Monday 27 July 2015

பாகுபலி - ஹோனன ஹோனனதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ மனசுக்கு அவ்வளவு பிடிச்சு போச்சு.

சும்மாவே பட்டாம்பூச்சினா விட மாட்டேன். அதுவும் நீல கலர்ல பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சதுமே ஹா-ன்னு ஆர்வமா பாக்க ஆரம்பிச்சவ தான், மனசு அப்படியே அந்த பட்டாம்பூச்சி ட்ரெஸ்ல தமனாவ பாத்ததும் ஸ்ட்ரக் ஆகிடுச்சு.

“ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நான் செந்தேனா?
ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நீ வண்டுதானா?” ன்னு பட்டாம்பூச்சிகள் சிதற, தேவதையா தமனா திரும்புறப்ப ப்ப்ப்ப்பா.... விழுந்துட்டேன்.

“அந்தரத்தில் ஒரு வெண்மதியாய்
உன்னை அழைத்தேனா?
இந்திரலோகத்துச் சுந்தரி
உனக்கே உனக்காய் முளைத்தேனா?”ன்னு தமனா வைக்குற அந்த ஸ்டெப்ஸ் செம. கூடவே அந்த அருவி, மலை, மரம்ன்னு பேக்ரௌண்ட்ஸ் அவ்வளவு அட்டகாசம்.

முந்தாநேத்து குரூப்ல பிரெண்ட் கூட பேசிட்டு இருக்குறப்ப அந்த ஹீரோயின் இன்ட்ரோ சாங் தேவையில்லன்னு நினைக்குறேன்னு சொன்னார். அய்யய்யோ, எனக்கு அந்த பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கே, அதுல தமனா அவ்வளவு அழகுன்னு சொன்னேன். ஆமா அழகு தான், ஆனா அந்த இடத்துல அந்த பாட்டு செட் ஆகலன்னு சொன்னார். என்ன கவனத்துல இருந்தேனோ, கவனம் திசை மாறிப் போச்சு.

ஆனா அந்த பாட்டு தானே படத்தோட ஸ்டார்டிங்கே. நூறு தடவ அந்த அருவிய தாண்டி மலையேற முயற்சி பண்ணி முயற்சி பண்ணி தோத்துப் போற ஹீரோ, தமனாவோட முகமூடிய பாத்ததும் அவள கண்டிப்பா பாத்துடணும்னு ஒரு உத்வேகத்தோட மலையேற ஆரம்பிக்குறார். கண்டிப்பா அவர் மலையேறுற சீனை வேற எப்படி காட்டியிருந்தாலும் போர் அடிச்சியிருக்கும். ஆனா ஒவ்வொரு தடவ அவ்வளவு பெரிய நீர் மலைல இருந்து அவர் விழுந்தாலும்

“வீரனே! உலகம் உந்தன் கீழே....

தீரனே! நீ நினைத்தாலே!”ன்னு தமனாவோட நினைப்பு அவர ஏற வச்சிடுது. அதே மாதிரி காட்டு புல்லை வச்சி வில்லும் அம்பும் செய்து, அப்படியே அந்தரத்துல குதிச்சி, உச்சில இருக்குற மரத்த நோக்கி அம்பு விடுற சீன், ஹப்பா.. சான்சே இல்ல. டாட்....

நான் இங்க படத்த பத்தி எதுவுமே சொல்லல, காரணம் அப்படியே நிமிர்ந்து உக்காந்து ஸ்க்ரீனையே வெறிச்சு பாத்துட்டு இருக்கும் போதே படம் முடிஞ்சு போய்டுது. சீக்கிரமா செகண்ட் பார்ட் கொண்டு வந்துடுங்கப்பா. இல்லனா படத்த திரும்ப திரும்ப படத்த பாத்து என் பென்-ட்ரைவ் தேய்ஞ்சுட போகுது.


ஆமா, கட்டப்பா ஏன் பாகுபலிய கொன்னார்?


.

5 comments:

 1. அட! படம் பென் ட்ரைவ்ல பார்க்கற லெவலுக்கு வந்துருச்சா? ஈசியா கிடைச்சுருச்சா? ! ஆச்சரியமா இருக்கே! படம் சூப்பர் தான் ...ரெண்டாவது பார்ட் எடுத்து முடிச்சுட்டாங்களே! ஆனா என்னவோ அடுத்த வருஷம் தான் வருமாம்..அப்ப இந்தக் கதைய அதுவரை மறக்காம நாம வைச்சுக்கணும்...அதுக்குள்ள எத்தனைப் படம் பார்க்கணும்...ரொம்பகஷ்டம்...ஹஹ

  ReplyDelete
  Replies
  1. எனக்கு தியேட்டர் போய் பாக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா நான் எழுந்து நடக்கவே ஒரு மாசத்துக்கு மேல ஆகும். அதுக்கப்புறம் கூட காலை நல்லா ஊனி தியேட்டர் படி ஏற முடியுமான்னு தெரியல. அது வரைக்கும் காத்திருக்க பொறுமையும் இல்ல. அதான் நெட்ல டவுன்லோட் போட்டு தந்தத பாத்தேன். பார்ட் -2 க்காக waiting

   Delete
 2. "ஙே... ஞே..." இப்படித்தான் படம் ஓடுகிறது...!

  ReplyDelete
 3. நான் இன்னும் பார்க்கவில்லை! பார்க்கவேண்டும்!

  ReplyDelete
 4. பார்க்கவேண்டும்...

  ReplyDelete