Monday 18 June 2012

உணர்வின் சங்கமம்...!!!


வேர்பிடித்து படரும் உணர்வெனும்
ஆலமரத்தின் சிறு விழுதுப் பற்றி
உயிரெழுச்சி செய்யும்
முயற்சியில் நான்...!

உணர்வுகளின் கலவைகளில்
சந்தோசம் கும்மாளமிடும்,
கிண்டல் புன்சிரிக்கும்,
வருத்தம் மவுனமாகும்
துக்கம் தொண்டையடைக்கும்...!

குரோதத்தையும் வஞ்சத்தையும்
நெருங்கிட இயலா
பாதாளச் சிறை தள்ளும்
தர்ம ராணியாகவும் நான்...!

அன்பெனும் விதைவிதைத்து
பாசமெனும் நீரூற்றி
நேசமென உரம் வார்த்து
வளர்ந்து விட்ட உணர்வுக் கூட்டம்
என் வாழ்க்கைத் தோட்டத்தின்
அழகான பசுஞ்செடிகளாய்...!

சோலைகளை தரம் பிரித்து
தனிக் கவனம் ஒவ்வொன்றிலும்...
நட்புச் சோலையில் வேப்பமரமாய்
சாமரம் வீசும் நான்
உறவு சோலையில் ரோஜாவாய்
மலர்கிறேன்...

மொட்டாகி பின் பூவாகி
காயாய் மாறிட்ட காதலை
பழமாய் கனியச் செய்யும்
சூத்திர தாரியாகவும் நான்...!

உணர்வுகளின் சங்கமத்தில்
தரமாய் அடுக்கப்பட்ட வாழ்வியல்
ஏடுகளை சுவை மாறாமல் ருசித்து விடும்
ஆவல் படர தொடர்ந்தே செல்கிறேன்...!




4 comments:

  1. தர்மராணி எங்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டுங்க உங்க தோட்டத்துல நாங்களும் ஒரு பசுஞ்செடியா வளந்துட்டு போறோம்... சோலைக்குள் இலவச அனுமதி உண்டா சூத்திரதாரி.... அருமையான படைப்பு

    ReplyDelete
    Replies
    1. ஹாஹஹா நீங்களும் நட்பு சோலைக்குள் ஒரு வேப்பமரமே

      Delete