Wednesday 7 March 2012

என் தோழியே...!!!


ஆடைகளில்லை உன் நாகரீகம்...
வாய் பேச்சில் இல்லை உன் வீரம்....
மதிக்கெட்டு திரிவதில்லை உன் புரட்சி...
அடக்குவதில் இல்லை உன் அறிவு...
அடங்கி விடுவதில் இல்லை உன் பொறுமை...

அன்புக்கும் நீ தான்
பண்புக்கும் நீ தான்
பொறுமைக்கும் நீ தான்
ஆளுமைக்கும் நீ தான்

அக்னி குழம்பாய் கொதிக்காதே
அக்னி குஞ்சென விழித்தெழு...
விம்மி விம்மி வெந்து விடாதே
வெறுமை போக்க மறந்து விடாதே...

உரிமை குரல் கொடுப்பவன் சகோதரன்
உறவாய் அமைந்தவன் மைந்தன்....
உறவை சுமப்பவன் கணவன்
தோழில் சுமந்தவர் தந்தை...
எல்லாம் சேர்ந்தவன் நண்பன்...

அடக்கி ஆளவும் நினைக்காதே
அடங்கி விடவும் துணியாதே....
ஆணவம் உனை சேர நினைக்காதே
அன்பால் ஆண்டு விடலாம் மறவாதே...

பாரதி கண்டானாம் புதுமை பெண்ணை
நீயேன் காணவில்லை உன்னை...
பார் போற்ற வேண்டுமென்று கூறவில்லை
ஆயினும், பாரினில்
உனக்கென நீ வேண்டும் உணர்ந்து கொள்... 

5 comments:

  1. ஆறு பத்திகள்
    ஆறிலும் ஆறு'குரல்'.

    இனமெனும் இருளிடையே
    ஆறுதல் அறிவுடமை
    தேடிடும் மகளிருக்கு
    தேன்தமிழ் விளக்கு இது!

    இது கவிதை அல்ல..
    காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  2. எழுத்தாக்கத்தில் பாரதியின் தாக்கமும்
    பைந்தமிழின் ஏக்கமும்..
    வாழிய நலமோடு...
    எழுதுக வளமோடு...
    இன்னும் இன்னும்...

    ReplyDelete