வாழ்க்கை இல்லன்னு கத்துக் குடுத்தவன். ஏதாவது ஒரு லட்சியத்தோட வாழணும்னு அவன் தான் சொல்லிக் குடுத்தான்.
அது ஒரு வீடு. கொஞ்சம் பெருசாவே இருந்துச்சு. அந்த வீட்டு ஓனர் நாதனுக்கு ஒரு முப்பது வயசு இருக்கும். அவரும் அவரோட மனைவி லதாவும் தான் அந்த ஹோம் வச்சிருந்தாங்க. லதா அம்மாவுக்கு முதல் பிரசவத்துல ரொம்ப பிரச்சனை ஆகி, குழந்தை இறந்து பிறந்ததோட கர்ப்பப்பையையும் எடுக்க வேண்டியதா போச்சாம். இனி குழந்தைங்க பிறக்காதுன்னு இருந்தப்பதான் அவங்க இந்த ஹோம் ஆரம்பிச்சிருக்காங்க. கொஞ்சம் வசதியாவே இருந்ததால அவங்களுக்கு யாரோட உதவியும் தேவைப்படல.
நாங்க அங்கப் போய் உள்ள எட்டிப் பாத்தா ரெண்டு பிள்ளைங்க ஒண்ணு தவழ்ந்துட்டும் ஒண்ணு ஓடிட்டும் இருந்துச்சு. தொட்டில்ல ஒரு குழந்தை தூங்கிட்டு இருந்திருக்கணும். மூர்த்தி அவங்கள எல்லாம் அறிமுகப் படுத்திட்டு சுசிலாவையும் அறிமுகப்படுத்தி வச்சான்.
சுசிலாவுக்கு எங்க வயசு இருக்கும். அந்த ஹோம்ல பெரியவ அவ தான். அதனால எல்லா புள்ளைங்களையும் அவ தான் பாத்துப்பா. பக்கத்து கவர்ன்மென்ட் ஸ்கூல்ல அப்ப ஒன்பதாவது படிச்சுட்டு இருந்தா.
திடீர்னு ஒரு அழுகை சத்தம். என்னாச்சு ஏதாச்சுன்னு நானும் என்னோட ப்ரெண்ட்ஸ்சும் பதறிட்டு இருந்தப்ப, ப்ரேமி எங்கன்னு மூர்த்தி தான் முதல்ல கேட்டான். அவ அங்க இருந்த ஒரே பெண் குழந்தை. ரெண்டு வயசு இருக்கும் அவளுக்கு. தோட்டத்துல செம்பருத்தி பூ பறிக்கப் போறேன்னு போய் ஒரு தென்னம்பிள்ளை நட்டு வச்சிருந்த குழிக்குள்ள விழுந்து கிடந்தா. உடம்பெல்லாம் ஒரே சகதி.
அவள தூக்கிட்டு வந்து அங்க இருந்த தண்ணித் தொட்டியில ஒரே முக்கா முக்கி எடுத்துட்டாங்க லதா அம்மா. அதான் புள்ள போட்ருந்த ட்ரெஸ் எனக்கு பிரவுன் கலர்ல தெரிஞ்சிருக்கலாம். அவள கூட்டிட்டு போய் தலை துவட்டி, கைய கால வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டியான்னு கண்ண உருட்டி பயங்காட்டிட்டு இருந்தான் மூர்த்தி.
எங்க டீம்ல சுமதி தான் தைரியசாலி. நானெல்லாம் வாய் வார்த்தைல தான் வீரத்த காட்டுவேன். மத்தப்படி எப்பவுமே ஒன் ஸ்டெப் பேக் தான். அவ்வளவு நேரம் எல்லாரையும் பாத்துட்டே இருந்தேனே தவிர எந்த புள்ளையையும் கைல எடுக்கணும்னு தோணவேயில்ல. சுமதி தொட்டில்ல கிடந்த குழந்தைய தோள்ல போட்டுருந்தா.
"காயு, இங்க வா. இவங்க எல்லாரும் என்னோட் பிள்ளைங்க. வந்து ஹல்லோ சொல்லு"ன்னு மூர்த்தி கூப்பிட்டான். அவன் அப்படி சொன்னப்ப ஏனோ எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துச்சு. கண்ணு கொஞ்சம் கலங்கிடுச்சு. வளர்ந்து பெரியவனாகி இந்த புள்ளைங்களுக்காகவே வாழணும்னு அவன் சொன்னப்ப எல்லாருமே ஒவ்வொரு புள்ளைங்கள கட்டிகிட்டாங்க.
அதுல இருந்து நேரம் கிடைக்குறப்ப எல்லாம் அந்த ஹோமுக்கு போய்டுவோம். எங்களால முடிஞ்ச அளவு காசு சேர்த்து முட்டாய், மிக்சர், ஜாங்கிரின்னு வாங்குவோம். எங்க வீட்ல அவங்க பங்குக்கு முறுக்கு அதிரசம்னு சுட்டுத் தருவாங்க. பொருளாதார சிக்கல் எல்லாருக்கும் இருந்தும் பிள்ளைங்க பண்ற காரியங்கள தடுக்காம முடிஞ்ச அளவு ஊக்கம் குடுக்குற பெத்தவங்க அமையுறது வரம் தானே. எங்க எல்லாருக்கும் அந்த வரம் அமைஞ்சிருந்துச்சு.
அப்புறம் ஸ்கூல் முடிச்சுட்டு ஆளாளுக்கு வேற வேற லட்சியம், வேற வேற இடம்ன்னு எங்க நட்பு வட்டம் கொஞ்சம் கொஞ்சமா பிரிய ஆரம்பிச்சிடுச்சு. கிட்டத்தட்ட எல்லாரும் போய் நான் மட்டும் மிஞ்சியிருந்த அந்த நாலஞ்சு வருசத்துல ஹோம்ல பிள்ளைங்களோட எண்ணிக்கை பதிமூணா ஆகிடிச்சு. அம்மா, இந்த பிள்ளைங்களுக்கு பெருசா ஏதாவது செய்யணும்மான்னு அம்மா கிட்ட அடிக்கடி சொல்லுவேன். நீ சம்பாதிச்சு அந்த புள்ளைங்களுக்கு ஏதாவது பண்ணுன்னு அம்மா சொல்லுவா.
அவங்களோட தேவைகள நாதன் அங்கிளே பாத்துகிட்டாலும் நாமளும் ஏதாவது செய்யணும்னு தான் காலேஜ் சேர்ந்தப்பவே சம்பாதிக்க ஆரம்பிச்சேன். மனுசப்பிறவியா பொறந்தா ஒரு லட்சியம் இருக்கணும் தானே. எனக்கு உயிரோட இருக்குறதுக்கே ஒரு லட்சியம் தேவைப்பட்டுச்சு.
கிட்டத்தட்ட அஞ்சு வருசமா அவங்களோட ஸ்கூல் யூனிபார்ம், நோட்டு, ஜியாமட்டரி பாக்ஸ்ன்னு சின்ன சின்ன விஷயங்களுக்கு காசு குடுப்பேன். விசேச நாட்கள்ல ஒரு வேன் பிடிச்சி பீச், கோவில்ன்னு கூட்டிட்டு போவேன். அக்கா அக்கான்னு அவங்க என்னை கூப்ட்டாலும் எல்லாரையும் என்னோட பிள்ளைங்களா தான் நினைப்பேன்.
சுசிலாவும் அப்படி தான். அம்மா அப்பா இல்லாம, ஒரே பாட்டியும் செத்துப் போய் அங்க வந்து சேர்ந்தவ. என் வயசு தான் அவளுக்குங்குறதால எனக்கு ட்ரெஸ் எடுத்தா அவளுக்கும் எடுப்பேன். ட்ரெஸ் எடுக்குறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல, ஆனா காஸ்ட்லி ட்ரெஸ் போட அவளும் ஆசைப் படுவா. அதுக்காகவே சில நேரம் அவளுக்கு மட்டும் எடுத்து குடுத்துட்டு நான் சும்மா இருந்துருவேன். அவங்க எல்லாம் காஸ்ட்லியா ஆசைப்படக் கூடாதுன்னு யார் சொன்னா?
அத்தனை பிள்ளைங்களையும் பாசத்தோட கூடவே இருந்து பாத்துட்டு தன்னோட படிப்பையும் பாத்துட்டு இருந்த சுசிலாவுக்கு ரெண்டு வருஷம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. நான் அந்த நேரம் ஹாஸ்பிட்டல்ல இருந்ததால முதல் முதலா நான் சம்பாதிச்சு வாங்கியிருந்த ஒரு பவுன் குட்டி செயின அவளுக்கு கிப்டா குடுக்க சொல்லி அப்பா கிட்ட சொன்னேன். அவ்வளவு தான், அதோட நான் அந்த ஹோமுக்கு போறது குறைஞ்சே போச்சு.
அதுக்கப்புறம் தம்பியும் அப்பாவும் தான் அப்பப்ப அந்த புள்ளைங்களுக்கு வேண்டியத செய்துட்டு இருக்காங்க. நான் ரெண்டு தடவ போனதோட சரி.
சரி, இதெல்லாம் நான் ஏன் இப்ப சொல்றேன்னா, காலைல ஆறரை மணிக்கு அப்பாவுக்கு ஒரு போன் கால். ப்ரேமி பெரிய மனுசி ஆகிட்டாளாம். மனசு முழுக்க ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. நான் ஒரு அம்மான்னு தோணிகிட்டே இருக்கு. தானே சிரிப்பு சிரிப்பா வருது. நம்ம புள்ளைங்களுக்கு ஒரு விசேசம்னு வந்தா அந்த சந்தோசமே தனி தானே. அவளோட ஒவ்வொரு ஸ்டெப்பும் அவ ஆசைப்படுற மாதிரி அமையணும்னு நான் ஆசைப்படுறேன்.
சாயங்காலமா போய் மாமன் முறைக்கு தம்பி சடங்கு செய்துட்டு வருவான். நானும் போகணும்னு நினைச்சிருக்கேன். ஹோம்க்குள்ள போக முடியலனாலும் கார்ல இருந்தே அவள பாத்துட்டு வரணும்.
என் பொண்ணு பெரிய மனுசி ஆகிட்டா.
.
நாதன் மற்றும் லதா தம்பதியரை எவ்வலவு பாராட்டினாலும் கம்மிதான்.
ReplyDeleteதங்களுக்கு இனி குழந்தை பாக்கியம் இல்லை தெரிந்து ஹோம் ஆரம்பித்து பல குழந்தைகலுக்கு பெற்றோராக இருப்பது க்ரேட்.
இந்த யோசனை எத்தனை பேருக்கு வரும்.
உங்கலுக்கும் பாராட்டுக்கல் அக்கா!
உண்மை தான்மா. இப்போதைக்கு பதினோரு பேர் இருக்காங்க. ரெண்டு பேரை சட்டப்பூர்வமா தத்து குடுத்துட்டாங்க. இன்னமும் வர்ற குழந்தைகள நல்ல பெத்தவங்களா பாத்து வளர்க்க கொடுத்துடுறாங்க. அவங்க பொருளாதாரத்துக்கு இந்த பதினோரு குழந்தைகளையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தா போதுன்னு தான் இப்படி பண்றாங்க.
Deleteமுன்னாடி எல்லாம் ரொம்ப நேரம் அவங்க கூட ஸ்பென்ட் பண்ணுவேன். இப்ப போறதே அபூர்வம் ஆகிடுச்சு. ஆனாலும் விசயத்த கேள்விப் பட்டதும் ஒரே சந்தோசம்.
ஆனா ஒரு விஷயம், தம்பி ஒரு படி மேல போய் பிரியாணி, சிக்கன் ப்ரை, சிக்கன் பொறிப்பு. மட்டன் சாப்ஸ், சிக்கன் சாப்ஸ், பால் பாயாசம்னு ஏற்பாடு பண்ணி அசத்திட்டான். எனக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்தப்ப தான் எனக்கு விசயமே தெரிஞ்சுது
நெகிழ்ந்து போனேன் தோழர். எங்க இருக்கு? இது என் செல் எண் 9842459759. முடியுமெனில் சொல்லுங்கள். நானும் கொஞ்சம் மனுஷனாக பார்க்கிறேன். பெரிய மனசு உங்களுக்கு. நல்லா இருக்கனும் நீங்க
ReplyDeleteஇத விட தேவைகள் அதிகமா இருக்குற பிள்ளைங்க எவ்வளவோ இருக்காங்க. இவங்கள நாதன் அங்கிளே பாத்துப்பார். சின்ன வயசுல இருந்தே நானும் அவங்க கூட்டத்துல சேர்ந்துட்டதால நானும் கொஞ்சம் செய்றேன். அவங்களுக்கு உதவனும்னு நினச்ச உங்கள பாத்தா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. உங்க ஊர் பக்கத்துல இதே மாதிரி இருக்குற ஹோம்க்கு உதவுங்க. கண்டிப்பா ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்
Deleteஇப்படி ஒரு மனம் எல்லோருக்கும் இருக்காது! வாழ்த்துக்கள்! அந்த இல்லத்தின் முகவரியையும் பகிர்ந்து இருக்கலாமே! இதன் வாயிலாக உதவும் உள்ளம் படைத்த சிலரின் உதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!
ReplyDeleteஇல்ல அண்ணா, அதுல கொஞ்சம் பிள்ளைங்க தானே இருக்காங்க, அவங்களோட தேவைகள அவரே பூர்த்தி செய்யணும்னு ஆசைப்படுறார். இன்னும் எவ்வளவோ பேர் ஹெல்ப் வேண்டி இருக்காங்க, உதவணும்னு நினைக்குறவங்க அவங்களுக்கு உதவலாமே
Deleteநல்ல மனம் வாழ்க..........
ReplyDeleteகண்டிப்பா உங்க பாராட்டை தெரிவிச்சுடுறேன் அண்ணா
Deleteமனம் நெகிழ்ந்துவிட்டது சகோதரி. இப்படி எத்தனை பேர் உள்ளனர்?!! அந்த தம்பதியினருக்கு கோடானு கோடி பாத வணக்கங்கள்! உங்களுக்கும் சேத்து வணக்கங்கள்! தாங்களும்தங்கள் குடும்பமும் அதில் அந்த சேவையில் பங்கு வகிப்பதற்கு!
ReplyDeleteநாடு போற்ற வாழ வேண்டும் இது போன்ற நல்ல மனங்கள்! வாழ்த்துகள்!
என்னோட பிரெண்ட்ஸ் எல்லாருமே என்னை விட நிறைய உதவி செய்வாங்க. அந்த நேரம் போன் நம்பர் எல்லாம் வாங்கி வைக்க தோணாததால அதிகம் யாரையும் சந்திக்க முடியல. மூர்த்தி மட்டும் கொஞ்ச வருஷம் தொடர்புல இருந்தான், ஒரு நாள் அவனும் ஒரு accidentல இறந்துட்டான். அவனை பத்தி அங்கங்க சொல்லிட்டே வர்றேனாலும் கண்டிப்பா அதுக்குன்னு தனியா ஒரு பதிவு போடணும்.
Deleteநெகிழ்ச்சியாக இருந்தது...
ReplyDeleteநல்ல மனங்களுக்கு நன்றி.
தேங்க்ஸ் அண்ணா
DeleteGreat Couple ! ..அந்த அன்புள்ளங்களும், தேவதையும் (நீங்க தான் ) உங்க நட்புக்களும் நல்லா இருக்கணும் May God bless you all dear .....
ReplyDeleteதேங்க்ஸ். உங்க வாழ்த்துகள் அந்த குழந்தைகளுக்கு போய் சேரட்டும்
Deleteஉங்கள் மனம் திறக்கும் ஒவ்வொரு பதிவும் நெகிழ வைக்கிறது.இது போன்ற பதிவுகளைப் படிக்கும் பொது நாமும் உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். தள்ளிப்போட்டுவிட்டால் வேறு பிரச்சனைகளால் அது பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது.
ReplyDeleteப்ரேமியை சொந்த மகளாய் நினைக்கும் உங்கள் நல்ல மனம் வாழ்க
நீங்க சொல்றது உண்மை தான். நான் பொதுவா யாருக்கும் உதவுறதுக்கு ப்ளான் போடுறது இல்ல, அந்த நேரம் யாருக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ பண்ணிட்டு போய்ட்டே இருப்பேன். ப்ரேமி நிஜமாவே எனக்கு அப்படி தான் தோணுறா. காலேஜ்ல என் ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் கூட எனக்கு பிள்ளைங்க தான். சிலது என்னை விட வயதில் பெரிய பிள்ளைங்களா இருப்பாங்க ஹஹா
DeleteUadavi seia oru manam vendum athuku mela nega vilai uairantha thuneai vaangai kodupathum thanaku vaagamal iruthathum mudal sameipai koduthathum ora padivl ithana kadapathiram koduthu manithel pathiya vaithu vitergal. sakthi padivu pool manithel nega idam pidithu vitathu. . . .
ReplyDeleteதேங்க்ஸ். எனக்கு வேற என்ன சொல்லன்னு தெரியல. ஆனா அதெல்லாம் நிஜமா பெருசா இல்ல. நினச்சா நிறைய பண்ணலாம், ஆனா நான் பெரிய சோம்பேறி. அதான் உண்மை
Delete