Thursday 28 June 2012

வசப்படும் உணர்வுகள்...!



உணர்வுகள் உரசப்படா
வெற்றுக் காகிதத்தின் மற்றுமோர்
பக்கமாய் வாழ்க்கை சுழற்சி...!

ஆழியின் ஆக்கிரமிப்பு
மனசெல்லாம் சுழலச் செய்து
அஹிம்சை வெல்ல சபதமிடும்...!

வலிகள் சுமந்தே கதறிட்ட மனம்
கானல் கண்டு மயங்கிட துணியும்
காரணங்களே வேண்டாமல்...!

மனங்கள் மயங்கிடும் மாய
வலைக்குள் எதிர்ப்புகள் இல்லாமல்
வீழ்ந்து விடலாம், எழுர்ச்சி என்றோ?

நிலவு மறைக்கும் கார்மேகம் போலே
மறைந்தே கிடக்கின்றன
நமக்கான விடியல்...!

மழை பொழிந்ததும்
விடுபடும் நிலவாய்
வசப்படட்டும் வாழ்க்கை என்றும்...!

3 comments:

  1. சொல்ல வரும் விஷயம் நம்மை ஈர்ப்பதொடு அல்லாமல் , சில படிமங்கள் நமது சொந்த அனுபவங்களையும் அசை போட வைக்க ஆரம்பிக்கும் போதே இக்கவிதை வெற்றி அடைந்து விடுகிறது. மொழி ஆளுமை அருமை. நுட்பமான உணர்வுகளை வெளிபடுத்தும் திறன் சிறப்பு. நான் மிகவும் ரசித்த வரிகள்: வலிகள் சுமந்தே கதறிட்ட மனம்
    கானல் கண்டு மயங்கிட துணியும்
    காரணங்களே வேண்டாமல்...!

    ReplyDelete