Tuesday 12 May 2015

முட்டைகள் பலவிதம்



கோழி முட்டை, வாத்து முட்டை, புறா முட்டை, காக்கா முட்டை, மயில் முட்டை, பருந்து முட்டைன்னு பறவைங்க முட்டை நாம ஏராளமா பாத்துருக்கலாம்...

சரி, சரி, அதெல்லாம் இருக்கட்டும். இப்ப வாங்க, அந்த பாழடைஞ்ச ஓட்டு வீட்டுக்குள்ள நுழைவோம்...

ஸ்... மெதுவா வாங்க. சிலந்தி வலை அங்கங்க பின்னியிருக்கு. கண்ணே தெரிய மாட்டேங்குது. அந்தா ஒரு மேஜை ட்ராயர் இருக்குல, அதுக்குள்ள டார்ச் லைட் இருக்கான்னு பாருங்க...

டார்ச் இருக்கா. இருங்க, இருங்க, நான் வரேன். பேட்டரி எல்லாம் கழட்டிப் போட்ருக்கு. இப்படி எடுத்து மாட்டணும். இந்தா இப்ப லைட் எரியுதுல.

அட, ட்ராயர்க்குள்ள என்னது இது? பல்லி முட்டை போட்டு வச்சிருக்கு. உடஞ்ச தோடு கூட இருக்கு. அனேகமா பல்லி குட்டி வெளில வந்துருக்கும்.

சரி, நமக்கு இன்னும் வேலை இருக்கு. பல்லி முட்டைய பாத்துட்டு அப்படியே நிக்க முடியுமா? பின்னால கதவத் தொறந்துட்டு அப்படியே அந்த குளத்துப் பக்கமா போவோம்.

மரம் எல்லாம் எவ்வளவு தாவல்ல கிளை விட்டுருக்கு. கொஞ்ச நேரம் அந்த கிளைல உக்காந்து ஊஞ்சல் ஆடலாம். அச்சச்சோ, என்னது இது, பளபளன்னு, என்னவோ ஜவ்வரிசிய அவிச்சி வச்ச மாதிரி?

அடடா, அதெல்லாம் மீன் முட்டைங்க. பொரிச்சதும், நேரா தண்ணிக்குள்ள விழுந்துடும். அதான் அந்த மீன் இந்த இலை கீழயே நின்னு தண்ணிய மேல பீச்சியடிச்சுட்டு இருக்கா? சரி சரி, டிஸ்டர்ப் பண்ண வேணாம், இறங்கி அந்த ஓடைப் பக்கமா போவோம்.

ஓடைல கூட தண்ணி சலசலன்னு ஓடுதுல. அந்தா, அங்க வீதியா இருக்குற இடத்துல கொஞ்சம் தண்ணி தேங்கி நிக்குது. அதுக்குள்ள என்னது, கண்ணாடி மாதிரி, நீளமா ஒரு கொடி? அவ்வ்வ்வ் இது தவளை முட்டை. அப்படியே உள்ள போட்டுறலாம். அம்மா தவளை இங்க எங்கயாவது தான் இருக்கும்.

தவளைய நினச்சு ஏன் பயந்து பின்னால போறீங்க? பாத்து, பாத்து, புதர்ல பாத்து காலை வைங்க. பாம்பு ஏதாவது இருக்கப் போகுது. அவ்வ்வ்வ், சொன்னேன் பாத்தீங்களா, இங்க ஒரு பாம்பு முட்டைப் போட்டு அது மேல அடைக் காத்துகிட்டு இருக்கு. நம்மள பாத்து சீறுது. மெதுவா, ஸ்டெப் ஸ்டெப்பா பின்னால வந்துருங்க. இப்ப ஓடலாம், ரெடி, ஜூட்....

அடப் போங்கப்பா, ஓடி ஓடி பீச்சுக்கே வந்துட்டோம். இருட்ட வேற ஆரம்பிச்சிடுச்சு. அந்தா பாருங்க, ஆமைங்க எல்லாம் பீச் மணல்ல குழி தோண்ட ஆரம்பிச்சுடுச்சு. வந்ததும் வந்துட்டோம், அப்படியே அது முட்டைப் போடுறதையும் பாத்துட்டுப் போய்டுவோம். அப்படி சைலென்ட்டா உக்காருங்க.

அந்த பாழடைஞ்ச வீட்ல எடுத்த டார்ச் எங்க? ஹாங்... கொண்டாங்க, அடிச்சுப் பாப்போம். அந்தா, அந்த வலது பக்கத்துல அந்த ஆமை முட்டைப் போடுது பாருங்க, ஒரே நேரத்துல இது என்ன பொத்து பொத்துன்னு நாலஞ்சு முட்டை போட்டுகிட்டே இருக்கு?

முடிஞ்சுது, அவ்வளவு தான், முட்டைப் போட்டதும் மண்ணை வச்சு மூடியாச்சு.

இனி நாம வீட்டுக்குப் போகலாம்.

ஆனா ஒண்ணு, காலைல எடுத்த ஓட்டத்துல, உங்களுக்கு எல்லாம் குட் மார்னிங் சொல்ல மறந்துட்டேன். அதனால இன்னிக்கி நோ குட் மார்னிங். நாளைக்கு வேணா, உங்கள காட்டுக்குள்ள கூட்டிகிட்டு போய் முதலை முட்டைய காட்டி குட் மார்னிங் சொல்றேன். வர்டா...

1 comment: