Friday, 8 May 2015

சுகாதாரம் வேண்டும்மத்திய அமைச்சர் நிதின் கட்கரி என்னமோ ஒரு விஞ்ஞான கருத்து சொல்லிட்டாராமாம், இங்க நிறைய பேர் அவர கழுவி கழுவி ஊத்திகிட்டு இருக்காங்க...

ஒருத்தர் செடி மேல யூரின் போனா செடி பட்டுப் போய்டும்னு சொல்றாரு... அதென்னமோ உண்மை தான். காரணம் யூரின்ல நிறைய யூரியா இருக்கு. அதனால தான் செடி பட்டுப் போய்டுது. அதையே டைய்லூட் (dilute - நீர்த்துக் போகச் செய்தல்) பண்ணி பயன்படுத்தினா செடி தளதளன்னு வளர தான் செய்யும்... அமிர்தமும் நஞ்சுன்னு பழமொழி கூட இருக்குல.... அதுக்காக யூரினும் அமிர்தமும் ஒண்ணான்னு சண்டைக்கு வந்துராதீங்க... பயனுள்ள எதுவுமே அமிர்தம் தான்... கொஞ்சூண்டு யூஸ் பண்ணினா...

அப்புறம் சில பேரு இதெல்லாம் அசிங்கம், ச்சீ ச்சீ, அந்தாள அத எல்லாம் போய் சாப்பிடச் சொல்லுங்கன்னு சொல்லியிருக்கார். அவங்களுக்கு எல்லாம் நான் ஒரு சம்பவத்த சொல்லணும்னு நினைக்குறேன்...
..............................................

எங்களோட ப்ராக்ட்டிக்கல் க்ளாஸ்ல புட் மைக்ரோபியல் பயோடெக்னாலஜின்னு ஒரு க்ளாஸ் உண்டு. அதாவது நாம சாப்பிடுற பழம், காய்கறிகள், மீன், இறைச்சி, பால், குளிர்பானம் எல்லாம் தரமானது தானா, அதோட மேற்பரப்புல அதுல என்ன மாதிரியான கிருமிகள் இருக்கு, உட்பகுதில என்ன மாதிரியான கிருமிகள் இருக்குன்னு செக் பண்ணி கண்டுபிடிச்சு ரிப்போர்ட் குடுக்கணும்.

அப்படி சில காய்கறிகளை லேப்ல பிள்ளைங்க டெஸ்ட் பண்ணினாங்க. அதிர்ச்சி குடுக்குற விதமா அந்த காய்கறி மேற்பரப்புல எல்லாம் இருந்த கிருமிங்க என்னன்னு பாத்தீங்கனா பூராவும் மனுஷ கழிவுல வெளியேறுற அதி பயங்கரமான நோய் கிருமிங்களான விப்ரியோ காலரே, சால்மோனெல்லா, சிஜெல்லா, ஈ.கோலி எல்லாம். ஆனா அதே காய்கறிகளோட உட்பகுதியில பரிசோதிச்சுப் பாத்தா இதுல ஒண்ணு கூட காணோம்...

பிள்ளைங்க வந்து கேட்டாங்க, மேடம், என்ன ரிப்போர்ட் எழுதணும்னு...

"இந்த காய்கறி எல்லாம் சாப்பிட தகுதியானது தான், ஆனா நல்லா கழுவி அப்புறமா பயன்படுத்தணும். இதோட மேற்பரப்புல இருக்குற அந்த பயங்கர நோய் தொற்றுக் கிருமிகள் செடிகளுக்கு போடுற உரம் மூலமாவோ, நீர்பாசனம் மூலமாவோ வந்திருக்க வாய்ப்பிருக்கு, அதனால சாப்பிடும் போது எச்சரிக்கையா இருக்கணும்னு எழுது"ன்னு சொன்னேன்.

எப்பவுமே கழிவுகள் மறுசுழற்சி முறைல பயன்படுத்தப்பட்டுகிட்டே தான் இருக்கு. அதுல கலந்துருக்குறது பிற உயிர்கள்கிட்ட இருந்து வெளியேறுற உயிர் சத்துக்கள் தான். அதே நேரம் ஆபத்தும் கூடவே தான் இருக்கும்.

இன்னிக்கி ஒருத்தர் ஒரு வார்த்த சொல்லிட்டார்ன்னு கொதிக்குரவங்க காலம் காலமா அப்படி விளைவிக்கப் பட்ட காய்கறிகளையும், பழங்களையும் தான் சாப்பிட்டுட்டு இருக்கோம்ங்குறத மறந்துடக் கூடாது. அதுக்காக எதுவுமே சாப்டாம இருந்துடப் போறோமா என்ன?
................................................

முதல்ல அவர கழுவி ஊத்துறதுக்கு முன்னாடி, நாங்க எல்லாம் சுத்த சைவம்னு சொல்லிக்குறவங்க மண்ணுல விளையுற காய்கறிகள ஒழுங்கா கழுவி சாப்பிடுங்க. நீங்க விரும்பலனாலும் அதெல்லாம் தொட்டுத் தான் ஆகணும்...
................................................

கழுவினா, சும்மா முக்கி எடுக்குறது இல்ல.... நல்ல தரமான ரன்னிங் வாட்டர்ல (ஓடுற தண்ணி, அதான் பைப்ப தொறந்து வச்சுகிட்டு) நல்லா தேய்ச்சு கழுவணும். அந்த தண்ணிய எக்காரணம் கொண்டும் மறுபடியும் கழுவ யூஸ் பண்ணக் கூடாது. அப்படி யூஸ் பண்ணினா தண்ணில வெளியேறுன கிருமிங்க மறுபடியும் காய்கறில ஒட்டிக்கும், அப்படியே வயித்துக்குள்ளயும் போய்டும்...

...................................................................

பீ- கேர்புல்.... நான் மொத்தமா நம்மள தான் சொன்னேன்
.

2 comments:

  1. 5 vathu inthiya prathamar Morarji Desai avaragal thanudai siruneri thenamum parugi vanthar athai patrium velinatu athiparedam 1 mani neram pesum irukar. q

    ReplyDelete
  2. எங்கேங்கே அவ்வளவு தண்ணீர் இருக்கு...?

    ReplyDelete